Posted in மருத்துவம்

டீ அதிகம் குடிப்பது நல்லதா

டீ அதிகம் குடிப்பது நல்லதா?

நாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன.

காபி, டீ அதிகம் குடிப்பது நல்லதா?
காபி, டீ அதிகம் குடிப்பது
பலருக்கு ஒவ்வொரு நாளும் டீ காபியுடன் தான் விடியும். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்துக் காபி அல்லது டீ, வேலை இடைவேளையின்போது பதினோரு மணிவாக்கில் இன்னும் ஒரு டீ. மாலை

தேநீர் இடைவேளை என்று சொல்லிக்கொண்டு ஒரு டீ. மாலை ஆறு மணிக்கு லேசாகத் தலைவலிக்கிறது என்ற விளக்கத்துடன் ஒரு டீ அல்லது ஸ்டிராங் காபி. ஒரு நாளில் குறைந்தபட்சம்

மூன்று அல்லது நான்கு முறையாவது இந்த பானங்களைப் பருகாதவர்கள் குறைவு. இப்படி அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா?

நாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி

உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காபீன் என்கிற வேதிப்பொருள்

இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி டீ குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது. அப்படி குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர்,

பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் அதிகம் டீ குடிப்பதால் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

டீ குடிப்பது மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான

அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால்

குறையலாம் என்கிறார்கள். இவ்வளவு நன்மைகள் இருக்கும் அதிகம் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம்.

காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும். அளவுக்கு அதிகம் காபி குடிப்பதால் ரத்தத்தில்

இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து ரத்தசோகை ஏற்படலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் டீ குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.

எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன

    Posted in மருத்துவம்

    மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க

    மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க

    மாதவிடாய் நாட்களில் வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.

    • ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும். மாதவிடாய் நாள்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்.
    • உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிடாயின்போது மட்டுமன்றி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
    • மாதவிடாய்க் காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
    • மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். திரவ வடிவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
    • மாதவிடாய் நாட்களில் வெந்நீர் அருந்துவது, சூடான நீரைக்கொண்டு வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை வலி உணர்வைக் குறைக்கும்.
    • மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க
    • மாதவிடாயின்போது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, `மூட் ஸ்விங்க்ஸ்’. அதைக்கட்டுபடுத்த, உணவில் ஒமேகா 3 போன்ற, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம். தியானம் செய்வது, மனதை ஒருநிலைப்படுத்தும்.
    • அடிக்கடி நாப்கினை மாதவிடாய் நாட்களில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும்.
    • வெகுநேரம் மாதவிடாய் நாட்களில் நாப்கின் மாற்றாமல் இருப்பது,
    • பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
      Posted in மருத்துவம்

      பெண்கள் குளிர்பானம் பருகினால் வரும் பிரச்சனைகள்

      பெண்கள் குளிர்பானம் பருகினால் வரும் பிரச்சனைகள்

      பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது

      அதுபோன்ற பழசாறு கலந்த பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


      பதப்படுத்தப்பட்ட சோடா குளிர் பானங்கள் மற்றும் அது தொடர்புடைய பழ சாறுகளை தொடர்ந்து பருகும் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

      இதயநோய் வருவதற்கான வாய்ப்பும் 16 சதவீதம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வுக்கு 81,714 பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

      இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். 12 ஆண்டுகளாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது அதுபோன்ற பழசாறு கலந்த

      பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட ‘பிராண்ட்’ குளிர் பானத்தை பற்றி நடத்தப்பட்ட ஆய்வு அல்ல!

      உடல் பருமமான பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பெண்களை விட அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு இருமடங்கு

      அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட பானங்களை

      பருகுவதை தவிர்ப்பது நல்லது. சுவைக்காக ரசாயனம் சேர்க்கப்படும் பானங்களையும்

      பருகக்கூடாது. கலோரிகள் அல்லாத பானங்களை பருகுவதே நல்லது. எத்தகைய ரசாயனமும்

      கலக் காத தண்ணீர் பருகுவதே சிறப்பானது என்று அமெரிக்க இதய நோய்த்துறைக்கான அமைப்பு கூறியுள்ளது.

        Posted in மருத்துவம்

        நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்

        நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்

        நீராவி குளியல் உடலுக்கு சில நன்மைகளை தந்தாலும் அதே அளவுக்கு தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

        தினமும் நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

        குளிர்காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை நிறைய பேருக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் குளிர்ச்சி அடைவதை தடுத்து வெப்ப நிலையை தக்கவைப்பதற்கு முயற்சிப்பார்கள்.

        உடலில் இருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றி சருமத்திற்கு அழகு சேர்க்கவும், இளமையை

        தக்க வைக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் விருப்ப தேர்வாக நீராவி குளியல் அமைந்திருக்கிறது.

        மெட்ரோ நகரங்களில் நீராவி குளியல் நிலையங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அந்த அறைக்குள் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பரவி இருக்கும். பனிப் புகையும்

        வெளிப்படும். இந்த குளியல் முறை மூலம் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும். அதே அளவுக்கு

        தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும். நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

        உடல் வெப்பநிலை அதிகரிக்கும்: நீராவி குளியல் உண்மையில் உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்து விடும். அளவுக்கு அதிகமாக வெப்பம் வெளிப்படும்போது உடலுக்கு வசதியாகவும்,

        ஆரோக்கியமாகவும் இருக்காது. தசை பலவீனம் அடையக்கூடும். தசை வலியும் உண்டாகும். அளவுக்கு அதிகமாக வியர்வையும் வெளிப்படலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டாலோ,

        உடல் உஷ்ணம் அடைந்தாலோ, அசவுகரியமாக உணர்ந்தாலோ நீராவி அறையை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

        இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்: நீராவி அறையில் நிலவும் வெப்பநிலை இதயத் துடிப்பை அதிகரிக்க செய்யலாம். அப்படி 10 நிமிடங்களுக்குள் இதயத்துடிப்பு அதிகரித்தால்

        நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்

        வாஸ்குலர் செயல்பாடுகளில் அதன் தாக்கம் வெளிப்படும். வழக்கத்தை விட ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும். ரத்த அழுத்தமும் உண்டாகக்கூடும். ரத்த அழுத்தம் அபரிமிதமாக அதிகரித்தால் இதய நோய் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

        கிருமிகள் அதிகரிக்கக்கூடும்: நீராவி குளியல் அறைக்குள் நிலவும் சூடான சூழல் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைவதற்கு வித்திடும். இது பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ் தொற்றுகளை பரப்பும்

        வாய்ப்பை உருவாக்கும். கொரோனா வைரஸ் முடிவுக்கு வராத சூழலில் நீராவி குளியல் நிலைமையை மோசமாக்கக்கூடும். நீராவி குளியல் அறை சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால்

        கிருமிகள் உடலுக்குள் நுழையலாம். ஏனெனில் வைரஸ் கிருமிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு இந்த வகையான சூழல்தான் தேவை. எனவே நீராவி குளியலின்போது உடல் தூய்மையை பராமரிப்பது அவசியமானது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

        நாள்பட்ட நோய் பாதிப்பை உண்டாக்கும்: தொடர்ந்து நீராவி குளியல் எடுத்துக்கொள்வது நாள்பட்ட நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஏனென்றால், பைப்ரோமியால்ஜியா போன்ற

        நோய்கள் இந்த வெப்பநிலையில் பாதிப்பை உண்டாக்கக்கூடியவை. ஆஸ்துமா, தொடர் இருமல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு பாதிப்பை அதிகரிக்கக்கூடும். சுவாசம் சார்ந்த பிரச்சினைகள்

        உண்டாகலாம். அதனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் நீராவி குளியல் மேற்கொள்ள வேண்டும்.

