பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா

Spread the love

பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் அனுஷ்கா, பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்து இருக்கிறார்.

பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா
அனுஷ்கா
ஐதராபாத்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடந்தது. இதில் 750-க்கும் மேற்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகள் கலந்து

கொண்டனர். பெண் போலீசார் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில்

நடிகை அனுஷ்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒரு பெண் போலீஸ் ஓட்டிய வாகனத்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார்.

அனுஷ்கா

மாநாட்டில் அனுஷ்கா பேசும்போது, “சினிமா திரையில் எங்களை நட்சத்திரங்களாக காட்டினாலும் இந்த அறையில்

உட்கார்ந்திருக்கும் பெண் போலீஸ் அதிகாரிகளாகிய நீங்கள்தான் உண்மையான நட்சத்திரங்கள். நாங்கள் சினிமா நட்சத்திரங்கள்.

நீங்கள் நிஜமான நட்சத்திரங்கள். உங்களுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பினாலும்தான் நாங்கள் எல்லோரும்

பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். உங்களுடைய தியாகங்கள் உயர்வானவை. ஒவ்வொரு பெண்ணும் ஆணுக்கு இணையாக உயர வேண்டும்’’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *