Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார் – நடிகை
நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார் – நடிகை
மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பிரகதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மூத்த நகைச்சுவை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார் – நடிகை பிரகதி பரபரப்பு புகார்
பிரகதி
பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரகதி
. விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது
குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சசிகுமாரின் தாரை தப்பட்டை, சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட சில படங்களில் அம்மாவாக நடித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான
அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “மூத்த காமெடி நடிகர் என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்த
சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த நடிகர் நன்றாகவே பழகினார். ஒரு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு
இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான முறையில் இருந்தன.
பிரகதி
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

பாலியல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன். ஒரு அளவுக்கு மேல் அவர் தொந்தரவை தாங்க
முடியவில்லை. இதனால் அவரை எனது கேரவனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை கேவலமாக இருந்தது. தவறான முறையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது
உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு
இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடக்கவில்லை

விவசாயியாக மாறிய நடிகை…. சேற்றில் இறங்கி நாத்து நடும் வீடியோ
விவசாயியாக மாறிய நடிகை…. சேற்றில் இறங்கி நாத்து நடும் வீடியோ
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை ஒருவர் விவசாயம் செய்து வருகிறார்.
லாக்டவுனில் விவசாயியாக மாறிய நடிகை…. சேற்றில் இறங்கி நாத்து நடும் வீடியோ வைரல்
கீர்த்தி பாண்டியன்
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில்
அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில்
நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும்
இப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நடிகை கீர்த்தி பாண்டியன் தனக்கு
சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் டிராக்டர் மூலம் தானே விவசாய நிலத்தை
உழும் வீடியோவை வெளியிட்ட அவர், தற்போது அந்த நிலத்தில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், என் வாழ்வில்
மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றிருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
One of the most grateful things I have ever done! Learning the craft, one step at a time ♥️
— Keerthi Pandiyan (@iKeerthiPandian) May 5, 2020
Had to pull in Driya baby for this one 👩🏽🌾
#niece #quarantine #farming
📸 Appa @iarunpandianc (Again, this is within our quarantine gated home property, it is not a public area) pic.twitter.com/OxwNBXdz9J
200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் ஆடலாம் – ஸ்ரேயா
200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் ஆடலாம் – ஸ்ரேயா
200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் நடனம் ஆடலாம் என்று பிரபல நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளார்.
200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் ஆடலாம் – ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா
சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி
திரட்டி வருகிறார். இதன்படி 200 ரூபாய் கூகுள் பிளே மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அவர்களில்
இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தன்னுடன் நடனமாட வாய்ப்பு
கிடைக்கும் என்று ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா
கொரோனா வைரஸ் காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில்
இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி செய்துவிட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டை இ-
மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இவ்வாறு அனுப்பியவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் தான்
நடனமாடுவது, யோகா செய்வது உள்ளிட்டவைகளை செய்ய இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஸ்ரேயா குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானவர்கள் 200 ரூபாய் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

கார் விபத்தில் நடிகர் பலி
கார் விபத்தில் நடிகர் பலி
எர்ணாகுளம் அருகே பள்ளி சுவரில் கார் மோதிய விபத்தில் மலையாள நடிகர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி
விபத்துக்குள்ளான கார்- உயிரிழந்த பேசில் ஜார்ஜ் .
கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் முபாட்டு புழாவை சேர்ந்தவர் பேசில் ஜார்ஜ் (வயது30).
இவர் மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவரது நண்பர்கள் சதீஷ்(30), அஷ்வின்(20), ராகவ்(19), சமர்(30), எமோன்(30).
இவர்கள் 6 பேரும் நேற்று காரில் முபாட்டு புழாவில் இருந்து வளாகம் நோக்கி சென்றனர்.
இவர்களது கார் வளாகம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்ற போது கட்டுப்
பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது.
பின்னர் அங்கிருந்த பள்ளி சுவரின் மீது வேகமாக மோதி நின்றது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதால் காரில் இருந்த 6 பேரும்
பலத்த காயத்துடன் வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முபாட்டு புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த முபாட்டு புழா போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கி
இருந்தவர்களை மீட்டு கோலன்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் பேசில் ஜார்ஜ், சதீஷ், அஷ்வின் ஆகிய 3 பேர்
பரிதாபமாக உயிரிழந்தனர். ராகவ், அமர், எமோன் ஆகியோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