        நீரிழப்புக்கு வித்திடும்: நீராவி குளியல் எடுப்பதன் மூலமும் நீரிழப்பு ஏற்படலாம். ஏனெனில் உடலுக்கு தேவையான வெப்பநிலையை விட வெப்பம் அதிகம் உமிழப்படும்போது உடலில் இருந்து

        அதிகப்படியான வியர்வை வெளியேறும். அதன் காரணமாக நீரிழப்பு ஏற்படும். நீராவி குளியல் எடுக்கும்போது சிலருக்கு உடல் சோர்வு, தலைசுற்றல் மற்றும் உதடு உலர்வடைதல் போன்ற

        பாதிப்புகள் நேரும். இதனை தடுக்க நீராவி குளியலுக்கு பிறகு உடலில் குளிர்ச்சியான சூழலை தக்கவைக்க வேண்டும். குளியல்தான் அதற்கு தீர்வாகும். ஆனால் குளிக்கும் போது திடீரென

        உடலில் வெப்ப நிலை மாறுபடும் . அதனால் நோய் பாதிப்புகள் உண்டாகக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

        கொரோனா அச்சுறுத்தல்: கொரோனா அச்சுறுத்தல் தொடரும் இந்த சமயத்தில் நீராவி குளியல் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், கொரோனா வைரஸ் கடுமையான

        வெப்பநிலையிலும் ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. நீராவி குளியல் அறையானது கொரோனா வைரஸ் அங்கு நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கு சிறந்த இடமாகும்.

        எனவே நீராவி அறையில் சிறிய அளவில் கொரோனா வைரஸ் படிந்திருந்தாலும், அதனை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் அது பாதிக்கலாம். எனவே கொரோனா ஆபத்து குறையும் வரை நீராவி குளியலில் இருந்து விலகி இருப்பது நல்லது.

          Posted in மருத்துவம்

          வெறும் வயிற்றில் உடற்பயிற்சி

          வெறும் வயிற்றில் உடற்பயிற்சி

          அனைத்து தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்ளும் பயிற்சிகள் சில உள்ளன. அவற்றுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிமையான ஏரோபிக் பயிற்சிகள், யோகா போன்றவை முக்கியமானவை.

          காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ‘இரவு முதல் மறுநாள் காலை தூங்கி எழுவது வரை எதுவும் சாப்பிடாமல்

          உடற்பயிற்சி செய்வது அதிக கலோரிகளை எரிக்க உதவும், இதனால் எடை குறையும்’ என்று நம்பப்படுகிறது.

          ஆனால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

          அப்படி வெற்று வயிற்றில் பயிற்சி செய்யும் போது உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் கடுமையான

          உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழகிய, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வெறும் வயிற்றில் செய்யும் உடற்பயிற்சி உகந்தது.

          மற்றவர்கள் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையக்கூடும். இதனால் தலைச்சுற்றல், குமட்டல் ஏற்படலாம். இருப்பினும் அனைத்து

          தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்ளும் பயிற்சிகள் சில உள்ளன. அவற்றுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிமையான ஏரோபிக் பயிற்சிகள், யோகா போன்றவை முக்கியமானவை.

          உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?

          காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவை சரியான அளவில் சாப்பிடும்போது உடலின் செயல் திறன் மேம்படும். குறிப்பாக உடற்பயிற்சி செய்வதற்கு

          15-20 நிமிடங்களுக்கு முன்பு ஒரு வாழைப் பழம் அல்லது சில துண்டு ஆப்பிள்கள் சாப்பிடலாம்.

          இவை உடலுக்கு ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய சிற்றுண்டியை சிறிதளவு சாப்பிடலாம்.

          உடற்பயிற்சிக்கு முன் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

          சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவை சளியை உருவாக்கக்கூடும். மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதனால் உடற்பயிற்சியின் செயல்திறன் பாதிக்கப்படும்.

          எண்ணெய் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும். உணவை போலவே நீர்ச்சத்தை பேணுவதும் முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு

          தண்ணீர் பருகலாம். தாகமாக இருப்பதாக உணர்ந்து அதிக அளவில் தண்ணீர் பருகினால் உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது. சிறிது நேரம் கழித்த பிறகே உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும்.

          உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டியவை:

          உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சாப்பிட வேண்டிய உணவு வகைகள் பல உள்ளன. அவற்றுள் பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்றவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

          உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு சிற்றுண்டியை உட்கொள்வது சிறந்த செயல்திறனுக்கு உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம்

          என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி உடற்பயிற்சி செய்யும்போது உடலானது உணவுகளின் மூலம் ஆற்றலை பெறுவதற்கு பதிலாக உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை பயன்படுத்தும். இது உடல் எடையை நிர்வகிப்பதற்கு உதவும்.

          இருப்பினும் இதுபற்றிய ஆய்வில் எதிர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன. 12 ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, வெறும் வயிற்றில் பயிற்சி செய்த அவர்களின் உடலில் இருந்து

          அதிகப்படியான கொழுப்பு வெளியேறியது கண்டறியப்பட்டது. இதே ஆய்வுக்கு பெண்களை உட்படுத்தியபோது அவர் களின் உடலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

          இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமல்ல,

          புரதங்களையும் உடல் பயன்படுத்துகிறது. அதனை ஈடு செய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை சாப்பிடுவது அவசியமானது.

          உடலுக்கு தேவையான தசைகளை உருவாக்க இது தேவைப்படுகிறது. ஆதலால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு சிற்றுண்டி சாப்பிடுவது ஆரோக்கியமானது.

              Posted in மருத்துவம்

              பெண்களுக்கு கருப்பை நீர்கட்டி வரக்காரணம்

              பெண்களுக்கு கருப்பை நீர்கட்டி வரக்காரணம்

              சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.

              பெண்களுக்கு கருப்பை நீர்கட்டி வரக்காரணம் என்ன?
              கருப்பை நீர்கட்டி


              இப்போது இருக்கின்ற நிறைய பெண்களுக்கு PCOS / PCOD கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்கிறது.

              இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்கை முறை என்று தான் சொல்ல வேண்டும்.

              சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.

              மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன்

              குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.

              பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை

              நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

              கருப்பை நீர்கட்டி அறிகுறிகள் (Ovarian Cyst Symptoms) (Neer Katti Symptoms in Tamil):

              பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி.

              இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

              கர்ப்பப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் குணப்படுத்தும் மருத்துவத்தை நாம் இங்கு காண்போம்.

              கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்:- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் இந்த கழற்சிகாய் நாட்டு மருத்துவ கடையில் கிடைக்கும். இந்த கழற்சிகாய் காயாகவும், பொடியாகவும் கிடைக்கும்.

              இந்த கழற்சிகாய் பார்ப்பதற்கு ஒரு கோலிகுண்டு போல் இருக்கும். இவற்றின் மேல் புறம் மிகவும் கடினமாக இருக்கும்.

              இவற்றின் மேல் புற ஓட்டை ஒரு பக்கவாட்டில் உடைத்தால் அவற்றின் உள்ளே ஒரு பருப்பு இருக்கும்.

              இந்த கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும்.

              இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகள் குணமாகும்.

              நீர்க்கட்டி வர காரணம்:

              இந்நோய்க்கான காரணத்தை உறுதியாக கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது.

              மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாகக் கூட வரலாம். அதே போல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

              இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை அன்றாடம் நம் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.

                Posted in மருத்துவம்

                பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை

                பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை

                பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.

                வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள்.

                அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.

                நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன.

                ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.

                எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான்.

                ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது.

                இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி?

                வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை

                மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும்.

                வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது

                . அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது

                பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை

                வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கி யிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.

                வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால்

                வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர்

                போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

                உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும்.

                காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே

                செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.

                  Posted in மருத்துவம்

                  கல்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

                  கல்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

                  கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில்

                  அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.

                  பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள்

                  மற்றும் எலும்புகள் வடிவத்தில் இருக்கும். இது ஹார்மோன்களின் சுரப்பு, ரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயத்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு கல்சியம் தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும்.

                  குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லா போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

                  கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்

                  நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம்

                  . சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, குறைபாட்டால் செரிமானக்கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது, உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து

                  இருத்தல், சிறுநீரக செயலிழப்பு கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

                  கல்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

                  மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

                  கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

                  கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.

                  முதலாவதாக பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலில் கால்சியம் சத்து அதிகரிப்பதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

                  தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.

                  அத்துடன் பாதாமில் உள்ள பி2 வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.

                  கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.

