மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தனது இசையில் பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான் – குவியும் பாராட்டு
ஆதித்யா சுரேஷ், டி.இமான்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கைவசம் ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் 40-வது படம், விஜய் சேதுபதியின் லாபம், அரவிந்த் சாமியின் வணங்காமுடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில், இசையமைப்பாளர் இமான், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு, தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார்.
இவருடன் இணைந்து சஹானா என்ற சிறுமியும் அப்பாடலை பாடி உள்ளார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில், இவர்களை பாட வைத்துள்ளதாக இமான் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு தனது இசையில்
வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட இமான், வாய்ப்பு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது
- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு
- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன












