Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முத்துவான் அன்சார் வயது (54) என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழக்கம் போல் ஓட்டமாவடி ஆற்றிலுள்ள ஆமை ஓடை குடாவில் மீன் பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததினால் அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டபோது அவர் இறால் பண்ணைக்கு அருகாமையிலுள்ள நீரோடையில் உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று (27) கண்டறியப்பட்டார்.
மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
கவத்தமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையின் பாதுகாப்பு கருதி மின்சாரம் வேலிகளுக்கு இணைக்கப்பட்டுள்ளது. குறித்த மின்சார இணைப்பானது இறால் பண்ணைக்கு அப்பாலுள்ள நீரோடைக்கு குறுக்காவும் இணைக்கப்பட்டுள்ளது.
இவ் ஓடையில் பொதுமக்கள் தங்களது நாளாந்த உணவிற்காக மீன் பிடிப்பது வழக்கமாகும். விடயம் தெரியாத நபர் இச் சட்டவிரோ மின்சார இணைப்பில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
குறித்த இறால் பண்ணை உரிமையாளர் மேற்கொண்ட மின் இணைப்பிற்கு எதிராக அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். இறால் பண்ணை தவீர்ந்த பொதுமக்கள் பாவிக்கும் பொது இடங்களில் மின்சாரம் வழங்குவதை தடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, கடந்த காலத்தில் குறித்த இடத்தில் மின்சாரம் தாக்கி யானை ஒன்றும் 3 கால் நடைகளும் இறந்துள்ளதாக தெரிவித்தனர்
ரயில் போக்குவரத்து பாதிப்பு
ரயில் போக்குவரத்து பாதிப்பு
ரயில் தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்த தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவிசாவளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி நாரஹேன்பிட்டி வரை ஒரேயொரு ரயில் மாத்திரமே பயணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு ரயில் கொட்டாவ அல்லது ஹோமாகம நிலையங்களில் இருந்து அவிசாவளை வரை இயக்கப்படும் என பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்
மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்பு
மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்பு
சீதுவ, ரத்தொலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 04 வயதுடைய சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அதே இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயதான ஆண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (26) பிற்பகல் குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர், உயிரிழந்த சிறுமியின் தந்தையின் சகோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிறுமி இறந்த விதம் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வௌியாகவில்லை.
பொலிஸார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு
பொலிஸார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு
நேற்று (26) இரவு நுவரெலியா – ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்ததை அடுத்து பொலிஸார் எச்சரிக்கைக்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.
ஹங்குரன்கெத்த தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
எனினும், இச்சம்பவம் கொலை என்றும், சந்தேக நபர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
பொலிஸார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு
குறிப்பிட்ட மரணம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், குழு ஒன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும்
காவல் நிலையத்திற்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், பணியில் இருந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு,
நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தடம் புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்
தடம் புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்
கொட்டா வீதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாலை 4 மணி அளவில் கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணிக்க ஆரம்பித்த அலுவலக புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை
வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா, ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.
இன்று (27.06) காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை
வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னர் பேரணியாக சென்று வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிகுளம் கிராம சேவையாளர், சமுரத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, மேல் முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய உதவிகளை பெற்றுத்தருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் மேலும் இறுதிப்பட்டியல் வரும் வரை காத்திருக்குமாறும் ஆசிகுளம் கிராம சேவையாளர் தெரிவித்தமையினையடுத்து காலை 11.00 மணியளவில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது
சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (26) உறுதியளித்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு எடுக்கப்பட்ட
தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தலை வழங்கினார்.
குறித்த வழக்கு ஜூலை மாதம் 6 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான்
LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான்
தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். பின்னர் நான் அரசியலுக்கு வந்தேன். எனவே அந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு மற்றும் சில
விடயங்களை நிறுத்துமாறு பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் சிங்கள மொழியில் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ்
மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் மாவட்ட அபிபிருத்திகுழு தலைவருமான இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று நாட்டின் நிலமை என்ன? பொருளாதார நிலை என்ன? வெளிநாட்டு மக்கள் நிலை எவ்வாறு? என்ற விடையங்களை கதைக்க வேண்டும் அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பக்கமாக கருத்து தெரிவிக்கின்றனர்.
LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான்
நான் புலிகளில் இருந்தனான் வந்தனான் எங்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம் இது நான் முதல் இருந்த நிலையை வைத்து இப்போது கதைக்க முடியாது பிரயோசனமில்லை அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.
எங்கள் மக்களை ஒரு பக்கம் சமப்படுத்தவும் மறுபக்கம் அரசாங்கத்தை சமப்படுத்த வேண்டும் அதற்காக இரு பகக்கமும் ஒன்றிணைந்து விசேடமாக ஜனாதிபதியுடன் கதைத்து பேசி நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும். அதனை மாற்றுவதற்கு வேலை செய்யவேண்டும் இல்லாவிடில் வேலையில்லை.
நான் சண்டைபிடிக்க வரவில்லை கிழக்கில் யுத்தம் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் பண உதவியுடன் ஆடைத்தொழிற்சாலை மற்று பால்உற்பத்தி பண்ணைக்கு இடம் கொடுக்கப்பட்டது.
இந்த சிஜசி கம்பனி இப்போது என்ன செய்கிறார்கள். இப்போது வேலை செய்யவில்லை என்கின்றனர் இவர்களுக்கு வழங்கிய பணம் யாருடைய பணம் ? இவர்கள் அமெரிக்காவை ஏமாற்றி அரசாங்கத்தை ஏமாற்றி எங்களை ஏமாற்றினார்கள் உண்மையில் ஏழை மக்கள் பாவம் சிஜசி கம்பனி கள்வர்கள்.
நாட்டின் நிருவாக முறை மாற்றவேண்டும் என அறகலயினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் மகாவலி மாறியதா? ஆசிரியர்கள் மாறியதா? அரசியல்வாதிகள் மாறியதா? ரியூசன் ஆசிரியர் மாறியதா? வேலை இல்லையே, ?இவ்வாறு எதுவுமே மாற்றாமல் எல்லாத்தையும் சமனாக்கு என்றால் எப்படி சமனாகும்.
எனவே மாவட்ட நிருவாக அதிகாரிகள் அரசியல் நிருவாக அதிகாரிகள் கலந்துரையாடி எதிர்கால திட்டம் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை யோசியுங்கள்
1983 க்கு முன்னர் மகாவலி காணி இடம் தேவை எந்த இடம்வேண்டுமாயின் அதனை எடுக்க முடியும் அமைச்சருக்கு அது அந்த காலம் இப்ப எப்படி எனவே இந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்கின்றனர் இதை யார்
அகழ்கின்றார்கள்? எனவே இவ்வாறன சில விடையங்களை நிறுத்துமாறு உங்கள் அமைச்சருக்கு உங்கள் பணிப்பாளரிடம் தெரிவியுங்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்
பொலிஸார் மீது தாக்குதல் ; பெண்கள் உட்பட 10 பேர் கைது
பொலிஸார் மீது தாக்குதல் ; பெண்கள் உட்பட 10 பேர் கைது
சனிக்கிழமை (24) மன்னார்- மதவாச்சி பிரதான வீதியில் உள்ள உயிலங்குளம் மதுபானசாலை அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலிஸார் உயிலங்குளம் மதுபான சாலைக்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.
இதன் போது அவ்விடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் சிலரை பொதுமக்கள் போலிஸாருக்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய முற்பட்ட போது அவ்விடத்தில் நின்ற சிலர் பொலிஸாரை தாக்கி உள்ளார்கள்.
பொலிஸார் மீது தாக்குதல் ; பெண்கள் உட்பட 10 பேர் கைது
தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் 9 பேர் ஞாயிற்றுக்கிழமை (25) உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்
குறித்த சந்தேக நபர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுப்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிச் சூடு
கட்டுப்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிச் சூடு
சந்தேக நபர்களை கைது செய்யாததற்காக ஹங்குரன்கெத்த திங்கட்கிழமை(26) பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்ததையடுத்து பொலிஸார் எச்சரிக்கைக்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர்.
ஹங்குரன்கெத்த தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கட்டுப்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிச் சூடு
குறிப்பிட்ட மரணம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், குழு ஒன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும் காவல் நிலையத்திற்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும்,
பணியில் இருந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஹங்குரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
லிற்றோ விலை ஜூலையில் குறையும்
வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்டவர் நையப்புடைப்பு
வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்டவர் நையப்புடைப்பு
வவுனியா பத்தினியார் மகிளங்குளம் கிராமத்தில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று (25) மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளா் தொிவித்தாா்.
