இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி

இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி

இலங்கையி பல விமானங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதால், இலங்கை வந்த பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .

இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் விமான கட்டு பாட்டு அறையில் ,ஏற்பட்ட சில கோளாறு காரணமாக, பல விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ,விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது .

இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி

விரைவில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்ய பட்டு, விமான போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பயணிகள் விமானங்களை இயக்க முடியா நிலையில் ,இந்த விமானங்களை இலங்கை அரசு திட்டமிட்டு இரத்து செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

வீடியோ

இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்

இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்

இலங்கையில் வீதி விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மக்களை உலுப்பியுள்ளது ,இந்த விபத்தில் 24,786 பேர் 2016 முதல் 2018 ஆண்டு வரை பலியாகியுள்ளனர் .

மேலும் இதே கால பகுதியில் இருபதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ,அவ்வேளை அவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசு ,1.8 பில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது .

இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்

இலங்கையில் தொடரும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,இதுவரை இலங்கை அரச காவல்துறையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை .

அதனாலையே தொடராக இவ்வாறான வீதி விபத்துக்களினால் பலநூறு மக்கள் ஆண்டு தோறும் பலியாக காரணம் என, இலங்கை வாழ் சமூக அக்கறை கொண்ட மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

இந்த விபத்து மனித இறப்பு எண்ணிக்கை ,மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ

இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்

இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்

இலங்கை அரசுக்கு பயந்து பிரிட்டன் பெண் ஒருவர் இலங்கையில் பல மாதங்காளாக தலைமறைவாக வாழும் பயங்கரம் நிகழந்துள்ளது .

கோட்டாபய அரசுக்கு எதிராக காலிமுக திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் ,கலந்து கொண்டு அந்த போராட்டங்களை இன்ஸகிராம் பக்கத்தில் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தினார் .

இதனால் இந்த இளம் பெண் மீது குடிவரவு அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கி உள்ளார் என தெரிவித்து அவரது கடவுசீட்டை பறிமுதல் செய்தன .

இலங்கை அரசுக்கு பயந்து தலைமறைவாக வாழும் பிரிட்டன் பெண்

நீதிமன்றம் மூலமும் மூலம் நாடுகடத்தலுக்கு உத்தரவிட பட்டது .ஆனாலும் தொடர்ந்து இலங்கை அரசு கைது சையது ,தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கேள் சிறையில் அடைத்து விடும் என்பதால் மறைந்து வாழ்வதாக ,பிரிட்டன் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ளார் .

இலங்கை அரசு தனது மக்களை மட்டுமல்லாது பிரிட்டன் மக்களையும் அடக்கிய ஆழ துடிப்பது வெட்க கேடு என்பதற்கு ,இந்த பிரிட்டன் இளம் பெண் மறைந்து வாழும் வாழ்தல் சான்றாக உள்ளது .

வீடியோ

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்

நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்

இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – சுதுமலையில் உள்ள

தனியார் மண்டபம் ஒன்றில், இந்த கற்கை நெறியின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்

முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.

இது நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல். நாட்டில் உள்ள சுயாதீன நிறுவனங்களை பாதுகாக்கின்ற கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியான மிகவும் முக்கியமான சுயாதீனமான நிறுவனமாக நீதித்துறையானது இருக்கிறது.

நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையில் நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட்டுக் கொள்ள வேண்டும்.

நீதித் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதங்களில் ஒரு விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கெடுக்காது தாங்கள் செய்ய வேண்டியதை செய்து விடலாம்

நீதித்துறை ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது சுமந்திரன்

இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் ராஜினாமா செய்து அதில் இருந்து விலகி விடுவார்கள்.

மூன்றாவதாக, நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப் பொம்மைகளாக மாறி இயங்குவது இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

நீதித்துறையை பாதுகாப்பது என்பது அவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பது என்பது அல்ல. நீதிபதிகள் சுயாதீனமானதாக செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எலும்புகூடாக காணப்பட்ட சடலம்
Posted in இலங்கை செய்திகள்

எலும்புகூடாக காணப்பட்ட சடலம்

எலும்புகூடாக காணப்பட்ட சடலம்

மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் குறித்த சடலம் காணப்படுகின்றது.

