Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது- ஏ.ஆர். ரகுமான்
இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது- ஏ.ஆர். ரகுமான்
இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர். ரகுமான்
ஏ.ஆர். ரகுமான்
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-
பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே
இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.
‘தில் பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘‘பலர்
என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’’ என்று கூறினார்.
அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று.
பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான்.
எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.
இவ்வாறு கூறிய ரஹ்மானுக்கு சினிமா உலகம் ஆதரவு தெரிவித்து வருகிறது. சேகர் கபூர் ‘‘பாலிவுட் உங்களை கையாண்டதை விட அதிகமான திறமை உள்ளதை நிரூபித்து விட்டீர்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஹ்மான் ‘‘இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால், நாமது வாழ்க்கையில் இழந்த
முக்கியமான நேரத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது. அமைதி! இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். செய்வதற்கு
இன்னும் சிறந்த விசயங்கள் உள்ளன’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு
முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜயலட்சுமி
கண் விழித்த பின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை போலீசார் விசாரிக்க இருக்கிறார்கள். தற்கொலை முயற்சி செய்யும்
முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி
பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், பார்த்தவுடன் கட்டிப் பிடித்துவிட்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.
பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி
வரலட்சுமி சரத்குமார்
பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டேனி. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள்
நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய்
நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி
அந்தக் கொலையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் கதை.
இந்தப் படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் கூறும்போது, ‘டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும்
கற்றுக் கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்.
டேனியுடன் வரலட்சுமி
நாய்க்குட்டியுடன் நடித்தது இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம். கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை
எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்ற கதை. தேவையில்லாமல் எந்தவொரு காட்சியுமே இருக்காது.
படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப்
போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருந்தேன். தன்னுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது
கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியே பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்துக் கொடுத்தது’ என்றார்..
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக பிரபல நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்
கங்கனா ரணாவத் – சுஷாந்த் சிங்
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது
தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து,பிரபல நடிகை கங்கனா ரணாவத் இந்தி திரையுலகை கடுமையாக சாடி இருந்தார். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மனநல ரீதியில் பலவீனமானவர் அல்ல
என்றும், தகுதிவாய்ந்த அவரது படங்களும், அவரது நடிப்பும் எந்த விருதுகளாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
கங்கனா ரணாவத் – சுஷாந்த் சிங்
இந்தநிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக கங்கனா ரணாவத்தின் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர். தற்போது கங்கனா ரணாவத் மணாலியில்
இருக்கிறார். இதன் காரணமாக போலீசார் அந்த சம்மனை தபால் மூலம் அவருக்கு அனுப்பி இருக்கிறார்கள். கடந்த 3-ந் தேதியே
அவரை மும்பைக்கு வரவழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ய திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சி
பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சி
கன்னடத்தில் வளம்வரும் இளம் நடிகையாக அறியப்படுபவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ்
சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் ஜெயஸ்ரீ ராமையா நடித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நான் மனசோர்வாக உள்ளேன். இந்த உலகத்தில் இருந்து
விடைபெறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பதிவை பார்த்த ஜெயஸ்ரீ
ராமையாவின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை.
இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அவரது
தோழியும், நடிகையுமான அஸ்வதி ஷெட்டி முற்றிலுமாக மறுத்தார்.
ஜெயஸ்ரீ ராமையா
இந்த நிலையில் நேற்று மாலை ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் பக்கத்தில் இன்னொரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளேன். அனைவரையும்
நேசிக்கிறேன் என்று கூறி இருந்தார். மேலும் அவர் முந்தைய பதிவையும் அழித்து இருந்தார். ஜெயஸ்ரீ ராமையா கடந்த சில
தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கி இருந்தார்.
இதுதொடர்பாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மனஅழுத்தத்தில்
இருந்த ஜெயஸ்ரீ ராமையா தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கன்னட நடிகை தற்கொலைக்கு
முயன்றதாக கூறப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு வந்த மகன் – மகிழ்ச்சியில் விஜய்
கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவந்த நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒருவழியாக நாடு திரும்பி உள்ளார்.
ஒரு வழியாக நாடு திரும்பிய மகன்…. உற்சாகத்தில் விஜய்
ஜேசன் சஞ்சய், விஜய்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் சஞ்சய்
கனடாவிலேயே சிக்கி தவித்தார். மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய், ஒரு வழியாக நாடு திரும்பிவிட்டார். விமானம் மூலம் சென்னைக்கு வந்த சஞ்சய்,
நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர்
நேற்று முன்தினம் தன் பெற்றோரை பார்க்கச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மகன் நாடு திரும்பியதால் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாகம் அடைத்துள்ளனர்.

டுவிட்டரில் இருந்து வனிதா ஒட்டம் – கஸ்தூரி வைத்த ஆப்பு
டுவிட்டரில் இருந்து வனிதா ஒட்டம் – கஸ்தூரி வைத்த ஆப்பு
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதில் இருந்து பிரச்சனைகள் எழுந்து வருவதால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தொடர் பிரச்சனைகள் – வனிதா எடுத்த திடீர் முடிவு
வனிதா
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்தார். தனது சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று வனிதா
கண்டித்தார். இந்த தகராறு ஓய்ந்த நிலையில் இப்போது வனிதாவுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இணைய தளத்தில் கடும்
மோதல் ஏற்பட்டது. கஸ்தூரி வெளியிட்ட பதிவில், “லட்சுமி ராமகிருஷ்ணனை நினைக்கும்போது இதயத்தில் ரத்தம் கசிகிறது.
வனிதாவின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. இணையதள துஷ்பிரயோகம் செய்கிறார்” என்றார்.
இதற்கு பதில் அளித்த வனிதா, “எனது சொந்த வாழ்க்கையில் தலையிட முயன்றால் உங்கள் வாழ்க்கை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்” என்றார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி,
“எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும். எனது சொந்த வாழ்க்கையை பேசுவதில் பயனில்லை. உங்களைப்போல் சீசன் 1.2.3 போன்ற
மெகா சீரியல் வாழ்க்கை எனக்கு இல்லை. நீங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர். உங்களை பிரபலபடுத்த என்னை
பயன்படுத்த வேண்டாம்”என்றார். இதையடுத்து வனிதா, “எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன்.
காமெடி பீஸ்” என்றார். பயந்துட்டியா குமாரு என்று கஸ்தூரி பதில் கொடுத்தார். இவர்கள் மோதல் வலைத்தளத்தில் பரபரப்பானது.
வனிதாவின் டுவிட்டர் பக்கம்
இந்நிலையில், தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது, டுவிட்டரில் இருந்து அவர் திடீரென
விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது. வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.
தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி
தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி
தப்ப நீங்க பண்ணா சரியாகிடுமா என்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து நடிகை சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
தப்ப நீங்க பண்ணா சரியா…. வனிதாவிற்கு சனம் ஷெட்டி கேள்வி
வனிதா – சனம் ஷெட்டி
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் விமர்சித்தார்கள். தனது சொந்த வாழ்க்கையில்
தலையிட வேண்டாம் என்று நடிகை வனிதா கூறி வந்தார். இது நாளடைவில் பெரிய விவாதமாக மாறியது. சமூக வலைத்தளத்தில்
வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் சண்டைப் போட்டுக் கொண்டார்கள்.
இந்நிலையில், வனிதாவிற்காக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் சனம் ஷெட்டி. அதில், வனிமா உங்களுடைய சமீபத்தில் வீடியோ
பார்த்தேன். அதில் நீங்கள் பேசியது தவறு. எனக்கு ஒரு பிரச்சனை வந்த போது நீங்கள் குரல் கொடுத்தீர்கள். இப்போ தப்ப நீங்க
பண்ணா சரியாகிவிடுமா என்று கேள்விக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சனம் ஷெட்டி.
மேலும் பீட்டர் பாலின் மனைவிக்கு தேவையானதை கொடுத்துவிட்டு, முறைப்படி அவர்கள் விவாகரத்து பெற்ற பிறகு
நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்குகள் என்றும் வீடியோவில் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
அர்ஜுன் மகளுக்கு கொரோனா
அர்ஜுன் மகளுக்கு கொரோனா
அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அர்ஜுன் மகளுக்கு கொரோனா
மனைவி, மகள்களுடன் அர்ஜுன்
நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த
சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீளாத நிலையில், மற்றொரு அதிர்ச்சி செய்து கிடைத்துள்ளது.
சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்தது.
