எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களுக்கு தீர்வு பேச்சுக்கு அழைக்கும் ரணில் விக்கிரமசிங்கா

தமிழர்களுக்கு தீர்வு பேச்சுக்கு அழைக்கும் ரணில் விக்கிரமசிங்கா

இலங்கையில் தமிழர் தரப்பு பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேசிட தமிழர் காட்சிகளை அழைக்கிறார் ரணில் விக்கிரமசிங்கா .

தமிழர்களை அழித்திட முக்கிய காரணமாக விளங்கிய ரணில் ,தனது அரசியல் எதிர் காலத்தை கருதி இந்த பேச்சுக்கு அழைக்கிறார் .

தேர்தலில் வென்றிட தமிழர்கள் ஆதரவு தேவையாக உள்ள நிலையில் ,கண்துடைப்பு நாடகம் ஒன்றை ஆட ரணில் முனைகிறார் .

சிங்கள மக்களினால் வெறுக்க பட்டுள்ள ரணில் ,தமிழர்கள் வாக்கு வங்கிகள் ஊடக தேர்தலில் வெல்வதற்கு இந்த நரி தந்திர வேலையை ஆரம்பித்துள்ளார் .

No posts found.
பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்

பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்


இரத்தனபுரி நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று மறு பேரூந்துடன் நேரெதிர் மோதியது .

இந்த மோதலில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

பேரூந்துகள் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன .

No posts found.
புலிகள் புதைத்த குண்டுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் புதைத்த குண்டுகள் மீட்பு

புலிகள் புதைத்த குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் புலிகளினால் புதைத்து வைக்க பட்ட குண்டுகள் வீடு ஒன்றுக்குள் இருந்த்து மீட்க பட்டுள்ளன .

போர் காலத்தின் பொழுது வீடுகளுக்குள் புலிகளினால் மாறுது புதைக்க பட்ட குண்டுகள் மீட்க பட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது

இராணுவத்தினருக்கு கிடைக்க பெட்ரா தகவலையா டுத்து குண்டுகள் மீட்க பட்டுஇல்லன ,இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

No posts found.
மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கப்பலில் மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு

கப்பலில் மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச்

சேர்ந்த பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.

2022 நவம்பர் 07ஆந் திகதி பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கடற்பரப்பில் சுமார் 303 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளது.

கப்பல் ஊழியர்கள் கப்பலில் இருந்த பயணிகளுடன் கப்பலைக் கைவிட்டுச் சென்றுள்ளதாக கப்பலைத் தொடர்பு கொண்ட இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முயற்சியின் பேரில், இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள

கப்பலில் மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு

இலங்கைத் தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களால் தொடர்பு கொள்ளப்பட்ட ஜப்பானியக் கொடியுடன் கூடிய ‘ஹீலியோஸ் லீடர்’ என்ற கப்பலினால் பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து பயணிகள் மீட்டெடுக்கப்பட்டனர்.

தெற்கு வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்தில் வைத்து குறித்த பயணிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பயணிகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் செயன்முறை, வியட்நாம் அதிகாரிகள் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன்

ஒருங்கிணைந்து புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பால் மேற்கொள்ளப்படும்.

அவர்களது குடியுரிமை மற்றும் இதர சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தும் செயன்முறை நிறைவடைந்ததும் குறித்த பயணிகளை விரைவாக நாட்டிற்கு

மீள அனுப்புவதற்காக, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான

சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது.

No posts found.
பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு இலவசமாக பால்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு இலவசமாக பால்

பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு இலவசமாக பால்

பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலையியற் குழுக்கள் குறித்து மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை

அமைக்க (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு ஆகிய மூன்று குழுக்களுமே இவ்வாறு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய வெளிநாட்டு அமைச்சர் கௌரவ அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, கௌரவ

பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு இலவசமாக பால்

எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோரே இந்த விசேட குழுவில் நியமிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலையியற் குழுக்களான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு), அரசாங்க நிதி பற்றிய குழு ஆகிய குழுக்களின்

செயற்பாடுகள் இந்தப் புதிய நிலையியற் குழுக்களின் விடயதானங்களுடன் மேற்படுகை செய்கின்றனவா என்பது குறித்து ஆராய்ந்து திருத்தங்கள்

மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது பற்றிய பரிந்துரைகளை இந்தக் குழு முன்வைக்கும்.

இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி இந்தக் குழுவின் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், 2023ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதத்திற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்து எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குழுநிலை விவாதத்துக்கு

ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை ஒன்றரை மணித்தியாலங்களினால் அதிகரிப்பதற்கும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய வரவுசெலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெறும் நவம்பர் 23ஆம்

திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பாராளுமன்ற விவாதங்கள் பி.ப 7.00 மணிவரை நடத்தப்படவிருப்பதுடன், இதற்கு முன்னர்

தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய டிசம்பர் 08ஆம் திகதி மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கும் நடத்தப்படவுள்ளது.

மேலும், நாளாந்தம் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கிளாஸ் பாலை வழங்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம்

தெரிவித்தார். இதற்கு அமைய நாளொன்றுக்கு ஆகக் கூடியது பாடசாலை மாணவ மாணவியர் 500 பேருக்கு அடுத்த வருடத்திலிருந்து இதனை
நடைமுறைக்குக் கொண்டுவரவும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

No posts found.
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ

லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ


நேற்று 08-11-2022 லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர் எதிர்ப்பு கண்டன போராட்டம் நடத்தினர் .

உள்ளூர் நேரம் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை இந்த, கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .

இந்த போராட்டத்தின் பொழுது ,பயங்கர வாத தடை சட்டம் நீக்க பட வேண்டும் ,

சூத்து மாத்து ரணில் விக்கிரமசிங்கா அரசியல் அகற்ற பட வேண்டும் ,அணைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்ய பட வேண்டும் ,என்ற முக்கிய அம்ச கோரிக்கையை மையமாக வைத்து, இந்த அறவழி போராட்டம் இடம் பெற்றுள்ளது .

லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை ,
தமிழருக்கான சுதந்திர வேட்டை என்கின்ற அமைப்பினர் தலைமை ஏற்று நடத்தினர் .

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத அரசாங்கம்

இலங்கை இராணுவம் பயங்கரவாத இராணுவம் என்கின்ற கொட்டு முரசுகள் ,கொட்டும் மழைக்குள்ளும் மக்கள் கோஷமாக முழங்கினர் .

இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,இலங்கை தமிழ் இன படுகொலையாளிகளான, ராஜபக்ச குடும்பத்தை அடைகாத்த படி ,நரி தந்திர அரசியலை நடத்திய வண்ணம் உள்ளார் .

அப்பாவி மக்கள் விடுதலை மற்றும் ,அவர்கள் வாழ்வாதார நெருக்கடிகள் தொடர்பாக எவற்றிலும் அக்கறை செலுத்தவில்லை .

தொடர்ந்து நாள் தோறும் மர்ம கொலைகள் இலங்கையை உலுப்பிய வண்ணம் உள்ளன .

நாள் தோறும் பற்றைகள் ,நீர் நிலைகளில் ,நான்கிற்கு மேற்பட்ட மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .கடத்த பட்டு காணாமல் போனவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .


இந்த கொலைகளின் பின்னால் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவின், நிழல் டிவிசன் இராணுவ அணியின் செயல் படுகின்றனர்,
என்கின்ற குற்ற சாட்டு, பலமாக வைக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

https://www.youtube.com/shorts/p2LJF8ns8Qs
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ

லண்டன் போராட்டங்கள் யாவும் இதில் அழுத்தி பார்க்கலாம்

சாட்டி மாவீரர் மைதானத்தில் கொட்டல் கட்டும் வெளிநாட்டு தமிழர்
Posted in இலங்கை செய்திகள்

சாட்டி மாவீரர் மைதானத்தில் கொட்டல் கட்டும் வெளிநாட்டு தமிழர்

சாட்டி மாவீரர் மைதானத்தில் கொட்டல் கட்டும் வெளிநாட்டு தமிழர்

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு தமிழர் ஒருவர் கொட்டல் ஒன்றை அமைக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர், மாவீரர் மயானங்கள் சிங்கள இராணுவத்தால் சிதைத்து அழிக்க பட்டது .