எலும்புகூடாக காணப்பட்ட சடலம்

முத்தரிப்புத்துறை மீனவர்களால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்
Posted in இலங்கை செய்திகள்

நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்

நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு (28) சிறிய ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து, விபத்துக்களை தவிர்ப்பதற்காக பிரதான வீதியில் வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுரை வழங்கி வருகின்றன

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் பதவியை துறந்தார்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் பதவியை துறந்தார்

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் பதவியை துறந்தார்

முல்லைத்தீவு – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை
Posted in இலங்கை செய்திகள்

தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை

தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

அவர் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் காரணமாக, தனுஷ்க குணதிலக இலங்கை திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனுஷ்க மீது குற்றம் சுமத்திய பெண் குறித்து நீதிபதி கூறிய உண்மை

அத்துடன், இந்த தீர்ப்பினால் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கம் விதித்திருந்த தடையும் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இதேவேளை, தனுஷ்க குணதிலகவின் வழக்குக்காக செலவிடப்பட்ட பணம் அனைத்தும் அவரிடமிருந்து தற்போது வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

வழக்கின் தீர்ப்பை அறிவித்த நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட், சர்வதேச கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவதூறு செய்யும் வகையில் மனுதாரருக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருந்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு

IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க,

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மன் விஜயம் நிறைவடைந்தவுடன், இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் அமைச்சர்,

“நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் பங்கேற்புடன் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பிரதிநிகள் குழு நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டது.

IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு

இதுவரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மற்றும் நீடிப்பு செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச நாணய நிதியக் குழுவினர், அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும், அதற்காக வரி சேகரிப்பு செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் மற்றும் வரி செலுத்தாமல் இருப்போரை கண்டறிவதற்கான வேலைத்திட்டம் என்பன குறித்தும் ஐ.எம்.எப் குழுவினர் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான தவறான எண்ணங்களை பரப்ப சிலர் முயற்சித்து வருவதாகவும், மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் இன்னும் பல செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் இலங்கைக்கு சில நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று போலியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் பலவும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றகரமான பேச்சுவார்த்தையில் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்து வருகின்றன.

மறுமுனையில், நாட்டின் பணவீக்கம் 1.3 ஆக குறைவடைந்துள்ளமை மற்றும் கையிருப்பு அதிகரித்துள்ளமை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பணம் அனுப்பும் செயற்பாடுகள் சுமூகமான நிலைக்குத்

திரும்பியுள்ளமை, நாட்டின் அடிப்படைக் கணக்கின் வைப்புத் தொகை அதிகரித்துள்ளமை என்பன மகிழ்ச்சிக்குரியது இருப்பினும் அரசாங்கத்தின் வருமானம் 48% ஆக அதிகரித்துள்ள நிலையில், செலவீனம் 38% ஆக அதிகரித்துள்ளது.

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் காலப்பகுதியில் கடன் செலுத்துவதற்கு தவணைகளை செலுத்துவதற்கு மாறாக பெருமளவில் வட்டி பணத்தை செலுத்த நேர்ந்துள்ளமையே அரச செலவீனங்கள் அதிகரிக்க

காரணமாகியுள்ளன. எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழான பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலனாக எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலைமையை அடையும் என்றும் நம்பிக்கை உள்ளது.

IMF கடன் தொடர்பில் சாதகமான பேச்சு

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்புக்களை 20 வருடங்களுக்கு முன்பாகச் செய்திருக்கும் பட்சத்தில் நாடு வலுவான நிலைமை அடைந்திருக்கும். அதன்படி அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றிய அனைத்து படிமுறைகளையும் அரசாங்கம் பின்பற்றி வருகின்றது.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் இந்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், அதனால் தமது அரசியல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதுகின்ற சிலர் தவறான கருத்துக்களை பரப்ப முற்படுகின்றனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவனை கடன் இலங்கைக்கு கிடைக்காது என எவரும் குறிப்பிடவில்லை.