என் கணவரை விட அவர் சூப்பர் பண்ணுறார் – சமந்தா
என் கணவரை விட அவர் சூப்பர் பண்ணுறார் – சமந்தா
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் என்று இயக்குனரிடம் நடிகை பற்றி சமந்தா கூறியுள்ளார்.
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் – சமந்தா
நடிகை சமந்தா
2015-ல் வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கில் அறிமுகமான
பின்தான் தமிழுக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தமிழில் நடித்த ‘கரு, மாரி 2, என்ஜிகே’ ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை.
அதனால், தமிழில் தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல
பெயரையே பெற்றுத் தந்துள்ளன. ‘பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பதி பதி லேச்ச மனசு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சேகர்
கம்முலா இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா ஜோடியாக ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.
சாய் பல்லவி, சமந்தா
இன்னும் சில நாள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்குள்
படத்தைப் பார்க்கும் தன் ஆவலை இயக்குனரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி சமந்தா.
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

இயக்குனரும் எடுத்தவரையில் எடிட் செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு காட்டியிருக்கிறார்.
அதைப் பார்த்த நடிகை சமந்தா, ‘இந்த படத்தில் நாக சைதன்யாவை விட சாய்
பல்லவி தான் டாமினேட் செய்கிறார்,’ என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்

ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
பைக் ரேஸரான அஜித், ஒரு டிரிப்பின் போது ஏழை ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது குடிசை வீட்டில் தேநீர் அருந்தியுள்ளார்.
500 கி.மீ. பைக் டிரிப்…. ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
ரசிகருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம்
நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள்
என பலரும் வாழ்த்து கூறினர். அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல்
சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர்.
அப்போது டீ குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து டீ போட்டு கொடுத்துள்ளனர்.
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித்
அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது. அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல்
தெரிவித்துள்ளார். சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை
விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை
மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை
விஜய்
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பின் ரிலீசாக உள்ளது. இப்படத்தையடுத்து விஜய்யின் 65-
வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது துப்பாக்கி படத்தின் 2-ம் பாகம் என சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
காஜல் அகர்வால்
இந்நிலையில், காஜல் தமிழ் படம் ஒன்றிற்காக அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது விஜய்யின் 65-வது படத்திற்காக தான் என கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்குக்கு பின் இதுகுறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு
தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு
யோகி பாபு, தமன்னா
‘கோல மாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை, யோகி பாபு ஒரு தலையாக காதலிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
இதையே யோகி பாபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பேய் மாமா’ படத்தில், டைரக்டர் சக்தி சிதம்பரம் காட்சிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
“யோகி பாபு பிரபல கதாநாயகிகளை காதலிப்பது போல், ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது.
அவர் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் ஒரு தலையாக காதலித்து தோல்வி அடைவது போலவும், அதனால் அவருடைய
காதல் தமன்னா பக்கம் திரும்புவது போலவும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உள்ளோம்.
திருட்டையே தொழிலாக கொண்ட அவர், அதன் மூலம் ரூ.100 கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறார். தமன்னாவை எப்படியாவது திருமணம்
செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், “ஓம் தமன்னாய நமஹ” என்று ஆயிரம் முறை மந்திரங்களை ஓதுவது போலவும், தன்
படுக்கை அறை முழுவதும் தமன்னாவின் படங்களை ஒட்டி வைத்திருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறுகின்றன” என்றார்.

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக இருக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
வாசு – லாரன்ஸ்
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார்.
தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சந்திரமுகி படத்தில் மனோதத்துவ மருத்துவராக வரும் ரஜினிகாந்த்
, பிளாஷ்பேக்கில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக நடித்து இருந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி,
ஜோதிகா உடலுக்குள் ஆவியாக புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதையை அமைத்து இருந்தனர். படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா
லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். சந்திரமுகியாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜோதிகா
அந்த கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவே பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. எனவே அவரை இரட்டை வேடத்தில்
உருவாக்கி ஒரு கதாபாத்திரத்தை சந்திரமுகியாக மாற்றி, அதில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்
வெளியாகி உள்ளது. ஆனால் இதில் ஜோதிகா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை.

