Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மலேசியாவிலிருந்து 150 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
மலேசியாவிலிருந்து 150 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த
இலங்கையர்கள் 150 பேர் இன்று (30) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 319 எனும் விசேட விமானம் மூலம்,
மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, இவர்கள் இன்று காலை
8.52 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்விமானப் பயணிகளில், வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த
ஒரு குழுவினரும், உயர் கல்விக்காக புறப்பட்டுச் சென்றிருந்த மாணவர்களும்
அடங்குகின்றனர். இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

இலங்கை வந்த பாகிஸ்தானியர் மூவருக்கு கொரோனா
இலங்கை வந்த பாகிஸ்தானியர் மூவருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2042 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது வரை 1678 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 826 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ்- மகிந்தா பேச்சு
வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ்- மகிந்தா பேச்சு
நேற்று (29) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின்
வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில்
இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில்
மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை மற்றும் வட மாகாணத்தின்
அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் – மட்டக்களப்பு
சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் – மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபோக நெல் அறுவடை துரிதமாக இடம் பெற்று வருகிறது.
மாவட்டத்தின் நெல் அறுவடையினை சம்பிரதாய பூர்வமாக விசேட நிகழ்வுகளை நடாத்தி சகல கமநல சேவை பிரிவுகளிலும்,
விவசாயிகள் நெல் அறுவடை விழாக்களை சமய நிகழ்வுகளுடன் நடாத்தி ஆரம்பித்துள்ளனர்.DSC 0285 1
பட்டிருப்புப் பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சுபாகரன் தலைமையில் நேற்று (29) மாவடி முன்மாரிப் பகுதியில் நெல் அறுவடை விழா நடைபெற்றது.
இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் பத்ம ராஜா கருத்துரை வழங்குகையில் புளுக்குணாவி பிரதேச விவசாயிகளின் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்கு முந்திய
காலத்தில் நீர்ப்பாசனம் இன்றி இருந்த போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உறுதுணையால் கலுகல் ஓயா
நீர்ப்பாசணத்திலிருந்து நீர் கிடைத்ததன் பயனாகவே இன்று இப்பிரதேசத்தில் விவசாயிகள் நெல் அறுவடையினை சிறப்பாக
செய்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்கு உதவி செய்த அம்பாறை அரசாங் அதிபரின் பணியினை பாராட்டுகின்றேன் என்றும் தெரிவித்தார்.
இதேவேளையில் அம்பாறை மாவட்ட விவசாயிகள் தற்பொழுது கரைவாகு வட்டப்பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் நீரில் மூழ்கியுள்ள நெல்வயல்களினை காப்பாற்ற எமது பிரதேசத்தில்
சாத்தியமற்ற மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாயை வெட்டுமாறு கொடுத்த கோரிக்கையை துறைசார் தொழிநுட்ப
அதிகாரிகள் தெரிவித்த பெருத்த பாதிப்புகள் பற்றிய ஆட்சேபனையினை அடுத்து நிறைவேற்ற முடியாததை இட்டு பெரிதும் கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை எதிர்காலத்தில் ஆரம்ப கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கமைய நீப்பாசனம் பெறக்கூடிய வயல்களில்
மாத்திரமே நெற்செய்கையை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் துறைமுக பிரிவினர்
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் துறைமுக பிரிவினர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நிறுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள கிரேன்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள்
நிறுவப்படவில்லையாயின் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் துறைமுக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன் தலைவர் எமது செய்திப் பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தலையீடு காரணமாக குறித்த கிரேன்கள் நிறுவப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு.
மட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் கடந்த ஜுன் 12 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜுன் 19 ஆந் திகதி வரையில் 20 பேர் டெங்குநோய்
தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு ஜுன் 12 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜுன் 19 ஆந் திகதி வரை 20 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரபிரிவில் 08 பேரும் ஓட்டமாவடி சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 05 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அது போன்று கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரிவில் 3 நோயாளர்களும், ஆரையம்பதி பிரிவில் 2 நோயாளர்களும்,
வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 20 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும் வாகரை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுனதீவு, காத்தான்குடி, வெல்லாவெளி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய
அதிகாரப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
மேலும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.