மறுமுனையில் பொருளாதாரத்திற்கான இயற்கை வளங்கள் அற்ற நாடுகளின் வரி அறவீட்டு குறிகாட்டியில் இலங்கை மிக குறைந்தளவில் வரி அறவிடும் நாடாக பெயரிடப்பட்டுள்ளதால், வரி அறவீட்டுக்கான (RAMIS) மென்பொருளை புதுப்பித்து வரி சேகரிப்பு பணிகளை சீரான முறையில் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையில் மீண்டும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்ற உறுப்பாட்டினையை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது.

அத்தோடு, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு முன்பாக நாட்டின் பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடை நீக்கப்படும். அதேநேரம் பொதுப்போக்குவர்துக்கான வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு அவசியம் என்றும் மற்றைய வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.” என்றும் பதில் அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை

மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை

மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

இறந்தவரின் மகள் முதல் திருமணத்தில் இருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்து.

இதில் தந்தை தலையிட்ட போது குறித்த நபர், பொல்லினால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 74 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

முதலாவதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த பேர்லின் உலகளாவிய கலந்துரையாடலின் தலைவர் பேராசிரியர் ரொஷ்லெட் அவர்களுக்கு நன்றி. கடந்த இரு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

2008 ஆண்டு ஐரோப்பா கடன் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தது. அதனையடுத்து COVID-19 பரவல் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதிப்புக்களின் விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

அண்மைய வரலாறுகளில் இவ்வாறானதொரு நிலைக்கு ஒருபோதும் முகம்கொடுத்திருக்கவில்லை என்பதோடு இவ்வாறான நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளே பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.

அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.

வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே விளைவாக இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன. அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது வருந்தற்குரிய காரணமாகும்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தும் போது ஆபிரிக்க வலயத்தின் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் தேவைகள் கனிசமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு 5.9 ட்ரிலியன் டொலர்கள் அவசியப்படுகின்றன.

அதேபோல் நிகர பூச்சிய உமிழ்வை அடைந்துகொள்வதற்கு வலுசக்தி தொழில்நுட்பத்திற்காக 4 ட்ரிலியன்கள் அவசியப்படுகின்றன. இலங்கையின் காலநிலை சுபீட்சத்துக்கான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான நிதித் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

  • யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது காசிக்கோட்டே யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக ட்ரோன் இயக்குபவர் கைது வடமேற்கு வனவிலங்கு மண்டலத்தில் வடமேற்கு வனவிலங்கு மண்டலத்தில் உள்ள கல்கமுவா–காசிக்கோட்டே பிரதான சாலையில் பயணித்த காட்டு யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ட்ரோனைப் பறக்கவிட்டதற்காக ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காட்டு…
  • இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
    Your browser does not support iframes. Your browser does not support iframes. இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை 16 000 இஸ்ரேல் வேலை விண்ணப்பதாரர்களுக்காக SLBFE இணையதளம் இன்று திறக்கப்படுகிறது இஸ்ரேலில் உள்ள உணவகம் இஸ்ரேலில் உள்ள உணவகம் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலை தேடும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தனது இணையவழிப் பதிவு இணையதளத்தை இன்று (ஆகஸ்ட் 10) திறக்கும். உணவக…
  • புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது புத்தளம், முல்லிபுரத்தில் புத்தளம், முல்லிபுரத்தில் 7,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 49 வயதான நபர் ஒருவர் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள…
  • பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது டால்பின் புயல் கரையைக் கடந்ததை அடுத்து, நிதித் தலைநகரான ஷாங்காய் உட்பட கிழக்கு சீனாவில் உள்ள பத்து லட்சத்திற்கும் சீன அதிகாரிகள் அதிகமான மக்களை சீன அதிகாரிகள் அவர்களது வீடுகளில் இருந்து…
  • மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
    Your browser does not support iframes. Your browser does not support iframes. மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை மாளிகாவத்தையில் காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டார் பாதாள உலக தாதா காஞ்சிபானி பாதாள உலக தாதா காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் சற்று நேரத்திற்கு முன்பு மாளிகாவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்…
3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி
Posted in இலங்கை செய்திகள்

3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி

3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி

இரண்டு ரயில்களில் இரண்டு வாகனங்கள் மோதுண்டதில் இருவரும், மற்றொரு ரயிலுடன் யானைகள் கூட்டமாக மோதியதில் 3 யானைகளும் மரணித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவமொன்றில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் – ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் வியாழக்கிழமை (28) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறிப்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 ரயில்களில் மோதி இருவர் மரணம் 3 யானைகள் பலி

இதேவேளை, பெலியத்தவில் இருந்து மருதானையை நோக்கி பயணித்த சாகரிக்கா கடுகதி ரயிலில், குப்பைகளை ஏற்றிச்சென்ற சிறியரக லொறியொன்று மோதி விபத்துக்கு உள்ளானது.