                  மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இவை கால்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளில் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.

                  கால்சிய உணவுகள் பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்றவையும்

                  கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, ஆரஞ்சி, கிவி, பெர்ரி, அன்னாசி, லிச்சி, பப்பாளி,

                  ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்த கொள்ள வேண்டும்.

                    Posted in மருத்துவம்

                    உறவுக்குப் பின்னால் சில உபாதைகள்

                    உறவுக்குப் பின்னால் சில உபாதைகள்

                    சிலருக்கு உறவுக்குப் பின்பு சின்னச் சின்ன உடல் உபாதைகளும், சிலருக்கு தீவிரமான பாதிப்புகளும் ஏற்படலாம். உறவு கொண்ட பின்பு, பொதுவாக ஏற்படும் சில உடல் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆண்-பெண் இருபாலருக்கும் நல்லது.

                    உறவுக்குப் பின்னால் சில உபாதைகள்: தீர்வுகளை தெரிந்துகொள்வோம்
                    உறவுக்குப் பின்னால் சில உபாதைகள்


                    கணவன்- மனைவி இடையேயான தாம்பத்திய உறவு இன்பமானதாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு உறவுக்குப் பின்பு சின்னச் சின்ன உடல் உபாதைகளும், சிலருக்கு தீவிரமான

                    பாதிப்புகளும் ஏற்படலாம். உறவு கொண்ட பின்பு, பொதுவாக ஏற்படும் சில உடல் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆண்-பெண் இருபாலருக்கும் நல்லது.

                    அடிக்கடி ஏற்படும் வலி

                    பொதுவாக தாம்பத்ய உறவு முடிந்ததும் கணவனும்- மனைவியும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் அல்லது பேசிக் கொண்டிருப்பார்கள். பின்பு ஆண்கள் சீக்கிரமாக தூங்கிவிடுவார்கள்.

                    உடல் அசதி இருவருக்குமே இருந்தாலும், பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்பட வாய்ப்பு உண்டு

                    . ஆரம்ப கால உறவின்போது ஏற்படும் வலி என்பது வேறு. வழக்கமான உறவுக்குப் பின்பு வலி ஏற்படுவது கவனிக்க வேண்டியதாகும்.

                    வித்தியாசமான உறவு செயல்பாடுகளால் வலி உண்டாகலாம். தீவிர ஆர்வத்தால், வினோத புணர்வு இன்பத்தால் பிறப்பு உறுப்பில் தோல் கிழிவது, புண்ணாவது, நகங்கள் படுவது போன்ற

                    காரணங்களால் இருபாலருக்குமே காயம் ஏற்படவும் வலி உண்டாகும் வாய்ப்பும் உண்டு. உடல் ஆரோக்கிய

                    குறைபாடு காரணமாகவும் வலி உண்டாகலாம். மாறுபட்ட முயற்சி மற்றும் முரட்டுத்தனமான புணர்ச்சியாலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகலாம்.

                    சாதாரண வலி என்றால் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரோக்கிய குறைபாடு மற்றும் தொடர் வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

                    ஏனெனில் ஒவ்வொரு முறை உடலுறவுக்குப் பின்பும் வலி ஏற்படுவது, கட்டி, புண்கள்

                    வளர்வதற்கான அறிகுறியாகவும், வேறு நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். வலி ஏற்படாமல் இருக்க நிதானமான தாம்பத்ய செயல்பாடுகள் அவசியம்.

                    நீண்ட நேர எரிச்சல்

                    வலியைப் போலவே பலருக்கும் உடலுறவுக்குப் பின்பு எரிச்சல் உணர்வு உண்டாகலாம். நகக் கீறல்,

                    பற்குறி, அசுர வேகம் உள்ளிட்ட காரணங்களால் தோலில் ஏற்படும் கிழிசலாலும், அதிக அழுத்தம் காரணமாக ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டும் எரிச்சல் ஏற் படலாம்.

                    உறவுக்குப்பின்பு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எரிச்சல் நின்றுபோனால் அது சாதாரணமானது. எப்போதும் தொடர்ந்து எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். நிதானமான உறவு

                    செயல்பாடு வலியையும், எரிச்சலையும் தவிர்க்கும். வாய் மற்றும் பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வதும் அவசியமாகும். இருவருமே அந்தரங்க சுத்தத்தை மேற்கொண்டால் எரிச்சலை பெருமளவு தவிர்க்கலாம்.

                    ரத்தக்கசிவு

                    முதல் உறவின்போது மட்டுமே கன்னித்திரை கிழிவதால் லேசான ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது பெண்களின் விளையாட்டு, உடல் இயக்கம், வாழ்வியல் முறைகளால் அத்தகைய

                    ரத்தக் கசிவு நிலை அனேகமாக ஏற்படுவதில்லை. மாதவிலக்கு முடிந்த அடுத்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால், சில பெண்களுக்கு எஞ்சிய ரத்தத்துளிகள்கூட கசிந்துவரக்கூடும்.

                    மற்ற நேரங்களில் சாதாரண உறவு நிலையில் ரத்தம் கசிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். முரட்டுத்தனம் மற்றும் அவசரத்தால் ஏற்பட்ட ரத்தக்கசிவு என்றால் மருந்துகளை உபயோகித்து சரி

                    செய்துவிடலாம். உறவுக்குப் பின்பு தொடர்ந்து ரத்தம் கசிவது, ஒவ்வொரு உறவின்போதும் இதே

                    பிரச்சினை ஏற்படுவது, பிறப்பு உறுப்பின் உட்பகுதியில் புண் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு அவசியம் மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள்.

                    நமைச்சலும் அரிப்பும்

                    உறவுக்குப் பின்பு பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அரிப்பு ஏற்பட்டால் அந்தரங்க சுத்தமின்மை காரணமாக இருக்கலாம். உறவுக்கு முன்னும் பின்னும் உறுப்புகளை சுத்தமாக கழுவுவது நல்லது. ஆணுறை உபயோகிப்பது, வழுவழுப்பு தன்மைக்காக ஏதேனும் கிரீம்களை உபயோகிப்பது,

                    உதட்டுச் சாய ரசாயனங்களின் விளைவு உள்ளிட்ட காரணங்களாலும் அரிப்பு ஏற்படலாம். உறுப்புகளை கடந்து உடலிலும் அரிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவியை பெறுவது அவசியம்.

                    உடலுறவால் சிலருக்கு சிறுநீர்ப்பை நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. குடல் பகுதியில் இருந்து பாக்டீரியா நுண்கிருமிகள் பிறப்பு உறுப்புகளின் வழியே நுழைவது சிறுநீர்ப்பை நோய்த்

                    தொற்றை உருவாக்கும். உடலுறவுக்கு முன்பு அல்லது உடலுறவு முடித்த உடன் சிறுநீர் கழிப்பதை தவிர்த்தால் சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை தவிர்க்கலாம்.

                    அவசர உபாதைகள்

                    தாம்பத்ய உறவு கொண்டதும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் அல்லது மலம் கழிக்கும் அவசரம் ஏற்படுவதுபோல தோன்றலாம். இது முழு விருப்பம் இல்லாமல், பலவித மனநெருக்கடிக்கு

                    இடையில் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். ஆண்களில் சிலருக்கு உறவுக்குப் பின்பு, திரவம் கசிவதுபோல இருக்கலாம். அது எஞ்சிய திரவமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் கருவுற்ற

                    நிலையில் உறவு கொண்டாலோ அல்லது கருத்தடை சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு உறவு கொண்டாலோ உட்சென்ற விந்துத்திரவம் சிறிது நேரத்தில் வெளித்தள்ளப்படக்கூடும். இது இயற்கையானதுதான்.

                    அந்தரங்க சுத்தமும், நிதானமான செயல்பாடுகளும் இருந்தால் பெரும்பாலும் உடலுறவுக்குப்

                    பின்னால் அவஸ்தைகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பதை ஆண்களும், பெண்களும் கவனத்தில்கொள்வது மிக அவசியம்.

                      Posted in மருத்துவம்

                      அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

                      அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

                      மாதவிடாய் வலியை குறைப்பதற்காக அடிக்கடி மருந்துகள் சாப்பிடுவது, காற்றோட்டமில்லாத ஆடைகள் அணிவது போன்றவற்றால் கர்ப்பப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.