மொத்தமாக கடந்தவாரம் 20 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் நாட்டிலுள்ள
அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தினால் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் யாழ்ப்பாண நகர்
பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் வருகை தந்ததோடு
பொலிஸ் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் பங்குபற்றுதலுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களை சுகாதார நடைமுறைக்கு ஏற்ப கைகளைக் கழுவி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி
வகுப்பறைக்குள் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை இந்த வாரத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் முன்னெடுக்கவுள்ளார்கள்.

கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமைய மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழில் உள்ள
பாடசாலைகள் அனைத்தும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்டன. பாடசாலை ஆரம்பிக்கும் நிகழ்வில் யாழ்ப்பாண
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிரதேச செயலர்
ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றையதினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன
பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்
பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுமார் நான்கு மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதன்படி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மாத்திரம் இன்றைய தினம் பாடசாலைக்கு
சமூகமளிக்க வேண்டும். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன. இன்றைய தினம் முதல் கட்டமாக மாணவர்களை தவிர்த்தே பாடசாலை செயற்பாடுகள்
ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைவாக முதல் வாரத்தில் பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழல் சுத்தப்படுத்தப்பட்டு, தொற்று நீக்கி விசிறப்படவுள்ளது.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்று நிருபமும், வழிகாட்டல்களும் சகல பாடசாலைகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார். அனைத்து பாடசாலைகளும் பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டுள்ளதா என்பதனை
கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சருடன் இணைந்து ஒருவார காலம் பாடசாலைகளை கண்காணிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளது. தரம் 05, 11, 13 ஆகிய வகுப்பு மாணவர்கள் இரண்டாம் கட்டத்தில் பாடசாலைகளுக்கு
அனுமதிக்கப்படுவார்கள். தரம் 10, 12 மாணவர்கள் மூன்றாம் கட்டத்தின் கீழ் யூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு
செல்வதற்கு அனுனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டத்தின் கீழ், தரம் 03, 04, 06, 07, 08, 09 வகுப்புகளைச் சேர்நத மாணவர்களக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதில் தாமதம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதில் தாமதம்
ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பின்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவும், இதர சேவைகளுக்காகவும் விமான
நிலையத்தை மீள திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கும்
விதமாக ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை
காட்டிலும் சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கு இதுவரையில் பதிவு செய்துள்ளார்கள்.
வெளிநாடுகளில் தொழில் புரியும் 50 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்கு தூதரகத்தின் ஊடாக பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் நாட்டுக்கு கொண்டு வருவது
அரசாங்கத்தின் கொள்கையாகும். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், நாட்டில் தற்போது உள்ளோர் தொடர்பிலும் அதிக
கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையினை அரசாங்கம் மிகவும், அவதானத்துடனும், பொறுப்புடனும் கையாள்கிறது.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதற்கு எதிர்பார்த்தோம். ஆனால், சுகாதார
தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய தீர்மானம் காலதாமதமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயிலும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி விமான நிலையத்தை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளோம்.
சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதுமே இதன் பிரதான நோக்கமாகும். நாட்டுக்குள்
வரும் சுற்றுலா பயணிகள் அவர்களது நாட்டில் முதலில் பி. சி. ஆர். பரிசோதனையை செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் அவர்கள் எமது நாட்டுக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பி. சி. ஆர் பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.
பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரையில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். சுற்றுலாத்துறை அதிகார சபையில்
பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரமே சுற்றுலா பிரயாணிகள் தங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார நடைமுறைகளை தொடருமாறு இராணுவ தளபதி வேண்டுகோள்
சுகாதார நடைமுறைகளை தொடருமாறு இராணுவ தளபதி வேண்டுகோள்
நாட்டில் கொவிட் 19 பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அளித்த பெரும் ஆதரவுக்கு பொது மக்களுக்கு நன்றி.
கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் பிரதானியும் இராணுவத்
தளபதியுமான கொவிட் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு நன்றி தெரிவித்ததுடன், கொவிட்-19 தடுப்பு சுகாதார
அதிகாரிகளின் சுகாதார நடைமுறைகளான முககவசங்களை அணிதல் , சமூக இடைவெளியை பேணல் , கை கழுவுதல் போன்றவற்றைத் தொடருமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் பரவிவரும் கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்து ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நேறறு
முன்தினம் (27) கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைக் கூறினார்.
“பொது சுகாதார அதிகாரிகள் , சுகாதார ஊழியர்கள், முப்படையினர் உட்படஅனைத்து பங்காளர்களுக்கும்நன்றியை
தெரிவித்து கொண்டார் எமது நாட்டில் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடைசியாக கொவிட்-19 வைரஸ்சால் பாதிக்கப்பட்ட இலங்கையர் பதிவானர்.
