Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு (30.06) 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதன்போது, கிராம மக்கள் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைந்துள்ளனர். அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து இரு வாள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பண்டாரிக்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது
Posted in இலங்கை செய்திகள்

நாட்டைவிட்டு வெளியேறியுள்ள 50 விசேட வைத்தியர்கள்

நாட்டைவிட்டு வெளியேறியுள்ள 50 விசேட வைத்தியர்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 50 விசேட வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அவசர விபத்துப் பிரிவு விசேட வைத்தியர்கள் 20 பேரும், மயக்க மருந்துவ நிபுணர்கள் 30 பேரும், இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை, அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்தியர் அசோக குணரத்ன கூறியுள்ளார்.

இதன் காரணமாக, விசேட வைத்தியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

No posts found.
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

தெல்தெனிய பிரதேசத்தில் திருடப்பட்ட 03 ஜீப் வண்டிகளுடன் சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (29) காலை கெப் வண்டியில் வந்த சிலர் இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வாகன காட்சியறையில் பணிபுரிந்த இரு ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு சந்தேக நபர்கள் 04 வாகனங்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

03 டிஃபென்டர் ரக ஜீப் வண்டிகள் மற்றும் வேன் என்பன கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

அதன்போது, வத்தேகம பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறம் உள்ள கராஜ் ஒன்றில் திருடப்பட்ட 03 ஜீப்களில் 02 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அப்போது, ​​மூன்று சந்தேக நபர்களுடன் கொள்ளைக்காக வந்த கெப் வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வத்தேகம பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், தெல்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27, 32 மற்றும் 34 வயதுடைய குன்னபான, தொரகமுவ மற்றும் ரஜவெல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அத்துடன், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னில பிரதேசத்தில் திருடப்பட்ட மற்றைய ஜீப் வண்டியுடன் மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய வத்துபிட்டியலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No posts found.
நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
Posted in இலங்கை செய்திகள்

மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு

மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு

புத்தளம், பிட்டிகல, கிண்ணியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பெண், சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கிண்ணியா பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கல்வெட்டில் மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுமி, தந்தை, தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், சாரதியான தந்தை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு

இதேவேளை, புத்தளம் வீதியில் இடது பக்கத்திலிருந்து வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 48 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பிட்டிகல பிரதேசத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் கீழே இறங்கிய போது, அதே பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமுகொட பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடுகளுக்குள் நுழைந்து வன்முறை; 25 பெண்கள் கைது

வீடுகளுக்குள் நுழைந்து வன்முறை; 25 பெண்கள் கைது

யாழ்ப்பாணம் – புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பலரை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

புத்தூர், கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன், பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன், இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.

வீடுகளுக்குள் நுழைந்து வன்முறை; 25 பெண்கள் கைது

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று

மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில், காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரியவருகிறது.

அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு, அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், வீடுகளுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பிலான மேலும் பலரை கைது செய்ய அச்சுவேலி பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்

No posts found.
சொகுசு பஸ் எரிந்து நாசம்
Posted in இலங்கை செய்திகள்

சொகுசு பஸ் எரிந்து நாசம்

சொகுசு பஸ் எரிந்து நாசம்

புத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் வௌ்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சொகுசு பஸ் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

சொகுசு பஸ் எரிந்து நாசம்

மதுரங்குளி பொலிஸாருடன் இணைந்து புத்தளம் நகர சபை தீயணைக்கும் பிரிவினரும், இலங்கை விமானப் படையின் பாலாவி முகாமைச் சேர்ந்த

விமானப் படையினரும், பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குறித்த பஸ் முழுமையாக எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும், இந்த தீ விபத்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியுள்ளார்கள். இதன்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காப்பட்டுள்ளன.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

விபத்தில் காயமடைந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன், புத்தளம் – முந்தல் 107 ஆம் கட்டை பகுதியில் மரமொன்றில் மோதி இன்று(29) காலை விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் வேனில் பயணித்த மேலும் மூவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விஜயகலா மகேஸ்வரனின் உறவினர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

விபத்து தொடர்பில் சிலாபம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற சந்தேகித்து இளைஞர்கள் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த்தாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து ஆபாசமான சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதை தடுத்த நிலையில் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மூவர் காயம்

சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No posts found.
யுவதியின் நிர்வாண புகைப்படத்தால் அச்சுவேலியில் களேபரம்
Posted in இலங்கை செய்திகள்

யுவதியின் நிர்வாண புகைப்படத்தால் அச்சுவேலியில் களேபரம்

யுவதியின் நிர்வாண புகைப்படத்தால் அச்சுவேலியில் களேபரம்

யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் இளைஞனின் வீட்டை சுமார் ஐநூறு பேர்