                      அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்…
                      மாதவிடாய் வலி


                      பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களில் உடல் சார்ந்த சிரமங்களை மட்டுமில்லாமல் மன ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம், சோகம், அழுகை, மகிழ்ச்சி

                      போன்ற மனநலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கின்றன.

                      மாதவிடாய் சுழற்சி தொடங்குவது முதல் கருவுறுதல், மகப்பேறு மற்றும் மாதவிடாய் சுழற்சி நிற்பது வரையிலான காலகட்டங்களில் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்களின் சுரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடல் ரீதியாக பல பிரச்சனைகள் உருவாகக்கூடும். அவை குறித்து இங்கே பார்க்கலாம்.

                      மாதவிடாய் சார்ந்த மன அழுத்தம்.

                      பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மாதவிடாய் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை பி.எம்.எஸ் என குறிப்பிடுகிறோம். இதன் அறிகுறிகள் மாதவிடாய்

                      தொடங்குவதற்கு முன்பாக தொடங்கி ரத்தப்போக்கு தொடங்கிய பின் படிப்படியாக குறையும். வயது அதிகரிக்கும் போது இதன் தன்மை மாறுபடும்.

                      உணவுப்பழக்கங்களும், வாழ்க்கை முறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை. எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது, உடல் பருமன், ஒரே இடத்தில்

                      நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது போதிய தூக்கமின்மை அதிக மனஅழுத்தம் ஆகியவை பி. எம்.எஸ் வீரியத்தை அதிகரிக்கும். இதை தவிர்ப்பதற்காக சீரான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி,

                      அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

                      ஆரோக்கியமான உணவுமுறை, மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தேவையற்ற கோபத்தை கட்டுப்படுத்துவது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு சீராகும்.

                      ஒழுங்கற்ற மாதவிடாய்

                      உடல்பருமன், தைராய்டு குறைபாடு, நேரம் தவறி உண்ணுதல், அதிக அளவு உடற்பயிற்சி போன்ற காரணங்களால் மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்படும். இதனால் குழந்தைப்பேறு

                      தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இந்த பிரச்சனையை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனையுடன் தக்க சிகிச்சைகளை மேற்கொண்டால் மாதவிடாய் சுழற்சியை சீராக்க முடியும்.

                      அதிக வயிற்று வலி

                      மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பாக ஆரம்பித்து மாதவிடாய் முடிந்த சில நாட்கள் வரை சிலருக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படலாம். வலியை குறைப்பதற்காக அடிக்கடி மருந்துகள்

                      சாப்பிடுவது, காற்றோட்டமில்லாத ஆடைகள் அணிவது போன்றவற்றால் கர்ப்பப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.

                      அதைத் தடுப்பதற்கு நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள

                      வேண்டும். மாதுளம் பழம் துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

                      அதிக ரத்தப்போக்கு

                      மாதவிடாய் காலத்தில் சிலருக்கு 7 முதல் 10 நாட்கள் வரை ரத்தப்போக்கு நீடிக்கும். இதனால் உடல் மிகவும் சோர்ந்து போகும். எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள்

                      உள்ள பெண்கள், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.

                        Posted in மருத்துவம்

                        தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்

                        தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்

                        பெண்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.

                        பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்…
                        பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை


                        பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது

                        பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும்

                        செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது.

                        மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில்

                        தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்

                        ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும்.

                        கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற

                        மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை

                        நீடிக்கும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.

                        தூக்கமின்மையும்… அதற்கான காரணமும்

                        பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும்

                        என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல்

                        தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்

                          Posted in சமையல் மருத்துவம்

                          ஆளை கொல்லும் பொரித்த உணவுகள்

                          ஆளை கொல்லும் பொரித்த உணவுகள்


                          வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை ‘ஓவர் டைம்’ வேலை செய்ய வைக்கிறது.

                          இன்று காலத்தில் வறுத்த உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை அவர்கள் சிந்திப்பதில்லை.

                          இதுமட்டுமின்றி பீட்சா மற்றும் துரித உணவு வகைகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவை தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த உணவுகளில் அளவுக்கு

                          அதிகமாக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நாக்கின் சுவையை மட்டும் மதித்து தொடர்ந்து இதனையே பழக்கமாக்கி விடுகின்றனர்.

                          சுவையான உணவு சாப்பிட தூண்டும், சந்தோஷம் கொடுக்கும் என்பதால் அனைவரும் அதனையே நாடுகிறோம். உணவில் எண்ணெய் பயன்பாடு அதிகமானால் ஆபத்தை நீங்களே வரவேற்பதாக

                          ஆளை கொல்லும் பொரித்த உணவுகள்

                          அர்த்தம். உணவுகளை வறுத்து தயார் செய்ய தொடங்கும் போதே உடல் வருந்த தொடங்கி விடும். உணவுகளை தீயில் அதிக நேரம் சூடாக்கி எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை

                          அள்ளித்தெளிக்கும் போது நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். கண்டிப்பாக சுவையும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வகை உணவுகளை தேவைக்கு அதிகமாகவே வயிற்றுக்குள் சேர்த்து வைப்பார்கள்.

                          வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை ‘ஓவர் டைம்’ வேலை செய்ய வைக்கிறது

                          . அதன் பிறகு நோய்கள் எந்தெந்த வகையில் எல்லாம் தோன்ற முடியுமோ? அப்படியெல்லாம் வெளிப்படத் தொடங்கி விடுகிறது.

                            Posted in மருத்துவம்

                            சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க இதை சாப்பிடுங்க

                            சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க இதை சாப்பிடுங்க

                            நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க தினமும்

                            வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

                            சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் வாழைத்தண்டு சாலட்
                            வாழைத்தண்டு சாலட்
                            தேவையான பொருட்கள்:

                            வாழைத்தண்டு – 50 கிராம்,

                            எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
                            சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
                            மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
                            தேங்காய்த்துருவல் – 20 கிராம்,
                            மோர், கொத்தமல்லி – சிறிதளவு,
                            உப்பு – தேவைக்கேற்ப.

                            செய்முறை:

                            கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                            வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

                            ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி

                            , சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

                            சூப்பரான சத்தான வாழைத்தண்டு சாலட் ரெடி.

                            இதையும் படிக்கலாம்…மூங்க் தால் பரோட்டா

                              Posted in மருத்துவம்

                              காலை உணவை தவிர்த்தால் இது நடக்கும்

                              காலை உணவை தவிர்த்தால் இது நடக்கும்

                              உடல் எடையைக் குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என பலர் கருதுகின்றனர். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.

                              ஒரு நாளை ஆரோக்கியமாகத் தொடங்குவதற்கு காலை உணவு முக்கியமானது. இரவில் நன்றாகத் தூங்கி காலையில் எழுந்ததும் சாப்பிடும் முதல் உணவு ஆரோக்கியமானதாகவும், புத்துணர்வு அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

                              முளைகட்டிய தானியங்கள், பாசிப்பயறு, நிலக்கடலை, பழங்கள் அல்லது பழச்சாறு, ராகி கஞ்சி, சத்துமாவு கஞ்சி, இட்லி, தோசை, சிறுதானிய பொங்கல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை காலை உணவாக சாப்பிடலாம்.

                              காலை உணவைத் தவிர்ப்பதால் வரும் பிரச்சினைகள்

                              உடல் சோர்வு அடையும். நாள் முழுவதும் இயங்குவதற்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இரவு முழுவதும் உணவு சாப்பிடாமல், நீண்ட நேரம் வயிறு காலியாக இருப்பதால், அமிலம் அதிகமாக சுரந்து கொண்டே இருக்கும்.

                              இந்த நேரத்தில் காலை உணவைத் தவிர்க்கும்போது வயிற்று புண் போன்ற பிரச்சினைகள் வரும். உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. காலையில் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பிறகு உண்ணும்போது நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடக்கூடும்.

                              காலை உணவின் முக்கியத்துவம்

                              உடல் எடையைக் குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என பலர் கருதுகின்றனர். அவர்கள் முதலில் தவிர்ப்பது காலை உணவை தான். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.