ஆனால் வெளிநாட்டு வருகைகள் காரணமாக தொடர்ந்து அவ்வப்போது வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் இலங்கையின் சகோதரர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தலையீட்டால் திருப்பி அழைக்கப்படுகிறார்கள்.
அவர்களை அதிகபட்ச சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கவனித்துக்கொள்வது நமது கடமையாகும்.
படையினரால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தனிமைப்படுத்தல் மையங்களிலும் அவர்களை கண்கானித்துகொள்வதில் முழுமையாக ஈடுபடுகின்றன.
எனவே, நாம் அன்றாட சுகாதார நடைமுறைகள் குறித்து நாம் நன்கு விழிப்புடன் இருப்பதுடன், நமது சமூகத்தின் சிறந்த நலன்களுக்காக
அந்த வழிகாட்டுதல்களைத் தொடர வேண்டியது அவசியம் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்
ஒமானில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்
ஒமானில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமான ஒமான் நாட்டில் சிக்கியிருந்த 288 பேர் இன்று (29) நாடு திரும்பியுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விமானம் மஸ்கட் நகரத்தில்
இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
மேல் மாகாணத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதுடன்
14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின்
உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழரை கிண்டலடித்த லண்டன் பத்திரிக்கை -மக்கள் போர்க்கொடி
ஈழத் தமிழரை கிண்டலடித்த லண்டன் பத்திரிக்கை -மக்கள் போர்க்கொடி
கடந்த மாதம் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் த கார்டியன் ஆங்கிலப் பத்திரிகை தங்களுடைய பக்கத்தில் விடுமுறை சார்ந்த கேள்வி ஒன்றினை எழுப்பி இருந்தார்கள்.
கேள்வி: எந்த பிரபலமான விடுமுறை தீவுக்கு ஈழம் என்பது ஒரு பெயர்?
விடை: சிறிலங்கா
இந்த கேள்வியை அவர்கள் பிரசுரித்த நாளே பிரித்தானியாவின் இலங்கைப் பிரதிநிதி த கார்டியன் பத்திரிகைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அந்த கேள்வியினை நீக்கும் படி கேட்க அதற்கு
இணங்கி த கார்டியன் பத்திரிகையும் அதனை நீக்கி விட்டார்கள். அதற்கு பிறகு பலதரப்பால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த கேள்வியினை மீளவும் பிரசுரிக்க வேண்டியும் பத்திரிகையில்
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இனவாத இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக இனப்படுகொலையின் மத்தியில் நின்று கொண்டிருக்கும்
தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை அவர்கள் எடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பிரித்தானியாவில்
எத்தனையோ தமிழ் மக்களின் மனதினை இச்செயல் புண்படுத்தியுள்ளது என்பதினை அவர்கள் அறிவார்கள் என்று தான் நாம் நினைக்கின்றோம்.
பிரித்தானிய இளையோர் அமைப்பு தொடர்ச்சியாக த கார்டியன் பத்திரிகையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வரலாற்றினை புரிய
வைக்க முற்பட்டது, அதனை ஏற்க மறுத்த த கார்டியன் பத்திரிகை நிருபர் எலிசபெத் ரிப்பன்ஸ் கூறுகையில்
“……….நவீன காலங்களில் ஒரு சொல் நீண்ட மற்றும் வேதனையான உள்நாட்டு யுத்தத்துடன் மிகவும் தொடர்புடையதாக இருந்தால் அக்கேள்வியானது பொழுதுபோக்குக்காக வடிவமைக்கப்பட்ட
வினாடி வினாவுக்கு பொருத்தமானதாக கருதப்படவில்லை. போராட்டங்கள் நடைபெறும் வேறு நாடுகளுக்கும் இது ஒத்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், தனிபட பிரித்து
பார்க்கவேண்டும் அந்த கேள்வி சரியா அல்லது தவறா என்பதற்கு . சூழல் மற்றும் பின்னணி வழங்கப்படும் அரசியல் அல்லது இராஜதந்திர கட்டுரைக்கு வினாடி வினா மிகவும் வேறுபட்டது……….”