கொண்ட குழு சோதனையிட்டபோது, ​​பொலிஸார் வானத்தில் சுட்டு மிகவும் பிரயத்தனப்பட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிர​தேசத்திலே​யே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி உள்ளூர்வாசிகள் சிலரால் தாக்கப்பட்ட இளைஞனும்

மீட்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுவதியின் நிர்வாண புகைப்படத்தால் அச்சுவேலியில் களேபரம்

அவ்விளைஞன் பொலிஸ் பாதுகாப்பில் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

நிலைமையைக் கட்டுப்படுத்தச் சென்றபோது, ​​வன்முறையாக நடந்துகொண்ட நபரின் தாக்குதலால் சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தெற்கு நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது சுமார் 500 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்துவதாக பொலிஸ் 119 அவசர அழைப்புப்

பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு நடமாடும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர்.

ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், மற்றொரு சிறப்பு பொலிஸ் குழு அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி

இலங்கை விமானப்படையின் 19 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச, ஜூன் (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நியமனத்தை இலங்கை இராணுவம் அறிவித்த்துள்ளது ,திடீரென இடம்பெறும் இந்த மாற்றத்தினால் சந்தேகம் எழுந்த்துள்ளது .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினை அடுத்து இரு அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனுராதபுரம் பிரதேச செயலக உதவி முகாமையாளர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக எழுதுவினையர் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுவுடன் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற இவர்கள் உதவியதாக கூறப்படுகின்றது.

13 ஐ நடைமுறைப்படுத்துவதே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு
Posted in இலங்கை செய்திகள்

13 ஐ நடைமுறைப்படுத்துவதே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு

13 ஐ நடைமுறைப்படுத்துவதே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதே இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர

தீர்வாக அமையும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்து பாராளுமன்றத்திலுள்ள ஹவுஸ் ஒஃப் லோட்ஸ் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய வரலாற்று கடமை இந்தியாவுக்கு உள்ளதாகவும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள

நடைமுறைப்படுத்துவதே இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

13 ஐ நடைமுறைப்படுத்துவதே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு

தமது இலங்கை பயணத்தின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி இதனை வலியுறுத்தியதாகவும் இலங்கை மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக அரசியலின் அதிகாரப் போட்டியில் இலங்கை பலியாகிவிடக்கூடாது என்பதிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மிகவும் கவனமாக உள்ளதாக அண்ணாமலை இதன்போது தெரிவித்துள்ளார்.

No posts found.
மாடு வாங்க ஓமந்தை வந்து ஏமாந்த நபர்
Posted in இலங்கை செய்திகள்

மாடு வாங்க ஓமந்தை வந்து ஏமாந்த நபர்

மாடு வாங்க ஓமந்தை வந்து ஏமாந்த நபர்

மாடு வாங்குவதற்காக ஆர்வம் கொண்டிருந்த மல்லாவியை சேர்ந்த நபரிடம் வவுனியா ஓமந்தையில் மாடுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்து பணத்தை சுருட்டிக்கொண்டு சிலர் தலைமறைவாகியுள்ளனர்.

மல்லாவியை சேர்ந்த ஒருவருடன் அண்மையில் வவுனியாவை சேர்ந்த ஒருவருடன் அறிமுகமாகியுள்ள நிலையில், மாடுகள் வேறு இருந்தால் கூறுங்கள் என்று மல்லாவியை சேர்ந்தவர் அவரிடம் கூறியுள்ளார்.

அண்மையில் தொடர்புகொண்ட குறித்த நபர் ஓமந்தையில் மாடுகள் விற்பனைக்கிருப்பதாகவும் உடனடியாக வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் மல்லாவியை சேர்ந்தவர் தற்போது பணம் இல்லை ஒரு சில நாட்களின் பின்னர் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் தனது அண்ணாவுக்கு பணம் அவசரம் தேவைப்படுவதால் உடனடியாக விற்கவேண்டியுள்ளது பணத்துடன் வாருங்கள் என கூறியுள்ளர்.

இந்நிலையில் நகைகளை அடகு வைத்து மல்லாவியில் இருந்து ஓமந்தைக்கு வருகை தந்தவரிடம் ஓமந்தை வைத்தியசாலை பகுதியில் வைத்து பத்து இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற நபர் சற்று தூரம் அழைத்து சென்று மாடுகள் சிலவற்றை காட்டியுள்ளார்.

