Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ரஜினிகாந்த்
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்
வந்தது. காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு போனில் இந்த தகவலை தெரிவித்த மர்ம நபர், வேறு எந்த விவரங்களையும் செல்லாமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப
நாய்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர். ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 1 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்று போலீசார்
உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன் – சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கம்
உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன் – சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கம்
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன் – சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கம்
மேக்னா ராஜ், சிரஞ்சீவி சார்ஜா
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வந்த சிரஞ்சீவி சார்ஜா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சமீபத்தில்
உயிரிழந்தார். 39 வயதே ஆகும் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகினரையே
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து
கொண்டார். தற்போது மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில், சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்நிலையில், கணவரை பிரிந்து வாடும் மேக்னா, கணவர் குறித்து டுவிட்டரில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சிரு, நான் உன்னிடம் சொல்ல நினைத்ததை வார்த்தைகளாக்கி சொல்ல
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகிலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க
முடியாது. என் நண்பன், என் காதலன், என் பார்ட்னர், என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் – இவை அனைத்தையும் விட மேலானவன் நீ. என் ஆன்மாவின் ஒரு அங்கம் நீ.
சிரஞ்சீவி சார்ஜா
நான் ஒவ்வொரு முறையும் வாசல் கதவைப் பார்க்கும்போதும் இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது. நீ உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதை
பார்க்க முடியவில்லையே என்று. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உன்னைத் தொட முடியாததை உணரும்போது, என் இதயம்
மூழ்குவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான் சோர்வடையும் போதெல்லாம் நீ என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறாய்.
நீ என்மீது அளவில்லா காதல் வைத்திருப்பதால்தான் உன்னால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம்
காதலின் சின்னமாக, நீ எனக்குத் தந்த விலை மதிப்பில்லா பரிசுதான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்காக நான் என்றென்றும் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
உன்னை நம் குழந்தை வடிவில் இந்த பூமிக்குக் மீண்டும் கொண்டு வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் உன்னை
குழந்தையாக என் கையில் ஏந்தும் நாளுக்காக காத்திருக்கிறேன். உன் சிரிப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே
ஒளிரச் செய்யும் உன் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் உள்ளேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும் எனக்காகக் காத்திரு.
என் மூச்சு இருக்கும்வரை நீயும் வாழ்வாய். நீ என்னுள் இருக்கிறாய்.” என குறிப்பிட்டுள்ளார்.

வனிதாவிற்கு திருமணம் – 3 மாப்பிள்ளை யார் தெரியுமா?
வனிதாவிற்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
வனிதாவிற்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
பீட்டர் பால்
பீட்டர் பற்றி வனிதா கூறும்பொழுது “அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர்.
வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நடிகையை கண்டு அலறி ஓடிய ரசிகர்கள்
சிரிக்க வைத்தவரை பார்த்து பயப்பட வைத்து விட்டார்கள் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டியளித்துள்ளார்.
சிரிக்க வைத்தவரை பார்த்து பயப்பட வைத்து விட்டார்கள் – கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக்
இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய
மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது.
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சார்லி சாப்ளின்
போல் வேடமிட்ட ஒருவர் கொலைகள் செய்வது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பெண்குயின் படத்தில் வரும் சார்லி சாப்ளின்
இந்த காட்சி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, சார்லி சாப்ளின் என்று சொன்னவுடன் அனைவருக்கும் சிரிப்பு காமெடி தான்
ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த படத்தில் சார்லி சாப்ளின் பார்த்தால்பயம் வரும். அதுதான் இந்தப் படத்தில் இருக்கும் பெரிய மாற்றம்.
படப்பிடிப்பில் நானே அந்த கதாபாத்திரத்தை பார்த்து பயந்து விட்டேன். சிரிக்க வைத்தவரை பார்த்து பயப்பட வைத்து
விட்டார்கள். இந்த கதாபாத்திரம் உங்களை நிச்சயமாக கவரும்’ என்றார்.
கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை
கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை
கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை பற்றி ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் குஷ்பு.
கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை… ரசிகருக்கு
சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண்
உள்ளிட்டோரின் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட தமிழ் படமாக அன்பே சிவம் இருப்பதாக கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில்
கருத்து பதிவிட அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் என் கணவர்
இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது” என்றார்.