இவ்வாறாக அந்த நிருபர் பதிலளித்திருந்தார், மறுபடியும் எம்மால் ஒரு ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டு எமது வரலாற்றினை எழுதியும் அவர்களின் பதிலுக்கு கண்டனம்
தெரிவித்தும் பதில் அனுப்பியுள்ளோம். அதே சமயம் அவர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கும் வண்ணம் அனைத்து
இளையோர்களையும் ஒருங்கிணைத்து சமூகவலைத்தளங்களினூடாக அவர்களுக்கு எமது எதிர்ப்பினை காட்டி வருகின்றோம்.
தமிழ் மக்கள் பலர் மாத சந்தா கட்டி பத்திரிகை படிப்பவர்கள் அதேபோல இணைய தளத்தில் வசிப்பவர்கள் என பலர் த கார்டியன் பத்திரிகைக்கு கட்டணம் செலுத்தி வருகின்றீர்கள்.
எங்களது மக்களின், எங்களது இனத்தின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் எல்லாருமே இனப்படுகொலையின் பங்குதாரர்கள் ஆவார்கள். தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு த கார்டியன்
பத்திரிகைக்கு மின்னஞ்சல் அனுப்பி உங்கள் எதிர்ப்பினை காட்டுதல் அவசியம், அதற்காக நாம் ஏற்கனவே அமைத்து
வைத்துள்ள கடிதத்தில் உங்கள் பெயரினை இணைத்து அனுப்பி வைக்கலாம். கீழ் காணும் இணைப்பை அழுத்தினால் கடிதம் தானாகவே அமைக்கப்படுமாறு வடிவமைக்கப்படுள்ளது.
உங்கள் கணனியில் அல்லது கைத்தொலைபேசியில் இவ் இணைப்பை அழுத்தி நீங்கள் அதனை பூர்த்தி செய்து கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் எங்களால்
மேற்கொள்ளப்படும் பரப்புரைகளில் கலந்து தாங்களும் உங்கள் கருத்தினை பத்திரிகைக்கு தெரிவிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு எமது இணைய தளத்தினை பார்வையிடுங்கள்

நுவரெலியா முத்துமாரியம்மன் தேர் வெள்ளோட்டம்
நுவரெலியா முத்துமாரியம்மன் தேர் வெள்ளோட்டம்
நுவரெலியா மாவட்டம் சென்ஜோன்ஸ் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்காக முன்னால் அமைச்சரும்
தற்போதை நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் 2019
நிதி ஒதுக்கீட்டின் மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் (27.06.2020 ) நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு தோட்ட முகாமையாளர் உட்பட பொது மக்கள் பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்..

நுவரெலியா முத்துமாரியம்மன் 


கருணா என்னைப்பற்றி விளக்கமில்லாமல் பேசுகிறார்-மனோ கணேசன்
கருணா என்னைப்பற்றி விளக்கமில்லாமல் பேசுகிறார்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
நான் ஒருபோதும் புலிகளின் மேடையில் ஏறி, தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியோ, ஆயுத போராட்டத்தை ஆதரித்தோ பேசியதில்லை. உண்மையில் போர்நிறுத்த காலத்தில்
சட்ட பூர்வமாக தென்னிலங்கையில் இருந்து பலர் கிளிநொச்சி சென்று நிகழ்வுகளில் கலந்துக்கொண்டார்கள். அப்படி ஒருமுறை பொங்கு தமிழ் விழாவில் நான் உரை நிகழ்த்தும் போது,
“இலங்கையில் தமிழ் தேசியமும், சிங்கள தேசியமும் ஒன்றாய் வாழ இன்னமும் அவகாசம் இருக்கிறது. இரண்டு இனங்களுக்கும்
இடையில் சமத்துவம் இருக்க வேண்டும். சமத்துவம் இல்லாவிட்டாலேயே பிரிந்து செல்லும் தேவை ஏற்படுகிறது” என்றுதான் நான் பேசினேன்.