அதில் உள்ளது நான் அல்ல – அலறும் நடிகை
அதில் உள்ளது நான் அல்ல – அலறும் நடிகை
தடம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப் அது போலி அதை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
அது போலி…. அதை நம்பாதீர்கள்… வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்
அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தவர் வித்யா பிரதீப். சின்னத்திரையில் நாயகி
என்கிற சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சீரியல்களில் அதுவும் ஒன்று.
மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
போலி கணக்கு
இந்நிலையில் என் பெயரில் டிவிட்டரில் போலி கணக்கு தொடங்கி
பதிவு செய்து வருகிறார்கள். அது போலி கணக்கு, அது என்னுடைய ட்விட்டர்
கணக்கு அல்ல. நான் ட்விட்டரில் ஆக்டிவாக இல்லை. இதை ரிப்போர்ட் செய்த நண்பர்களுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.

100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி – மற்ற நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்த ராகவா லாரன்ஸ்
100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி – மற்ற நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்த ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டவுடன் நூறு மூட்டை அரிசி வழங்கி உதவி செய்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி – மற்ற நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்த ராகவா லாரன்ஸ்
ரஜினி- ராகவா லாரன்ஸ்
கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல், பலர் உணவுக்கே கஷ்டப்படும் நிலை
ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பலர் தங்களால் முடிந்த உதவியை முடியாதவர்களுக்கு செய்து வருகின்றனர்.
இதில் நடிகர் லாரன்ஸ் செய்து வரும் உதவிகள் குறிப்பிடத்தக்கது. கொரோனா நிவாரண நிதியாக 3 கோடி அளித்த அவர், தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலர் உதவி கேட்டு என்னை தொடர்பு
கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே. என்னால் முடிந்தளவு நானும்
உதவிகள் செய்து வருகிறேன். என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கு உதவி செய்திட முடியாது.
இதுகுறித்து என் தம்பியிடம் பேசிய போது, இந்த முயற்சியில் இன்னும் பலரை சேர அழைக்கலாம் என கூறினார். இதை பற்றி
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

நடிகர் ரஜினியிடம் பேச, அவர் 100 மூட்டை அரிசிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்த முயற்சியில் கை கோர்க்க நான் அழைப்பு விடுக்கிறேன்.
நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என உதவ
விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்ஷய்குமார்
போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்ஷய்குமார்
கொரோனா ஊரடங்கில் இரவு பகல் பாராமல் வேலை செய்யும் போலீசாருக்காக நடிகர் அக்ஷய்குமார் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.
போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய
கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும்
மக்களுக்கு, நடிகர்-நடிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திரட்டும் நிவாரண நிதிக்கும் நன்கொடை
கொடுக்கின்றனர். தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய்குமார், பிரதமரின்
நிவாரண நிதிக்கு ஏற்கனவே ரூ.25 கோடி வழங்கினார். பின்னர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி கொடுத்தார்.
தற்போது மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கி இருக்கிறார். மும்பை போலீஸ் கமிஷனர் தனது ‘டுவிட்டர்’
பக்கத்தில், “மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கிய அக்ஷய்குமாருக்கு காவல்துறை நன்றி தெரிவிக்கிறது
. நகர மக்களை காப்பாற்ற அர்ப்பணிப்போடு செயல்படும் மும்பை காவல்துறையில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