குஷ்பு ட்வீட்
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், வின்னர் 2001-ம் ஆண்டு படமாக்கப்பட்டு தாமதமாக வெளியானது. அன்பே சிவம்
தோல்விக்கு பின்னர் சொந்தமாக கிரி படத்தை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. அன்பே சிவம் 2003-ம் ஆண்டிலும், கிரி 2004-ம்
வருடமும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். அதனால் ரொம்ப அதிக பிரசங்கம் பண்ண வேண்டாம் தம்பி. அறிவாளி
நினைச்சிட்டு முட்டாளா தெரியுரிங்க ” என்று அந்த நெட்டிசனுக்கு பதிலளித்துள்ளார்
படுக்கைக்கு சம்மதிப்பதால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவியும்- நடிகை
படுக்கைக்கு சம்மதிப்பதால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவியும்- நடிகை
தமிழில் ‘நட்பதிகாரம் 79‘ எனும் படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கில் மனம், ஹார்ட்
அட்டாக், ஸ்ரீமந்துடு, சுப்ரமணியம் பார் சேல் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.
இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்
பெண்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் சினிமாவில் நடக்கின்றன. நானும் அந்த பிரச்சினையை எதிர்கொண்டேன்.
இதனால் சினிமாவை விட்டே விலக நினைத்தேன். பல நடிகைகள் இதனை எதிர்கொள்கின்றனர்.
சினிமா துறையில் 90 சதவீதம் இந்த பிரச்சினை உள்ளது. மும்பை நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக மனரீதியாக இதற்கு
உடன்பட தயாராகி விடுகிறார்கள். இதனால் தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. தென்னிந்திய நடிகைகள்
பிகினி உடை, முத்தகாட்சி போன்றவற்றில் நடிக்கவே கூச்சப்படுகின்றனர். சினிமா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு
அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிப்பது இல்லை.
நான் ஒருவரை காதலித்தேன். திருமணத்துக்கும் தயாரானோம். அதன்பிறகு சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம்
இருப்பதை அறிந்து காதலை முறித்து என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுத்துவிட்டார். படுக்கைக்கு அழைப்பதை
சினிமாவில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேஜஸ்வியின் குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் பறிமுதல்
ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் பறிமுதல்
நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் பறிமுதல்
நடிகை ரம்யா கிருஷ்ணன்
கொரோனா அச்சுறுத்தலால் சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த
கானத்தூர் போலீசார், அங்கு வந்த காரை மறித்து, சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் இருந்துள்ளனர்.
சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த
கார் டிரைவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் டிரைவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பூஜை அறையில் நயன்தாரா புகைப்படம்…. வைரலாகும் புகைப்படம்
பூஜை அறையில் நயன்தாரா புகைப்படம்…. வைரலாகும் புகைப்படம்
நயன்தாராவின் புகைப்படம் பூஜை அறையில் இருப்பதுபோன்ற மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பூஜை அறையில் நயன்தாரா புகைப்படம்…. வைரலாகும் மீம்
வைரலாகும் மீம்
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்
எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். நயன்தாரா இப்படத்தில் அம்மனாக
நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர், 48 நாட்கள் விரதம் இருந்து நடித்தார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுதவிர நயன்தாரா அம்மன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், நயன்தாராவின் தீவிர ரசிகன் ஒருவன், அவர் அம்மன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது வீட்டு பூஜை
அறையில் வைத்து பூ மாலை போட்டு கும்பிட்டு வந்துள்ளார். இதுதொடர்பான மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் தற்கொலை – அதிர்ச்சியில் துரையுலகம்
நடிகர் தற்கொலை – அதிர்ச்சியில் துரையுலகம்
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி…. அதிர்ச்சியில் பாலிவுட்
சுஷாந்த் சிங் ராஜ்புட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில்
நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா
பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம்
இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு
இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவச உடை அணிந்து விமானத்தில் பறந்த பிரபல நடிகை
கவச உடை அணிந்து விமானத்தில் பறந்த பிரபல நடிகை
தமிழ் நடிகை ஒருவர் கவச உடை அணிந்து விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கவச உடை அணிந்து விமானத்தில் பறந்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்
கவச உடையில் ரகுல் பிரீத் சிங்
கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது
ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார். வைரஸ் தொற்று
ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்புடன் அவர் விமான பயணம் மேற்கொண்ட அனுபவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ரகுல் பிரீத் சிங்
மாஸ்க், கையுறை, முகத்தை மறைக்கும் ஷீல்ட் மட்டுமல்லாமல் உடல் முழுவதையும் பாதுகாக்கும் விதமான கவச உடையில் ரகுல்
பிரீத் சிங் இருக்கிறார். ‘மிஷன் பிளைட்’ என்று தனது பயணத்திற்கு அவர் பெயரை வைத்து முழு கவச உடையில் தான் இருக்கும்
புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங் பகிர்ந்திருக்கிறார்.