ஆனால், நான் பொங்கு தமிழ் விழாவிற்கு சென்று அந்த அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி தனிநாட்டு
கோரிக்கையை வலியுறுத்தி பேசியதாக, புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர், இந்நாள் அரசு சார்பு வேட்பாளர் கருணா அம்மான் கூறியுள்ளார். இது இதற்கு முன்னர் பல சிங்கள
அடிப்படைவாதிகள் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுதான். இப்போது புதிதாக நண்பர் கருணாவும் சொல்கிறார். அவ்வளவுதான்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், முன்னாள் எம்பி அடைக்கலநாதன் ஆகியோர் தொடர்பிலும், கருணா அம்மான் இப்படியே குற்றம் சாட்டுகிறார். அவர்களைபற்றி நான்
பேசபோவதில்லை. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என எண்ணுகிறேன். நான் என்னை பற்றிய கருத்துகளுக்கு மட்டும் பதில் கூறுகிறேன் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும
மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
முன்னாள் எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
என்னைபற்றி பொய் சொல்ல தேவை கருணாவுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே, நண்பர் கருணா அம்மான் என்னைப்பற்றி விளக்கமில்லாமல் பேசுகிறார் என நினைக்கிறேன்
“இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதத்தை கையில் ஏந்தி, எழுந்து வாருங்கள்.” என்று நான் கூறியதாக, அரசாங்கத்தின்
சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில், அன்றைய மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில், செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதை
செய்தவர் யுத்தம் நடந்தபொழுது யுத்த அறிக்கைகளை சிங்கள மக்களுக்கு சுட சுட வழங்கி பிரபல்யமான சமன் குமார ராமவிக்ரம என்ற ஊடகவியலாளர் ஆகும்.
உண்மையில் நடந்தது என்ன? போர் நிறுத்த காலத்தில் அந்த விழாவிற்கு தென்னிலங்கையில் இருந்து பல அரசியல்வாதிகள் சென்று வந்தனர். ராஜபக்ச அரசாங்கத்தில் அப்போதும், அதற்கு
பின்னரும் இருந்த பல தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள் புலிகளின் அரசியல்துறையுடன் தொடர்பு கொண்டவர்கள்தான்.
புலிகளுக்கு தடை விதிக்கப்பட முன் அது அன்று சட்ட விரோத செயற்பாடாக கருதப்படவில்லை.
கிளிநொச்சியில் நடைபெற்ற அந்த ஒரு பொங்கு தமிழ் விழாவில் நானும் கலந்துகொண்டேன். பொங்கு தமிழ் விழா என்பது அரசியல் துறை நிகழ்வு என்பது கருணா அம்மானுக்கு தெரிந்து இருக்க
வேண்டும். கிளிநொச்சி விழாவில் நான் ஆற்றிய உரையை சமன் குமார திரித்து சிங்களத்தில் தப்பு தப்பாக சொன்னதால் தான் அந்த உரை சர்ச்சைக்குள்ளாகியது.
“ஆயுதம் தூக்குங்கள்! இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்குங்கள்!” என்று நான் புலிகளின் மேடையில் ஏறி இரண்டு கைகளையும் உயர்த்தி ஆட்டி நான், பேசியதாக சமன் குமார எனது
தமிழ் பேச்சை திரையில் காட்டி பின்னணியில் சிங்களத்தில் கூறும் பொழுது சிங்கள மக்கள் மத்தியிலே சர்ச்சை ஏற்படுவது
சகஜம்தான். ஆனால் இந்த தப்பைக்கூட தப்பில்லாமல் செய்வதற்கு இந்த சமன் குமாரவிற்கு அறிவு இருக்கவில்லை.
உண்மையில் புலிகளின் மேடையில் ஏறி நான் என்ன பேசினேன்? “இந்நாட்டிலே சிங்கள தேசியமும், தமிழ் தேசியமும் இணைந்து ஒரே வட்டத்திற்குள்ளே வாழ்வதற்கு இன்னமும் இடம் இருக்கின்றது.
ஆனால் ஒரே நிபந்தனையாக இரண்டுக்கும் இடையில் சமத்துவம் நிலவ வேண்டும்” இதுவே எனது பேச்சின் சாராம்சமாக இருந்தது.
உண்மையில் அச்சந்தர்ப்பத்தில் விடுதலை புலிகள், அரசியல், ராணுவ பலத்தில் அதி உச்சத்தில் இருந்தார்கள்.
அன்று அவர்களது மேடையில் ஏறி தமிழ் ஈழத்தை பற்றி பேசாமல் ஐக்கிய இலங்கையை பற்றி நான் பேசி இருக்கின்றேன். அதுவும் தமிழில் பேசியிருக்கிறேன்.
இதை புரிந்துகொள்ளக்கூடிய சிங்கள அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், உண்மையிலேயே அவர்கள் எனக்கு தேச அபிமானி பட்டம் வழங்கி, இராமநாதனை வண்டியில் ஏற்றி இழுத்து
சென்றதை போல, என்னையும் கௌரவபடுத்தியிருக்க வேண்டும். இருப்பினும் இங்குள்ள இனவாத முட்டாள்கள் எனது பேச்சை
திரிபுபடுத்தி எனக்கு இனவாத சேறு பூசினார்கள். இப்போது அதையே தமிழ் மொழியில் நான் பேசுவதை புரிந்துக்கொள்ள கூடிய கருணா அம்மானும் செய்கிறார்.
