Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்
கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்தும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவிக்கின்றார்.
கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்
மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார், எழு மாதங்களாக தேடியும் குறித்த இளைஞனை கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவதாக தெரிவித்தார்.
குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 077-5988204, 077-5547218 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது
மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
அவர் எனக்கு மதுபானப் போத்தல் ஒன்றைத் தந்து எனது கணவனைக் கொல்ல சொன்னார். அதனால் நான் அவரைக் கொன்றேன்” என முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது தகாத உறவு மனைவியுடன் இணைந்து அவரின் கணவனைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று (17) மொரவக்க நீதவான் துமிந்த பஸ்நாயக்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் என நீதவான் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊறுபொக்க தொலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதான ஜினதாஸ என்பவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். 33 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் அவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைக்கு சந்தேக நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதே குறித்த சந்தேக நபரால் இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.
மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
இந்த சம்பவம் தொடர்பில் மொறவக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 69 வயதான இரு பிள்ளைகளின் தந்தையும் 83 வயதான பெண்ணும் நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இது தொடர்பில் நீதவான் சந்தேக நபரிடம் வினவிய போது “ அவரால் தான் இந்தக் கொலையை செய்தேன். அவர் எனக்குக் குடிக்க கொடுத்து அவரைக் கொல்லச் சொன்னார். பின்பு புதைக்க வேண்டிய இடத்தையும் அவரே காட்டினார்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் மொறவக்க பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்ட ஜினதாசவின் மூத்த மகனும் மே மாதம் 11 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
உயிரிழந்த நபரான ஜினதாச புதைக்கப்பட்ட இடத்திற்கு கடந்த 15 ஆம் திகதி ஆய்விற்காக சென்ற போது, அவ்விடத்தில் கழிவறை கட்டப்பட்டிருந்ததுடன் அதை உடைத்து தோண்டிய போது சுமார் 9 அடி ஆழத்திலிருந்து உடல் உறுப்புகள் கிடைத்ததாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
புதைக்கப்பட்ட இடத்திலிருந்த உடல் உறுப்புகள் மற்றும் பொருட்கள், தனது கணவருடையது என சந்தேகநபர் அடையாளப்படுத்தியதாகவும், தனது கணவரை கொன்று புதைத்ததாக கூறி அவர் கதறி அழுததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.
69 வயதான எஸ். சோமதாச என்ற இரு பிள்ளைகளின் தந்தை மற்றும் அவருடன் தகாத உறவில் இருந்த பெண்ணான 83 வயதான றோசலின் என்ற இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு
கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் என்பவரே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, என்பவரால், நேற்று (16) விடுவிக்கப்பட்டார்.
கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு
இந்த பொறியியலாளர் உதவி பொலிஸ் அதிகாரி சிசில் டி சில்வாவிடம் வாக்குமூலம் அளித்ததை தவிர எந்தவொரு சாட்சியமும் அவருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை.
இதுதொடர்பில் முறைபாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்ட ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததை கவனத்தில் கொண்டு, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் விடுவிக்கப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ, பயணித்த வாகன தொடரணியின் மீது கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து, 2006 டிசெம்பர் 1ஆம் திகதி காலை 1.30 மணியளவில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் சாதாரண பொதுமக்கள் ஏழு பேரும் அடங்கியிருந்தனர்.
பயணத்தடை நீக்கம்
பயணத்தடை நீக்கம்
கடந்த வருடம் மே 09 சம்பவத்தையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.
மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்
மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதிரடியாக வந்த பொலிஸார்; தப்பி ஓடிய ATM கொள்ளையர்கள்
அதிரடியாக வந்த பொலிஸார்; தப்பி ஓடிய ATM கொள்ளையர்கள்
ஹம்பாந்தோட்டை வீரவில நகரில் பொருத்தப்பட்டிருந்த அரச வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடும் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.50 மணியளவில் பொலிஸாரினால் பொருத்தப்பட்டிருந்த அவசர சமிக்ஞை செயலிழந்த போது பொலிஸ் குழுவொன்று உடனடியாக அவ்விடத்திற்குச் சென்றுள்ளது.
அத்துடன் பொலிஸார் வருவதைக் கண்ட கொள்ளையர்கள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பதவிய, புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 8.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்
களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்
களுத்துறை நகரிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில், மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே தள்ளி 16 வயதான சிறுமி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சந்தேநகபர்கள் நால்வரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.
களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்
இதற்கான விசேட அனுமதியை, களுத்துறை நீதவான் ஹேமாலி ஹால்பந்தெனிய வழங்கியுள்ளார் என்று குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் நால்வரிடம் மட்டுமன்றி தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ளன ஹோட்டலின் வரவேற்பாளராக கடமையாற்றும் பெண்ணிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ் முன்னாள்
யாழ் முன்னாள் முதல்வர் கைது
யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
முள்ளிவாய்க்கால் நினைவுப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்தும் மே 18 முள்ளிவாய்க்கல் நினைவு வாரத்தை
முன்னிட்டு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய நுழைவாயில் பிரதான வீதிக்கு அருகில் முள்ளிவாய்க்கால் பேரவலத்து நினைவுப் பதாதைகள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
வருகை தந்த பாடசாலை மாணவர்கள் நினைவு புகைப்படங்களை பார்வையிட்டதுடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மாணவர்கள் மத்தியில் நினைவு உரையை நிகழ்த்தினார்.