குறித்த பகுதியிலுள்ள வீடோன்றினுள் இனந்தெரியாத நபரொருவர் புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை திருட முயற்சித்துள்ள சமயத்தில் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்டவர் நையப்புடைப்பு
எனினும் குறித்த நபரை மடக்கிப்பிடித்த அயலவர்கள் நையப்புடைத்துள்ளனா்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன், மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் தொடர்பில் பல தடவைகள் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மாகாணசபை விவகாரத்தில் ரணிலுக்கு இந்தியா கடும் அழுத்தம்
மாகாணசபை விவகாரத்தில் ரணிலுக்கு இந்தியா கடும் அழுத்தம்
யூலை மாதம் இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது விஜயத்துக்கு முன்னதாகவே மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அறிவிக்கக் கூடும். இதனையே இந்தியா எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது.
அவரது விஜயத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல் உட்படப் பல நிபந்தனைகளுக்கு ரணில் உடன்பட வேண்டி வரும் என்று இந்தியத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தகவல் இந்தியத் தரப்பால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஸில் ராஜபக்சவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே, பஸில் ராஜபக்ச ‘மொட்டு’வின் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களை பத்திரமுல்லை காரியாலயத்துக்கு அழைத்து இது தொடர்பில் பேசியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளது.
மாகாணசபை விவகாரத்தில் ரணிலுக்கு இந்தியா கடும் அழுத்தம்
அது தொடர்பான நிபந்தனைக்கு அவர் இந்தியா செல்லும் முன்பே உடன்பட வேண்டிவரும். இந்தியா இதையே எதிர்பார்க்கின்றது என்று பஸில் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லை என்று கூறி வரும் ரணில் அரசு இதே காரணத்தை இந்தியாவிடம் கூறி மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்
நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் முன் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளும் மக்களால் முடக்கப்பட்டன.
இன்று (26.06) காலை முதல் மதியம் வரை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், போக்குவரத்து பாதைகளும் முடக்கப்பட்டிருந்தன.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்
வவுனியா பிரதேச செயலக வளாகத்தினுள் காலை 9.30 மணியளவில் கள்ளிக்குளம், தேக்கவத்தை, நெளுக்குளம், தோணிக்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தமக்கு நீதி கோரி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் போராட்ட இடத்திற்கு சென்று கேட்டறிந்ததுடன், முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தாம் நியாயமான முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொது மக்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும், வவுனியா பிரதேச செயலாளரின் தீர்வு தமக்கு திருப்தியில்லை என தெரிவித்து காலை 10.30 மணியளவில் பிரதேச செயலகம் முன்பாக வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்த மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து 11.00 மணி வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அத்துடன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தின் வாயிலின் முன்பாக சிங்கள கிராமத்தினை சேர்ந்த மக்களும், வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பாக கூமாங்குளம் கிராமத்தினை சேர்ந்த மக்களும் காலை 10.00 மணி தொடக்கம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தரப்பினரும் காலை 11.30மணியளவில் ஏ9 வீதியில் பண்டாரவன்னியன் சதுக்கம் முன் ஒன்று கூடி வவுனியா – மன்னார் பிரதான வீதி மற்றும் ஏ9 வீதி ஆகிய இரு பிரதான வீதிகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் பல தடவைகள் கலந்துரையாடியும் தொடர்ந்தும் மக்கள் வீதியினை மறித்து போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர். இதனையடுத்து, கொக்குவெளி இராணுவ முகாம் கட்டளைத் தளபதியும் போராட்ட இடத்திற்கு வருகை தந்து வீதியை விட்டு மக்களை விலகுமாறும் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.
அதன் பின்னரும் தொடர்ந்தும் பொதுமக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன் மதியம் 12.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையினுள் போராட்டகாரர்கள் உள்நுழைந்திருந்தனர்.
மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் காரியாலயம் முன்பாக ஒன்று கூடியவர்களுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர கலந்துரையாடியதுடன், அவர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்டார். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் ஆரம்ப பட்டியல் மாத்திரமே இது. இறுதிப்பட்டியல் இது வரை வெளியாகவில்லை. இது தொடர்பில் முறைப்பாடுகளை இணையம் மூலம் மேற்கொள்ள முடியும். அல்லது கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு எமது உத்தியோகத்தர்கள் வருகை தருவார்கள். அவர்களிடம் வழங்குமாறும், கிராமத்திற்கு உத்தியோகத்தர்களின் விஜயம் தொடர்பான திகதியினை வெளியிடுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தடன், அதன் பின்னரே இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனவும் அரசாங்க அதிபர் உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றிருந்தனர்.
குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதி மற்றும் வவுனியா- மன்னார் ஆகிய இரு பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் 2 மணித்தியாலயம் 30 நிமிடங்களாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தமையுடன் மாற்று வீதிகள் ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வயோதிப பெண் உயிரிழப்பு
வயோதிப பெண் உயிரிழப்பு
நானு ஓயா – பங்களாஹத்த பகுதியில் வயோதிப பெண் ஒருவர் விவசாய காணியில் உயிரிழந்துள்ளார்.
நாளாந்த தொழில் நிமித்தம் அவர் குறித்த காணியில் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (25) மாலை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் நானு ஓயா எடின்புரோ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது
துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்
துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்
களனிய திப்பிட்டிகொட பகுதியில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (25) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வெல்லம்பிட்டிய, அங்கொட, பேலியகொட மற்றும் தொம்பே பகுதிகளை சேர்ந்த 24, 34 மற்றும் 44 வயதுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியே இதன் போது துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த குறித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி
முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அவிசாவளை, புவக்பிட்டிய, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தினக்ஷி தில்ஷிகா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
பேருந்தின் இடது பக்கம் யுவதியின் மீது மோதுண்ட நிலையில், அவர் தரையில் விழுந்துள்ளாா்.
இதனை அவதானிக்காது செலுத்தப்பட்ட பேருந்தின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரமும் அவா் மீது ஏறி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சாரதி பேருந்தை நிறுத்தாது செலுத்திய நிலையில், அதனை பின்தொடா்ந்து சென்ற பொலிஸார் தடுத்து நிறுத்தி சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்துள்ளனா்
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது ஆளும் கட்சியின் பிரதம கொறாடா காரியாலயம். இது தொடர்பில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகலருக்கும் வட்ஸ்அப் ஊடாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த கட்டுப்பாட்டின் பிரகாரம், கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், உரிய காரணங்கள் எவையும் அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்படவில்லை.
கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கொழும்பில் தங்கியிருக்குமாறு கூறப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு
இதேவேளை, இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசர தேவையாக கருதி பாராளுமன்றத்தை எதிர்வரும் சனிக்கிழமை (01) கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆளும் கட்சி அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கக் கட்சி பிரதம அமைப்பாளர் அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளது.
லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு வந்ததையடுத்து, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது
யாழ்.விபத்தில் 11 பேர் காயம்
யாழ்.விபத்தில் 11 பேர் காயம்
யாழ்ப்பாணம், கண்டி ஏ-9 வீதியில் கொடிகாமம் எனுமிடத்தில் தனியார் பஸ்ஸொன்றும் வானும் மோதி புரண்டதில், 11 பேர் காயமடைந்து, சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் வரையில் பயணித்த தனியார் பஸ், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் முன்பாக வந்துக்கொண்டிருந்த வானில் மோதியுள்ளது. விபத்தில் சிக்கி பஸ், வீதியோரத்தில் புரண்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் இருவர் இருக்கின்றனர் என்று தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர்கள் பாரிய ஆபத்து எதுவுமில்லை என்றனர்.
அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்
அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்
வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு தெரிவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இரு நேரம் மட்டும் உணவு உண்டு வாழும் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் தோணிக்கல் ஐயா வாசியசாலை முன்பாக இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் இரு நேரம் உணவு உண்டு வாழும் குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பல பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர் மற்றும் வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.
அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன. இதனை கேட்க சென்றால் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையீனமாக பதிலளிப்பதுடன் எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பெரியவர்கள், முதியவர்கள் எனப் பாராது மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஸ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்கி தமது ஆதங்கத்தினை தெரிவித்ததுடன், தமக்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரினர்.












































