Posted in சினிமா

நஸ்ரியாவின் டான்ஸுக்கு குவியும் லைக்குகள்

நஸ்ரியாவின் டான்ஸுக்கு குவியும் லைக்குகள்

நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென

ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு

போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்

. இதையடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ்

படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால்

முடக்கப்பட்டது. இந்த செய்தியை நஸ்ரியாவே உறுதி செய்தார். பின்னர் அதை மீட்டெடுத்தார்.

இந்நிலையில் தற்போது நஸ்ரியா தனது தோழியுடன் இணைந்து நடனமாடும்

வீடியோவை பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவின் இந்த டான்ஸ் வீடியோ

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.

Posted in குற்ற செய்திகள் சினிமா

செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், ஆபாச படம் எடுத்ததால் கைதாகி உள்ளார்.

ஆபாச படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
கெஹனா வசிஸ்த்
தமிழில் 2016-ல் திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில்

ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்

. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். கெஹனா வசிஸ்த் சமீபத்தில் ஆன்லைன் சேனல்

தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அந்த படங்களை பார்க்க ரூ.2 ஆயிரம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும்.

பலர் பணம் கட்டி படம் பார்த்துள்ளனர். இதற்காக மும்பை மலாட் மல்வானி பகுதியில் உள்ள தனி பங்களாவில் இளம் பெண்களை

வைத்து ஆபாச படங்கள் தயாரித்து வந்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த பங்களாவில் சோதனை நடத்தி

அங்கிருந்த 2 ஆபாச பட நடிகர்கள். ஒரு பெண் புகைப்பட கலைஞர், ஒரு இளம் பெண் ஆகியோரை கைது செய்தனர்.

கெஹனா வசிஸ்த்

கெஹனாவும், கைது செய்யப்பட்டார். விசாரணையில் இதுவரை 87 ஆபாச வீடியோக்களை தயாரித்து பதிவேற்றியது தெரிய

வந்துள்ளது. ஆபாச படம் தயாரித்த நடிகை கைதாகி இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Posted in சினிமா

பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்

பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள்

போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இதற்கு வெளிநாட்டு பிரபலங்கள்

பலர் ஆதரவு அளித்து வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்திய விவசாயிகளுக்கு

ஆதரவளிக்கும் ஒவ்வொருமுறையும் தனக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் வருவதாக பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜமீலா ஜமீல்

இது குறித்து நடிகை ஜமீலா ஜமீல் பதிவிட்டுள்ளதாவது: “இந்திய விவசாயிகள்

குறித்தும், அங்கு நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் கடந்த சில மாதங்களாக

நான் பலமுறை பேசியிருக்கிறேன். ஒவ்வொருமுறை அவ்வாறு பேசும்போதும்

நான் கொலை மிரட்டல்களையும், பாலியல் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன்.

நானும் ஒரு சக மனிதர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மிரட்டுங்கள்’

என்று தெரிவித்துள்ளார். நடிகை ஜமீலா ஜமீலின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Posted in சினிமா

ரசிகர்களை சந்தித்த விஜய்

ரசிகர்களை சந்தித்த விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில்

தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை

பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள்

இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு விஜய் சென்றிருக்கிறார். விஜய் மக்கள்

இயக்க நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் நிலையில்,

நடிகர் விஜய் திடீரென இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்.

விஜய்

விஜய்யின் திடீர் வருகையை எதிர்பாராத ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்

பதிவிட்டு வருகின்றனர். எதற்காக பனையூரில் கூட்டம் நடைபெற்றது? என்ற தகவல் வெளியாகவில்லை.

    Posted in சினிமா

    நடிகர் தூக்கிட்டு தற்கொலை

    நடிகர் தூக்கிட்டு தற்கொலை

    சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் கவுதம் மேனன் இயக்கத்தில்

    வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் சினிமாவில்

    அறிமுகமானார். அதை தொடர்ந்து யூ-டியூப்பில் ஒளிப்பரப்பாகி

    வரும் ‘வல்லமை தாரோயா’ என்கிற வலை தொடரிலும் நடித்து வந்தார்.

    கடந்த புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட அவர்,

    அன்றைய நாள் முழுவதும் வீடு திரும்பவில்லை. ஷூட்டிங்கில் இருந்தால்

    ஸ்ரீவதஸ்வ் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவது வழக்கம். இதனால்

    அவருடைய குடும்பத்தார் மகன் படப்பிடிப்பில் இருப்பதாக நினைத்துக்கொண்டனர்.

    இந்நிலையில் ஸ்ரீவதஸ்வ் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு

    வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    இதனால் அவருடைய குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில

    நாட்களாகவே அவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.