                              குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவை தவிர்ப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு

                              காலை உணவை தவிர்த்தால் இது நடக்கும்

                              கூடும். ஓரிரு நாட்கள் காலை உணவை தவிர்க்கும்போது பெரிய வித்தியாசம் தெரியாது. நாளடைவில் இது உடல்நிலையில் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.

                              சில உணவு முறைகள் காலை உணவை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றன. இது ஆரோக்கியமானதா? என மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட வேண்டும்

                              . காலை உணவை அரசன் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி உள்ளது. அரசன் போன்று

                              அனைத்து ஊட்டச்சத்துகள் மிக்க உணவை சாப்பிட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும்

                                Posted in மருத்துவம்

                                மாத்திரைகளை 2-ஆக உடைக்கலாமா?

                                மாத்திரைகளை 2-ஆக உடைக்கலாமா?


                                நாம் மாத்திரையை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும் என்றும், அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் கூற முடியாது.

                                மாத்திரைகளை 2-ஆக உடைக்கலாமா?
                                மாத்திரை
                                இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                உடல் உபாதைகளுக்கு டாக்டர் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பெரிதாக இருந்தால் அதனை இரண்டாக உடைத்து விழுங்குவதை பார்த்திருப்போம்.

                                இது மிகவும் தவறான செயலாகும். மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. ஏனெனில் மாத்திரைகளை இரண்டாக உடைப்பதனால், சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடக் கூடும்.

                                மருத்துவரிடம், மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகளை உடைக்கும் போது, அவற்றின் அளவு வேறுபடுகிறது.

                                இதனை உட்கொள்வதனால் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே ரத்த அழுத்தம், கை, கால் நடுக்கம் உள்ளவர்கள், ஆர்த்ரைட்டீஸ், இதயநோயாளிகள் ஆகியோர் மாத்திரைகளை

                                உட்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாத்திரையும் தயாரிக்கப்படும் போது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும்.

                                நாம் மாத்திரையை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும் என்றும், அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் கூற முடியாது. வீரியமிக்க

                                மருந்துகள் வயிற்றில் பிரச்சினை ஏற்படுத்தாமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். எனவே இவ்வகை மாத்திரைகளை முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும்.

                                மாத்திரைகளை 2-ஆக உடைத்து உட்கொண்டால், வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நமது உள்ளுறுப்புகளில் செல்லும். இதனால் நமது உடலில் வேறு சில உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு

                                உள்ளது. மாத்திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும்.

                                சில மாத்திரைகளில் ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்ககூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை 2-ஆக உடைக்கிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக

                                உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்பட்ட வடிவங்களில் உடைப்பதனாலோ மாத்திரையின் முக்கியத்தன்மை இழந்து சிதைந்துவிடும். இதையெல்லாம் நினைவில் கொள்வது நல்லது.

                                  Posted in மருத்துவம்

                                  17 வயதில் காதல்… 18 வயதில் கர்ப்பம்

                                  17 வயதில் காதல்… 18 வயதில் கர்ப்பம்

                                  இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும்.


                                  18 வயதில் கர்ப்பம்


                                  பெண்கள் ஒருபுறத்தில் கல்வி, ஆரோக்கியத்தில் அதிக விழிப்புணர்வு பெற்று முன்னேறிக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் பழைய சோக கதைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

                                  பள்ளிப் பருவம் முடியும் 17 வயதிலே காதல்வசப்படுவது, 18 வயதானதும் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவசரமாய் தாய்மை அடைவது போன்றவை இப்போதும் அன்றாட செய்திகளாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

                                  இந்த சூழ்நிலைக்கு உள்ளாகும் அவசர ஜோடிகளுக்கு சமூகநெருக்கடிகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கையை

                                  சின்னாபின்னப்படுத்திவிடுவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.

                                  சுகாதாரத்துறை நிபுணர்கள் 20 வயதுக்கு கீழ் உள்ள எல்லா கர்ப்பிணிகளையும் ‘இளம் வயது கர்ப்பிணிகள்’ என்ற பட்டியலில் சேர்க்கிறார்கள்.

                                  இந்த வயதுகளில் பிரசவிக்கும் பெண்கள் அதிகபட்சமான மனஅழுத்தத்திற்கும், ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் உள்ளாகிறார்கள்.

                                  17 வயதில் காதல்… 18 வயதில் கர்ப்பம்

                                  19 வயதுக்கு கீழ்உள்ள பெண்கள் எந்தவிதமான கர்ப்பத்தடை முறைகளையும் கடைப்பிடிக்காமல் தாம்பத்ய உறவுகொண்டால் ஒரு வருடத்திற்குள் அவர்கள் கர்ப்பிணியாகிவிடும் வாய்ப்பு 90 சதவீதம் இருக்கிறது.

                                  இந்த பருவத்தில் உள்ள டீன்ஏஜ் பெண்களில் 33 சதவீதம் பேர் பாலியல் உறவில் அதிக வேட்கையுடனும் இருப்பார்கள்.

                                  இத்தகைய சூழ்நிலைகளால் இளம் வயது கர்ப்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

                                  இளம் வயதிலே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உடனே கர்ப்பமாவதை தவிர்க்கவேண்டும்.

                                  அவர்கள் இருவருக்குள்ளும் மானசீக நெருக்கம் ஏற்பட்ட பின்பே அவர்கள் தாய்மையை பற்றி பரிசீலிக்கவேண்டும். 20 வயதுக்கு பிறகு 24 வயது வரை தலைபிரசவத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் அது வரை பொறுமை காக்கவேண்டும்.

                                  கர்ப்பத்தடை உறைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்ற பலவகை தடுப்பு முறைகள் இருக்கின்றன.

                                  டாக்டரின் ஆலோசனைபடி அதில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து கடைப்பிடித்து இளம் வயது கர்ப்பத்தை தவிர்க்கவேண்டும்.

                                  இதனை மேற்கொள்ளாமல் 20 வயதுக்கு முன்பே பிரசவித்துவிடும் பெண்களுக்கு ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் உருவாகக்கூடும்.

                                  17 வயதில் காதல்… 18 வயதில் கர்ப்பம்

                                  பிரசவம் நடந்த உடனே அல்லது அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஏற்படக்கூடிய அசாதாரணமான ரத்தப்போக்கு சில நேரங்களில் அந்த பெண்களின் கருப்பையை நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கிவிடுகிறது.

                                  இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். குழந்தைகளின் எடை 2 கிலோவிற்கும் குறையாமல் இருக்கவேண்டும்.

                                  எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளை தொற்றுகளும், நோய்களும் தாக்கும் வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனோவளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

                                  இளம் வயது கர்ப்பிணிகள் பல்வேறுவிதமான சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளம் வயதிலே காதலிப்பவர்களாக இருக்கிறார்கள்.

                                  அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். பெற்றோர் தேடிவந்து தங்களை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக, அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள்.

                                  அதன் பின்புதான் அவர்களுக்கு அவசரப்பட்டுவிட்டதும், குடும்பத்தினர் யாருடைய அனுசரனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. அதனால் தவித்துப்போகும் அவர்கள் மீண்டும் குடும்பத்தினரின் அன்புக்கு ஏங்குகிறார்கள்.

                                  ‘தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், அந்த குழந்தை இரண்டு குடும்பத்தினையும் இணைக்கும் பாலமாகிவிடும்’ என்று உடனடியாக கர்ப்பிணியாகிவிடுகிறார்கள்.

                                  ஆனால் அவர்களது அந்த செயல் மிகப்பெரிய தப்புக்கணக்காகிவிடுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பிறந்த பின்பும் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம்.

                                  Posted in மருத்துவம்

                                  சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு

                                  சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு

                                  பிள்ளைகளுக்கு பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.

                                  சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை எப்படிக் கண்டறிவது?
                                  சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு
                                  மழலைப்பள்ளி மாணவர்கள்

                                  பத்து மழலைப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்கு மருத்துவரீதியான பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.

                                  மற்றவர்களை விட, இவர்களையே நாம் அதிகம் கவனிக்க வேண்டும். ஏனெனில், அதுதான் கற்கத் தொடங்கும் பருவம். இவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும்.

                                  அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.

                                  அவர்களால் ஓவியம் தீட்ட முடியாது. அவர்களது கவனிக்கும் திறன் குறைந்திருக்கும். உதாரணத்துக்கு, உட்கார்ந்து ஒரு கதை கேட்கக்கூட அவர்களால் இயலாது.

                                  பள்ளியில் செயல்திறன் குறைவாக இருக்கும். இவற்றை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

                                  மழலைப் பள்ளி மாணவர்கள்

                                  பள்ளி மாணவர்கள்

                                  மூன்று வயதில் பார்வைக்குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்தபிறகு, ஆறு வயதில் மீண்டும் கண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும்.

                                  சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு

                                  இந்த வயதில் ஐந்தில் ஒரு மாணவருக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் அடிப்படை கண் சோதனையிலும்கூட தேறிவிடுவார்கள்.

                                  ஆனால் பார்வைக் குறைபாட்டை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர்களது பள்ளிப் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

                                  பார்வைக் குறைபாட்டை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்

                                  • அடிக்கடி வரும் தலைவலி
                                  • அதிகப்படியாக கண்களைத் தேய்ப்பது
                                  • புத்தகம் அல்லது செல்போனை அருகிலோ அல்லது தொலைவிலோ வைத்துப் பயன்படுத்துவது.
                                  • ஒரு கண்ணை மூடிக்கொண்டு படிப்பது.
                                  • கண்களைச் சுழற்றுவது
                                  • வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள்
                                  • கவனம் செலுத்த இயலாமை
                                  • திடீரென மதிப்பெண்கள் குறைவது
                                  • வகுப்பறையில் கரும்பலகையில் உள்ள எழுத்துகளைப் பார்ப்பதில் பிரச்னை.

                                  இவை அனைத்தும் பார்வைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக இருப்பதால், இந்த செயல்பாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

                                  கண்ணாடி

                                  சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்!

                                  • சிறுவர்களுக்கு பார்வைப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
                                  • இரண்டு அடிக்கும் குறைவான தூரத்தில் அமர்ந்து டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு மேல் இடைவிடாமல் தொடர்ச்சியாக புத்தகம் படிப்பதையும், அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
                                  • பிறந்த குழந்தைக்கு கட்டாயம் கண் பரிசோதனையை நாம் மேற்கொள்ளவேண்டும். அதன் பிறகு 6 முதல் 12 மாதத்துக்குள் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
                                  • சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு
                                  • மூன்று வயது அடையும்போதும், பிறகு பள்ளிப்பருவ வயதிலும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
                                  • இப்படி குழந்தைப் பருவம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் கண் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
                                  • பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை வைத்தே பார்வைக் குறைபாடுகளை கண்டறியலாம்.
                                  • பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் பார்வை தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவேண்டும்.
                                  • ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பிள்ளைகளுக்கு பார்வைக்குறைபாடு ஏற்படாமல் நாம் பாதுகாக்கலாம்.

                                  கண் பரிசோதனை

                                  பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் பொதுவான வழிமுறைகள்!

                                  • கண்களுக்கோ அல்லது பார்வைக்கோ எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும்.
                                  • இதனால், குளூக்கோமா எனும் கண் அழுத்த நோய் போன்ற பார்வை இழப்பு நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும்.
                                  • கண்களுக்கு எவ்விதக் கேடும் ஏற்படாதவகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளை நாம் மேற்கொள்ளும்போது, அதற்கான பாதுகாப்பு முறைகளைக் கையாளவேண்டும்.
                                  Posted in மருத்துவம்

                                  மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

                                  மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

                                  மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.

                                  ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை
                                  மார்பக புற்றுநோய்


                                  ஒவ்வொரு மார்பக புற்றுநோயும், மார்பகத்திற்குள் (5 செ.மீக்கும் குறைவான) அடங்கியுள்ள ஊடுருவும் புற்றுநோய் ஆகும். மேலும், மார்பகத்தில் அல்லது அக்குளிலுள்ள நிணநீர்

                                  கணுக்களுக்கு இது பரவியிருக்கலாம் அல்லது பரவாமலும் இருக்கலாம். மார்பகத்தை அகற்றாமல் அப்படியே பராமரிப்பதை இலக்காகக்கொண்டு புற்றுநோய் கட்டியை மட்டும் நீக்குவதே, ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதன் நோக்கமாகும்.

                                  ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் பின்வருவன உள்ளடங்கும்

                                  • மார்பக அறுவைசிகிச்சை (Breast Surgery)
                                  • வேதியியல் சிகிச்சை (Chemotherapy)
                                  • கதிரியக்க சிகிச்சை (Radio Therapy)
                                  • இலக்குடைய சிகிச்சை (Targeted Therapy)
                                  • ஹார்மோன் சிகிச்சை (Hormone Therapy).

                                  மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.

                                  மார்பக காப்பு அறுவை சிகிச்சையையடுத்து கதிரியக்க சிகிச்சை செய்வது என்பது, ஆரம்பகால

                                  மார்ப புற்றுநோய் உடைய பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தை அப்புறப்படுத்துவது என்பது நல்லதொரு பயனளிப்பதாக இருக்கும்.

                                  அறுவைசிகிச்சையில், அக்குளிலுள்ள நிணநீர்க்கணுக்களை அப்புறப்படுத்துவதும் உள்ளடங்கும்.

                                  மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

                                  அக்குளில் உண்டாகும் கணுக்களை ஒரு சென்டினல் நிணநீர் கணு உடல்திசு ஆய்வுசெய்து, கணு பாசிட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே ஒரு முழு அக்குள் பிளப்பாய்வு (Axillary dissection) செய்வது சமீபத்திய சிகிச்சை முன்னேற்றமாக இருக்கிறது. கீமோதெரபி சிகிச்சை முறை – ஆரம்பகால

                                  மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சையளிப்பது மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது உடலின் இதர பாகங்களுக்கு பரவுவதற்கான ஆபத்தை

                                  குறைக்கக்கூடும். கீமோதெரபி சிகிச்சையானது, மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்து உயிர்பிழைப்பதற்குரிய வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும்.

                                  கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு மட்டுமே இதர சிகிச்சை முறைகள் தொடங்கப்படுகின்றன.

                                  கதிரியக்க சிகிச்சைமுறை – பெரும்பாலும் ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு, மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கதிரியக்க சிகிச்சை எப்போதும்

                                  பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில், ஒட்டுமொத்த மார்பக நீக்க சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

                                  ஹார்மோன் சிகிச்சைமுறை- தங்களுடைய மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் (ஹார்மோன் ஏற்பிகள்) (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரோன் ரிசப்டர்கள்) கொண்டுள்ள ஆரம்பகால மார்பக புற்றுநோய் உடைய பெண்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

                                  இவை தனியாகவோ அல்லது மற்ற மார்பக புற்றுநோய் சிகிச்சைகளுடனோ சேர்த்து பயன்படுத்தப்படலாம்.

                                  ஒரு ஹார்மோன் சிகிச்சை முறையுடன் கூடிய ஒரு சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாமா மற்றும் எந்த ஹார்மோன் சார்ந்த சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என்பது குறித்த முடிவு பின்வருவனவற்றை சார்ந்திருக்கும்:

                                  • மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் உள்ளனவா
                                  • அந்தப்பெண் மாதவிடாயின் இறுதி நிலையை (மெனோபாஸ்) அடைந்துவிட்டாரா?

                                  ஹார்மோன் சிகிச்சைகள், மார்பக புற்றுநோய் (மார்பகங்களிலும் மற்றும் உடலின் மற்ற பாகங்களில்) மீண்டும் வரும் ஆபத்தை குறைக்கிறது. சில ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக

                                  புற்றுநோய் உள்ள பெண்களுக்கு குணமடைந்து உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் அறியப்பட்டுள்ளது. இலக்குடைய சிகிச்சை (Targetted Therapy) அல்லது உயிரியியல்

                                  சிகிச்சை குறிப்பிட்ட வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்தக்கூடிய மருந்துகள் ஆகும். ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பொதுவான

                                  பயன்படுத்தப்படும் இலக்குடைய சிகிச்சை Trastuzumab ஆகும். அதாவது HER 2 ரிசப்டர்களுக்கு எதிராக Herceptin மருந்து செலுத்துவது

                                    Posted in மருத்துவம்

                                    சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா


                                    சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா

                                    அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது

                                    குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது

                                    வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் – முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் – இடை வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் – பின் வளரிளம் பருவம் என்பதாகும்.

