Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகன்,
ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் லலித்
வெளியிடுகிறார். மாஸ்டர் படத்தின் டீசர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி 4.3 கோடி பார்வையாளர்களுடன் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
விஜய்
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டிரெய்லரை வரும் ஜனவரி 1ந் தேதி அதிகாலை ஒரு மணிக்கு படக்குழுவினர் வெளியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் டீசர் சில
மணி நேரங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்து வைரலான நிலையில், தற்போது டிரெய்லருக்கு விஜயின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கவினுக்கு விரைவில் திருமணம்… பெண் யார் தெரியுமா?
கவினுக்கு விரைவில் திருமணம்… பெண் யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவினுக்கு விரைவில் திருமணம்… பெண் யார் தெரியுமா?
கவின்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்பட்டாளத்தை
கொண்டவர் நடிகர் கவின். ஆர்.ஜேவாக அறிமுகமான இவர் தொலைக்காட்சியில் கனா காணும், சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தநிலையில் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னரே அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான
வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, சாக்ஷி ஆகியோருடன் ரொமான்ஸ் மற்றும் லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
கவின்
இந்த நிலையில் தற்போது நடிகர் கவினுக்கு திருமணம் என தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. ஸ்டைலிஸ்ட் ஒருவரை கவின்
காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
பிரபல நடிகையின் தந்தை மரணம்- அதிர்ச்சியில் மரணம்
பிரபல நடிகையின் தந்தை மரணம்- அதிர்ச்சியில் மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீரென மரணமடைந்தது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்
நிகிலா விமல், பவித்ரன்
சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிலா விமல். பின்னர் கிடாரி படத்திலும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். கடந்தாண்டு ஜீத்து ஜோசப்
இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் அடுத்ததாக ரங்கா படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நிகிலா விமல்
இந்நிலையில், நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 61.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்
நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா வழியை பார்வதி நாயர் பின்பற்றி ஒரு படத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்
நயன்தாரா – பார்வதி நாயர்
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘க/பெ ரணசிங்கம்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஓடிடி தளத்தில்
வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது.
இந்த படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை
கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ரூபம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு
செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் ‘ரூபம்’ படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பார்வதி நாயர் இந்த படத்தில் போலீசாக நடிக்க உள்ளார்.
ரூபம்
நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நிலையில், பார்வதி
நாயரும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரூபம் படத்தில் நடிக்கிறார்.
இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா
இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா
உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வான இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார் இளையராஜா.
இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா
இளையராஜா – இசைவாணி
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”
இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து
விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.
இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்
தெரிவித்துள்ளார். மேலும் இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார்.
இசைவாணி
இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காண்பித்திருக்கிறார்
இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.
அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி
அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி
நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.
அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி
குஷ்பு
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ்
, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘நடிகன்’, ‘சின்ன தம்பி’, ‘கிழக்கு கரை’, ‘மன்னன்’, ‘ரிக்ஷா மாமா’, ‘இது நம்ம பூமி’, ‘அம்மா
வந்தாச்சு’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது.
குஷ்பு – இயக்குனர் வாசு
தற்போது, பி.வாசு குறித்து குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனது குரு, எனக்கு மிகவும் பிடித்தமானவர். என்னை
நன்றாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குநர். எனக்குள்ளிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் பி.வாசுதான்.
எனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் அவருக்குப் பெரிய பங்குண்டு. அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன். அவர்
மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். மிகவும் ரசித்தேன். பல உணர்வுகளை இது சொல்கிறது”.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
தலைவர் ஆட்டம் ஆரம்பம்…. ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்
தலைவர் ஆட்டம் ஆரம்பம்…. ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் அனிருத், தலைவர் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியிருக்கிறார்.
ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல்
கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம், #இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல
வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான,
வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! என்று கூறினார்.
இனி தான் ஆரம்பம்..