சம்பந்தனும், அடைக்கலநாதனும், நானும் இடம்பெறும் அந்த காணொளி, கருணா சொல்வதைபோல், பரம இரகசியம் கிடையாது
. யூடியூப் (You Tube) அலைவரிசைக்கு போய் அந்த காணொளியை யாரும் பார்க்கலாம். அதை பார்த்தால், உண்மையில் நான் என்ன
பேசியுள்ளேன் என்பதை தெரிந்து கொள்ளலாம். கருணா அம்மான் அதை பார்த்து, நான் அங்கே என்ன பேசுகிறேன் என்பதை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
நான் தமிழ் ஈழத்தை விரும்பும் தமிழ் அடைப்படைவாதியும் அல்ல. இனங்களுக்கிடையில் அரசியல் சமத்துவத்தை ஏற்காத சிங்கள
அடைப்படைவாதியும் அல்ல. நான், அரசியல் நிலைப்பாடுகளை காலத்துக்கு காலம், திடீர் திடீரென மாற்றிக்கொள்ளும் அரசியல்
சந்தர்ப்பவாதியும் அல்ல. உண்மையில், நான் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் ஒரே நாட்டுக்குள்ளே சமத்துவமாக வாழவேண்டும் என கனவு காணும் ஒரு இலங்கை தேசியவாதி.
இலங்கை அரசியல் பரப்பில், இன்று என்னை எவராவது புரிந்துக்கொள்ள மறுப்பார்கள் எனில், அது என்னை விட என்னை
புரிந்துக்கொள்ள மறுப்பவர்களுக்குதான் நஷ்டம். காலம் இதை நிரூபிக்கும்.
இலங்கையில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்புபோம் – இராணுவ மந்திரி கூவல்
இலங்கையில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்புபோம் – இராணுவ மந்திரி கூவல்
கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய
அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக எதிரிகளை அடையாளம் காண மற்றும் உறுதிப்படுத்த முறையான செயற்பாடு அவசியம்
எதிர்கால சந்ததியினருக்காக அனைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் கொண்டு வர வலியுறுத்து
ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றினூடாக பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள்
தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ,ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக துஷ்பிரயோகம் செய்யும்
சீருடை அணிந்த அதிகாரிகளை அடையாளம் காண சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார் .
“நாங்கள் இராணுவ கலாசாலையில் இருந்தபோது, மிகவும் ஆபத்தான எதிரி யாரெனில் அவர்கள் எமக்குள்ளே இருக்கும்
எதிரிகளாகும் என எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க நமக்குள் இருக்கும் இந்த எதிரியை நாம்
இப்போது அடையாளம் கண்டு உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது ஒரு பயனற்ற முயற்சியாக அமைந்துவிடும் ”என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
நிட்டம்புவ தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் ஜூன் 26 காலை இடம்பெற்ற புதிய புனர்வாழ்வு நிலையக்
கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றிய அவர், விரைவில் இலங்கையிலிருந்து
போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பயனுள்ள வாழ்க்கையை தொடங்குவதற்காக
அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் இதற்காக அவர்களுக்கு அனுதாபம், பரிவு
மற்றும் உதவி என்பன அவசியமாகும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
ஏறக்குறைய 1,000 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதை இலக்காகக் கொண்ட முழுமையான
புனர்வாழ்வு மையம் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) உதவியுடன் நிர்மாணிக்கப்படும்.
‘போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தவறான செயல்களைச் செய்வதன் மூலம் சம்பாதித்த பணத்திலிருந்து தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதற்காக
வெட்கப்பட வேண்டும் என் கூறிய பாதுகாப்பு செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாமல் ஆக்குவது ஒரு
மகத்தான பணியாகும் என தெரிவித்ததுடன், எதிர்கால சந்ததியினருக்காக அனைத்து போதைப்பொருள்
கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் , முதலாவதாக போதைப்பொருள் பாவனைக்கு இரையாகியுள்ள
சிறுவர்களையும் மீட்பதும், இரண்டாவது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதும், மூன்றாவது தவறு
செய்பவர்களுக்கு உதவியளிக்க உத்தியோகத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களை அடையாளம் காண்பதும் ஆகும் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் டொக்டர் லக்நாத் வெலகெதர, 1984
முதல் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை
‘போதை மருந்து இல்லாத, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதற்காக’ ஜனாதிபதி கோட்டபய
ராஜபக்ஷவின் வளமான தேசம் எனும் எண்ணக்கருவிற்கு அமைய சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு வசதிகளை விரிவுபடுத்துவதாக தெரிவித்தார்.
சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கான ‘நவ திகந்தய’ புதிய கட்டிடம் ஜெர்மனிய அரசு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
நிதியுதவியுடன் நிர்மானிக்கப்படவுள்ள அதேவேளை, நிர்மாணம் பணிகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் போது உரை நிகழ்த்திய ஜேர்மனியின் பிரதி தூதுவர் ஆண்ட்ரியாஸ் பெர்க், பயனுள்ள குற்றவியல் நீதி பதில்களின் மூலம் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தைத் தடுக்கவும்
எதிர்வினையற்றவும் இலங்கையின் திறனை வலுப்படுத்தும் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது என தெரிவித்தார்.
“இந்த புனர்வாழ்வு நிலையத்தின் விரிவாக்கமானது, தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில நான்காவது திட்டமாகும்.
இது சிறைத் துறையில் திறனை வலுப்படுத்த ஏதுவாக அமையும் ” என அவர் தெரிவித்தார்.
தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் புதிய கட்டிய விரிவாக்கமானது, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள்
பாவனையாளர்களை சிறைச்சாலைகளிலிருந்து நீக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என பெர்க் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலின் சவால்களை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த திட்டம்
பூர்த்தி செய்யும் என்றும், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் சிகிச்சையை ஒரு தண்டனை முறையாக கருதவில்லை என அவர் தெரிவித்தார்.
“போதைப்பொருள் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதில் அரசாங்கம், தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, சிவில் சமூகம், நீதித்துறை மற்றும் சிறை அதிகாரிகள்
ஆகியோருடன் இணைந்து பணியாற்ற நாம் விரும்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் ஆலன் கோல் கூறுகையில், கொவிட்-19
முடக்கங்களுக்கு மத்தியில் போதைப்பொருள் கடத்தலுக்கான நில வழிகள் தடைசெய்யப்பட்டுள்ளதால், போதைப்பொருள்
கடத்தல்காரர்களுக்கு கடல் மார்க்கம் இலகுவானதாக மாறியுள்ளது. எனினும் இலங்கை கடற்படை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பிராந்திய போராட்டமானது முக்கிய பங்குவகித்தது.
சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதாக உறுதியளித்த கோல்,
சிறைச்சாலை அமைப்பிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான அரசாங்கத்தின் புதிய
மூலோபாயத்தையும், அவர்களை மறுவாழ்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளையும் கோல் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாத அரியசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) தர்சன ஹெட்டியாராச்சி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா
உபுல்தெனியா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மலிக சூரியப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை வந்தடைந்த வெளிநாட்டு இராணுவம்
இலங்கை வந்தடைந்த வெளிநாட்டு இராணுவம்
அரேபிய நாட்டு கடற்படையை சேர்ந்த 51 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின்
மூலம் டுபாயில் இருந்து இன்று (28) காலை 6.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கோத்தபாயாவின் எவன்காட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுத கப்பல் ஒன்றில்
சேவையாற்றுவதற்காக குறித்த கடற்படையினர் வருகை தந்துள்ளனர்.
விமான நிலையத்தில் வைத்து குறித்த கடற்படையினர் பீ.சீ.ஆர்
பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கம்
ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கம்
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 20 ஆம் திகதி முதல்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் தளத்தப்பட்டிருந்தது.
கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி
வரையில் மாத்திரமே அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பற்றி எரிந்த வீடுகள் – தப்பி ஓடிய மக்கள்
மஸ்கெலியா, லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில்
நேற்று (27) இரவு ஏற்பட்ட தீ விபத்தால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஒரு வீடு முழுமையாகவும் மற்றுமொரு வீடு பகுதி அளவும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவலம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும்
பொலிஸார், அனர்த்தத்தின்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் கூறினர்.
இது தொடர்பில் கேள்வியுற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன்,
அவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார்.
அத்துடன், குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் மின்ஒழுக்கு இருந்தால் விரைவில் அதனை சீர்செய்யுமாறு தோட்ட
முகாமைத்துவ அதிகாரிகளிடம் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்







