காட்டு யானையின் தாக்குதலுக்கு பலியான ஜோடி
Posted in இலங்கை செய்திகள்

காட்டு யானையின் தாக்குதலுக்கு பலியான ஜோடி

காட்டு யானையின் தாக்குதலுக்கு பலியான ஜோடி

உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரம் ஒன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

காட்டு யானை தாக்கியதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த யுவதி மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்

மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்

மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (11) மதியமளவில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த ஓட்டுநர் இவ் வீதியில் பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்த நிலையில் கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

மன்னாரில் முறியடிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்தல் சம்பவம்

குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்தி கொண்டு வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாகனத்தை சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொதுமக்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.

காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம்
மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி
அலுவலகத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை

காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் சட்டங்களே இன்றும்
நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பயன்பாடுகள் தொடர்பில்
பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச்
செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறது என்றும் தெரித்தார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்படுகின்ற
சிக்கல்களை நீக்கி புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இங்கு
தீர்க்கமாக ஆராயப்பட்டது.

அதற்காக காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபை காணிகள் தொடர்பிலான
பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் காணப்படுகின்ற காணி
உரிமையாளர்களின் விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள் மற்றும்
பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற காணிகள் தொடர்பில் கண்டறிந்து பிரதேச
செயலாளர் பிரிவு மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி
வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற
காணிகளை உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும்,
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை

பெறுமதியை செலுத்தி அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்போது நில அளவைத் திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டுத் திணைக்களங்களில்
காணப்படும் தாமதங்களை நிவர்திப்பதற்காக அவற்றின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு
அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை
வழங்கினார்

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது

காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து
தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி
விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற ஜனநாயக
போராட்டம் மே 9 ஆம் திகதிக்கு பின்னர் தான் வன்முறையாக மாற்றமடைந்தது.

காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை
ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள்
மீது தாக்குதல் நடத்தினார்கள்.

காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் அரசாங்கத்துக்கு
எதிராக நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது
டுவிட்டர் ஊடாக செய்தி வெளியிட்டார். ஆனால் தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது
செய்யப்படவில்லை.

காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது உள்ளார்கள் என்பதை அனைவரும் நன்கு
அறிவார்கள்.

ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக யார் மாற்றியது என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
போராட்டத்தை ஆளும் தரப்பினர் அவரவர் எண்ணம் போல் விமர்சிக்கிறார்கள். உண்மையை
மறைத்து விடுகிறார்கள்” என்றார்.

Error: View 9293b2au4w may not exist
யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை

யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆட்கள் அற்ற தனியார் காணிகளுக்குள் உள்ள பனை மரங்களில் நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்கின்றனர்.

யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை

காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்கிறோம் , பனம் பழங்களின் விதைகள் கொண்டு , பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்கிறோம்.

பனம் பழத்தின் இளம் பதமாக உள்ள நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்வதனால் பனம் பழம் இல்லாது போகிறது. பனம் பழத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட எமது சிறிய வாழ்வாதாரம் இல்லாமல் போகின்றது. எனவே உரிய தரப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நுங்கு திருட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

Error: View 9293b2au4w may not exist
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கைது

வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கைது

குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் காரில் பயணித்த சந்தேக நபர் குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி குருநாகல் வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 72 இல் கடமையாற்றும் பெண் வைத்தியர் மற்றும் ஆண் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இச்சம்பவத்தின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்யுமாறு கோரி குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் நமது கடற்பரப்பில் அதிக அளவு இரசாயனங்கள் கலந்ததால் சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு முன் நிவ் டயமன்ட் விபத்து இடம் பெற்றதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு

பிறகு கடற்ப்பரப்பை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்நிகழ்வுகளை பார்க்கும் போது இதில் ஒரு சதி நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் பசுமைப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம் குறித்து பேசினாலும், நமது நாட்டில் அது வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் இருப்பதாகவும், அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் இது மேலும் தெளிவாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய ஜனாதிபதி அன்று செயற்பட்டது போன்று எந்த மாற்றமும் இன்றி தற்போதைய ஜனாதிபதியும் செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நிவ் டயமன்ட் சம்பவத்திற்குப் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை யாது என தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் அவ்வாறானதொன்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் தெளிவான நோக்கம் தனக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ல், நிவ் டயமன்ட் ஆகிய இரு துயர சம்பவங்களில் இருந்தும் இந்த அரசாங்கம் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும், இந்த முறையற்ற போக்கால் நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கசிவு இருப்பது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதித்த தரப்பினர் யார் என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் மிக உயர்தரத்திலான சேவைகளைக் கொண்ட துறைமுகம் எங்களிடம் காணப்பட்டாலும் இந்த விபத்தின் போது, அதைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் எங்களிடம் இருக்கவில்லை எனவும், இந்த அரசாங்கம் கப்பலை காப்பாற்ற முயற்சித்ததாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய இந்த விவாதத்தை நிறுத்த பாரிய சதி நடந்ததாகவும், தாம் கப்பல் தரப்பு சார்பில் பேசவில்லை எனவும், நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரப்பினர் சார்பாகவே பேசுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீபற்றியதால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இன்று (10) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில், நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளன.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஐ.எம்.எப். பணியாளர் குழு நாட்டுக்கு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

ஐ.எம்.எப். பணியாளர் குழு நாட்டுக்கு விஜயம்

ஐ.எம்.எப். பணியாளர் குழு நாட்டுக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறது.

குறித்த குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் பிற்பகுதியின், முதலாவது மீளாய்வு பணிக்கு முன்னதாக, இலங்கையுடனான வழமையான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது

மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை

மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (09) பதிவாகியுள்ளது.

பணத்தை பறிகொடுத்த குரவில் பகுதியினை சேர்ந்த குறித்த பெண் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

தன்னிடம் இருந்த பணம் உட்பட 2 இலட்சத்து 80,000 ரூபாய் வரையான பணத்தினை கைப்பையில் கொண்டு சென்றவேளை இந்த கொள்ளை சபம்வம் இடம்பெற்றுள்ளது.

Error: View 9293b2au4w may not exist
மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
Posted in இலங்கை செய்திகள்

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி

குறித்த மாணவி ஒரு மாணவர் தலைவர் எனவும், கட்டுகஸ்தோட்டை – களுகமுவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த குழந்தை

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த குழந்தை

இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ். இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம், உறவினர்களிடம் இன்று (10) கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

டைனமைட் வெடி 07 மீனவர்களுக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

டைனமைட் வெடி 07 மீனவர்களுக்கு விளக்கமறியல்

டைனமைட் வெடி 07 மீனவர்களுக்கு விளக்கமறியல்

மன்னார்– வங்காலை கடற்பரப்பில் வைத்து டைனமைட்வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த 07 மீனவர்களையும், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான், நேற்று (09) உத்தரவிட்டார்.

மன்னார் வங்காலை கடற்பரப்பில் வைத்து டைனமைட் வெடி பொருட்களுடன் மன்னாரைச் சேர்ந்த 7 மீனவர்களை திங்கட்கிழமை (8) வங்காலை பிரதேச கடற்படை கைது செய்து மன்னார் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் ஊடாக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

டைனமைட் வெடி 07 மீனவர்களுக்கு விளக்கமறியல்

இதன்போது மீனவர்களிடம் இருந்து இருந்து டைனமைட் வெடி பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

மீன்கள் அற்ற நிலையில் வெடி பொருட்கள் மட்டும் உடமையில் இருந்ததால் வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வங்காலை பொலிஸார் விசாரணையின் பின் குறித்த மீனவர்களை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

திருகோணமலை மினி சூறாவளி
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலை மினி சூறாவளி

திருகோணமலை மினி சூறாவளி

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (09) மாலை வீசிய மினி சூறாவளியுடள் கூடிய மழையினால் பல்வேறு வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பட்டிமேடு, புதுக்குடியிருப்பு, குன்சப்பந் திடல் உள்ளிட்ட பல வீடுகளும் பயன்தரு மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மினி சூறாவளி

அத்துடன், இரு மணித்தியாலயங்களுக்கும் அதிகமான நேரம் மின் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மின் கம்பமும் சேதமாக்கப்பட்டதன் காரணத்தால் மின் தடைப்பட்டிருந்து. இந்நிலை, மின்சார சபை மூலமாக சீர் செய்யப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியது.

தென்னை, வாழை மற்றும் பலா உள்ளிட்ட மரங்கள் முறிந்து வீட்டுக்கூரை உட்பட வீதியோரங்களிலும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த காற்றுடன் கூடிய மழையினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன

முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

முட்டை விலை மேலும் குறையும்

முட்டை விலை மேலும் குறையும்

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஒரு வெள்ளை முட்டை மொத்த விலையில் 40 ரூபாய்க்கும், பழுப்பு முட்டை 41 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பேக்கரிகளில் இருந்து 44-45 ரூபாய்க்கு முட்டை கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

வெள்ளை முட்டை ஒன்றிற்கு 44 ரூபாவும், பழுப்பு நிற முட்டை ஒன்றிற்கு 46 ரூபாவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலையை பிறப்பித்துள்ள போதிலும், இம்மாத இறுதிக்குள் முட்டையின் விலை மேலும் குறைவடையும் எனவும், குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது

2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது

இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அவ்விரு சிறுமிகளின் பெரிய தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட பகுதியில் 12 மற்றும் 13 வயதான இரண்டு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிக் கைது செய்யப்பட்ட பெரிய தந்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே ஹட்டன் நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இரண்டு சிறுமிகளின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களின் தந்தை மறுமணம் முடித்துள்ளார் இந்த இரண்டு சிறுமிகளும் பெரிதந்தையின் பாராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.

2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது

பெரிய தந்தையானால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி வந்தமை தொடர்பில் இவ்விரு சிறுமிகளும் தனது வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர். அதனை அடுத்து பாடசாலையின் நிர்வாகத்தின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினை பெற்றுகொள்வதற்காக டிக்கோயா -கிளங்கன் ஆதாரவைத்திய சாலையில் இவ்விரு சிறுமிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை

வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை

மழையுடனான வானிலையுடன் வீதிகளின் தன்மைகளை புரிந்துகொண்டு வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக அதிவேக வீதிகள் மற்றும் மலையக வீதிகளில் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், கற்பாறைகள் சரிந்து வீழ்தல் மற்றும் மண்சரிவு ஏற்படலாம் என்பதால் மலையக வீதிகளில் அவதானத்துடன் வாகங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை

ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை

ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்டு, பல்வேறு சித்திரவதையால் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்து 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 74 பணிப்பெண்களை காப்பாற்றி நாட்டிற்கு அனுப்புமாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர். .

நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பெண்கள் அங்குள்ள வீடுகளில் வீட்டின் உரிமையாளர்களால் அடித்து மற்றும்

நெருப்பால் சூடு வைத்தும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை

இவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களை (சேவ் கவுஸ்) என்ற இடத்தில் தங்கவைத்துள்ளதுடன் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைத்துள்ளனர்

இவர்களை நாட்டுக்கு அனுப்பாது 9 மாதங்கள் வரை தடுத்து வைத்துள்ளதுடன், பலர் பல நோய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றதுடன் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல எங்களை நடாத்துகின்றனர்.

இங்கு நடக்கும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளதுடன், இங்கிருந்து நாட்டுக்கு செல்லுகின்ற பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் நாங்கள் உரையாடி அவரிடம் இந்தனை

வெளியிடுமாறு தெரிவித்து கதைத்து அனுப்பியுள்ளோம். எனவே எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள் கைகூப்பி கேட்கின்றோம். என கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் பதிவிட்டுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை
Posted in இலங்கை செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கட்டணம் செலுத்தும் அறைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.

மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றுவதாக இருந்தால் பல சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.