கொடகம கஹவ எனுமிடத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் பயணித்த இரவு தபால் ரயிலில், கல்கமுவ பிரதேசத்தில் வைத்து, புதன்கிழமை இரவு 11 மணியளவில் யானைக்கூட்டமொன்று மோதியதில், மூன்று யானைகள் மரணமடைந்துள்ளனர்.

கல்கமுவ ரயில் நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதன் பின்னர் ஒரு மணிநேரத்துக்கு ரயில் பயணம் தாமதமாகியிருந்தது என்றும் ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொட, மீட்டியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (28) அதிகாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தனுஷ்க குணதிலக விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

தனுஷ்க குணதிலக விடுதலை

தனுஷ்க குணதிலக விடுதலை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக ஊடக செயலி மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (28) அதன் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

வரி வருமானத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

வரி வருமானத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு அமைய அரசாங்கத்தின் வரி வருவாயை அதிகரிப்பதற்கு முறையான வரி நிர்வாக முறைமை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க வலியுறுத்துகின்றார்.

அத்தியாவசிய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்த போதிலும், நாட்டின் வரி வருமானத்தில் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

வரி வருமானத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

மக்கள் மீது புதிய வரிகளை சுமத்தாமல் வரி வருமானத்தை அதிகரிக்க நாணய நிதியம் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளதாக பேராசிரியர் பிரியங்க துனுசிங்க அத தெரணவிற்கு தெரிவித்தார்.

அதற்கான 03 பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் முதல் பரிந்துரையாக வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதை நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

வரிச்சலுகைகளை நீக்குவது இரண்டாவது பரிந்துரையாகவும், மூன்றாவதாக வரி ஏய்ப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை , களுத்துறை , கேகாலை , மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தூங்கா நகரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தூங்கா நகரங்கள்

இலங்கையில் தூங்கா நகரங்கள்

இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த போதே பதில் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று (27) சர்வதேச சுற்றுலாத் தினமாகும். சுற்றுலாத்துறை அமைச்சு அதனை சுற்றுலாத் தினத்தை எளிய முறையில் கொண்டாடியதாகவும், இந்நாட்டின் சிறந்த சமையல் கலை நிபுணரான பபிலிஸ் சில்வாவுக்கு “ஜய ஸ்ரீ லங்கா” என்ற பெயரிலான சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தூங்கா நகரங்கள்

அது மிகச்சிறந்த விருதாகும். அவர் கீழ் மட்டத்திலிருந்து கல்கிசை ஹோட்டலொன்றில் பிரதான சமையல் கலை நிபுணர் என்ற அந்தஸ்த்து வரை தன்னை வளர்த்துக்கொண்டுள்ள கதை மிகவும் அற்புதமானது. சுற்றுலாத்துறையில் சமையல் கலை நிபுணர்களை மறந்துவிட முடியாது என்பதால் அவர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை வரவழைக்க முடியும் என எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்த்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து அவர்களை வரவழைப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக எல்ல, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், சில சட்டத்திட்டங்களை தளர்த்த வேண்டும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் செலவுகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தவறும் பட்சத்தில் நாட்டிற்கு வருமானம் கிட்டாது என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளதெனவும், சிலர் செய்யும் தவறான செயற்பாடுகளினால் முழு நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தூங்கா நகரங்கள்

அதனால் சுற்றுலாப் பயணிகளிடத்தில் அதிக தொகையை அறவிடும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சுற்றுலாப் பயணிகளில் பிரயாண வசதிக்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அது தொடர்பிலான சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு கஞ்சா உற்பத்திக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும், இரு வாரங்களுக்குள் அதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் ரூபாய்களை ஈட்டுவதாக அன்றி டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கானதாக அமைய வேண்டும் என்றும் அதற்கான அதிகார சபையொன்றின் கீழ் ஏற்றுமதி வலயத்திற்கு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்
Posted in இலங்கை செய்திகள்