தலைவர் ஆட்டம் ஆரம்பம் 🤘🏻🤘🏻🤘🏻#மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம்#இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்லpic.twitter.com/zj8amBXklR
— Anirudh Ravichander (@anirudhofficial) December 3, 2020
இதற்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகிறார்கள். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், இனி தான் ஆரம்பம்.. தலைவர்
ஆட்டம் ஆரம்பம்… #மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம், #இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
மர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி
மர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கணக்குகளை மர்ம நபர்கள் கைபற்றி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்… அறிக்கை வெளியீடு
சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர் வரலட்சுமி சரத்குமார். பாலியல் வன்முறை, கொரோனா விழிப்புணர்வு, உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் சமூக வலைதளப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால், தனது சமூக
வலைதளப் பக்கத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வரலட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு திருடப்பட்டு விட்டன.
என்னால் இன்னும் அவற்றை மீட்க முடியவில்லை. கூடிய விரைவில் என்னுடைய கணக்குகளை மீட்பதற்காக அந்தத் தளங்களின்
அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். ஆனால், அதற்கு சில நாட்கள் ஆகலாம்.
வரலட்சுமி அறிக்கை
என்னைப் பின்தொடர்பவர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் அடுத்த சில நாட்களுக்கு என்னுடைய இன்ஸ்டா
மற்றும் டுவிட்டர் பக்கங்களிலிருந்து மெசேஜ் வந்தால், தயவுசெய்து கவனமாக இருக்கவும். என்னுடைய கணக்குகளை மீட்டதும் நான்
அதை உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. விரைவில் உங்களை ஆன்லைனில் சந்திக்கிறேன்”.
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மருமகனை கொஞ்சும் சிலம்பரசன்
மருமகனை கொஞ்சும் சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன், தனது தங்கை மகனுடன் காரில் கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.
மருமகனை கொஞ்சும் சிலம்பரசன்… வைரலாகும் வீடியோ
சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன்.
இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும், மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது. மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். அதில் தனது
படங்கள் குறித்த அறிவிப்புகள், புதிய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது தனது தங்கை இலக்கியாவின் மகன் ஜேசன் உடன் காரில் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் நடிகர் சிம்பு, தனது மருமகனிடம் பக்கத்தில் இருக்கும் காருக்கு செல்கிறாயா
என்று செல்லமாக பேசி, அருகே இருக்கும் காரில் உள்ளவர்களுக்கும் ஹாய் சொல்கிறார்.
இந்த வீடியோ சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தின் டிரெய்லர், மாநாடு படத்தின் போஸ்டர், சிலம்பரசனின் நியூ லுக் என அனைத்தும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

காதலரை கரம்பிடித்த நடிகை
காதலரை கரம்பிடித்த நடிகை
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரோஷ்னா அன்ராய் தனது காதலரை கரம்பிடித்துள்ளார்.
மலையாள படமான ஒரு அடார் லவ், பிரியா வாரியரின் கண்சிமிட்டல் காட்சி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானது.
இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். படத்தில் ரோஷ்னா அன்ராயும் ஆசிரியை கதாபாத்திரத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
பாபம் செய்யாதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட மேலும் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். ரோஷ்னா அன்ராயும்,
அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் உள்ளிட்ட
மலையாள படங்களில் நடித்துள்ள கிச்சு டெல்லசும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர்.
கணவருடன் ரோஷ்னா
சில வாரங்களுக்கு முன்பு ரோஷ்னா அன்ராய் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “எங்கள் திருமணத்தை முறைப்படி
அறிவிக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. உண்மையான காதலோடு என்னை நேசித்த கிச்சுக்கு நன்றி” என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ரோஷ்னா அன்ராய்க்கும், கிச்சு டெல்லசுக்கும் கொச்சியில் திருமணம் நடந்தது. கொரோனாவால் நெருங்கிய
உறவினர்களை மட்டும் அழைத்து அங்குள்ள தேவாலயத்தில் திருமணத்தை முடித்தனர்.
திருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்
திருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு – பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்
பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் திருமணமானதை மறைத்து 4 பேருடன் தொடர்பில் இருந்ததாக அவரது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியில் ஏ ஹை மொஹப்பதைன், நாகின் 3 உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா
புனியா. சில இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.
பவித்ரா புனியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், நிச்சயதார்த்தம்
முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் வருங்கால கணவர் பெயரை சொல்லவில்லை. இந்த நிலையில் சுமித் என்பவர், தன்னை
திருமணம் செய்து பவித்ரா புனியா மோசடி செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இவர் ஓட்டல் உரிமையாளராக இருக்கிறார்.