      Posted in சினிமா

      பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்

      பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்

      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், சக்ரா படத்தின் பாடலாசிரியரை நெகிழ வைத்து இருக்கிறார்.

      பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்
      விஷால்


      தமிழில் வெளியான பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர்

      கருணாகரன். இவர் விஷால் நடித்து முடித்துள்ள சக்ரா என்ற திரைப்படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார்.

      இந்த நிலையில் பாடலாசிரியர் கருணாகரன் இன்று தனது பிறந்த நாளை

      கொண்டாடினார். சக்ரா படக்குழுவினர் அவர் தனது பிறந்த நாளை

      கொண்டாடியதோடு அவர்கள் முன் பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார்.

      விஷால்

      இதனையடுத்து அடுத்து இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் மற்றும் நடிகர்

      விஷால் ஆகிய இருவரும் கருணாகரனுக்கு கேக் ஊட்டினர். இது

      குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

        Posted in சினிமா

        எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல்

        எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல்

        மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


        நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த

        எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற

        படத்திற்காகப் பாடப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.

        இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி

        இருந்தாலும் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது என்கிற

        வகையில் இந்தப் படத்தில் வரும் அந்தப் பாடல் உலகின் கவனம் பெற்றுள்ளது.

        தேவதாஸ் பார்வதி

        ‘தேவதாஸ் பார்வதி’ ஒரு ஆந்தாலஜி படமாகும். அதன் கதை பிடித்துப்போய் தான் எஸ்பிபி இப்படத்திற்காகப் பாடினார்.

        அந்தப் பாடலை 2020 ஜூலை இறுதியில் பாடிக் கொடுத்தார். ஆகஸ்டில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

        ஒரு உலக மகா இசைக்கலைஞனின் இறுதிப்பாடல் தன் படத்தில் இடம்

        பெற்றதற்காகப் பெருமையும் துயரமும் கலந்த உணர்வு கொந்தளிப்பில் இருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.

        இந்தப்படத்தில் ராஜ் எம்.ஆர்.கே நாயகனாகவும் ஸ்மிருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

        இவர்கள் தவிர பாரதாநாயுடு, பூர்ணிமா ரவி, ராகுல் தாத்தா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

        இப்படத்தை மலேசியா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். வினோத் ராஜேந்திரன், மனீஷ் மூர்த்தி ஆகியோர் ஒளிப்பதிவு

        செய்திருக்கிறார்கள். தமிழ்க்குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். என்.வி.அருண் இசையமைத்துள்ளா

          Posted in சினிமா

          காஜலுக்கு நடுவில் கணவர்…. வைரலாகும் புகைப்படம்

          காஜலுக்கு நடுவில் கணவர்…. வைரலாகும் புகைப்படம்

          தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை

          தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு

          சென்றார்கள். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

          இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில்

          இருபக்கமும் காஜல் அகர்வால் நடுவில் அவரது கணவர் இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

          காஜல் அகர்வால்

          சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க

          சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல்

          அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

          இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால்?

          என்று கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

            Posted in சினிமா

            இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

            இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

            சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ்

            உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின்

            கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம்

            ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி

            ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.

            இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் சங்கர் மற்றும்

            தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்

            மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை

            விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

            கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்

            , 2019ம் ஆண்டு தீர்ப்பு வழக்கப்பட்டது. அதில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர்

            ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர்

            சங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம்

            உள்ளது என்றும் கூறிய நீதிமன்றம், கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும்

            சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம்

            காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது. அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில்

            தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

            சங்கர்

            இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த

            வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் ஆருர் தமிழ்நாடன்

            நேரில் ஆஜர் ஆகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக வழக்கறிஞர்

            மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகவில்லை.

            இதையடுத்து எழும்பூர் பெருநகர 2வது மாஜிஸ்திரேட் இயக்குநர் சங்கருக்கு

            பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும் பிப்ரவரி 19ம் தேதி முதல் விசாரணையை

            தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார். இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக

            இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையிலேயே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

            Posted in சினிமா

            பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா

            பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா

            தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் அனுஷ்கா, பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்து இருக்கிறார்.

            பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா
            அனுஷ்கா
            ஐதராபாத்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடந்தது. இதில் 750-க்கும் மேற்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகள் கலந்து

            கொண்டனர். பெண் போலீசார் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில்

            நடிகை அனுஷ்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒரு பெண் போலீஸ் ஓட்டிய வாகனத்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார்.

