Posted in சினிமா

தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த – நடிகை

தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த விஜய், அஜித் பட நடிகை

விஜய் மற்றும் அஜித் படங்களில் நடித்த நடிகை பாப்ரி கோஷ் தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.

தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த விஜய், அஜித் பட நடிகை
கணவருடன் பாப்ரி கோஷ்


தமிழில் விஜய்யுடன் பைரவா, சர்கார், அஜித்துடன் விஸ்வாசம், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்கிய டூரிங் டாக்கீஸ் ஆகிய படங்களில் நடித்தவர் பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் பெங்காலி படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கிறார்.

நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

பாப்ரி கோசும், தொழில் அதிபர் ஒருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை அவர் மறுக்கவில்லை.

இந்த நிலையில் காதலரை பாப்ரி கோஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

பாப்ரி கோஷ்

இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தியதாக

கூறப்படுகிறது. திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. மணமகன் பெயரை பாப்ரி கோஷ் வெளியிடவில்லை.

ரகசிய திருமணம்
ரகசிய திருமணம்
Posted in சினிமா

ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை

ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை

நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருடன் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது.

ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை
சனா கான் திருமண புகைப்படம்
சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் நடித்திருப்பவர் நடிகை

சனாகான். இவர் ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைவன்’, ‘அயோக்யா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும்

நடித்திருக்கிறார். நடிகை சனாகானும், மெல்வின் லூயிஸ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதன் பிறகு சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்த

சனாகான், பொது சேவையில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். திரை

உலகை சேர்ந்தவர்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

கணவருடன் சனா கான்

இந்தநிலையில் சனாகான்- தொழில் அதிபர் முப்தி அனாஸ் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளனர். சூரத் நகரில் வைத்து

இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

ஆனால் தனக்கு நடைபெற்ற திருமணம் பற்றி சனாகான் இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய திருமணம்
ரகசிய திருமணம்