அதன் பின்னர் சிங்கள அரசின் ஆதரவாக செயல் படும், கூலிக் குழுக்கள் அல்லது ஆதரவு நபர்கள் ,தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .

இந்த சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டல் அமைத்திட சென்றுள்ள தமிழர் யார், அவர் எந்த நாட்டில் இருந்து சென்றுள்ளார் என்ற தகவலை ,போர் குற்ற தகவல் திரட்டும் பிரிவினர் திரட்டி வருகின்றனர் .

மக்கள் வழிபடும் மாவீரர்கள் கல்லறைகள் உடைக்க பட்டு ,அந்த புனிதர்கள் அவமதிக்க படும் செயல், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் எழுச்சி இலங்கையை ஆக்கிரமித்துள்ள நிலையில் ,மாவீரர் வித்துடல்கள் விதைக்க பட்ட பகுதியில் கொட்டல் அமைக்க முனைவது எவ்வாறு சாத்தியம்..?

என்பதும் ,அவ்வாறு தொடர்ந்து அவர்களினால்
அந்த கொட்டலை நடாத்தி செல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .

தகவல் மறவன்

சாட்டி மாவீரர் மைதானத்தில் கொட்டல் கட்டும் வெளிநாட்டு தமிழர்
சாட்டி மாவீரர் மைதானத்தில் கொட்டல் கட்டும் வெளிநாட்டு தமிழர்
மூழ்கிய கப்பலில் 76 யாழ்ப்பாண தமிழர்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மூழ்கிய கப்பலில் 76 யாழ்ப்பாண தமிழர்கள் மீட்பு

மூழ்கிய கப்பலில் 76 யாழ்ப்பாண தமிழர்கள் மீட்பு

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து படகில் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாமில் உள்ள
வுங் தாவோ துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இறந்த பிச்சைக்காரர் பையில் 135.000 பணம்
Posted in இலங்கை செய்திகள்

இறந்த பிச்சைக்காரர் பையில் 135.000 பணம்

இறந்த பிச்சைக்காரர் பையில் 135.000 பண

கடந்த வார இறுதியில் புத்தளம் – சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவரிடம் 1இலடசத்து 35 ஆயிரம் ரூபா பணம்

மற்றும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – சிலாபம் வீதியில் உள்ள அனவிலுந்தவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே (வயது 49) உயிரிழந்துள்ளார்.

இறந்த பிச்சைக்காரர் பையில் 135.000 பணம்

அனவிலுந்தாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) உயிரிழந்துள்ளார்.

அவரது பையை சோதனை செய்ததில் 1இலடசத்து,35ஆயிரம் பணம் மற்றும் அவரது வங்கி கணக்கில் 47 ஆயிரம் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளில் அவர் பல வருடங்களாக பிச்சைக்காரராக வாழ்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது..

விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.
கிர்த்திபால மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கணனிக்கட்டமைப்பு வழமை நிலைமைக்கு திரும்பிய நிலையில் இன்று (09) காலை முதல் கடவுச்சீட்டு

வழமைப் போன்று விநியோகிக்கப்படுவதாக குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் பிரதி குடிவரவு கட்டுப்பாட்டாளர் திருமதி பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (08) வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கீடு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று (09) கடவுச்சீட்டு

விநியோகிக்கப்படும் என்று ஊடக பேச்சாளர் பிரதி குடிவரவு
கட்டுப்பாட்டாளர் திருமதி பியூமி பண்டார மேலும் தெரிவித்தார்.

மழை அதிகரிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மழை அதிகரிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

மழை அதிகரிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது.

2022 நவம்பர்09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 நவம்பர் 09ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை அதிகரிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, சப்ரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

No posts found.
விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் கர்ப்பிணி மரணம்

விபத்தில் கர்ப்பிணி மரணம்

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கஹடகஸ்திகிலிய-ரத்மல்கஹா வெவ பிரதான வீதியிலேயே இவ்வனர்த்தம் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரிகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
யாழில் மாட்டு திருடன் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மாட்டு திருடன் சிக்கினார்

யாழில் மாட்டு திருடன் சிக்கினார்

யாழ். மாவட்டத்தில் சமீப காலமாக கிராமப் புறங்களில் மாடுகள் மற்றும் ஆடுகளை திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பளை – வறுத்தளைவிளான் பகுதியில் மாடு ஒன்றுடன் மூவர் நடந்து சென்றுள்ளனர்.

அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் விசாரிக்க முற்பட்ட பொழுது அவர்கள் ஓடியுள்ளனர்.
அதில் ஒருவர் துரத்திப் பிடிக்கப்பட்டு தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

லண்டன் வானில் தோன்றிய இரட்டை வானவில் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் வானில் தோன்றிய இரட்டை வானவில் வீடியோ

லண்டன் வானில் தோன்றிய இரட்டை வானவில் வீடியோ

லண்டன் தென் கிழக்கு லண்டன் லூசியம் பகுதியில் இரட்டை வானவில் தோன்றிய அதிசயம் நிகழ்ந்துள்ளது .


மதியம் இரண்டு மணியளவில் ,நமது கமராவுக்குள் , இந்த காட்சிகள் பதிவாகின .

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் இறந்த பொழுதும் ,இது போன்ற இரட்டை வானவில் தோன்றின .
அதுபோலவே இன்றும் இவ்வாறு தோன்றியுள்ளது குறிப்பிட தக்கது .

அந்த காட்சிகளை காணொளியில் பாருங்கள் .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

https://www.youtube.com/watch?v=WdHZlLk_Rts
பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என

அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்

ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்நாட்டில் நாம் 1958, 1977, 1983 கால கட்டங்களில் இனவாத கலவரங்களை பார்த்துள்ளோம். 1971, 1988, ஆண்டுகளில் தெற்கில் ஆயுத போரை பார்த்துள்ளோம். 2004ல் சுனாமி அழிவை பார்த்துள்ளோம். அதன் பின் 30 ஆண்டுகால போருக்கு முகம் கொடுத்துள்ளோம்.

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

எதுவாக இருந்தாலும், எக்காலத்திலும் இன்றைய நிலைமையை போல் நமது மக்கள் நெருக்கடியை சந்திக்கவில்லை என எண்ணுகிறேன். எக்காலத்திலும் மக்கள் எப்படியாவது மூன்று வேளையும் சாப்பிட்டார்கள்.

பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்தார்கள். இந்த காலத்தில்தான் இப்படி மிகவும் மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறார்கள்.

நாம் இன்று இந்த யோசனையை கொண்டு வந்ததன் நோக்கம், இந்த நெருக்கடிக்குள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணங்களை ஏற்பாடு செய்யுங்கள் என்ற கோரிக்கையின்படி ஆகும்.

அது அரசின் கடப்பாடு. அரசு கடமைப்பட்டுள்ளது. எதிரணி என்ற முறையில் நாம் அதை அரசுக்கு எடுத்து கூட கடமைப்பட்டுள்ளோம்.

சபை தலைவர் அவர்களே, நான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். இன்று இந்நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, துன்புறும், நலிவுற்ற பிரிவினர், தோட்ட தொழிலாளர் ஆகும்.

இடதுசாரி தலைவர் என்பதால் இது உங்களுக்கு நன்கு தெரியும். இதை நாம் எப்போதும் சொல்லி வந்தோம்.

யாரும் கவனத்தில் பெரும்பாலும் எடுக்கவில்லை. இன்று உலகம் சொல்ல ஆரம்பித்து விட்டது. இன்று ஐநா அமைப்புகள் கூறுகின்றன.

ஐநா உணவு விவசாய ஸ்தாபனம் தனது விசேட அறிக்கையில் என்ன கூறுகிறது? இந்நாட்டில் அதிகூடிய உணவின்மை நிலைமையினால், அதிகம் வாழ்க்கை சுமையை சுமக்கும் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறது.

தோட்டப்புறத்தில் பெண்கள் மேலதிக மையை சுமந்து குடும்பங்களை நடத்துகிறார்கள்.

அதேவேளை உலக உணவு நிறுவனம், தோட்டப்புறங்களில் உணவின்மை 51 விகிதம் என கூறுகிறது.

நகர பகுதிகளில் 43 விகிதமும், கிராம பகுதிகளில் 34 விகிதமும் என கூறுகிறது. இந்த உணவின்மை என்பது ஜனாதிபதி அவர்கள் தினந்தோறும் பேசும் ஒரு விஷயம் ஆகும்.