                                    பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டால், இருபாலருக்கும் உடலியங்கியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றாலும், மிக முக்கியமான கவனிக்கத்தக்க உடலளவிலான

                                    மாற்றங்கள் பெண் குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி விகிதமும் பருவப் பெண்களுக்கு வேகமாக நிகழ்கிறது. இந்த வயதில்தான் பெண்குழந்தைகள் பருவமடைகிறார்கள்.

                                    பெண்குழந்தைகளின் பருவமடையும் வயது 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர், 14 முதல் 16 வயதாகத்தான் இருந்தது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னர் 12 மற்றும் 13 வயதில் பருவடைதல் ஏற்பட்டு, தற்போது 9 மற்றும் பத்து வயதாக மாறி இருப்பது கவலையளிக்கிறது.

                                    அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின்

                                    எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும், இன்றளவிலும் கிராமப்புறங்களிலுள்ள பெண்குழந்தைகள் 14 முதல் 16 வயதில்தான்

                                    பருவமடைகிறார்கள் என்பது சற்றே நிம்மதியளிக்கும் செய்திதான். இதற்கு மிக முக்கியக் காரணம், வாழ்க்கை முறையும் உணவும்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

                                    ஒரு பெண்குழந்தையின் தாய் எந்த வயதில் பருவமடைந்தாரோ, அதே வயதில்தான் அவர்களுடைய பெண்ணும் பருவமடைவாள் என்பது வாய்மொழியாகக் கூறக்கேட்டதெல்லாம் இப்போது மாறிவிட்டது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், வளரிளம் பருவவயதுப் பெண்ணின்

                                    பாட்டியும், அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடைந்து இருந்தாலும், மகளும் அதே வயதில் பருவமடைவாள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அது அப்பெண்ணின் உடல் வளர்ச்சி,

                                    சமூகப் பொருளாதார நிலை, பரம்பரையாக இருக்கும் உடல் ஆரோக்கியம், மனநிலை போன்றவற்றைப் பொருத்தும் மாறுபடுகிறது என்ற முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.

                                    அதிகப்படியான புரத உணவு, தொடர்ச்சியான துரித உணவு என்று உணவுமுறை மாற்றமடைந்து இருப்பதும் ஒரு காரணம் என்று குழந்தைகள்நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கைக் கொடுக்கின்றனர். ஒருபுறம், சிறுவயதில் பூப்படைதலே தவிர்க்க முடியாத

                                    நிலையாக இருக்க, மறுபுறம் அப்பெண் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்ற அதிக அக்கறையில், அக்குழந்தையின் வயதுக்கேற்ப இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான உணவும் ஊட்டமும் கொடுக்கப்படுகிறது என்ற

                                    நிலையும் இருக்கிறது. இதனால், அக்குழந்தை, 7 ஆம் வகுப்புப் படிக்கும்போதே, 13 அல்லது 14 வயதில் இருக்க வேண்டிய உடல் எடையைவிட அதிக எடையுடன் இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.

                                    சிறுவயதிலேயே பருவமடைதல் என்பது, அப்பெண்குழந்தையை மட்டும் பாதிக்கும் தனிப்பட்ட உடல்நல சிக்கலல்ல. அவளுடைய பெற்றோர், பள்ளிச் சூழல், உறவினர்கள், சமூகம் என்று அனைத்திற்கும் மிக நெருங்கியத் தொடர்புடைய ஒரு சிக்கலாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

                                    வாழ்க்கையையும், உலகத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு நுழைவாயிலாகவே வளரிளம்பருவம் பார்க்கப்படுவதால், வளரிளம் பருவம் என்பது பெரும்பாலும் “வாய்ப்புகளின் வயது” என்று அழகாகக் கூறப்படுகிறது. உடலியங்கியல் மாற்றங்களுடன் சேர்ந்து சம அளவில் உளரீதியான

                                    மாற்றங்களும் ஏற்படும் மிக முக்கியமான மனிதவளர்ச்சி நிலைதான் இந்த வளரிளம்பருவம். உடல், மன, சமூக ரீதியான பல வி‌ஷயங்களுக்குப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அவர்களைச்

                                    சுற்றியுள்ளவர்களால் பல்வேறு நிலைகளில் தெளிவு கொடுக்கப்பட்டு, பக்குவப்படவேண்டிய வயதாகவும் இருக்கிறது.

                                    “பருவ வயதில் தங்களுடைய உண்மையான, நம்பகத்தன்மையுள்ள, தீர்க்கமான நிலையை ஒரு பக்கம் ஒதுக்கி வைப்பதற்காக பல்வேறு சமூக அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்.

                                    அதுமட்டுமல்லாமல், அதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டுமே தங்கள் வாழ்க்கையின் வரமாகவும் பரிசாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்று உளவியல் வல்லுனர் மேரி பைபர் கூறுகிறார்.

                                    ஆனால், இதே வயதில்தான், உடலளவில் ஏற்படும் மாற்றமான பருவமடைதல் நிகழ்வதால், அனைத்து விதத்திலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி விடுகிறார்கள். சராசரி வயதான 13 அல்லது 14 வயதில் பெண்குழந்தைகள் பருவமடைந்தாலே அவர்கள் உடலளவிலும், மனதளவிலும்

                                    பக்குவமடைதலுக்கு ஏறக்குறைய 5 வருடங்கள் ஆகிவிடும். இந்நிலையில், எப்போதும் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள் பருவமடைந்து விடுவதால்,

                                    அப்பருவத்திற்கே உரிய இயற்கையான குணநலன்களையும், துறுதுறுவென்ற குழந்தைத் தன்மையையும் அவர்களும் அவர்களின் பெற்றேர்களும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.

                                    மனஅழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தப் பெண் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய அன்றாட செயல்கள் மூலமாகவும், குடும்ப உறுப்பினர்கள்

                                    மற்றும் அவர்கள் சந்திக்கும் பிற மனிதர்களிடம் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது.

                                    மனநலம் தொடர்பான சிறுசிறு பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும் சிறுவயதில் பருவமடைந்த பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில்

                                    பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிலுள்ள குழந்தை 9 அல்லது 10 வயதில் பூப்படைந்து விட்டால், தனது குழந்தையும் அதே போல் சிறுவயதிலேயே பருவமடைந்து விடுவாளோ என்று பயந்து, அவர்களுக்குள்ளாகவே குழப்பிக்கொண்டு பெற்றோர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

                                    பருவமடைந்த பெண்களுக்கான முதல் உடலியங்கியல் பிரச்சினை என்பது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும், அதனால் ஏற்படும் வயிற்றுவலி, மற்றும் அதனுடன்

                                    தொடர்புடைய சிறுசிறு உடல் உபாதைகளும்தான். இவை, சரிவர கவனிக்கப்படாதபோது, உடலளவிலும் மனதளவிலும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

                                    தற்போதைய காலத்தில், திருமணமான பெண்களே, மாதவிடாய் தொடர்பான நெருக்கடிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள இயலாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இக்குழந்தைகள் என்ன செய்வார்கள்? இதுகுறித்து ஏதும் தெரியாத வெகுளித் தன்மையுடன் மேலும் இரண்டு, மூன்று

                                    வருடங்கள் கடக்க நேரிடுகிறது. சிறுவயதில் பருவமடைந்த பெண்குழந்தைகள் ஒவ்வொரு மாதவிடாயின்போதும், உடலளவில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பள்ளியிலும், மருத்துவமனையிலும் கண்கூடாகக் காணமுடிகிறது.