            அனுஷ்கா

            மாநாட்டில் அனுஷ்கா பேசும்போது, “சினிமா திரையில் எங்களை நட்சத்திரங்களாக காட்டினாலும் இந்த அறையில்

            உட்கார்ந்திருக்கும் பெண் போலீஸ் அதிகாரிகளாகிய நீங்கள்தான் உண்மையான நட்சத்திரங்கள். நாங்கள் சினிமா நட்சத்திரங்கள்.

            நீங்கள் நிஜமான நட்சத்திரங்கள். உங்களுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பினாலும்தான் நாங்கள் எல்லோரும்

            பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். உங்களுடைய தியாகங்கள் உயர்வானவை. ஒவ்வொரு பெண்ணும் ஆணுக்கு இணையாக உயர வேண்டும்’’ என்றார்

            Posted in உலக செய்திகள் சினிமா

            குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை

            குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை

            டார்லிங், சார்லி சாப்ளின் 2 படங்களில் நடித்து பிரபலமான நிக்கி கல்ராணி, குரங்கு குட்டிகளுக்கு உணவு கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

            குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நிக்கி கல்ராணி… வைரலாகும் வீடியோ
            நிக்கி கல்ராணி


            டார்லிங் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,

            மொட்ட சிவா கேட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

            தற்போது இவரது நடிப்பில், வட்டம், ராஜ வம்சம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

            நிக்கி கல்ராணி

            தற்போது இவர் குரங்களுக்கு உணவு கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குரங்குகளிடம் கொஞ்சி அன்பு காட்டும் இந்த

            வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

            குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை
            குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை
            Posted in சினிமா முக்கிய செய்திகள்

            பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல்

            பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல்

            பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நெருங்கிப்

            பழகுவதை பார்த்த ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

            பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி
            இந்தி பிக்பாஸ் லோகோ


            பிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி

            நடனம் ஆடி உள்ளார். நடிகை ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது

            . தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் பங்கேற்று வருகிறார்.

            இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ராக்கி சாவந்த் தன் காதலை அவ்வப்போது

            வெளிப்படுத்தி வருகிறார். திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி

            சாவந்த் ‘ஐ லவ் யூ அபிநவ்’ என உடல் முழுக்க எழுதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

            ராக்கி சாவந்த், அபிநவ் சுக்லா

            பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என

            ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

            Posted in சினிமா பிரித்தானிய செய்தி

            பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி

            பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி

            தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

            மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
            பிரியா பவானி சங்கர்


            மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த

            கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

            இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை

            , ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

            அருண் விஜய் – பிரியா பவானி சங்கர்

            இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க

            இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் இதை உறுதி படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

            நடிகர் அருண் விஜய்யும் பிரியா பவானி சங்கரும் ஏற்கனவே மாஃபியா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

            Posted in சினிமா

            பள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர்

            பள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர்

            பிரபல இந்தி நடிகர் வருண் தவான், தனது பள்ளிப்பருவ காதலியான நடாஷாவை திருமணம் செய்து கொண்டார்.

            பள்ளிப்பருவ காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர் வருண் தவான்
            வருண் தவான், நடாஷா


            இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் வருண் தவான். இவர் பிரபல

            இந்தி பட இயக்குனர் டேவிட் தவானின் மகன். வருண் தவானும் ஆடை வடிவமைப்பாளர் நடாஷா தலாலும் காதலித்தனர்.

            வருண் தவான் 6-வது வகுப்பு படித்தபோது முதல் முறை நடாஷாவை பார்த்தார்.

            பள்ளியில் படித்தபோது நண்பர்களாக பழகினார்கள். அதன்பிறகு காதலிக்க தொடங்கினர்.

            இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து

            வருண் தவான், நடாஷா திருமணம் கடந்த ஆண்டு மே மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனாவால் தள்ளி

            வைத்தனர். இந்த நிலையில் வருண் தவான், நடாஷா தலால் திருமணம் மராட்டிய மாநிலம் அலிபாக்கில் நடந்தது.

            வருண் தவான், நடாஷா

            திருமணத்தில் இந்தி திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினர். முன்னதாக

            திருமணம் நடந்த இடத்துக்கு வருண்தவான் வந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கி சேதமடைந்தது. வருண் தவானுக்கு காயம் ஏற்படவில்லை.

            காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர்
            காதலியை கரம்பிடித்தார் பிரபல இந்தி நடிகர்
            Posted in சினிமா முக்கிய செய்திகள்

            பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை…

            பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை

            பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

            ஜெயஶ்ரீ ராமைய்யா
            ஜெயஶ்ரீ ராமைய்யா

            பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி
            ஜெயஶ்ரீ ராமைய்யா


            கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

            இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட

            காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

            கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ”I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை

            கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கம் செய்தார்.