மகள் ஐஸ்வர்யாவுடன் நடிகர் அர்ஜுன்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்
லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்
ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் லம்போகினி காரில் வலம் வந்திருக்கிறார்.
லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்
ரஜினி
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் இன்னும்
தொடங்கப்படவில்லை. நடிகர்கள் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். வீட்டில்
இருக்கும் நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
ரஜினி
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது காரில் அமர்ந்து, தானே அதை ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த
புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி லம்போகினி காரை ஓட்டுகிறார் ரஜினி.. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்த போலீசார், அவர் குறித்த திடுக் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித்
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி,
நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக நடிகர் அஜித் வீடு உள்ள திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்
வீட்டுக்கு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் விரைந்தனர்.
அப்போது வீட்டில் நடிகர் அஜித், தனது குடும்பத்தினருடன் இருந்தார். வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை போலீசார் தெரிவித்ததும், நடிகர் அஜித் முழு ஒத்துழைப்பு வழங்கினார். போலீசாரை
முககவசத்துடன் ஒவ்வொரு அறையாக அழைத்துச்சென்று சோதனை செய்ய செய்தார். போலீசார் சுமார் 1 மணிநேரம்
சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் தொலைபேசியில் வந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
அஜித்
அதேபோல் திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு திருவான்மியூர் போலீசார் சென்று சோதனை செய்தனர். ஆனால்
அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதுவும் புரளி என தெரியவந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் மரக்காணம், புதுச்சேரி பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது
மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் எனத் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டுக்கும் இதுபோல் வெடிகுண்டு மிரட்டல்
விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள்
தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள்
வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள், அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள்… அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகம்
சூர்யா – கேக் வெட்டும் மக்கள்
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.
இதில் வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில்,
பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள்
இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 100 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும்
உணவளித்து வருகிறார்கள். 100 நாட்களில் இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
சூர்யா ரசிகர்கள்
இந்நிலையில் 100வது நாள் என்பதால் தெருவில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுடன் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாக
கொண்டாடி உள்ளனர். சூர்யா ரசிகர்களின் இந்த நற்செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அமிதாப், அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் – மருத்துவமனை.
அமிதாப், அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் – மருத்துவமனை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அமிதாப், அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் – மருத்துவமனை தகவல்
அமிதாப், அபிஷேக் பச்சன்
இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா
பாதிப்பு இருப்பது கடந்த 11ந்தேதி உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா
பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவில் அபிஷேக் பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மகள்
ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனினும் ஜெயா பச்சனுக்கு பாதிப்பு இல்லை என மகாராஷ்டிர சுகாதாரத்துறை மந்திரி உறுதிபடுத்தினார்
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆரத்யா ஆகிய இருவரின்
உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் ஐஸ்வர்யா
ராய்க்கு இருமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்
நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்
நடிகை லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது தவறி விழுந்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்
‘கும்கி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து பாண்டியநாடு, சுந்தர
பாண்டியன், கொம்பன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
லட்சுமி மேனன்
இந்நிலையில் லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது கீழே தவறி விழும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி
வருகிறது. தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்காததால் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அஜித்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன்
நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து போலீசார் ஆய்வு
செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த நபர் மிரட்டல் விடுத்ததாக தகவல் கிடைத்ததை
அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்
மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென
மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீர் மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று
இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின்
மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால்
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகளுடன் ஐஸ்வர்யா ராய்
இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்
தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவுக்கு கொரோனா தீவிரமடைந்ததையடுத்து இவர்களும்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு அது முக்கியம் இல்லை – சுருதிஹாசன்
எனக்கு அது முக்கியம் இல்லை – சுருதிஹாசன்
பிரபல நடிகையாக இருக்கும் சுருதி ஹாசன், அது எனக்கு முக்கியம் இல்லை என்று கூறியுள்ளார்.
அது எனக்கு முக்கியம் இல்லை – சுருதிஹாசன்
சுருதி ஹாசன்
சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“கொரோனா ஊரடங்கு நேரத்தை வீட்டு வேலை, சமையல், இசை என்று வீணாக்காமல் கழிக்கிறேன். கதை, கவிதையும் எழுதுகிறேன்
. எனக்கு கனவு பாத்திரம் எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
நல்ல கதையம்சம் உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருக்கும்பட்சத்தில் வில்லியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
இப்போது மீண்டும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததுள்ளது. எனது கையில் மூன்று படங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துகிறேன்.