விஜய்யின் பாதுகாவலர் திடீர் மரணம்
விஜய்யின் பாதுகாவலர் திடீர் மரணம்
நடிகர் விஜய் உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றியவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
விஜய்யின் பாதுகாவலர் திடீர் மரணம்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் பாதுகாவலராக பணியாற்றி வந்த தாஸ் என்பவர் தற்போது
மரணமடைந்துள்ளார். அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் மரணத்திற்கான பின்னணி இன்னும் வெளியாகவில்லை.
இவர் நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.
பாதுகாவலர் தாஸ்
இவரது மறைவுக்கு மம்முட்டி, மோகன்லால், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், நிவின் பாலி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட
பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொகுப்பாளினிக்கு நேர்ந்த கொடுமை- பல லட்சத்தை இழந்த பரிதாபம்
தொகுப்பாளினிக்கு நேர்ந்த கொடுமை- பல லட்சத்தை இழந்த பரிதாபம்
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானர்களில் ஒருவர் தியா. இவர் வில்லு படத்தில் தீம்தனக்க தில்லானா, தீராத
விளையாட்டு பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே பாடலையும் பாடியுள்ளார்.
கடந்த வருடம் தன் நண்பர் ஷிபு தினகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாரிஸ் நகரில் செட்டிலானார்.
பின் டிவி நிகழ்ச்சிகளுக்கு ஒரு வருடம் இடைவெளி கொடுத்தார். இந்நிலையில் பாரிஸ் நகரின் அவரின் லேட் டாப், ஐ போன்,
விலையுயர்ந்த ஆடைகள், பணம் என பலவற்றை வழிபோக்கர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் அவரின் கணவரின் அலுவலக டாக்குமெண்ட்களையும், பாஸ்போர்ட் போன்ற வற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்களாம்.
இது குறித்து போலிஸில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கைகள் இல்லை என சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகைக்கு ஏற்பட்ட அவலம்… உதவி கேட்கும் தோழி
நடிகைக்கு ஏற்பட்ட அவலம்… உதவி கேட்கும் தோழி
சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகை ஒருவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதால் அவரது தோழி பண உதவி கேட்டிருக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாததால் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்… உதவி கேட்கும் தோழி
நடிகை நுபுர் அலங்கர்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் இயங்காததால் அது சார்ந்த பணி செய்யும் பெரும்பாலான
தொழிலாளர்கள் வேலையிழந்து, அவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சில துணை
நடிகர்கள் செலவுக்கு பணமில்லாமல் மக்களிடம் உதவி கேட்கும் துயரமும் அரங்கேறி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரபல இந்தி டிவி நடிகை நுபுர் அலங்கரின் பணம் தனியார் வங்கியில் எடுக்கமுடியாமல்
மாட்டிக்கொண்டுள்ளது. அவரது அம்மாவின் மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறதாம்.
இதற்காக அவரது நெருங்கிய தோழி ரேணுகா ஷஹானே தனது பேஸ்புக் பக்கத்தில் நுப்புருக்காக மக்களிடம் பணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகை
கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகை
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவர் தன்னுடைய கணவருக்கு தானே முடிவெட்டி அழகு பார்த்திருக்கிறார்.
கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்
கணவருக்கு முடிவெட்டும் பிரீத்தி ஜிந்தா
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகள் திறக்கப்படாததால் பலர் முடி வெட்ட முடியாமல் தவித்தனர்.
தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு சலூன் கடைகள் திறக்கப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக பலர் சலூன் கடைகளுக்கு செல்வது இல்லை.
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கூட தங்களது தலைமுடியை தாங்களே வெட்டிக் கொண்டும் தங்கள்
அன்புக்குரியவர்களுக்கு முடிவெட்டி விடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில்
தற்போது பிரபல நடிகை ஒருவர் தனது கணவருக்கு முடி வெட்டி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ப்ரீத்தி ஜிந்தா
பிரபல பாலிவுட் நடிகையும், ஐபிஎல் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான நடிகை பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு
தானே முடிவெட்டி உள்ளார். மிகவும் நேர்த்தியாக தனது கணவருக்கு தான் முடி வெட்டிவிட்டதாகவும் தற்போது அவரை பார்ப்பதற்கு
மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பதாகவும் பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

எனக்கு கல்யாணமா? மாப்புள்ளை யாரு – ஹன்சிகா
எனக்கு கல்யாணமா? மாப்புள்ளை யாரு – ஹன்சிகா
பிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா, எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மகா’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். இ
இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது.