மாடு வாங்க ஓமந்தை வந்து ஏமாந்த நபர்

குறித்த மாடுகளுடன் வேறு இருவரும் நின்ற நிலையில் மாடுகளை பொலிஸாருக்கு தெரியாது வேறு பாதையால் கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் பணத்தை பெற்றமைக்காக கடிதம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஓமந்தையில் உள்ள கடையொன்றில் பணத்தை பெற்றவர் காகிதாதி ஒன்றை வாங்க சென்ற சமயம் மாடுவாங்க வந்தவரும் சென்றுள்ளார். இதன்போது மாடு கொண்டு செல்லும்போது வீதியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறி மாடு வாங்க வந்தவரை அவ்விடத்துக்கு செல்லுமாறு கூற அவரும் சென்றுள்ளார்.

அங்கு சென்ற மல்லாவியை சேர்ந்த மாடு வாங்க வந்தவர் மாட்டையும் காணாமல் கொண்டு சென்றவர்களையும் காணவில்லை என்பதால் கடிதம் எழுதுவதற்காக காகிதாதி வாங்க சென்றவரிடம் மீண்டும் சென்றுள்ளார் எனினும் அவரும் அங்கு இல்லாத நிலையில் பணத்தை இழந்து செய்வதறியாது நின்றுள்ளார்.

இந் நிலையில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது பத்து இலட்சத்துக்கு மேல் என்பதால் வவுனியாவில் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் தாம் முறைப்பாட்டை எடுக்க முடியாது மீண்டும் ஓமந்தையில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள் என திருப்பி அனுப்பிய நிலையில் பணத்தையும் இழந்து முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவர்கள் செய்வதறியாதுள்ளனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று (28.06) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அயந்தன் என்ற 23 வயது இளைஞரே சாவடைந்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்

வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (28.06) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை சுமார் ஒன்டரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவல வாயில் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னரும் எவ்வித அதிகாரிகளும் போராட்ட இடத்திற்கு வருகை தராமையினையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியுடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்

பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டன் வருகை தந்திருந்த பொழுது மக்களை சந்தித்தார் .அப்பொழுது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி ,யோகி அவர்கள் ,ஜனாதிபதியிடம் கேள்வியை எழுப்பினர்

அந்த கேள்வியானாது மிக முக்கியமானது ,அதில் இலங்கையில் ,
நடந்த இனப்படுகொலை ,மற்றும் மனிதபிமான செயல்பாடுகளாக அமைய பெற்றன .

பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்

ஆங்கிலத்தில் அவர் கேட்ட கேள்விக்கு ,ஆங்கிலம் அவருக்கு தெரியாவிட்டால் ,தமிழில் உரையாடும் படி சந்தர்ப்பம் வழங்கினார் ,

ஆனால் தமிழில் உரையாடும் பொழுது கூட ,
அவர் அதனை உரிய முறையில் மடக்கும் கேள்வியை கேட்க தவறியதால் ,
ரணில் நயப்புடைத்த சம்பவம் , உலக தமிழர்கள் மத்தியில் ,
வாத விவாத பொருளாக மாற்றம் ,பெற்றுள்ளது .

No posts found.
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தியகல நோட்டன் வீதியில் மண்சரிவு

தியகல நோட்டன் வீதியில் மண்சரிவு

மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (27) காலை முதல் நோட்டன் பகுதிக்கு பெய்து வரும் தொடர் மழை காரணமாக நோட்டன் தியகல பிரதான வீதியில் தியகல பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் மண்சரிவு ஏற்பட்டு பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

வீதியில் வீழ்ந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றுவதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

காலை முதல் தொடச்சியாக மழை பெய்து வருவதானால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தொடர் மழை காரணமாக நடை பாதை வரத்தகமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக நடை பாதை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, நானுஓயா, கினிகத்தேனை, கடவல, வட்டவளை தியகல, ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா

கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளையார், நானுஓயா, ரதல்ல ஆகிய பகுதிகளில் மழையுடன் அடிக்கடி பனி மூட்டம் நிகழ்வதனால் இந்த வீதிகளை

பயன்படுத்தும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

இதனால் மண் மேடுகளுக்கு மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்து மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

No posts found.
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த காரின் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

No posts found.
நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Posted in இலங்கை செய்திகள்

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல

மருந்துப்பொருட்களை வாங்குவதற்கான நிதி கிடைக்கவில்லையெனில் தான் பதவி விலகுவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உரிய நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்துள்ளார்.

“நான் பாராளுமன்றத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட அன்றே நாங்கள் திறைசேரி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம், அங்கு மருந்துகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.”

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல

போதுமான நிதி கிடைத்துவிட்டதால் நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. நிதி கிடைக்காவிட்டால் பதவியில் நீடித்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று தான் பாராளுமன்றத்தில் கூறினேன். அதை சில ஊடகங்கள் திரிபுபடுத்திவிட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாடு குறித்து விசாரித்தபோது, சுமார் 100 மருந்துகள் தற்போது கையிருப்பிலில்லை; எவ்வாறாயினும், தேவையான நிதியை விடுவிப்பதன் மூலம் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No posts found.