Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
5 வருடங்களுக்குப் பிறகு வில்லியாக களமிறங்கும் ரோஜா
5 வருடங்களுக்குப் பிறகு வில்லியாக களமிறங்கும் ரோஜா
பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்கு வில்லியாக ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
5 வருடங்களுக்குப் பிறகு வில்லியாக களமிறங்கும் ரோஜா
ரோஜா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழில் மட்டும் அல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த
வகையில் தற்போது தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் ‘புஷ்பா’ என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.
ரோஜா
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்கு பிறகு
ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாராம். மேலும் இந்த படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் தகவல் வருகிறது.
மாரடைப்பால் காலமான சிரஞ்சீவி சார்ஜா-கதறி அழுத நடிகர் அர்ஜுன்
மாரடைப்பால் காலமான சிரஞ்சீவி சார்ஜா-கதறி அழுத நடிகர் அர்ஜுன்
சிரஞ்சீவி சார்ஜா மரணம் – கதறி அழுத அர்ஜுன்
சிரஞ்சீவி சார்ஜா – அர்ஜுன்
பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார். இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நடிகை மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் சிரஞ்ஜீவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இளம் நடிகரின் மரணம் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
இவரது இறுதி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர்
அர்ஜுன் மற்றும் நடிகை மேக்னா அழுத காட்சிகள் பார்ப்பவர்களை மனதை உருக்கும் அளவிற்கு இருந்தது.

ரொம்ப போர் அடிச்சிருச்சு – பிரியா வாரியர்
ரொம்ப போர் அடிச்சிருச்சு – பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர், ரொம்ப போர் அடிச்சிருச்சு என்று பேட்டி அளித்துள்ளார்.
ரொம்ப போர் அடிச்சிருச்சு – பிரியா வாரியர்
பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ’நான் முழு
நேர நடிகையாகிட்டேன். ஆனா, இப்பவும் எங்கே போனாலும் கண் அடித்து காட்டச்சொல்லி கேட்கிறார்கள். எனக்கு இது ரொம்ப போர்
அடிச்சிருச்சு. அதனால யார் கேட்டாலும் இதைச் செய்றதை நிறுத்திவிட்டேன்.
பிரியா வாரியர்
ஏன்னா, நான் ஒரு நடிகை. என்கிட்ட நடிப்பை எதிர்பார்த்தா சரியா இருக்கும்னு நினைக்குறேன். நான் தொடர்ந்து நிறைய படங்கள்ல
நடிச்சு நல்ல நடிகைன்னு பேர் வாங்க ஆசைப்படுகிறேன். என்னை நடிக்க விடுங்கள். சின்ன வயசுல இருந்து நடிகையாகணும்னு
ஆசைப்பட்டவ நான். மலையாளம் தவிர, தமிழ் ரசிகர்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்றதுல சந்தோஷம். இதுவரைக்கும் தமிழ்ல
எந்தப் படமும் பண்ணல. சீக்கிரமே பண்ணுவேன். தமிழ்ல விஜய் சேதுபதி படங்கள் ரொம்பப் பிடிக்கும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
.
லண்டன் தமிழ் பெண்ணை கல்யாணம் முடிக்கும் சிம்பு
லண்டன் தமிழ் பெண்ணை கல்யாணம் முடிக்கும் சிம்பு
நிலையில், அதுகுறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுவும் வதந்தியா… திருமணம் குறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை
டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், சிம்பு
நடிகர் சிம்புவுக்கும், லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிவு
செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவருக்கும் லாக்டவுன் முடிந்தவுடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில், அதுகுறித்து சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா ராஜேந்தர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த
அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள்
வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும்
சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன்
அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன்? – ஜெயராம் விளக்கம்
ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன்? – ஜெயராம் விளக்கம்
மலையாள நடிகரான ஜெயராம், ரஜினியுடன் தமிழ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன்? – ஜெயராம் விளக்கம்
ஜெயராம், ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் மீனா, ராதாரவி,
சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
தமிழில் பெரிய வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானிலும் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இப்படத்தில் சரத்பாபு நடித்த வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் ஜெயராம். பின்னர் அவர் இப்படத்திலிருந்து விலகினார். அதற்கான
காரணத்தை அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஏனெனில், முத்து படத்தில் ரஜினியை அடிப்பது போல் காட்சி இருந்தது.
