Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்
கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்
ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது மகனுக்கு 3வது பிறந்தநாள் என்று கூறியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்…. வாழ்த்தும் ரசிகர்கள்
கீர்த்தி சுரேஷ்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் என்னை நிரப்பும் மகிழ்ச்சி
கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நேசிக்கிறேன் அன்பே Nyke“ என்று தன்னுடைய செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
நாய்க்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ்
இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் நாய்க்குட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஹீரோவாக நடிக்கும் செந்தில்
ஹீரோவாக நடிக்கும் செந்தில்
சுரேஷ் சங்கையா இயக்கும் படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளதாகவும், படத்தில் அவருக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
செந்தில்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த செந்தில், தற்போது முதன்முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளதாகவும், படத்தில் அவருக்கு
ஜோடி யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தயாரிப்பாளர் சமீர், நடிகர் செந்தில், இயக்குனர் சுரேஷ் சங்கையா
தயாரிப்பாளர் சமீர், நடிகர் செந்தில், இயக்குனர் சுரேஷ் சங்கையா
இந்நிலையில், நடிகர் செந்தில் இப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளார்களாம்.
பிகினி உடையில் ஊஞ்சல் ஆட அழைக்கும் சன்னி லியோன்
பிகினி உடையில் ஊஞ்சல் ஆட அழைக்கும் சன்னி லியோன்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
பிகினி உடையில் ஊஞ்சல் ஆட அழைக்கும் சன்னி லியோன்
சன்னி லியோன்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.
மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடித்து வரும் ‘ஓ மை கோஸ்ட்’ ‘OMG’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
சன்னி லியோன்
தற்போது சன்னி லியோன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். நீச்சல் உடையில் ஊஞ்சல் மேல் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில்
பகிர்ந்து இருக்கும் சன்னி லியோன், ‘எனக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் காலியாக உள்ளது, என்னுடன் ஊஞ்சலாட யார் வருகிறீர்கள்? என்ற கேள்வியையும் அவர் கேப்ஷனாக பதிவு
செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து, கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – கடுப்பான சித்தார்த்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – கடுப்பான சித்தார்த்
சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – கடுப்பான சித்தார்த்
சித்தார்த்
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த், சமூக வலைத்தள பக்கத்தில் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்.
அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சித்தார்த்
அத்துடன் குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார். சிலரோ இது தவறுதலாக நடத்திருக்கும் என
தெரிவித்து வருகின்றனர். அதாவது பிக்பாஸ் 13 வெற்றியாளர் சித்தார்த் சுக்லா, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். 40 வயதே ஆகும் இவர் நேற்று காலை மாரடைப்பால் மும்பையில்
காலமானார். அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த்தின் படத்தை வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
படப்பிடிப்பில் உயிரிழப்பு…. இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு
.
படப்பிடிப்பில் உயிரிழப்பு…. இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் மீது காவல்துறையினர் வழக்கு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பில் உயிரிழப்பு…. இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு?
மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம்
ரவி, விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து முடிந்து, பின்னர் புதுச்சேரியில் முடித்துவிட்டு, தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் ஐதராபாத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடந்தபோது சிறு விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் குதிரை ஒன்று உயிரிழந்ததாகவும் தகவல்
வெளிவந்துள்ளது. மேலும் இதன் காரணமாக இயக்குனர் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மணிரத்னம்
இது குறித்து விலங்குகள் நல வாரியம் விசாரணை செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி
சிரஞ்சீவி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர்
சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்வதாக வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.
நேற்று நடிகர் பவன் கல்யாண், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
மேலும், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாகவும் ஸ்டாலினை, பவன் கல்யாண் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், முன்னணி நடிகர் சிரஞ்சீவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்
சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரேவதி தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகை.
ரேவதி தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகை.
