மலேசியாவிலிருந்து 150 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த
இலங்கையர்கள் 150 பேர் இன்று (30) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 319 எனும் விசேட விமானம் மூலம்,
மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, இவர்கள் இன்று காலை
8.52 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்விமானப் பயணிகளில், வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த
ஒரு குழுவினரும், உயர் கல்விக்காக புறப்பட்டுச் சென்றிருந்த மாணவர்களும்
அடங்குகின்றனர். இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்

- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்

- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை








