Posted in சினிமா

ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது

ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது

மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரபல தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.

ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது – பிரபல தயாரிப்பாளர் புகழாரம்
ரஜினி


அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் மன்றம் கலைப்பு,

‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு… அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

வருடத்திற்கு ரஜினியின் இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள்.

அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.

ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்ககளை நான் வெளியிட்டுள்ளேன்.

ரஜினி
கே.டி. குஞ்சுமோன் – ரஜினி

என்னைப் போலவே ரஜினியின் படங்களால் பலர் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது.

சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.! வெல்டன் அண்ணாத்த.! என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Posted in சினிமா

    பலூன் விளையாடும் சமந்தா

    பலூன் விளையாடும் சமந்தா

    பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    துள்ளி குதித்து பலூன் விளையாடும் சமந்தா… வைரலாகும் வீடியோ
    சமந்தா


    முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது இவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில்

    நடித்து வருகிறார். மேலும், விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.

    சமூக வலைத்தளத்தில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். இந்நிலையில் சமந்தா, செல்ல நாய்க்குட்டியுடன் துள்ளி குதித்து பலூன்

    விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில மணி நேரத்திலேயே பல லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

      Posted in சினிமா

      பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா

      பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா

      தற்போது படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வரும் வனிதா, தனது வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.

      பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா
      வனிதா


      தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் மிகவும் பிரபலமானார். தற்போது படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

      வனிதா

      இந்நிலையில் வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பண மாலை அணிந்து குபேர பூஜை நடத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

      அவருடன் மகளும் பண மாலை அணிந்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

        Posted in சினிமா

        பிரபல நடிகர் படத்தில் இணைந்த பிக்பாஸ் சம்யுக்தா

        பிரபல நடிகர் படத்தில் இணைந்த பிக்பாஸ் சம்யுக்தா

        கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான சம்யுக்தா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

        பிரபல நடிகர் படத்தில் இணைந்த பிக்பாஸ் சம்யுக்தா
        சம்யுக்தா


        இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி.இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் பதிவுடன் இன்று பூஜை போடப்பட்டுள்ளது.

        பெயரிடப்படாத இந்த புதிய படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் புரொடக்சன் 5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

        சம்யுக்தா
        சம்யுக்தா – சசிகுமார்

        கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

          Posted in சினிமா

          சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அஜித் – விஜய்

          சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அஜித் – விஜய்

          முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

          சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அஜித் – விஜய் ரசிகர்கள்
          அஜித் – விஜய்


          தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இதை பலமுறை விஜய், அஜித் இருவரும் தெரிவித்துள்ளனர்.

          ஆனால் இருவரின் ரசிகர்களும் அவர்களின் படம் வெளியாகும் போதும், அப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்போது ஒருவர் மற்றவரை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு மோதிக் கொள்கிறார்கள்.

          அந்தவகையில், விஜய் வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ய வரிச்சலுகை கேட்டிருந்தார். இதுகுறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமெனக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

          டுவிட்டர்

          இதுகுறித்து, இன்று அஜித் ரசிகர்கள் #வரிகட்டுங்கவிஜய் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்துள்ளனர். இதற்கு எதிராக #கடனைஅடைங்கஅஜித் என்ற பெயரிலும், #wesupportThalapathyvijay என்ற பெயரிலும் விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.

            Posted in சினிமா

            நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சின்னத்திரை நடிகர் வேதனை

            நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சின்னத்திரை நடிகர் வேதனை

            படத்தில் நடிக்க விடாமல் தடுத்து சிலர் அரசியல் செய்வதாக ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

            நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சின்னத்திரை நடிகர் வேதனை
            கார்த்திக் ராஜ்


            தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் ராஜ். கடந்த ஆண்டு திடீரென ‘செம்பருத்தி’ தொடரிலிருந்து

            கார்த்திக் ராஜ் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு எந்தவொரு தொடரிலும் கார்த்திக் ராஜ் நடிக்கவில்லை.

            இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை கார்த்திக் ராஜ் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ”அனைவருக்கும் வணக்கம். இந்த வீடியோவில் நான் என்னுடைய அடுத்த ‘புராஜெக்ட்

            ‘ குறித்துப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. காரணம் என்னைச் சிலர் எந்த புராஜெக்ட்டும் செய்ய விடாமல் தடுக்கின்றனர். அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

            சிலர் பின் வேலைகளைச் செய்து நான் படம் நடிக்க முடியாதபடி செய்துவிட்டனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் ‘உன்னால் முடிந்தால் படம் நடித்துக் காட்டு’ என்று

            சவால் விடுகிறார்கள். உங்கள் ஆதரவு இருந்தால், கண்டிப்பாக நல்ல படத்தில் நடிக்க என்னால் முடியும். அந்த நம்பிக்கையில் கே ஸ்டுடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். அடுத்த புராஜெக்ட்டை அதில்தான் பண்ண இருக்கிறேன்.