பெரியத்திரையில் இருந்து தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் நடிகை ஒருவர், ரேவதி தோற்றத்திற்கு மாறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
ரேவதி தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகை…. வைரலாகும் வீடியோ
டெல்னா டேவிஸ் – ரேவதி
நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஆக்கம், 49 ஓ உள்ளிட்ட
படங்களிலும் கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார். தற்போது இவர் பெரியத்திரையில் இருந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அன்பே வா என்னும் மெகாத் தொடரில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடர் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து
இருக்கிறார் என்றே சொல்லலாம். தற்போது இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ரேவதி நடித்த ‘மௌன ராகம்’ படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன
வண்ணகுயில் பாடலுக்கு ரீல் செய்து வெளியிட்டு இருக்கிறார் டெல்னா டேவிஸ். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் திருமணம் – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்
இயக்குனர் திருமணம் – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்
வைபவ் நடிப்பில் வெளியான சிக்ஸர் என்ற படத்தை இயக்குனர் சாச்சிக்கும், டாக்டர் சரண்யாவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
சிக்ஸர் பட இயக்குனர் திருமணம் – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்
சாச்சி திருமணத்தில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன்
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர்
சரண்யா என்ற பெண்ணுக்கும் இன்று (1.9.2021) புதன் கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இயக்குனர் திருமணம்
இயக்குனர் சாச்சி நகைச்சுவை நடிகர் சதீஷின் மச்சான் ஆவார். சாச்சியின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், மிர்ச்சிசிவா, இசையமைப்பாளர்
ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, அஜய் (நடன இயக்குனர்), நிப்பு சாமி, நடிகை ரித்திவிகா, வெண்பா, கிருத்திகா,
அமுதவணன், ஆகாஷ், தினேஷ் கண்ணன், ஜோமின், தீனா, பாலா, அசார், தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
மீண்டும் வடிவேலுக்கு வந்த சிக்கல்
மீண்டும் வடிவேலுக்கு வந்த சிக்கல்
நடிகர் வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையை சமீபத்தில் நீக்கிய நிலையில், தற்போது அவரது படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘விடாது கருப்பு’ – மீண்டும் வடிவேலுக்கு வந்த சிக்கல்
வடிவேலு
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க
தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. அதையடுத்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார்.
இந்நிலையில் தற்போது வடிவேலு நடிக்க இருக்கும் முதல் படமான ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக்வித்
கோமாளி பவித்ரா நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ளது. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடும் போது படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் வடிவேலு தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடிவேலு
நாய் சேகர் என்ற தலைப்பை அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கின்றனர். எனவே வடிவேலு, அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அந்தப் படத்தின்
கதைப்படி தலைப்பு மிக முக்கியமாக இருப்பதால் மறுத்து விட்டார்களாம். படத்தில் ஒரு நாய் முக்கியக் கதாபாத்திரத்தில்
இருப்பதால் படத்தின் தலைப்பு அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். விரைவில் இந்த சிக்கல் தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு
கணவர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு?
ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது
செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜ்
குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற, நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜ் குந்த்ராவை
பிரிந்து, அவர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து நடிகை
ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ்
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ்
அரசியல் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய
படங்கள் உள்ளன. இவற்றுள் ‘கோடியில் ஒருவன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி உள்ளார்.
இந்நிலையில், கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற செப் 17-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியல் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ள, இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக
ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
நயன்தாராவுடன் நடிக்கும் அஜ்மல் அமீர்
நயன்தாராவுடன் நடிக்கும் அஜ்மல் அமீர்
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் அஜ்மல் அமீர்.
மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும் அஜ்மல் அமீர்
நயன்தாரா – அஜ்மல்
மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு
ஆயிரம் கண்கள்’, ‘சித்திரம் பேசுதடி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மீண்டும் நயன்தாராவுடன் அஜ்மல் அமீர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜ்மல்
நயன்தாரா அடுத்ததாக ‘பிரேமம்’, ‘நேரம்’ படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க இருக்கிறார். பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில்
வெளியானது. இதில் அஜ்மல் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே மாதத்தில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
ஒரே மாதத்தில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒரே மாதத்தில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இதில் துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி ஆகிய 4 படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாக உள்ளன.
அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் செப் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. மறுதினமே இப்படம் ஓடிடி-யிலும் வெளியாக உள்ளது.
போஸ்டர்கள்
இதுதவிர விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ திரைப்படம் வருகிற செப் 17-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தையும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயதான நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா
வயதான நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா
2016-ம் ஆண்டு வெளியான நாயகி படத்துக்கு பின் தெலுங்கில் நடிக்காமல் இருந்த திரிஷா, தற்போது 5 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
வயதான நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா?
திரிஷா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா, அவ்வப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், அவர் அடுத்ததாக 61 வயதாகும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளார்
முதலில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சுருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அவர் பல்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து தான்
திரிஷாவை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. நடிகை திரிஷா ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லயன்’ என்கிற தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை திரிஷா கடைசியாக தெலுங்கில் 2016-ம் ஆண்டு வெளியான நாயகி என்கிற படத்தில்
நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர், பாலகிருஷ்ணா படம் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
களமிறங்கும் முன்னாள் நடிகையின் மகள்
களமிறங்கும் முன்னாள் நடிகையின் மகள்
கமலின் கலைஞன், விஜயகாந்தின் ராஜதுரை, பிரபுவின் சின்ன மாப்ள உள்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிவரஞ்சனி. இவர் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
1994-ல் ஆமி என்ற தெலுங்குப் படத்தில் முதல்முறையாக நடித்தார். தெலுங்குக்காக தனது பெயரை ஊஹா என்று மாற்றிக் கொண்டார்.