பவித்ரா புனியா
அவர் கூறும்போது, “எனக்கும், பவித்ரா புனியாவுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அவர் பெயரை நான் பச்சை
குத்திக்கொண்டேன். திருமணத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். திருமணத்தை மறைத்து 4 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
ஒரு ஓட்டலில் இன்னொரு நடிகருடன் அவர் இருப்பதை பார்த்தேன். அவரது நடவடிக்கைகளை பல தடவை மன்னித்தேன். இனிமேல்
மன்னிக்க முடியாது. பவித்ரா என்னை விவாகரத்து செய்து விட்டு அவரது விருப்பம்போல் வாழலாம்” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி
வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி
மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தற்போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மத்திய பிரதேச மாநிலம்
பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை
வித்யா பாலன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநில வனத்துறை மந்திரி விஜய் ஷா நடிகை வித்யா பாலனை
இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது.
விஜய் ஷா
இதையடுத்து வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற படக்குழுவினரின் வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். 2 வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள்
செல்ல அனுமதித்தனர். இதனால் படக்குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
நடிகை வித்யா பாலன் அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இதை மறுத்துள்ள அமைச்சர் விஜய் ஷா, ‘படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க ‘ஷெர்னி’ படக்குழு என்னை அணுகினர். அவர்கள் தான் என்னை இரவு விருந்துக்கு அழைத்தனர். மகாராஷ்டிரா
வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என கூறினேன். நான் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிடவில்லை’ என்றார்.
தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த – நடிகை
தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த விஜய், அஜித் பட நடிகை
விஜய் மற்றும் அஜித் படங்களில் நடித்த நடிகை பாப்ரி கோஷ் தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.
தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த விஜய், அஜித் பட நடிகை
கணவருடன் பாப்ரி கோஷ்
தமிழில் விஜய்யுடன் பைரவா, சர்கார், அஜித்துடன் விஸ்வாசம், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்கிய டூரிங் டாக்கீஸ் ஆகிய படங்களில் நடித்தவர் பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் பெங்காலி படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கிறார்.
நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
பாப்ரி கோசும், தொழில் அதிபர் ஒருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை அவர் மறுக்கவில்லை.
இந்த நிலையில் காதலரை பாப்ரி கோஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
பாப்ரி கோஷ்
இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தியதாக
கூறப்படுகிறது. திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. மணமகன் பெயரை பாப்ரி கோஷ் வெளியிடவில்லை.

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா
கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த வேதிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா… வைரலாகும் புகைப்படம்
வேதிகா
டாப்சி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமந்தா என பல நடிகைகள் கடந்த சில வாரங்களாக மாலத் தீவிற்கு சென்று பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். சமந்தா
வெளியிட்ட பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது. நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடினார்.
அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார் பிரபல நடிகை வேதிகா. விடுமுறையை கொண்டாடி வரும் வேதிகா
கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வேதிகா
நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிம்புவுடன் காளை படத்தில் நடித்திருந்தார்.
விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்
விக்ரம்
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதன்பின் வதந்தி என்று
கூறுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடைசியில் அது வதந்தி என்று கூறப்பட்டது
அந்த வகையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம
நபர் ஒருவர் போன் செய்து தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
விக்ரம்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருவான்மியூர் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். போன் செய்து மிரட்டல்
விடுத்த மர்ம நபர் குறித்த விசாரணையையும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக்
அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக்
கமலின் இளைய மகள் அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையான நிலையில் பிரபல நடிகையின் மகன் விளக்கம் அளித்துள்ளார்.
அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின்
கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஷமிதாப்
இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி
சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அக்ஷரா ஹாசனின் சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்
வெளியாகி சர்ச்சையானது. சிலர் அர்ப்ப சுகத்துக்காக இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என்று அக்ஷரா ஹாசன் கண்டித்தார்.
முன்னாள் கதாநாயகி ரதியின் மகனும், நடிகருமான தனுஷ் விர்வானியும், அக்ஷரா ஹாசனும் காதலித்ததாகவும் தனுஷ்
விர்வானிதான் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும் தகவல் பரவியது.
இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்து தனுஷ் விர்வானி கூறும்போது, “அக்ஷராவின் குறிப்பிட்ட அந்த புகைப்படங்கள் வெளியானபோது என்னை அழைத்து 2013-ல் எடுக்கப்பட்ட அந்த
புகைப்படங்கள் எப்படி வெளியாகி இருக்கும்? என்று கேட்டார். போனை பழுதுபார்க்க கொடுக்கவில்லை என்றும் கூறினார். அந்த
காரியத்தை நான் செய்து இருப்பதாக நினைக்கிறாயா? என்று கேட்டேன். அவர் இல்லை என்றார்.
அக்ஷரா ஹாசன்
அதன்பிறகு என்னை குற்றவாளிபோல் சித்தரித்து தகவல்கள் பரவின. இதனால் நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டோம். எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் எனது தாய் ரதி
அதிர்ச்சியாகி அக்ஷரா ஹாசன் குடும்பத்தினரிடம் பேச முயன்றார். நான் தடுத்து விட்டேன்” என்றார். ரதி தமிழில் கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
விஜய், புதிய யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு
மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், புதிய யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்குவது போல யூடியூப் சேனலும்
தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது உதயமாகவுள்ளது நடிகர் விஜயின் யூடியூப் சேனல்.
விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறார் நடிகர் விஜய். விஜய் தொடர்பான அறிவிப்புகள்
அனைத்தும் இனி அந்த சேனலில்தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த சேனல் தொடங்கப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் அனைத்தையும் அந்த சேனலில் வெளியிட்டு பரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் – ஐஸ்வர்ய லட்சுமி
அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் – ஐஸ்வர்ய லட்சுமி
தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் – ஐஸ்வர்ய லட்சுமி
தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி
மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி, கடந்தாண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ்
இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுதவிர
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜகமே தந்திரம் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே, இன்னொரு படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால்
துரதிர்ஷ்டவசமாக அந்த படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஐஸ்வர்ய லட்சுமி
அந்தப்படத்தில் பிராமண பெண் கதாபாத்திரத்திற்கு தான் சரியாக பொருந்தினாலும், தனக்கு அந்த பாஷையை சரியாக பேச
தெரியவில்லை என்ற காரணத்தால் அந்தப்படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக கூறியுள்ள ஐஸ்வர்ய லட்சுமி, அது எந்தப்படம் என்பதை தெரிவிக்கவில்லை.
வலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்
வலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், வலிமை படத்திற்காக பைக் ஸ்டண்ட் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
வலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்
அஜித்
நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த
நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினர்.
அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக
அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது.
அஜித்
இந்நிலையில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் அஜித் முன்பக்க வீலை தூக்கி பைக் ஓட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

என்னை தகுதியற்ற நடிகை என்பதா? – நடிகை டாப்சி ஆவேசம்
என்னை தகுதியற்ற நடிகை என்பதா? – நடிகை டாப்சி ஆவேசம்
தகுதி இல்லாத நடிகை என விமர்சித்த ரசிகர்கருக்கு நடிகை டாப்சி சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
என்னை தகுதியற்ற நடிகை என்பதா? – நடிகை டாப்சி ஆவேசம்
டாப்சி
தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்சி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்திலும் சர்ச்சை
கருத்துகளை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில்
நடித்தபோது, படத்தின் கதாநாயகனின் மனைவிக்கு என்னை பிடிக்காமல் போனதால் படத்தில் இருந்தே நீக்கி விட்டனர் என்றார்.
இந்தி பட உலகில் நிலவும் போதை பொருள் விவகாரம், வாரிசு அரசியல் போன்றவற்றை விமர்சித்த கங்கனா ரணாவத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கங்கனாவின் ரசிகர்கள் டாப்சியை விமர்சித்தனர்.
டாப்சி
இந்த நிலையில் டாப்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர், நீங்கள் தகுதி இல்லாத நடிகை, சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டி பதிவிட்டு இருந்தார்.
இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த பதிவை டாப்சி ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, என்னை தகுதியாக்க என்ன செய்ய வேண்டும்.
நான் செய்ய வேண்டியது ஒரு விஷயம்தான். அது உங்கள் கண்களுக்கு தெரியாத தகுதியைத்தான். உங்கள் கருத்தை இன்னும்
நான்கைந்து முறை பகிருங்கள். அது எனக்கு புரிகிறதா என்று பார்க்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.