நீங்கள் வழங்கி உள்ள தொகை பெரிய உதவியாக அமையும்” என்று கூறியுள்ளார்.
அக்ஷய்குமார்
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அக்ஷய்குமார், “எனது கடமையை செய்து இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு போலீசார்தான் காரணம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஸ்பெயின் தொழில் அதிபரை காதலிக்கும் இஷா குப்தா
ஸ்பெயின் தொழில் அதிபரை காதலிக்கும் இஷா குப்தா
பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா ஸ்பெயின் தொழில் அதிபரை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
ஸ்பெயின் தொழில் அதிபரை காதலிக்கும் இஷா குப்தா
நடிகை இஷா குப்தா
நடிகைகள் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த நிக் ஜோனசையும், ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரே கோச்சேவையும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த வரிசையில் இந்தி நடிகை இஷா குப்தா வெளிநாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள தயாராகிறார். இஷா குப்தா
தமிழில் பிரபு, கிஷோர் நடித்த ‘யார் இவன்’ படத்தில் நடித்து இருக்கிறார். அக்ஷய்குமாருடன் ‘ரஸ்டம்’ படத்தில் நடித்துள்ளார்.
ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, கமாண்டோ 2, ராஸ் 3 உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்தார். இஷா குப்தா ஒருவருடன் ரகசிய
காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதுபற்றி கருத்து சொல்லாமல் இருந்தார்.
காதலருடன் நடிகை இஷா குப்தா
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

தற்போது முதல் தடவையாக காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். காதலரின் பெயர் மானுவேல்
காம்போஸ் குவல்லர். இவர் ஸ்பெயினை சேர்ந்த தொழில் அதிபர் ஆவார். இஷா குப்தா, மானுவேல் புகைப்படத்தின் கீழ் ‘ஐ லவ் யூ சோ
மச்’ என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது. ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை
பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், பணம் என்றதும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை, தற்போது
குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறாராம். தற்போது
படப்பிடிப்பு இல்லாததால் நடிகை மிகவும் வருத்தத்துடன் இருந்தாராம்.
இதை அறிந்த ஆப் நிறுவனம் ஒன்று நடிகையை அணுகி எங்களுடைய
ஆப்- பில் நீங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்களாம்.
முதலில் மறுத்த நடிகை பின்னர் நிறைய பணம் தருகிறோம் என்று சொன்னதும் உடனே அதில் கலந்து கொண்டாராம்

அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை
அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை
விழாவில் கோயிலைப் பற்றி ஜோதிகா பேசிய கருத்துக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை
சென்னையில் நடந்த விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து விமர்சித்தார். இதற்கு பல கண்டனங்களும் ஆதரவும் எழுந்தது.
இதுகுறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று
விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ
ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,
நடிகர் சூர்யா அறிக்கை
‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.
இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச்
செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது,
அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.
மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும்
போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில்
இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள்.
எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நடிகை
75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரணீதா
தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்த நடிகை பிரணீதா, 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரணீதா
பிரணீதா
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று
சம்பாதித்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள் நிலை மோசமாகவே உள்ளது.
ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்த்தவர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் நடிகர்கள், நடிகைகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் பிரணீதா
தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட
நடிகையான பிரணீதா சுபாஷ், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில்
உணவுகளை சமைப்பது, பேக் செய்வது ஆகியவற்றைப் பார்த்து அவரும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு நாளைக்கு 75 ஆயிரம்
பேருக்கு உணவு வழங்குகிறார். பிரணீதாவின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த விடயத்தை போட்டுடைத்த நடிகை
அந்த விடயத்தை போட்டுடைத்த நடிகை
தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, அஜித்துடன் வில்லன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.வில்லன் பட அனுபவத்தை கூறிய மீனா
அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் ஆகிய படங்களில் மீனா நடித்தார். இதில் வில்லன் படத்தில் அவர் 2 வது கதாநாயகியாக
நடித்தார். இந்த படம் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதை பார்த்ததும் மீனாவுக்கு வில்லன் படத்தின்
படப்பிடிப்பு சமயத்தில் நடந்த விஷயங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித்துடன் வில்லன் படத்தில் மீனாஅந்த படத்தில் இடம்பெற்ற அடிச்சா நெத்தி அடியா அடிப்பேன்
பாடலுக்கு நடனமாடிவிட்டு, மறுநாள் படுக்கையில் இருந்து எழக்கூட முடியாமல் போய்விட்டதாக மீனா தெரிவித்துள்ளார்.
மேலும் “ஒரே மனம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இந்த பாடல் படப்பிடிப்பின் போது திடீரென பனிமழை
பொழிய தொடங்கிவிட்டது. எதிர்பாராமல் இது நிகழ்ந்தது. நான் அந்த குளிரை தாங்கும்படியான ஆடை அணியவில்லை. காலில்
ஷூ கூட அணியவில்லை. பனியில் உறைந்து போய்விடுவேனோ என பயந்துவிட்டேன். இந்த பாடலுக்கு நாங்கள் ரிகர்சல் எதுவும்
செய்யவில்லை. அப்படியே நடித்து படமாக்கினோம்”, என வில்லன் படம் குறித்த தனது அனுபவத்தை மீனா பகிர்ந்துள்ளார்.

ரசிகர் மீது கோபப்பட்ட பிரபல பட நடிகை
ரசிகர் மீது கோபப்பட்ட பிரபல பட நடிகை
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் ரசிகர் மீது கோபப்பட்டிருக்கிறார்.
ரசிகர் மீது கோபப்பட்ட மாஸ்டர் பட நடிகை
மாளவிகா மோகனன்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூனை ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில் ‘மாஸ்டர்’ குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் மாளவிகா
மோகனன் மட்டும் சமைப்பது போன்றும் மற்றவர்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் ஈடுபட்டிருந்தது போன்றும் வடிவமைத்திருந்தார்.
இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு “ஒரு கற்பனையான
பாத்திரம் வீட்டில் இருந்தால் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் மட்டும்தானா? இதுதான் பாலின சமன்பாடா? என்று
கேள்வி எழுப்பியிருந்தார். இந்த டுவிட்டுக்கு விஜய் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாளவிகா அந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.
விஜய் ரசிகர் வெளியிட்டுள்ள கார்ட்டூன்.
இதையடுத்து மீண்டும் விஜய் ரசிகர் கிட்டத்தட்ட அதேபோன்ற பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதில்
மாளவிகா மோகனன் சமையல் செய்வதற்கு பதில் புத்தகம் படிப்பது போல் உள்ளது. இந்த படத்தை பார்த்த மாளவிகா
மோகனன், ‘நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். இதனை நான் மிகவும் விரும்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

எளிமையாக திருமணம் செய்து கொண்ட செல்வராகவனின் உதவி இயக்குனர்
எளிமையாக திருமணம் செய்து கொண்ட செல்வராகவனின் உதவி இயக்குனர்
இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜா, மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.
எளிமையாக திருமணம் செய்து கொண்ட செல்வராகவனின் உதவி இயக்குனர்
அரவிந்த் குமார், சுஜாவிற்கு நடைபெற்ற திருமணம்
தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன்.
இவர் சமீபத்தில் சூர்யாவை வைத்து என்.ஜி.கே என்ற படத்தை இயக்கினார்.
இப்படம் உட்பட அவருடன் பல படங்களில் உதவி இயக்குனராக சுஜா என்பவர் பணியாற்றிய வந்தார்.
அரவிந்த் குமார், சுஜா
சுஜாவிற்கும் அரவிந்த் குமார் என்பவருக்கும் திருமணம் இன்று (27-04-2020, திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள
அவரது இல்லத்தில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்றது.

பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
வரனே அவஷ்யமுண்டு என்ற மலையாள படத்தில் பிரபாகரன் பெயரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்ததையடுத்து தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்
அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர்
சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து
அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: வரனே அவஷ்யமுண்டு படத்தில் வரும்
பிரபாகரன் காமெடி காட்சி தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
உண்மையில் அது எந்தவித உள்நோக்கத்துடனும் வைக்கப்பட்டது அல்ல. பழைய மலையாள திரைப்படமான பட்டண பிரவேசம்
படத்தில் வரும் நகைச்சுவை காட்சி அது, மேலும் அது கேரளாவில் பயன்படுத்தப்படும் பொதுவான மீம் .
பிரபாகரன் என்பது கேரளாவில் ஒரு பொதுவான பெயர். எனவே, படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அது யார் மனதையும் துன்புறுத்துவதற்காக அல்ல. இதனை எதிர்க்கும் பலரும் படத்தைப்
பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, என்னுடைய இயக்குனர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக்
கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.
இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும்
காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல். உங்களில் சிலர் எங்களை மட்டுமல்லாமல் எங்களது குடும்பத்தையும் சேர்த்து வன்மத்துடன் திட்டி, மிரட்டி,
அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். இவ்வாறு துல்கர் சல்மான் கூறியுள்ளார்.