முதல் படமே சிறந்த நடிகைக்கான நந்தி விருதை அவருக்கு வாங்கித் தந்தது. தொடர்ந்து
தெலுங்கில் நடித்தவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை 1997-ல் திருமணம் செய்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
சிவரஞ்சனி
சிவரஞ்சனியின் மகள் ஏற்கனவே ருத்ரமாதேவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்திருந்தார்.
தற்போது இவர் கதாநாயகியாக களம் இறங்க இருக்கிறார். இதற்காக கதை, இயக்குனர், ஹீரோ
ஆகியோரை சிவரஞ்சனி தேடி வருவதாகவும், விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரி ஏய்ப்பு செய்த நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்
வரி ஏய்ப்பு செய்த நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்
ஜெங் ஷூவாங் நடித்து வெளியான நிகழ்ச்சிகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்த நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்
ஜெங் ஷூவாங்
சீனாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெங் ஷூவாங். இவர் சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் ஒரு டி.வி. தொடருக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தத்தில் அவர் வரி ஏய்ப்பு செய்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
டி.வி. தொடர் ஒப்பந்தத்தில் ஜெங் ஷூவாங் 2 ஆவணங்களை தயார் செய்துள்ளார். ஒரு ஆவணத்தில் தனக்கு குறைந்த வருமானம் கிடைப்பது போல குறிப்பிட்டு இருந்தார்.
அசல் ஆவணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு குறைந்த வருமானம் பெறுவது போன்று குறிப்பிட்டிருந்த ஆவணத்தை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தார்.
இதன்மூலம் அவர் வரியை குறைவாக செலுத்தி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை ஜெங் ஷூவாங்குக்கு வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் ரூ.338 கோடி
அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ஷாங்காய் நகராட்சி வரி சேவை மையம் பிறப்பித்துள்ளது.
மேலும் ஜெங் ஷூவாங் நடித்து வெளியான நிகழ்ச்சிகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ள
வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி
வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி
நகைச்சுவை நடிகர் வடிவேலு சுராஜ் இயக்க உள்ள ‘நாய் சேகர்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.
வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி?
வடிவேலு
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கி, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார். இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்படத்துக்காக அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதற்கு ‘அட்வான்ஸ்’ ஆக ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து திடீரென்று அந்த படத்தில் இருந்து
வடிவேலு நடிக்க மறுத்து விலகினார். இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் அளித்தார். இதனால் நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. வடிவேலு வாங்கிய ‘அட்வான்ஸ்’ தொகை ரூ.5 கோடியை இயக்குனர் ஷங்கரிடம் திருப்பிக் கொடுக்கும்படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
வடிவேலு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை, அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட நிறுவனம், ஷங்கரிடம் திருப்பி கொடுத்ததால், இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு சுமுகமாக
முடிந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
ரவிசங்கருடன் நடிகர் ரஜினி சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்
ரவிசங்கருடன் நடிகர் ரஜினி சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள்கள் சந்தித்தபோது எடுத்த
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீக குருக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி.
அந்த வகையில் தற்போது வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் உடன் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ்,
தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய
நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்
16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்ற அர்ச்சனா, தனது உடல்நிலை குறித்து உருக்கமாக கூறியிருக்கிறார்.
16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்
அர்ச்சனா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார். சமீபத்தில் இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது.
அர்ச்சனா
16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். என் மகளும், சகோதரியும் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஒரு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது’ என்றார்.
தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்
தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்
முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் திரைப்படங்களை விட வெப் தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள்.
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்
சமந்தா – அமலாபால்
வெப் தொடரில் நடிக்க சமீபகால கதாநாயகிகள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.
வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. படுகவர்ச்சியான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.
அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி, படுகவர்ச்சியாக நடித்துள்ள கதாநாயகிகள் வருமாறு:-
- சமந்தா. இவர், ‘பேமிலி 2’ என்ற வெப் தொடரில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.
ரெஜினா
ரெஜினா
- ரெஜினா கசன்ட்ரா. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- அமலாபால். தன்னை விட பல வயது மூத்த ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிற பெண்ணாக, ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். (அமலாபால், ஏற்கனவே மாமனாருடன் உறவு கொள்ளும் மருமகளாக ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து இருந்தார்.)
இந்த மூன்று பேரும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.