நான் சொன்னது போன்று, மூன்று வேளை உணவு என்பது, இன்று இரண்டு வேளை ஆகிவிட்டது.

இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் இன்று ஒருவேளைதான் சாப்பிடுகிறார்கள். அது அதிகம் நிகழ்வது இங்கேதான்.

இதை இன்று நாம் கூறுவதை விட ஐநா கூறுகிறது. உலகம் கூறுகிறது என்பதை அரசாங்கம் அறிய வேண்டும்.

அது மட்டுமல்ல, ஐநாவின் நவீன அடிமைத்துவத்துக்கான அறிக்கையாளர் டோமாயா ஒபகாடா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐநா மனித உரிமை ஆணையக அவைக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.

அவர் என்ன கூறுகிறார்? இலங்கையில் பெருந்தோட்டங்களை காணப்படும் ஒடுக்கு முறைக்கு பின்னால் இனத்துவ காரணம் இருக்கிறது என கூறுகிறார்.

பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு காரணமாக அவர்கள் தொழிலாளர் என்பதை விட, அவர்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் உள்ளது என அவர் கூறுகிறார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு.

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு, சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.

நாம் அநேகமான பாரபட்சங்களுக்கு முகம் கொடுக்கின்றோம். இங்கே கல்வி அமைச்சர் இருப்பதால் ஒன்றை அவர் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நீங்கள் கல்வி துறையில் பல புனர்மாற்றங்களை செய்கிறீர்கள். கொழும்பு நகர கல்வி வலயத்தை வட-மத்திய கொழும்பு வலயம் என்றும், தென் கொழும்பு வலயம் என்றும் இரண்டாக பிரிக்க நாம் முடிவு செய்துள்ளோம்.

அது நல்லது. நுவரேலியாவில், நுவரேலியா, ஹட்டன், நோர்வுட், தலவாக்கலை ஆகிய நான்கு வலயங்கள் உருவாக வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஏனெனில், இன்றுள்ள நுவரேலியா, ஹட்டன் வலயங்களில் சுமார் 250 பாடசாலைகள் உள்ளன.

80,000 மாணவர்கள் உள்ளனர். ஆகவே நான்கு வலயங்கள் என்பது மிக நியாயமான கோரிக்கை.

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

உண்மையில் எமக்கு அங்கே ஆறு வலயங்கள் வேண்டும். ஆனால், மூன்று வலயங்களுடன் முடித்து விட விட சிலர் முயல்கிறார்கள்.

அதேபோல், நமது நல்லாட்சி காலத்தில் 2019ம் வருடம் வர்த்தமானி பிரகடனம் மூலம், புதிய பிரதேச செயலகங்கள், நுவரெலியாவில், மேலதிகமாக ஐந்தும்

இரத்தினபுரியில் இரண்டும், காலியில் இரண்டும் அமைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதில் இரத்தினபுரி, காலி என்பவற்றில் புதிய பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஆனால், நுவரெலியாவில் இல்லை. ஏன் இந்த அநீதி?

அதேபோல் நாட்டின் ஏனைய இடங்களில் 500 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு சென்றால், பெருந்தோட்ட பகுதிகளில் 1000 முதல் 5000 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு அமைக்கபட்டு உள்ளது.

ஏன் இந்த அநீதி? இப்போது போலிஸ் அதிகாரம் கிராம சேவகர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது என்ன பாரபட்சம்?

அடுத்த வருடம் 2023 ஆகும் பொழுது இந்த மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைய போகின்றன. இவர்கள் இங்கே நாடு பிடிக்க வரவில்லை. நாட்டை உருவாக்கவே வந்தார்கள்.

அவர்கள் இங்கே வந்த பாதையே ஒரு சோக பாதை. பல கதைகள் உள்ளன. வரும் வழியிலேயே 25 விகிதமானோர் இறந்து போனார்கள்.

இங்கே வந்து காடுகளை வெட்டி, இன்றுள்ள தேயிலை, இறப்பர் தோட்டங்களை உருவாக்கினார்கள். பின்னர் அந்த தேயிலை, இறப்பர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் கொழும்பு துறைமுகத்தை உருவாக்கவும் அவர்களது உழைப்பு பயன்பட்டது.