அவ்வாறு அடித்தால் ரஜினி ரசிகர்கள் கோபப்படுவார்கள் என்பதால் அதில் நடிக்க மறுத்ததாக நடிகர் ஜெயராம் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி
ஜெயராம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
சொந்த ஊர் திரும்ப உதவி செய்த பிரபல இந்தி நடிகருக்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறியுள்ளனர்.
உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
இந்தி நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து
வருகிறார். குறிப்பாக வெளி மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை பஸ், விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார்.
இந்தநிலையில் சயான்கோலி வாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு அந்த பகுதியை சேர்ந்த
சிலர் நடிகர் சோனு சூட்டின் அலுவலகத்துக்கு சென்று உதவி கேட்டனர். இதையடுத்து சோனு சூட் சயான்கோலி வாடாவில்
சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். எனினும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இந்தி நடிகர் சோனு சூட்
இதையடுத்து அவர் பஸ் மூலம் மும்பையில் சிக்கிய தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். இதில் முதல் பஸ்
நேற்று மாலை வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து பஸ்சை அனுப்பி வைத்தார். மேலும் பத்திரமாக செல்லுமாறு தமிழர்களிடம் கூறினார்.
இதேபோல தங்களுக்கு சொந்த ஊர் திரும்ப உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். நடிகர்
சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.
கொரோனா தொற்றால் இந்தி பட தயாரிப்பாளர் மரணம்
கொரோனா தொற்றால் இந்தி பட தயாரிப்பாளர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி காலமானார்.
கொரோனா தொற்றால் இந்தி பட தயாரிப்பாளர் மரணம்
அனில் சூரி
மும்பையில் வசித்து வந்தவர் பழம்பெரும் இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி. இவர் ராஜ்குமார்- ரேகா நடித்த கர்மயோகி, ராஜ் திலக்
உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். 77 வயதான தயாரிப்பாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சு திணறலுடன்
காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பை மாகிம் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு படுக்கை இல்லை என அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் அனில் சூரி மும்பையில் பல்நோக்கு வசதி கொண்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடல்நிலை மோசமடைந்து அனில் சூரி உயிரிழந்தார்.
நேற்று அவரது உடல் வெர்சோவாவில் உள்ள தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் தயாரிப்பாளரின் நெருங்கிய
உறவினர்கள் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர்.

ரஜினியை கேலி செய்த இந்தி நடிகருக்கு எதிர்ப்பு
ரஜினியை கேலி செய்த இந்தி நடிகருக்கு எதிர்ப்பு
ரஜினியை கேலி செய்யும் வகையில் டுவிட்டரில் பதிவிட்ட இந்தி நடிகர் ரோகித் ராயை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர்.
ரஜினியை கேலி செய்த இந்தி நடிகருக்கு எதிர்ப்பு
ரஜினிகாந்த்
இந்தியில் காபில், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரோகித் ராய். தேஸ் மெய்ன் நிகிலா ஹோகாந்த், ஸ்வபிமான் உள்ளிட்ட தொலைக்காட்சி
தொடர்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு ரோகித் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பற்றிய பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினிகாந்த் பெயரை
இணைத்து கேலி செய்வதுபோன்ற வாசகம் உள்ள படமும் இடம்பெற்று இருந்தது. மேலும் அந்த படத்துடன், “கொரோனாவை அடக்குவோம். வேலைக்கு கவனமாக செல்லுங்கள், முக கவசம்
அணியுங்கள். தினமும் பலமுறை கை கழுவுங்கள், நாம் அனுமதிக்காமல் கொரோனா வைரஸ் நம்மை தொற்றாது” என்றெல்லாம் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சர்ச்சையானது.
ரஜினிகாந்தை கேலி செய்து இருப்பதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ரோகித் ராயை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர். கொரோனா விழிப்புணர்வுக்கு
ரஜினியை கேலி செய்வது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோகித் ராய்
“நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். இது ஒரு நகைச்சுவைதான். சிரிக்க வைப்பதற்காகவே இப்படி செய்தேன். நான் பதிவிட்ட
கருத்தை எதிர்மறையாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கவில்லை. விமர்சிப்பதற்கு முன்னால் எதற்காக அதை
பகிர்ந்தேன் என்பதை உணருங்கள். ரஜினிக்கு இணையாக யாரும் இல்லை,” என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா தத்தாவா இது… பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்
ஐஸ்வர்யா தத்தாவா இது… பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்
ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஐஸ்வர்யா தத்தாவா இது… பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்
ஐஸ்வர்யா தத்தா
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக நடித்து வருபவர் ஐஷ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில்
நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் 2 போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
மிளிர் படத்தில் ஐஸ்வர்யா தத்தா
ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்
இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக
கவர்ந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யா தத்தாவா இது என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தின் கதை உரிமையை பிரபல இயக்குனர் தேடி வருகிறார்.
ரஜினி, கமல் பட கதை உரிமையை தேடி அலையும் இயக்குனர்
ரஜினிகாந்த் – கமல்ஹாசன்
1978-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்து, ருத்ரையா இயக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படம், ‘அவள்
அப்படித்தான்.’ 42 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த படத்தை மீண்டும் இயக்க முன்வந்து இருக்கிறார், டைரக்டர் பத்ரி
வெங்கடேஷ். இவர், ‘பாணா காத்தாடி,’ ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘அவள் அப்படித்தான்’ படத்தை மீண்டும் இயக்க முன்வந்தது ஏன்? என்பது பற்றி இவர் கூறுகிறார்:
“அவள் அப்படித்தான் கதை இன்றைய சூழலுக்கு பொருந்துகிற கதை. ‘மீ 2,’ ‘காஸ்ட்யூம் கவுச்’ போன்ற பிரச்சினைகள் பற்றி 42
வருடங்களுக்கு முன்பே பேசிய படம், இது. எனக்கு மிகவும் பிடித்த படம். பெண்ணியம்தான் படத்தின் கரு. பெண்ணியவாதியாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.
பத்ரி வெங்கடேஷ்
ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்பு, கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா,
ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
“இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதை பெருமையாக கருதுகிறேன். ‘அவள்
அப்படித்தான்’ கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? என்று தேடி வருகிறேன். அவரிடம் இருந்து உரிமையை வாங்கி
விட்டால், அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம்” என்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.
தீவிரவாதியான நடிகை …. வைரலாகும் புகைப்படம்
தீவிரவாதியான நடிகை …. வைரலாகும் புகைப்படம்
விராட பருவம் 1992 எனும் சரித்திர படத்தில் பெண் நக்சலைட்டாக
நடித்துள்ள நடிகை பிரியாமணியின் தோற்றம் அடங்கிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பெண் நக்சலைட் வேடத்தில் பிரியாமணி…. வைரலாகும் புகைப்படம்
பிரியாமணி
2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து
பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய
விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை பிரியாமணி, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுவை
காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும்
படங்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக அசுரன் படத்தின் தெலுங்கு
ரீமேக்கான நாரப்பாவில் நடிக்கிறார். இதுதவிர விராட பருவம் 1992 எனும் சரித்திர
படத்தில் பிரியாமணி நக்சலைட்டாக நடிக்கிறார். வேணு உடுக்குலா
இயக்கம் இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கிறார். உண்மை
சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மன்சூரலிகான்
இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மன்சூரலிகான்
இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மன்சூரலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மன்சூரலிகான்
நடிகர் மன்சூரலிகான்
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட
சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும்
பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த
பிரபலங்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான், இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மன்சூரலிகான் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் மக்களை பீதியடைய செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் மக்களிடம்
கொரோனா பயத்தை அதிகரிக்க செய்திருக்கும் அரசு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த
ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்பதை காட்டிலும், பசியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்க
தொடங்கியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றும், இதற்காக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
மன்சூரலிகான்
அதே சமயம், அமெரிக்காவில் இனவெறி காரணமாக கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு இதய அஞ்சலி
செலுத்துவதோடு, இப்படிப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
உலகமே இக்கட்டான சூழலில் இருக்கும் போது, இப்படி ஒரு இனவெறி கொலையை அரங்கேற்றியவர்கள் கடுமையாக
தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதுபோன்ற இனவெறி சம்பவங்களுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும்
ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மன்சூராலிகான் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து மீண்ட லாரன்ஸ்
கொரோனா வைரஸில் இருந்து மீண்ட லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் டிரஸ்டில் இருந்த குழந்தைகள் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து மீண்ட லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள்
ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவி வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவர்
நடத்தும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அவரே கூறினார். இந்நிலையில்
குழந்தைகள் அனைவரும் கொரோனா வைரசில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர விரும்புகிறேன்.