            கார்த்திக் ராஜ்

            பெரிதாக முதலீடு செய்து பெரிய படம் எடுக்கும் அளவுக்கு எனக்குப் பின்னணி இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை எல்லாச் சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள்

            மட்டும்தான். இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையாகக் கேட்கிறேன். சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, உங்களால் எவ்வளவு தொகை முடியுமோ

            அதை எனக்கு அனுப்புங்கள். நீங்கள் ஆதரவளித்தால்தான் இது முடியும்” என்று கார்த்திக் ராஜ் பேசியுள்ளார்.

              Posted in சினிமா

              வரி செலுத்தாது கார் இறக்கிய விஜய் -ஒரு லட்சம் அபராதம்

              வரி செலுத்தாது கார் இறக்கிய விஜய் -ஒரு லட்சம் அபராதம்

              பிரபல நடிகர் விஜய் லண்டனில் இருந்து றோஸ் பெரி கார் ஒன்றை இறக்குமதி செய்தார் ,இதற்கு நுழைவு வரி செலுத்தாது காரினை பதிவு செய்திட சென்றுள்ளார்

              2012 ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு தற் போது முடிவுக்கு வந்துள்ளது

              விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்க பட்டு வழக்கு முடிவுக்கு கொண்டுவர பட்டுள்ளது

                Posted in சினிமா

                மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்

                மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்

                மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தனது இசையில் பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

                மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான் – குவியும் பாராட்டு
                ஆதித்யா சுரேஷ், டி.இமான்


                தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கைவசம் ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் 40-வது படம், விஜய் சேதுபதியின் லாபம், அரவிந்த் சாமியின் வணங்காமுடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன.

                இந்நிலையில், இசையமைப்பாளர் இமான், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு, தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார்.

                இவருடன் இணைந்து சஹானா என்ற சிறுமியும் அப்பாடலை பாடி உள்ளார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில், இவர்களை பாட வைத்துள்ளதாக இமான் தெரிவித்துள்ளார்.

                மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு தனது இசையில்

                வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட இமான், வாய்ப்பு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                Posted in சினிமா

                பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த திரிஷா

                பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த திரிஷா

                தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, பெட்ரோல் விலையை கிண்டல் செய்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

                பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த திரிஷா
                திரிஷா


                தென்னிந்திய சினிமாவில் 19 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி,

                சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

                இந்நிலையில் திரிஷா சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி

                இருப்பதால் அதை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

                திரிஷா
                சைக்கிள் ஓட்டும் திரிஷா

                ஆனால் திரிஷா, இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும், என்று குறிப்பிட்டுள்ளார்.

                  Posted in சினிமா

                  ஒன்று கூடிய 80ஸ் நடிகைகள்

                  ஒன்று கூடிய 80ஸ் நடிகைகள்

                  தமிழ் சினிமாவில் கடந்த 80களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                  ஒன்று கூடிய 80ஸ் நடிகைகள்… வைரலாகும் புகைப்படம்
                  80ஸ் நடிகைகள்


                  80களில் தமிழ் சினிமாவில் நாயகிகளாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் தற்போது ஒன்று

                  கூடி மகிழ்ச்சியாக வார இறுதியை கழித்ததாக நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

                  நடிகைகள்

                  இந்த வார இறுதியில் 80களின் தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஏகப்பட்ட மலரும் நினைவுகள் மற்றும் சந்தோசங்கள் என்றும் ராதிகா சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார்.

                  இந்த புகைப்படத்தில் அம்பிகா, ராதா, சுகாசினி, குஷ்பு, பூர்ணிமா ஜெயராமன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் உள்ளனர்.

                    Posted in சினிமா

                    25 ஆண்டுகள் நிறைவு செய்த காதல் கோட்டை

                    25 ஆண்டுகள் நிறைவு செய்த காதல் கோட்டை

                    நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்த காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

                    25 ஆண்டுகள் நிறைவு செய்த காதல் கோட்டை… கொண்டாடிய படக்குழுவினர்
                    காதல் கோட்டை படத்தில் அஜித் – தேவயானி


                    அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல் கோட்டை. இப்படத்தில் அஜித்துக்கு

                    ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார்.

