Posted in சினிமா

சட்டை பட்டனை கழட்டிய அமலாபால்

சட்டை பட்டனை கழட்டிய அமலாபால்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் அதிகமாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.

தற்போது சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அமலாபால், ‘என்னால் மாற்ற முடியாத விஷயங்களை இனி ஏற்றுக்கொள்வதில்லை.

நான் இப்போது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றுகிறேன்.
நீங்கள் வெறுப்பதை

ஏற்றுக்கொள்வதை நிறுத்தும்போது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையானதாக மாறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

பிரசாந்த் – சிம்ரன் படத்தில் பிரபல நடிகை

பிரசாந்த் – சிம்ரன் படத்தில் இணைந்த பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில்

ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாகவும் நாயகியாக சிம்ரனும் நடிக்கிறார்கள்.

தற்போது மேலும் ஒரு நாயகியாக பிரியா ஆனந்த் இணைந்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரசாந்தும், பிரியா ஆனந்தும் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா ஆனந்த் – பிரசாந்த்

இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

மகனுக்கு முருகன் பெயர் சூட்டிய கார்த்தி

மகனுக்கு முருகன் பெயர் சூட்டிய கார்த்தி.

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி

, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி – ரஞ்சனி தம்பதினருக்கு ஆண்

குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு ‘கந்தன்’ என்று முருக கடவுளின் பெயரை சூட்டி இருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளத்தில் ‘கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும்

இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா’ என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

விவசாயம் செய்யும் ராஷ்மிகா மந்தனா

விவசாயம் செய்யும் ராஷ்மிகா மந்தனா

.

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம்

ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

இவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி

இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ராஷ்மிகா

மந்தனா விவசாயம் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

50 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் விஷால்

50 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் விஷால்

விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.

எனிமி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக துபாயில் நடைபெற்று வருகிறது.

விஷால்

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. துபாயில் நடக்கும் படப்பிடிப்பில், 50 அடி உயரத்தில் இருந்து விஷால் குதிப்பதற்கு முன்பான புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

குட் நியூஸ் சொன்ன நதியா

குட் நியூஸ் சொன்ன நதியா

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது.

‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் பூர்ணாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நடிகை நதியா திரிஷ்யம் 2 ஷூட்டிங்கில் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தனக்கு மேக்கப் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இச்செய்தியை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மலையாளத்தில் ஆஷா சரத் நடித்த போலீஸ் வேடத்தில் நதியா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

ரைசாவின் காதலர் இவரா?

ரைசாவின் காதலர் இவரா?

தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில்

வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். சமீபத்தில் நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். தற்போது ரைசாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரைசா

ஒருவர் மடியில் ரைசா உட்கார்ந்துக் கொண்டு நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ரைசா காதலில் விழுந்துவிட்டதாகவும், காதலர் வெளிநாட்டை நேர்ந்தவர் என்றும் கூறி வருகிறார்கள்.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

கவர்ச்சியை வெறுக்கும் நடிகை டாப்சி

கவர்ச்சியை வெறுக்கும் நடிகை டாப்சி

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த டாப்சி தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

டாப்சி அளித்த பேட்டி வருமாறு: சினிமாவுக்கு வந்த புதிதில் மளமளவென பட வாய்ப்புகளை ஒப்புக்கொண்டேன். அதனால் என்மீது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரை விழுந்தது.

கவர்ச்சியாக கதாநாயகனுடன் சேர்ந்து ஆடுவது, பாடுவது, செடியையும், மரத்தையும் சுற்றி ஓடுவது என்று இருந்தால் வளர முடியாது என்பதையும், எனக்கு இருக்கிற திறமைக்கு இப்படி நடிப்பது சரியல்ல என்றும் புரிந்தேன்.

ஆனாலும் கண்ணை முடி திறப்பதற்குள் மூன்று வருடங்கள் அதுமாதிரி நடித்து விட்டேன். அப்படி நடிப்பது பிடிக்கவில்லை.

கதாநாயகி என்பதை விட நடிகையாக ஒரு வாய்ப்பு வந்தால் போதும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தென்னிந்திய பட உலகில் எனது கனவு நிறைவேறவில்லை. அதனால் இந்தியில் முயற்சிகளை தொடங்கினேன்.

டாப்சி

இப்போது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரையை அழித்து விட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தேசிய நடிகையாக பெயர் வாங்கி விட்டேன்.

கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.

‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்தகன் பட போஸ்டர்

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதேபோல் அனல்காற்று, 2கே அழகான காதல் போன்ற படங்களிலும் வனிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் மயில்சாமி

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் மயில்சாமி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும்

தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டு, தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

மயில்சாமி

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

காசு கொடுத்தாதான் ஓட்டு – யோகி பாபு அதிரடி

காசு கொடுத்தாதான் ஓட்டு – யோகி பாபு அதிரடி

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது ஹீரோவாக ‘மண்டேலா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதில், தேர்தலில் கள்ள ஓட்டுப்போட வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படுகிறார் யோகி பாபு. நெல்சன் மண்டேலா என்று பெயரிட்டிருப்பதால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

யோகி பாபு

ஒருகட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களிடம் ஓட்டுக்கு காசு வாங்கிய யோகி பாபு நோட்டாவைப் பார்த்து விட்டு மூன்றாவது ஒரு நபர் இருப்பதாகவும் யாராக இருந்தாலும் காசு

கொடுத்தால் தான் நான் ஓட்டுப் போடுவேன் என்றும் நகைச்சுவையாக கூறுகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

விஜய்க்காக உடைந்த கையுடன் குத்தாட்டம் போட்ட ஜெனிலியா

விஜய்க்காக உடைந்த கையுடன் குத்தாட்டம் போட்ட ஜெனிலியா

விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல்

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. மேலும் இந்த பாடலுக்கு பல நடிகர்கள், நடிகைகளும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, உடைந்த கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் ”இது உங்களுக்காக விஜய்… உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் மற்றும்

நண்பர்களுடன் இணைந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

கொரோனாவை வென்ற சூர்யா

கொரோனாவை வென்ற சூர்யா

நவராசா படத்தில் நடித்து முடித்த சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார்.

