Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நிரந்தர வரிக் கொள்கை தொடர்பில் அறிவிப்பு
நிரந்தர வரிக் கொள்கை தொடர்பில் அறிவிப்பு
இலங்கையில் குறிப்பிட்ட நிரந்தர வரிக் கொள்கை இல்லாதது முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஊக்கமின்மைக்கு காரணம் என அரசாங்கத்தின் நிதிக் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மூன்று வர்த்தமானிகளின் உத்தரவுகளை ஆராய, குழு கூடிய போது இது தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட நிரந்தர வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், இந்த புதிய வரிவிதிப்புக்கான அடிப்படை, நோக்கம் மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடும் அறிக்கையை வழங்குமாறு நிதி மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அரசாங்க நிதிக் குழு உத்தரவிட்டுள்ளது.
நிரந்தர வரிக் கொள்கை தொடர்பில் அறிவிப்பு
இதற்கிடையில், அரசாங்க நிதிக் குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் தரப்பினரை உரிய காலக்கெடுவிற்குள் அழைக்க அரசாங்க நிதி தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.
மேலும், பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து பின்தொடர வேண்டியதன் அவசியத்தை அரசாங்க நிதிக் குழு வலியுறுத்தியுள்ளது என பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கைக்கு வர்த்தக இருப்பு மிகுதியாக இருப்பதாக சர்வதேச உறவுகளுக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.
ஜி.எஸ்.பி பிளஸ், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட விளக்கக்காட்சியின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – மேலும் இருவர் காயம்
அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – மேலும் இருவர் காயம்
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (20) இரவு குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக 119 இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் அவிசாவளை திசையில் இருந்து கேகாலை திசை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது டி56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – மேலும் இருவர் காயம்
சம்பவத்தில் காயமடைந்த நால்வர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக்குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (20) மாலை 4 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
விபத்தில் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு சாளம்பன் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராசா ஞானசேகரம் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது
சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது
13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து வரும் பிக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான பிக்கு விகாரையில் வசிக்கும் சிறுவன் ஒருவரை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது
குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எஹெட்டுவெவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, எஹெட்டுவெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் குறித்த வர்த்தமானி வெளியீடு
கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் குறித்த வர்த்தமானி வெளியீடு
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இந்த கட்டணங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான சுற்றுலா ஹோட்டல் அறைக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 100 அமெரிக்க டொலர்களும் நான்கு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 75 அமெரிக்க டொலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு ஹோட்டல்களுக்கான கட்டணம் குறித்த வர்த்தமானி வெளியீடு
மூன்று நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 50 அமெரிக்க டொலர்களும், இரண்டு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 35 அமெரிக்க டொலர்களும், ஒரு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 20 அமெரிக்க டொலர்களும் அறவிடப்பட வேண்டும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த விலைகள் 24 மணிநேர காலத்திற்காக செலுத்தப்பட வேண்டும் எனவும் சேவைக் கட்டணங்கள் மற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்கள் அல்லது வழங்கப்பட்ட பிற சேவைகள் அல்லது வசதிகளுக்கான கட்டணங்கள் ஆகியவை அதில் உள்ளடங்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தவிர, விருந்தினருக்கான உணவு விலைகளையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதியில் ஒருவருக்கு காலை உணவிற்காக 10 அமெரிக்க டொலர்களும், மதிய உணவிற்கு 15 அமெரிக்க டொலர்களும், இரவு உணவிற்கு 17 அமெரிக்க டொலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நான்கு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு, காலை உணவுக்கு 9 அமெரிக்க டொலர்களும்,, மதிய உணவுக்கு 14 அமெரிக்க டொலர்களும், இரவு உணவிற்கு 16 அமெரிக்க டொலர்களும், என விலைகள் வெளியிடப்பட்டுள்ளன
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
நியூயோர்க்கில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பு
நியூயோர்க்கில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்தாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய
செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லான்ட் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) நியூயோர்க்கில் உள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெற்றது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
பிராபகரானுக்கு முன்பு பின்பு வரலாற்றை மாற்றுவேன் சீமான் தடலடி பேச்சு
பிராபகரானுக்கு முன்பு பின்பு வரலாற்றை மாற்றுவேன் சீமான் தடலடி பேச்சு
ஈழ புலிகள் பிரபாகரனுக்கு முன்பு அவருக்கு பின்பு என்கின்ற நிலையில் ,நான்
வரலாற்றை மாற்றி எழுதுவேன் என நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு
வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு
சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரிக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என கோரி தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் இன்று (20) சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்திற்கு மனுவொன்றை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையில் நீடிக்கப்பட்ட கடன் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வுக்காக நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தூதுக்குழுவினரின் கவனத்திற்காக உரிய மனு கையளிக்கப்பட்டதாக தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வில் சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது.
வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு
இதற்கிடையில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையானது, பெரிய அளவிலான இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விலக்கி தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுத்தப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிஸ கட்சி குற்றம் சாட்டுகிறது.