சுருதி ஹாசன்
இசைபணிகளுக்காக அடிக்கடி லண்டனுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. சினிமா, இசை இரண்டிலும் உற்சாகத்தோடு
ஈடுபடுகிறேன். சம்பளம் பற்றி யோசிப்பது இல்லை. அது முக்கியமான விஷயமும் இல்லை. சினிமா தொழிலாளர்கள் வேலை
இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம்.”
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
ஊரடங்கு நேரத்திலும் நடித்த நயன்தாரா
ஊரடங்கு நேரத்திலும் நடித்த நயன்தாரா
முன்னணி நடிகையான நயன்தாரா ஊரடங்கு நேரத்திலும் வீட்டிலிருந்தபடியே நடித்திருக்கிறார்.
ஊரடங்கு நேரத்திலும் நடித்த நயன்தாரா
நயன்தாரா
கொரோனா ஊரடங்கினால் நயன்தாரா வீட்டில் இருக்கிறார். அவர் படங்களில் நடித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஊரடங்குக்கு முன்பே ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில்
நடித்து முடித்து விட்டார். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். நெற்றிக்கண்,
காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய மேலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
ஊரடங்கில் அடிக்கடி தனது புகைபடங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். கொரோனாவுடன் இணைத்து வெளியான
வதந்திக்கும் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பதிலடி கொடுத்தார்.
நயன்தாரா
தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய நிலையில் தற்போது விளம்பர படமொன்றில் நடித்து இருக்கிறார். வீட்டிலேயே
இதன் படப்பிடிப்பை முடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில விளம்பர படங்களில் நடிக்க
வைப்பதற்காக முன்னணி நிறுவனங்கள் அவரை அணுக தயாராகி வருகின்றன.
விஷால் நிறுவனத்தில் கையாடல் – கணக்காளர் ரம்யா பற்றி அதிரடி அறிக்கை
விஷால் நிறுவனத்தில் கையாடல் – கணக்காளர் ரம்யா பற்றி அதிரடி அறிக்கை
நடிகர் விஷால் நிறுவனத்தில் பணிபுரிந்த கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விஷால் நிறுவனத்தில் கையாடல் – கணக்காளர் ரம்யா பற்றி அதிரடி அறிக்கை
விஷால்
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக
அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது சமீபத்தில் புகாரளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை அடுத்து அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீஸ், பெண் கணக்காளர்
ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கணக்காளர் ரம்யாவிடம் விஷால் பிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் அவரை தொடர்பு
கொள்ள வேண்டாம் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஷால் அறிக்கை
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை
முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில்
புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக்
கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள
வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன்
மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்
ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்
முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ் புகார் கூறியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்
ஏ.ஆர்.ரகுமான்
‘நடிகை’, ‘தேசிய பறவை’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘காட்டுப் புறா’ திரைப்படத்தின் மூலம் உலகின் முதல்
‘வாசனை படம்’ என்று பெயர் எடுத்தவர் இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ். இவர் தற்போது ஏ.ஆர்.ரகுமான் மீது புகார் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் 2000 ஆம் ஆண்டு நான் செய்த கான்செப்ட் வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் ஆகிய சாதனைகள்
படைத்துள்ளது. இந்த கான்செப்ட்டை வைத்து இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீ மஸ்க்’ என்ற ஆங்கில படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இதை பயன்படுத்தியதற்காக அவருக்கு மெயில்,
கடிதம், மியூசிக் யூனியன் வாயிலாக கேட்டு அவர் பதிலளிக்கவில்லை. என்னை அவருக்கு நன்றாக தெரியும்.
என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தியது எனக்கு பெருமை. இருந்தாலும் அவரால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் – பாபு கணேஷ்
என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தி காட்டுப்புறா படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கினேன். இதை நம்பிதான் எனக்கு
பைனான்சியர்கள் பணம் கொடுத்தார்கள். ஒரு ஆறுத்தலுக்காகவது ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால்,
இதுவரை அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனால், கான்செப்ட் திருட்டு என்று லீகலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
அதற்கும் பதில் இல்லை. அடுத்தகட்டமாக எப்.ஐ.ஆர் போடவுள்ளேன். இது எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்றார்.