எனது குழந்தைகள் ட்ரீட்மெண்ட் முடிந்து பத்திரமாக டிரஸ்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி. எனது சமூக சேவைதான், எனது
குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. குழந்தைகளுக்காக வேண்டுதல் செய்த அனைவருக்கும் நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.
விஜய் பாடல் புதிய சாதனை.
விஜய் பாடல் புதிய சாதனை.
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் பாடல் ஒன்று யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் பாடல் படைத்த புதிய சாதனை
நடிகர் விஜய்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஜிவியின்
50வது படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ என்ற பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை
பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் தனக்கு
மிகவும் பிடித்த பாடல் என்றும் இந்த பாடலுக்கு உரிய மரியாதையை அளித்த பார்வையாளர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை சமூகவலைதளத்தில் உருவாக்கி அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு உதவிய நடிகை
ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு உதவிய நடிகை
கேரளாவில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல
முடியாமல் தவித்தவர்களுக்கு பிரபல நடிகை உதவி செய்திருக்கிறார்.
சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு உதவிய நடிகை
நடிகை நீது சந்திரா
தமிழில் யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா. கொரோனா
ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் பல உதவிகளை அவர் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும்போது சக மனிதன் உதவ வேண்டியது கடமை. அதனை
என்னால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறேன். கேரளாவில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல்
தவிப்பதாக அங்கிருந்து ஒருவர் எனக்கு தகவல் அனுப்பினார். அவர் அனுப்பிய தகவலை உறுதி செய்து கொண்டு சுமார் 35 பேர் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றார்
நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி
நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி
தமிழ் சினிமாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாட்டு போட்டி மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி
நடிகை ஆண்ட்ரியா
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடன இயக்குநர் ஜெப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து கொரோனா
நிவாரணத்துக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா
அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: –
நடிகை ஆண்ட்ரியா
‘’அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.
நானும் ஜெப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை
நடத்தியிருக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்‘’. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்
நடிகைக்கு விரைவில் டும்டும்டும்- குஷியில் அம்மணி
நடிகைக்கு விரைவில் டும்டும்டும்- குஷியில் அம்மணி
விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மியா ஜார்ஜுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.
கோப்ரா பட நடிகைக்கு விரைவில் டும்டும்டும்
குடும்பத்தினருடன் மியா ஜார்ஜ்
மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை மியா ஜார்ஜ். இவர் தமிழில் அமரகாவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை
உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும்
இவர், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மியா ஜார்ஜ்
லாக்டவுனால் வீட்டில் இருக்கும் மியா ஜார்ஜுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில், மியா ஜார்ஜுக்கு
அஷ்வின் பிலிப் என்பவருக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களது நிச்சயதார்த்தம்
எளிமையாக நடந்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் அவரது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி
தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்
தமிழில் அதிக படங்களில் நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை, ஹரீஷ் கல்யாண் உடன் பெல்லி சூப்புலு தெலுங்கு பட ரீமேக், அதர்வாவின் குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசடதபற , ஜீவாவின் களத்தில் சந்திப்போம் என ஒரு பெரும் பட்டியலே பிரியா பவானி சங்கர் கைவசம் இருக்கிறது.