            ஜெயஶ்ரீ ராமைய்யா

            மேலும் பப்ளிசிட்டிக்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர் பேஸ்புக் நேரலையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

            Posted in சினிமா

            பாட வாய்ப்பு கிடைக்கவில்லை – கானா பாலா

            பாட வாய்ப்பு கிடைக்கவில்லை – கானா பாலா

            ட்ரிப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கானா பாலா, அடுத்தடுத்து பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

            பாட வாய்ப்பு கிடைக்கவில்லை – கானா பாலா வருத்தம்
            கானா பாலா


            யோகி பாபு, கருணாகரன், பிரவீன், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் டென்னிஸ்

            மஞ்சுநாத் இப்படத்தை இயக்கி உள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

            இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கானா பாலா, “நிறைய படங்களில் பாடியிருந்தாலும், அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கவில்லை என

            வருத்தம் தெரிவித்தார். மேலும் ட்ரிப் படத்தின் மூலம் மீண்டும் பாட வந்துள்ளதாகவும், அதற்கு வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி எனவும் அவர் கூறினார். அதோடு தற்போது சாலை பாதுகாப்பு

            விழிப்புணர்வு வாரம் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளதாகவும், அடுத்த வாரம் சென்னை மாநகர காவல் ஆணையர் அதை வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்

            Posted in சினிமா

            நடிப்பை விட்டு விலக காரணம் என்ன? அப்பாஸ்

            நடிப்பை விட்டு விலக காரணம் என்ன? அப்பாஸ்

            தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் சமீப காலமாக திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

            நடிப்பை விட்டு விலக காரணம் என்ன? அப்பாஸ் பதில்
            அப்பாஸ்
            தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் மனதிலும் காதல் நாயகனாக வலம் வந்தவர் அப்பாஸ். ஆனால் பெரும்பாலும் இரண்டாம் கட்ட

            கதாநாயகனாகவே நடித்து வந்தார். ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை.

            பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

            அப்பாஸ்

            சமீபத்தில் அவர் பேட்டியளித்துள்ளார். அப்போது ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? என்ற கேள்விக்கு, தன்னையும்

            வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும், நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை

            விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

            Posted in சினிமா

            கதாநாயகியாக களமிறங்கும் நடிகையின் மகள்

            கதாநாயகியாக களமிறங்கும் நடிகையின் மகள்

            தமிழ், இந்தி மொழிகளில் நடித்த பிரபலமான மறைந்த நடிகையின் இரண்டாவது மகள் கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

            கதாநாயகியாக களமிறங்கும் மறைந்த நடிகையின் மகள்
            ஶ்ரீதேவி மகள் குஷி
            நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி கடந்த 2018-ல் துபாயில் நடந்த நிகழ்ச்சி

            ஒன்றுக்கு சென்றபோது நட்சத்திர ஓட்டலில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்தார். போனிகபூர் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார்.

            ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ஏற்கனவே தடக் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து குஞ்சன் சக்சேனா படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அடுத்து தோஸ்தானா 2, ரூஹி

            அப்ஸானா, குட்லக் ஜெர்ரி ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். குட்லக் ஜெர்ரி தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

            ஶ்ரீதேவி மகள்

            இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து போனிகபூர் கூறும்போது ‘குஷி சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார். பிரபல இயக்குனர் படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

            Posted in சினிமா

            பிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு

            பிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு

            பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு கோப்பையை வென்ற ஆரிக்கு, போலீஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

            பிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு
            படக்குழுவினருடன் ஆரி


            தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். இந்நிலையில், நடிகர் ஆரி,

            பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு புதுப்படம் ஒன்றில்

            நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அபின் இயக்கும் அந்தப் படத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

            அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து

            கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

            படக்குழுவினருடன் ஆரி

            இதுதவிர ராஜ மித்ரன் இயக்கியுள்ள அலேகா, களிங்கன் இயக்கியுள்ள

            பகவான் போன்ற படங்களில் ஆரி நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

            Posted in சினிமா

            தாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை

            தாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை

            கோமாளி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை தனது தாயை தூக்கி வைத்து கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.

            தாயை தூக்கி வைத்து கொஞ்சும் கோமாளி நடிகை
            சம்யுக்தா ஹெக்டே


            ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் நடித்திருந்தார்.

            சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா

            ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ, போட்டோ ஆகியவற்றை பகிர்ந்து வருவார்.

            சம்யுக்தா ஹெக்டே

            இந்நிலையில் தற்போது தன் தாயை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு

            கொஞ்சிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

            கோமாளி நடிகை
            கோமாளி நடிகை