அதற்கு ‘அடக்கடவுளே ! அவர் யார் ?’ என்று ஹன்சிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு ஒருவர் ”ஏன் என்கிட்ட சொல்லல”னு கேட்டதற்கு ‘எனக்கே இப்போ தான் தெரியும்’ என்று ஹன்சிகா பதிலளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்காக இணைந்த மூன்று பிரபல நடிகர்கள்
கீர்த்தி சுரேஷ்காக இணைந்த மூன்று பிரபல நடிகர்கள்
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்காக மூன்று பிரபல நடிகர்கள் இணைந்து இருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ்காக இணைந்த மூன்று பிரபல நடிகர்கள்
கீர்த்தி சுரேஷ்
ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண் குயின். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3
மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
பெண்குயின் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். தெலுங்கு டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட இருக்கிறார்கள்.
வேஷ்டி சட்டையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்
வேஷ்டி சட்டையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்
தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அமலா பால், வேஷ்டி சட்டை அணிந்து
எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வேஷ்டி சட்டையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்
அமலா பால்
பிரபல நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது சகோதரர்களுடன் வேஷ்டி சட்டை
அணிந்து கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
வேஷ்டி சட்டையில் அமலா பால்
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து வருவதோடு, ‘வேஷ்டி சட்டை உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்றும் கமெண்ட் அளித்து கூறியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட மேனேஜர் – அதிர்ச்சியில் ஐஸ்வர்யாராய்
தற்கொலை செய்துகொண்ட மேனேஜர் – அதிர்ச்சியில் ஐஸ்வர்யாராய்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யாராயின் முன்னாள் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட மேனேஜர் – அதிர்ச்சியில் ஐஸ்வர்யாராய்
ஐஸ்வர்யா ராய் – திஷா ஷாலியன்
மும்பை மலாட் என்ற பகுதியில் 14-வது மாடியில் திஷா ஷாலியன் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை திடீரென
14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திஷா ஷாலியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை
குறித்த கடிதம் எதுவும் இல்லை கிடைக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட திஷா ஷாலியன், நடிகை ஐஸ்வர்யா ராய், வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பாலிவுட் பிரபலங்களுக்கு
மேனேஜராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு ஐஸ்வர்யாராய் உள்பட பாலிவுட் பிரபலங்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்..

சூர்யா செய்த சமையல் – வைரலாகும் புகைப்படம்
சூர்யா செய்த சமையல் – வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, லாக்டவுனில் வீட்டில் சமையல் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லாக்டவுனில் சூர்யா செய்த சமையல் – வைரலாகும் புகைப்படம்
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர்
நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள்
வந்தாள் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு
காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.
சமையல் செய்யும் சூர்யா
பலரும் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது வீட்டில்
சமைக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பெரிய பாத்திரத்தில் பொறுப்புடன் சூர்யா சமைத்துக்
கொண்டிருக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டயட் இருந்ததால் விபரீதம் – பெண் இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி
டயட் இருந்ததால் விபரீதம் – பெண் இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி
டயட் காரணமாக திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்த பெண் இயக்குனர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டயட் இருந்ததால் விபரீதம் – பெண் இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி
இயக்குனர் சஞ்சனா ரெட்டி
தெலுங்கு திரையுலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார் சஞ்சனா ரெட்டி. ராஜூ காடு என்கிற தெலுங்குப் படத்தை இயக்கிய
சஞ்சனா ரெட்டி, அடுத்ததாக, பளு தூக்கும் முன்னாள் வீராங்கனையும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல்
இந்திய வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார். இந்நிலையில் சஞ்சனா
ரெட்டிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
டயட் காரணமாக திரவ உணவுகளை மட்டுமே கடந்த மூன்று நாள்களாக சஞ்சனா உண்டு வந்தார். இதனால் அவர் வீட்டில் மயக்கம் அடைந்துவிட்டார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இயக்குனர் சஞ்சனா ரெட்டி
இதனால் கவலைப்பட ஒன்றுமில்லை, இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என கர்ணம் மல்லேஸ்வரி திரைப்படத்தின்
தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் சஞ்சனா ரெட்டியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.