ஆனால் அதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து கொரோனாவிலிருந்து மீண்டார்.

இருப்பினும் சில நாட்கள் வீட்டில் சுய தனிமையில் இருந்து வந்தார். எனவே சூர்யா இல்லாமலே சூர்யா 40 படத்தின் பூஜை நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

சூர்யா

தற்போது சுய தனிமையில் இருந்து வந்த சூர்யா, மார்ச் 15-ம் தேதி முதல் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

அரசியல்வாதியுடன் தனுஷ் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்

அரசியல்வாதியுடன் தனுஷ் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா.

இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவின் நிச்சயதார்த்த புகைப்படம்

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று இரவு இவர்களது நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. மெஹ்ரீன் பிர்சாடாவின் காதலர் பவ்யா பிஷ்னோயும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

தளபதி 65 அப்டேட் – ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்

தளபதி 65 அப்டேட் – ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்

நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 65-வது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்த போதே விஜய் இந்தப் படத்தில் ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. எனவே இந்தப் படத்தில் விஜய்க்கு மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. எனவே இந்தப் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்

கேஜிஎப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தளபதி 65 படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமாரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

விஜய் இந்தப் படத்தில் ஒரு ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் கூர்மையான புத்தியுடனும், வழக்கம் போல சற்று காமெடி கலந்தும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

நடித்த நடிகைகளுடன் மீண்டும் நடிக்க விரும்பாத நடிகர்

நடித்த நடிகைகளுடன் மீண்டும் நடிக்க விரும்பாத நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறாராம்.

இவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டிபோட்டு வருகிறார்களாம். ஆனால், நடிகரோ நடிகை தேர்வில் உஷாராக இருக்கிறாராம்.

காரணம் தான் ஏற்கனவே நடித்த நடிகைகளுடன் நடிக்க கேட்டால் வேண்டாம் என்கிறாராம். புதுமுகங்கள்

அல்லது பாலிவுட் நடிகைகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம். பழைய நடிகைகள் நடிகரிடம் வாய்ப்பு கேட்டால் படக்குழுவினர் மீது பழிப்போட்டு தப்பித்து விடுகிறாராம்.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

கவர்ச்சி நடனம் ஆடும் சன்னி லியோன்

கவர்ச்சி நடனம் ஆடும் சன்னி லியோன்

நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கியவரும்,

விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக சுகன்யா நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீ இவன் படக்குழு

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில், 45 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மும்பையிலும் நடைபெற இருக்கிறது. மும்பையில் நடைபெற

இருக்கும் படப்பிடிப்பில், நடிகை சன்னி லியோன் நடிக்கும் கவர்ச்சி நடன பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். நடிகை சன்னி லியோன் ஏற்கனவே தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

சூர்யா – ஜோதிகா’ பாணியை பின்பற்றும் ‘ஆர்யா – சாயிஷா

சூர்யா – ஜோதிகா’ பாணியை பின்பற்றும் ‘ஆர்யா – சாயிஷா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

. திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை சூர்யா தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

ஆர்யா, சாயிஷா

இந்நிலையில், நடிகர் ஆர்யாவும் அதே பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கும் ஜோதிகா போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்க ஆர்யா முடிவு செய்துள்ளாராம். இதற்காக சில இளம் இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம்.

ஆர்யாவின் மனைவி சாயிஷா, வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆர்யாவுடன் டெடி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 12-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

விஜய்… நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் – நடிகை கங்கனா

விஜய்… நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் – நடிகை கங்கனா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா

வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

வருகிறது. இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத், இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரணாவத், ஏ.எல்.விஜய்

அதில் “அன்புள்ள விஜய் சார், ‘தலைவி’ படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. ஒரு நடிகையாக நான்

நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும், நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்ததே இல்லை.

உங்களை பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன். உங்களைப் பற்றி பேசும்போது, அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. விஜய், நீங்கள் மனிதரே அல்ல, கடவுள்.

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நான் உங்களை மிஸ் பண்றேன்”. இவ்வாறு கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

Home » சினிமா » Page 47
Posted in சினிமா

நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான

நடிகையாக வலம் வருகிறார். ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பூஜா, சாய் பல்லவி

இந்நிலையில், நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் நடிகையாக அறிமுகமாக உள்ளாராம். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குனராக

#அறிமுகமாகும் படத்தில் பூஜா நடிக்கிறாராம். இதில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக அவர் நடிக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் சாயலில் இப்படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு

கோவையில் நடந்து வருகிறது. சாய் பல்லவியின் தங்கை பூஜா, ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Home » சினிமா » Page 47