                                    மாதவிடாயின்போது, சாதாரண அளவிற்கும் அதிகமான இரத்தப்போக்கு அல்லது மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது அல்லது அசாதாரண மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சினைகள் இவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

                                    சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா

                                    இந்தியப் பெண்களில் 71 சதவிகிதத்தினருக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் வரை, அதுபற்றிய சரியான விழிப்புணர்வு கிடையாது என்ற கவலையளிக்கும் நிலையில், இச்சிறு குழந்தைகளுக்கு மாதவிடாய் மேம்பாடு பற்றி எவ்வாறு தெரிந்திருக்கும்? சிறு வயதிலேயே மாதவிடாய் வயிற்றுவலி,

                                    கர்ப்பப்பை சுவர் தடித்து விடுதல், சிறு சிறு நீர்க்கட்டிகள் போன்ற காரணங்களுக்காக மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது ஹார்மோன்களைத் தூண்டும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

                                    இதுவும் பிற்காலத்தில், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் காரணமாகிவிடுகிறது.

                                    இவ்வாறான அசாதாரண மாதவிடாய் இருக்கும் நிலையில், பதறிக்கொண்டு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல், உணவுமுறை மாற்றத்தைக் கடைபிடிப்பதாலும்,

                                    உடல் உறுப்புகள் நன்றாக இயங்கி, உடல் வளர்ச்சிதை மாற்றங்களுக்கான அனைத்து நொதிகளும் ஹார்மோன்களும் கிடைக்குமாறு செய்வதும் பெற்றோர்களின் கடமையென உணரவேண்டும்.

                                    சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா

                                    ஒரு பெண் குழந்தைக்கு, பிறக்கும் போதே, 1 முதல் 2 மில்லியன் சினைமுட்டைகள் சினைப்பைக்குள் இருக்கும் நிலையில், பருவமடையும் வயதில், தோராயமாக 3 லட்சம் சினைமுட்டைகளே இருக்கின்றன.

                                    அப்பெண்ணின் இனப்பெருக்க மண்டல செயல்பாடுகளான மாதவிடாய், கர்ப்பகாலம் என்று கணக்கிடும்போது, அடுத்த 30 முதல் 40 வயது வரையில், இந்த சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, பின்னர் முழுவதும் தீர்ந்துவிடும் நிலையில்தான் மாதவிடாய் சுழற்சி நிற்கும்காலம் (மெனோபாஸ்) ஏற்படுகிறது.

                                    இந்தியப் பெண்களின் மெனோபாஸ் சராசரியாக 45 முதல் 55 வயதாக முன்பு இருந்தது. பின்னர் 41 முதல் 49 வயதாகக் குறைந்தது. ஆனால், சமீபத்தில், பேராசிரியர் வி.கே.வி.ஆர். ராவ் அவர்களின்

                                    சமூக மற்றும் பொருளாராதார மாற்றத்திற்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த மாதவிடாய் நிற்கும் காலம் 35 வயது முதல் 39 வயதாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

                                    சிறுவயதிலேயே பருவமடையும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியும் வெகு விரைவாகவே முடிவடையும் நிலையில், மாதவிடாய் நிற்கும் காலமும் 28 முதல் 35 வயதிற்குள் ஏற்பட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால், குழந்தைப்பேறு ஏற்படும் வயதிலேயே

                                    சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா

                                    சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, அப்பெண்ணின் இனப்பெருக்கத்திறனை பாதித்து, தாய்மையடைவதில் தாமதமோ அல்லது குழந்தைப்பேறு என்பதே இல்லாத நிலையோ உருவாகலாம் என்று மகப்பேறு இயல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

                                    குறைந்துகொண்டு வரும் உடற்பயிற்சி, தகவல் தொடர்பு சாதனங்களுடன் நேரம் செலவழித்தல், அதிகரித்துவரும் மிதவாழ்க்கை முறை போன்றவை உடற்பருமனை அதிகரித்து வருகின்றன என்ற எச்சரிக்கைமணி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பதினோறு வயதில் 40 முதல் 45 கிலோ உட

                                    ல் எடை இருக்க வேண்டிய பெண்குழந்தைகள் 50 கிலோவும் அதற்கு மேலும் இருப்பது தற்போது அதிகரித்துள்ளது. இடைப்பட்ட வளரிளம்பருவ வயதை அடையும்போதே, அதாவது 15 வயதில் 50

                                    முதல் 52 கிலோ உடல் எடையும், 18 வயதில் 54 முதல் 56 கிலோ உடல் எடையும் இருக்க வேண்டிய பெண் குழந்தைகள் முறையே, 60 கிலோ மற்றும் 70 கிலோவிற்கும் கூடுதலாக இருக்கிறார்கள்.

                                    சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால், கர்ப்பப்பையில் சுரக்கும் முக்கிய ஹார்மோன்களான follicle stimulation hormone மற்றும் luteinizing hormone என்ற இரண்டையும்

                                    பாதிக்கிறது. இதுவும், சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளுக்கு சினைப்பை நோய்க்குறி றிசிளிஷி ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

                                    சிறுவயதில் பருவமடைதலால் ஏற்படும் உடற்பருமன் ஒருபுறமிருக்க, அதிக உடற்பருமனாலும், சிறுவயதில் பருவமடைதல் நிகழ்கிறது என்ற இரண்டு வகையான நெருக்கடிகளையும் 9 முதல் 12 வயதுவரையுள்ள பெண்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சந்திக்கும் சூழல் உருவாகி

                                    இருப்பது வருதத்திற்குரியதே. என்றாலும், முறையான உணவுப்பழக்கம், சரியான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்றவற்றால், குழந்தைப்பருவ வயதிற்குரிய சரியான உயரம், உடல்

                                    எடையைப் பராமரிக்கலாம். பெண் குழந்தைகளை நன்றாக விளையாட விடுவதால், இரத்த ஓட்டம் சீராகி, உடல் உறுப்புகள் பலப்படுவதுடன், எண்ணங்கள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட்டு, மனநலனும் காக்கப்படுகிறது.

                                    பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து, இயற்கையில் கிடைக்கும் காய்கள், பழங்கள், தானியங்கள், நார்ச்சத்தும் நுண்சத்துகளும் நிறைந்த உணவுகள் போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே சரியான

                                    அளவில் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் தனிப்பட்ட முறையிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

                                    வளரிளம்பருவப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக நலவழித்துறை, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கொடுத்துவரும் செயல்பாடுகளை, 8 முதல் 12 வயது வரையிலுள்ள பெண்குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் சமூகம் இருப்பதை உணர்ந்து

                                    அனைவரும் செயல்பட்டால், பலவிதங்களில் நன்மை கிடைக்கும். இவ்வாறான ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாக, சிறுவயது பூப்படைதல் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டு சரியான வயதில்

                                    பெண் குழந்தைகள் பருவமடைதல் ஏற்படுவதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும்.

                                      Posted in மருத்துவம்

                                      பெண்களை பாதிக்கும் வெண்குஷ்டம்

                                      பெண்களை பாதிக்கும் வெண்குஷ்டம்


                                      பெண்கள் இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம்

                                      பெண்களை பாதிக்கும் வெண்குஷ்டம்.. அறிகுறியும்… சிகிச்சையும்…
                                      பெண்களை பாதிக்கும் வெண்குஷ்டம்


                                      தோல் நோய்களில் மிகவும் கடுமையாக, கொடுமையாக தோல்நோய் எதுவென்றால் அது வெண்குஷ்டம்தான்! வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன்

                                      தொடர்புடையவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல.

                                      இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில்

                                      உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.

                                      உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங்களில் வெண்குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு

                                      பிராண்டிய இடங்களிலும் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் கைப்பை வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.

                                      மேலும் சிலர் அணியும் ரப்பர் செருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின்

                                      அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முகம், முதுகு, கைகளில்தான் வெண்குஷ்டம் முதலில் அதிகமாக தெரிய வரும்.

                                      தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள், மார்பகக் காம்பு, பிறப்பு உறுப்பு ஆகியவற்றில்தான் அதிகமாக வெண்குஷ்டம் ஏற்படும். பொதுவாக, இந்த வெண்படை உடலின்

                                      இரு பக்கங்களிலும் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தின் பகுதியிலோ காணப்படும்.

                                      சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டு அது பலகாலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெதுவாகப் பரவலாம். மற்றும் சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை

                                      ஆக்கிரமிக்கலாம். மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்படும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் அமைகிறது.

                                      இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்காரணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால்

                                      குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.