23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளால் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

               இவர்கள் டுபாயில் இருந்து இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

          முதல் விமானம் 09/27 அன்று காலை 01.10 மணிக்கு, அதில் மூன்று பெண்களும்  ஆணொருவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

             மேலும், மேலும் ஒரு பெண் துபாயிலிருந்து 09/27 அன்று காலை 05.25 மணிக்கு வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

            இவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவாகும்.

             06 கிலோ கிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும், அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளிலும் மறைத்து வைத்திருந்த போது, ​​சுங்க அதிகாரிகளால் அவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

           கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த குழுவினரை தடுத்து வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்
Posted in இலங்கை செய்திகள்

அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்

அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார் என எமது சகோதர ஊடகமான டெய்லிமிரர் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசியல்வாதிகள் ஆச்சரியமளிப்பவர்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு அரசியல்நெருக்கடியில் சிக்குண்டிருந்த வேளை நாடு பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட போது இலங்கையின் அரச தலைவர்கள், சர்வதேச சமூகம் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நல்லெண்ண நடவடிக்கையாக பல நாடுகள் உதவ முன் வந்தன-சில நாடுகள் தங்கள் சொந்த நலன் அடிப்படையில் உதவ முன்வந்தன- சில நாடுகள் நட்புறவின் அடிப்படையில் உதவ முன்வந்தன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேண விரும்புவதாகவும் பக்கம் சாய விரும்பவில்லை எனவும்

தெரிவித்துவரும் அதேவேளை , எதிர்பாராத நடவடிக்கையாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு தொடர்பற்ற இந்திய – கனடா முறுகல் நிலை குறித்து சர்வதேச ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளமை ஆச்சரியமளித்துள்ளது.

அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்

இலங்கையின் நிலைப்பாடு என்பதை விட கோபத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து போலதோன்றும் அந்த கருத்தில் அலிசப்ரி இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமரின் கருத்திற்காக கனடா பிரதமருக்கு எதிராக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்- இது இலங்கைக்கு தொடர்பற்ற விடயம்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் புகலிடம் பெற்றுள்ளனர்

கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து அலிசப்ரி கருத்து தெரிவிக்கையில் , உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளதுடன் ஆதாரங்களற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமருக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரங்களில் அலி சப்ரி கனடா பிரதமருக்கு எதிராக போர்கொடி தூக்குவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்திய- கனடா விவகாரங்களில் இந்த தருணத்தில் தலையிடுவது அர்த்தமற்றது போல தோன்றுகின்றது.

மேலும் இலங்கைக்கு தொடர்பற்ற விடயத்தில் தலையிட்டு உறவுகளை மேலும் சீர்குலைப்பது போலவும் தோன்றுகின்றது.

இலங்கை அரசாங்கத்துடன் சம்பந்ததமற்ற மோதல் குறித்து அலிசப்ரி வெளியிட்டுள்ள கருத்துகளை, இலங்கை ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது இலங்கை நாடானது இந்தியாவின் பக்கமோ அல்லது கனடாவின் பக்கமோ சாயாது என தெரிவிக்கும் படி அலிசப்ரியை கேட்டுக்கொள்கின்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இலங்கை தான் தீர்வுகாண வேண்டிய சொந்த மோதல்கள் பல உள்ளன. தனக்கு தேவையற்ற சம்பந்தமில்லாத மோதலில்களில் தலையிடாமல் இலங்கை அதனை செய்யலாம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு

வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு

மன்னார் – உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றம்.

மன்னார் உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்று (26) இரவு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அடம்பன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கண்டல் பகுதியில் நேற்று (26) இரவு 8.30 மணியின் பின்னர் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.

மீட்கப்பட்ட குறித்த நபர் அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு

அங்கிருந்து உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக குறித்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர், அடம்பன் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வருகிறது .

குறித்த நபர் விபத்திற்கு உள்ளானாரா? அல்லது தாக்குதல் சம்பவமா? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.