பிரியாவின் முக்கிய பொழுதுபோக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது தான். ஆனால் அது சில நேரம்
அவருக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சமீபத்தில் ஒரு சமூக பிரச்சினை தொடர்பாக நடிகை பிரியா வெளியிட்ட
பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டுள்ளார்.பிரியா பவானி சங்கர்
இதனால் கோபமான பிரியாவின் ரசிகர்கள் அந்த பெண்ணை மோசமாக விமர்சித்து இருக்கின்றனர். இது பற்றி பதிவு ஒன்றை
வெளியிட்டுள்ள பிரியா பவானி சங்கர் அதில் கூறியிருப்பதாவது, ’சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு
தெரிவித்தார். அவருக்கு நான் நாகரிகமான முறையில் பதில் சொன்னேன் . ஆனால் சிலர் அந்த பெண் மீது அசிங்கமான
வார்த்தைகளை பிரயோகம் செய்திருந்தார்கள் . அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஆதரவாக பேசுவதற்காக மற்றொருவரை
இழிவாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள முடியாது’ இவ்வாறு நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.
பிகினி உடை அணிய சொல்லி 6 மாதமாக நடிகையிடம் கெஞ்சிய படக்குழு
பிகினி உடை அணிய சொல்லி 6 மாதமாக நடிகையிடம் கெஞ்சிய படக்குழு
பிகினி உடையில் நடிக்கச் சொல்லி படக்குழுவினருக்கு என்னை ஆறு மாதகாலமாக கேட்டனர் என்று நடிகை கிரண் கூறியிருக்கிறார்.
கிரணிடம் பிகினி உடை அணிய சொல்லி 6 மாதமாக கேட்ட படக்குழுவினர்
நடிகை கிரண்
‘ஜெமினி’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண்.
தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன்
‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘
வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்
காட்சி ஒன்றில் பிகினி உடை அணிந்தது குறித்து வீடியோவுடன் நினைவுகளை பகிர்ந்துள்ளார் கிரண்.
அதில், ”பிகினி உடையில் நான் முதலும் கடைசியுமாக நடித்த காட்சி.
என்னை 2 பீஸ் உடையில் நடிப்பதற்காக 6 மாதமாக என்னிடம் கேட்டனர்
. ஆனால் அந்த உடை அணிவது குறித்து என்னிடம் நிறைய கேள்விகள்
இருந்தது. படப்பிடிப்பின் போது உடல் எடை பிரச்சனையாக இருந்தது.
ஆனால் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்று குறிப்பிட்டுள்ளார்
ஜோதிகா சம்பளம் என்ன? – சூர்யா பதில்
ஜோதிகா சம்பளம் என்ன? – சூர்யா பதில்
பொன்மகள் வந்தாள் படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன
என்ற கேள்விக்கு சூர்யா பதில் அளித்துள்ளார்.
ஜோதிகா சம்பளம் என்ன? – சூர்யா பதில்
ஜோதிகா, சூர்யா
சூர்யாவும் ஜோதிகாவும் நேரலையில் பேட்டி அளித்தனர். அப்போது “’36 வயதினிலே’ படத்துக்கு என்ன சம்பளம் தந்தீர்கள் என்பது பற்றி
அப்போது கூறியிருந்தீர்கள், அது இப்போது மாறியிருக்கிறதா? ’பொன்மகள்
வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன?” என்று சூர்யா -ஜோதிகா தம்பதியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சூர்யா, “2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தை வைத்துத்தான் நடக்கிறது. நாங்கள் எங்களுக்குள் மாற்றி மாற்றி
பணச் சுழற்சி செய்வோம்“ என்று பதிலளித்தார். உடனே ஜோதிகா, “இல்லை இல்லை, எனக்கு கிடைத்த மிகப்பெரிய சம்பளமே சூர்யாவின் ஒட்டுமொத்த ரசிகர் மன்றங்கள் தான்.
ஜோதிகா, சூர்யா
தமிழ்நாட்டில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் இருக்காது.
எனது ஒரு ட்ரெய்லர், டீசர் வந்தால் ஜோதிகா ரசிகர்கள் பார்ப்பதற்குள்
சூர்யாவின் ரசிகர்கள் தான் அதற்குப் பெரிய வரவேற்பைக் கொடுக்கிறார்கள்” என்று கூறினார்.
இறுதியாக சூர்யா, “ஆனால் ஜோதிகாவின் வங்கிக் கணக்குக்கு நன்றி.
அதை வைத்து 2டி நிறுவனத்தை நாங்கள் தொடர்ந்து நடத்துகிறோம்“ என்று குறிப்பிட்டார்.