பின்னர் மலைநாட்டுக்கும், கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் ரயில் பாதைகளை உருவாக்கவும், நெடுஞ்சாலைகளை உருவாக்கவும் அவர்களது உழைப்பு பயன்பட்டது.

200 வருடங்களாக உழைத்துக்கொண்டு இருக்கும் இம்மக்களுக்கு இந்நாடு தரும் பரிசு என்ன? இங்கே தீர்வு, நியாயம் இல்லை என்பதால்தான் இவர்களது இன்றைய நிலைமையை ஐநா அமைப்புகள் பேசும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவோம். புதிதாக சிந்திப்போம்.

இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக விரும்புவதை தவிர, சமீபத்தையை இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களது அபிலாஷைகள் வேறு ஒன்றும் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். தேசிய நீரோட்டத்தில் எம்மை உள்வாங்குங்கள்.

இந்நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மக்களுக்கு இன்று காணி உரிமை,
வீட்டு உரிமை இல்லை.

வறுமை அதிகம். மந்தபோசனம் அதிகம். வேலை வாய்ப்புகள் குறைவு.
அவர்களது நிர்வாக கட்டமைப்புகள் தோட்ட நிர்வாகங்களிடம்தான் அதிகம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


நாட்டின் ஏனைய மக்களை போல அவர்களையும் மாவட்ட செயலக, பிரதேச செயலக,


கிராம செயலக தேசிய நிர்வாக கட்டமைப்புக்கு உள்ளே கொண்டு வாருங்கள்.
இன்று மலையக தமிழ் இனத்தின் உள்ளே வாழும் பெருந்தோட்ட பிரிவினரை
பின்தங்கிய பிரிவு மக்களாக கருதி அவர்களை தேசிய மட்டத்துக்கு கைதூக்கி விடுங்கள்.

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு

இலங்கை தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு இடம்பெற்றுளளது

வீட்டுக்குள் நுழைந்த திருடர் அங்கிருந்த பணம் ,மற்றும் மூன்று லட்சம் ரூபா பொருட்கள் உள்ளிட்டவை திருடி கொண்டு தப்பித்து சென்றுள்ளார்

இந்த திருட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்

இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்

இலங்கை கந்தகாடு சிறை உடைத்து 200 கைதிகள் தப்பியோடியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .

இவ்வாறு தப்பித்து சென்றவர்களில் ,தொடர்ந்து 30 பேரை காணவில்லை என்கிறது சிறைச்சாலை வட்டாரங்கள் .

இந்த சிறை உடைப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைக்க திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைக்க திட்டம்

22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைக்க திட்டம்

புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் பிற்போடப் படமாட்டாது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ,வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை

நிரப்ப கல்வி அமைச்சுத் திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக, 22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் கூறினார்.

தற்போது பாடசாலைகளில் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. அமுலுக்கு வரும் புதிய ஓய்வூதியக் கொள்கை காரணமாக இந்த வருட இறுதியில் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைக்க திட்டம்

ஆரம்பத் திட்டமாக பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சையை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அபிவிருத்தி உதவியாளர்களாக பணிபுரிபவர்களும், அரச சேவையில் உள்ள ஏனைய பட்டதாரிகளும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வருட முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது திட்டமிட்டபடி பாடப் புத்தகங்களை வழங்க தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் .


இதற்காக இந்திய கடனுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் கூறினார்.

No posts found.
மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த

ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.

படகிலிருந்த இலங்கைப் பிரஜையொருவர் கடற்படையை இன்று தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்

மூழ்கி கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் 300 பேர் மீட்பு

இந்நிலையில், கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.

அந்தவகையில், படகிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், வியட்நாம் நோக்கிச் செல்வதாகவும் இலங்கைக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த டி சில்வா,

ஏனையோரின் அடையாளங்கள்,
அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

No posts found.
ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு

ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக்குடன் இலங்கை ஜனாதிபதி ரணில் பேச்சு

எகிப்துக்கு பயணித்துள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக்கை சந்தித்து பேசியுள்ளார் .

இதில் அவர் பிரதமராக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டார் .

மேலும் இவ்வேளை இலங்கை தொடர்பான விடயங்களும் பேச பட்டுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.