                    250 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓட்டிய இப்படத்தின் திரைக்கதைக்காக இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்தது.

                    இந்நிலையில் காதல் கோட்டை படம் 25 ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அடுத்து அஜித்தைத்

                    தவிர மற்ற கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

                      Posted in சினிமா

                      திருப்பதி கோவிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை – நமீதா

                      திருப்பதி கோவிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை – நமீதா

                      நடிகை நமீதா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

                      திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை – நடிகை நமீதா
                      கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் நமீதா


                      திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் திருமலைக்கு வந்திருந்தார். இருவரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று

                      மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அத்துடன் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு

                      சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை அர்ச்சகர்கள் வழங்கினர்.

                      வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகை நமீதா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக

                      இருந்தது. இதற்கு முன்பு வந்தபோது தரிசன ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது கோயிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை’’ என்றார்.

                        Posted in சினிமா

                        2 தமிழ் படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா

                        2 தமிழ் படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா

                        தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அடுத்தடுத்து 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

                        அடுத்தடுத்து 2 தமிழ் படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
                        நயன்தாரா


                        நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.

                        அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல

                        ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

                        இந்நிலையில், நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள இரண்டு படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை நயன்தாரா, நடிக்க உள்ள அடுத்த

                        2 தமிழ் படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்க உள்ளார். இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் விப்பின் இயக்க உள்ளார். சைக்கலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இது உருவாக உள்ளது.

                        இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். இதேபோல் மற்றொரு படத்தை இயக்கப்போவது யார்?, அதில் நயன்தாராவுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் யார்? என்பது

                        குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                          Posted in சினிமா

                          ஆர்யாவின் செயலால் கண்கலங்கிய சந்தானம்

                          ஆர்யாவின் செயலால் கண்கலங்கிய சந்தானம்


                          காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் சந்தானம், ஆர்யா செய்த செயலால் கண்கலங்கினாராம்.

                          நடிகர் ஆர்யாவின் செயலால் கண்கலங்கிய சந்தானம்
                          சந்தானம், ஆர்யா


                          ஆர்யாவும், சந்தானமும் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். பல வருடங்களாக நண்பர்களாக இருந்த இவர்கள் இடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது,

                          ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இரண்டு பேரும்

                          நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இதையடுத்து ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சிக்கு புக்கு, சேட்டை போன்ற படங்களிலும் இணைந்து பணியாற்றினர்.

                          நடிகர் சந்தானம் இப்போது, ‘சபாபதி’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் அவருக்கு அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். படம் திரைக்கு வர தயாரானபோது,

                          படத்தின் வியாபாரத்துக்கு ஆர்யா உதவி இருக்கிறார். நட்புக்கு உதாரணமாக நடந்து கொண்ட ஆர்யாவை சந்தானம் கட்டிப்பிடித்து, ‘‘நண்பேன்டா’’ என்று நெகிழ்ந்து போய் கண்கலங்கினாராம்.

                            Posted in சினிமா

                            திருமணத்துக்கு நடிகை டாப்சி

                            திருமணத்துக்கு நடிகை டாப்சி

                            தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் டாப்சி, திருமணத்துக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளாராம்.

                            திருமணத்துக்கு நடிகை டாப்சி நிபந்தனை
                            டாப்சி


                            தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது அதிக இந்தி படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் மற்றும் திருமணம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: “எல்லா

                            துறைகளையும் போல் சினிமாவும் போட்டி நிறைந்த துறையாக உள்ளது. இதனால் கேமராவுக்கு முன்னால் நிற்கும் நடிகர், நடிகைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ரசிகர்கள் தரும் ஆதரவுக்கு

                            நாங்கள் கொடுக்கும் விலையாகவே போட்டி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எடுத்துக்கொள்கிறோம்.

                            போட்டி நிறைந்த எல்லா துறைகளிலுமே சங்கடங்கள் உள்ளன. போட்டியும், மன அழுத்தமும் இல்லாத துறை எதுவும் இல்லை. எனது பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொள்ள

                            கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை காதலிப்பவர்களிடம் இந்த நிபந்தனையை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன். காதல் என்பது பொழுதுபோக்கு இல்லை.

                            டாப்சி

                            எனது திருமணம் குறித்து பெற்றோர் கவலைப்படுகின்றனர். விரைவில் திருமணம் செய்து

                            கொள்ளும்படியும் வற்புறுத்துகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடுவேனோ என்ற வருத்தம் அவர்களுக்கு உள்ளது”. இவ்வாறு டாப்சி கூறினார்.

                              Posted in சினிமா

                              கைவசம் அரைடஜன் படங்கள்…. கோலிவுட்டில் பிசியாகும் பிரபுதேவா

                              கைவசம் அரைடஜன் படங்கள்…. கோலிவுட்டில் பிசியாகும் பிரபுதேவா

                              நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் பிரபுதேவா, தற்போது அரைடஜன் படங்களை கைவசம் வைத்துள்ளாராம்.

                              கைவசம் அரைடஜன் படங்கள்…. கோலிவுட்டில் பிசியாகும் பிரபுதேவா
                              பிரபுதேவா


                              பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா போன்ற படங்கள்

                              ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள 4 புதிய படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘பிளாஷ்பேக்’, ‘மை டியர்

                              பூதம்’, பெயரிடப்படாத 2 படங்களில் பிரபுதேவா நடிக்கிறார். இந்த நான்கு படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

                              இவற்றுள் பிளாஷ்பேக் படத்தை டான் சாண்டி இயக்குகிறார். இவர் மகாபலிபுரம், கொரில்லா

                              போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார்.

                              அடுத்ததாக இயக்குனர் சற்குணத்திடம் பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி ‘மஞ்ச பை’ படம் மூலம் இயக்குனராக முத்திரை பதித்த ராகவன், இயக்கும் ‘மை டியர் பூதம்’ படத்தில்

                              பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர குலேபகாவலி இயக்குனர் கல்யாணுடன் ஒரு

                              படத்திலும், அறிமுக இயக்குனர் அமல் கே.ஜோபி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகி உள்ளார்.

                                Posted in சினிமா

                                அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி

                                அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி

                                கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்ற அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                பிக்பாஸ் அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி
                                அர்ச்சனா


                                சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார்.

                                இந்த நிலையில் தற்போது இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். என்னுடைய இதயம்

                                சொல்வதை கேட்டு வேலை செய்ததால் மூளை இதயத்தை விட புத்திசாலி என காட்ட முயற்சி செய்து உள்ளது. இதனால் மூளை அருகே சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

                                அர்ச்சனா

                                இதனால் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் பலருடைய அழைப்புகளை என்னால் ஏற்க முடியாமல் போகலாம். என்னுடைய மகள் சாரா என் உடல் நலம்

                                குறித்த அப்டேட்டை வெளியிடுவார். இந்த சவாலான அறுவைச் சிகிச்சையில் இருந்து மீண்டு வருவேன் என உறுதியளிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.

                                  Posted in சினிமா

                                  பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த சன்னி லியோன்

                                  பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த சன்னி லியோன்

                                  இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்து இருக்கிறார்.

                                  பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்த சன்னி லியோன்
                                  சன்னி லியோன்


                                  பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

                                  மேலும் வீரமாதேவி என்ற படத்திலும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்திலும் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

                                  சன்னி லியோன்

                                  இந்நிலையில், பெட்ரோல் விலையை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை

                                  பகிர்ந்து, பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டதால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

                                  Posted in சினிமா

                                  ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நந்திதா ஸ்வேதா

                                  ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நந்திதா ஸ்வேதா

                                  அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

                                  ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நந்திதா ஸ்வேதா
                                  நந்திதா ஸ்வேதா


                                  தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,

                                  முண்டாசுப்பட்டி என வரிசையாக படங்கள் வெற்றி பெற்றதால் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

                                  இந்நிலையில் நடிகை நந்திதா சமூக வலைத்தள பக்கத்தின் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது, ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று அவருடைய உடல் உறுப்பை

                                  மையப்படுத்தி கேள்வி கேட்டுள்ளார். இதனால் கடுப்பான நந்திதா, இந்த கேள்வியை உங்களுடைய அம்மா, அக்கா, தங்கச்சி போன்றோரிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

                                  நந்திதா ஸ்வேதா

                                  சமீபகாலமாக பல நடிகைகளும் இதே மாதிரி மோசமான கேள்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                                  Posted in சினிமா

                                  பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்

                                  பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்

                                  தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                  வைரலாகும் ஜகமே தந்திரம் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்
                                  சஞ்சனா நடராஜன்


                                  தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில், ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்தார். மற்றொரு நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார்.

                                  சஞ்சனா

                                  இவர் ரகிட ரகிட பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் சஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று

                                  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பெண்ணா இப்படி கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார் என்று பலரும் ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.