இதேவேளை, வாழ்க்கைச் செலவு கட்டுப்படியாகாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து உழைக்கும் வர்க்க மக்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவை கோரி போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது
கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது
பொரளை மற்றும் கலபிடமடை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு
அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் கொழும்பு விளக்கமறியலின் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டில் பயணப் பை, ஒரு ஜோடி கறுப்பு காலணிகள், நீல துண்டு, வெள்ளை நிற அரை காற்சட்டை, தொப்பி, கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிளின் சாவி மற்றும் அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி கலபிடமடை துனுமலை பகுதியில் வாகனத்தில் பயணித்த வேரகொட ஆராச்சிலாகே சரத் வேரகொடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளை
செலுத்தியமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி வரகாபொல நியந்துருபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சிறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது
இதற்கு மேலதிகமாக, இந்த வருடம் மே மாதம் 20 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டு மனித கொலையை செய்த “வானத்தே சுட்டாங்” என்ற சந்தேகநபருக்கும் இன்னுமொரு அடையாளம் தெரியாத சந்தேகநபருக்கும் தங்கியிருப்பதற்காக
குறித்த சிறை அதிகாரிக்கு சொந்தமான இராஜகிரிய நாவல அவென்யூவில் உள்ள தனது மூன்று மாடி வீட்டின் மூன்றாவது மாடியை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் டி சில்வா ஆகியோரின் பணிப்புரையின் பேரில்,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தென் கொரிய ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது.
தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
இந்த வருட இறுதிக்குள் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை
யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை
யாழ். மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்கான சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் அவர்களது குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கண்புரை சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் சுசு நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர சிகிச்சைகளுக்கான கண்வில்லைகளும், சத்திரசிகிச்சை நுகர்வு பொருட்களும், மற்றும் மருந்துப் பொருட்களும் மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது.
யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைத் தெரிவு செய்யும் இலவச கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 23.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (இந்து விடுதி) இடம்பெறவுள்ளது.
அதேபோன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களைத்
தெரிவுசெய்யும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 23.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் அரியாலை நாவலடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெறவுள்ளது.
குறித்த முகாமில் கண்புரை சத்திரசிகிச்சைக்குத் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் திகதி பின்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும்.
கண்புரை சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்படும் நோயாளர்களை அந்தந்தப் பிரதேசத்திற்குரிய வைத்தியசாலைகளில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும், சத்திரசிகிச்சை முடிவடைந்த
பின்னர் மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து அவர்களது பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சுகாதார திணைக்களத்தினரால் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளர்கள் மேற்படி பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு தங்களது
பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாளிகாவத்தை முதல் நாள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த முதலாம் திகதி மாளிகாவத்தை எச்.ஆர் ஜோதிபால மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் கொழும்பு 08, பேஸ்லைன் வீதி பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த 20 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்புக்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வெளியிட்டுள்ளது.
காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பெய்த கடும் மழையுடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரவு 10.30 மணியளவில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை, அகலவத்தை, மத்துகம, வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய,
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மழையுடனான வானிலை மாற்றத்தின் கீழ் இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படக்கூடும்.
அத்துடன் ஏனைய பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையேற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், அறிவுறுத்தியுள்ளது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
பஸ் மற்றும்பதுளையிலிருந்து அம்பாறை பகுதிக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பேரூந்தும், எரிபொருள் பவுசர் வண்டியொன்றும் நேற்று (18) மாலை படல்கும்புர புஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள வளைவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சாரதிகள் மற்றும் நான்கு பயணிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எரிபொருள் பவுசர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் வந்த லங்காம பேருந்தின் உடலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் பழைய அறையொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களே இவ்வாறு
மீட்கப்பட்டுள்ளன. மேலும் பாடசாலையின் குறித்த அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜபக்ஷவின் கூரையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு
அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20, மிமீ 3.2 தோட்டாக்கள் 24 , மி.மீ. 9 தோட்டாக்கள் 107 மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் TNT என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது
திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது
திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும்
திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பின்னர் வாகனத் தொடரணி தம்பலகமுவவை நோக்கி திரும்பிச் சென்றதுடன் செல்வராசா கஜேந்திரன் எம்.பி, தொலைபேசி ஊடாக, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார்.
திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது
அதன் பின்னர் திருகோணமலை பொலிஸ் குழுவொன்று தம்பலகாமுக்கு வந்து செல்வராசா கஜேந்திரன் எம்.பியிடம் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் விசாரணையை சீனன்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்தது.
இவ்வாறு சீனன்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் திருகோணமலை விஜேசேகரவை வசிப்பிடமாகவும் மற்றையவர் சர்தாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.
திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் மணயவெளி மற்றும் சுமேதங்கரபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின்
தலையீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் குழுவாகும்.
இவர்கள் இன்று காலை 06.16 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவர்.
31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மேலும், கடந்த 12 ஆம் திகதி குவைத்தில் இருந்து 33 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 09 ஆண்களும் 24 பெண்களும் இருந்தனர்.
அதன்படி, இந்த இரண்டு வாரங்களில், குவைத்தில் வீட்டு வேலை செய்யச் சென்று விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள், இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
விபத்துக்களில் மூவர் பலி
விபத்துக்களில் மூவர் பலி
சந்திவெளி மற்றும் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் 4 வயது சிறுமி மற்றும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் வேப்பஅடி வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இளம் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறத்தில் உள்ள வேப்ப மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி, அவரது மகள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதியும், மகளும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்களில் மூவர் பலி
படுகாயமடைந்த மனைவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 54 வயதுடையவர் எனவும் உயிரிழந்த சிறுமி காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 04 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கல்கமுவ – ஆனமடுவ வீதியில் வாலசேன பிரதேசத்தில், ஆனமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கிச் சென்ற வேன், முன்னால் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த தம்பதியினர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய மஹாநான்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.