முள்ளிவாய்க்கால் நினைவுப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இடம் நிகழ்வுகளுக்கு தமிழராய் இணைவோம் தமிழரின் பேரவலம் உணர்வோம் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகள் செய்வோம் திரண்டு வாருங்கள் என
பொதுமக்கள், ஆலய நிருவாகங்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், வர்த்தக
சங்கங்கள், ஆட்டோ சங்கத்தினர், சமூக அக்கறையாளர்கள் அரசியல் கட்சி பேதங்களுக்கப்பால் அனைத்து அரசியல்வாதிகளையும் அன்புரிமையுடன் இணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால்கஞ்சியினை பெற்று குடித்தனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
வீதி போக்கு வரத்து பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும்புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிந்தன. பின்னர் அவை சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்தன.
இதனை தொடர்ந்தே குறித்த இரண்டு பொலிஸார் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
2 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் இரண்டு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, 400 கிராம் லங்கா சதொச, பால் மா ஒன்றின் புதிய விலை 1080.00 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 243.00 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்
களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பிரதான சந்தேக நபருக்கு விற்கப்பட்டாரா என்பதை அறிய இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் நேற்று (15) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதேவேளை, பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்கின்ற சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய விசாரணைகளில், உயிரிழந்த பெண்ணின் தோழியின் காதலன் எனக் கூறப்படும் நபரே சிறுமியை பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
பிரதான சந்தேக நபர் 12,000 ரூபாவை முற்பணமாக குறித்த நபரின் கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்
அதன்படி, இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சோதனையிட விசாரணையாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் இறந்த சிறுமிக்கு தான் விற்கப்பட்டது தெரியுமா, இல்லையா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.
மேலும், சிறுமி மேல் மாடியில் இருந்து கீழே விழுவதற்கு முன்னர் சிறுமிக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக பிரதான சந்தேகநபர் கூறியுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று களுத்துறை நீதவான் நீதா ஹேமமாலி ஹால்பண்தெனிய முன்னிலையில் நீதிமன்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு ட்டத்தரணிகளுக்கும், இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, சம்பவம் இடம்பெற்ற விடுதியின் உரிமையாளரின் மனைவி 02 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தோழி, காதலன் மற்றும் சாரதி ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி இறக்கும் போது சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பிரதான சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமத்தில் நிலநடுக்கம்
கதிர்காமத்தில் நிலநடுக்கம்
கதிர்காமம் லுனுகம்வெஹர பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ரயில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து
ரயில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து
வடக்கு மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பேருந்து தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொத்துஹெர மற்றும் தலவத்தேகெதரக்கு இடையில் மரமொன்று ரயில் பேருந்து மீது விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதனால் ரயில் பேருந்து தடம் புரண்டுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த இடத்திற்கு அருகில் சாலையில் விழுந்த மரத்தில் மோதிய பின்னர் ரயில் பேருந்து தடம் புரண்டது.
அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை
அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை
நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்களால் நாட்டை மீண்டும் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது என நகர அபிவிருத்திமற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுக்கு உரிமை உண்டு ஆனால் அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் இது ஒரு பயங்கரவாத செயல் என்றும் அமைச்சர் கூறுகிறார்.
காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
களுவாஞ்சிகுடியில் 17 வயது மாணவனின் சடலம் மீட்பு
களுவாஞ்சிகுடியில் 17 வயது மாணவனின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் நேற்று மாலை பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் 17 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
மூன்று பேர் கடலுக்குள் குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது
வாக்குமூலம் பெற அழைத்துவரப்பட்ட பதுளை பெண் மரணம்
வாக்குமூலம் பெற அழைத்துவரப்பட்ட பதுளை பெண் மரணம்
ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணொருவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்பெண்ணை அழைத்துவந்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.
அந்த வீட்டில் திருடினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வீட்டின் உரிமையாளரினால் வெலிகட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட
முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது, திடீரென சுகயீனமடைந்த அப்பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் மரணமடைந்தார். பதுளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஆர். செல்வராசா குமார் (வயது 45) என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார். மூச்சுத்திணறல் காரணமாகவே அப்பெண் உயிரிழந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
மூன்று வாகனங்களில் மோதி விபத்து – பெண் பலி
மூன்று வாகனங்களில் மோதி விபத்து – பெண் பலி
மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள், கெப் மற்றும் காரில் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய கொழும்பு பிரதான வீதியின் போரே சந்தி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக சடலம் மீட்பு
வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக சடலம் மீட்பு
வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக இன்று (15) அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி ஈக்கள் மொய்த நிலையில் ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொது மகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு
சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை பரிசோதித்த சமயத்தில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டத்தினை உறுதிப்படுத்தினர்.
சடலம் தடவியல் பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டவர் யாசகத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.









































