Posted in சினிமா

அதிரடியாக களமிறங்கும் வடிவேலு-ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

அதிரடியாக களமிறங்கும் வடிவேலு-ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

நல்ல நேரம் பொறந்தாச்சு…. மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு
வடிவேலு
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடிவேலு

இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டபோது, ‘மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான்.

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். ஐந்து படங்களில் என்னை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். நல்ல நேரம் பொறந்தாச்சு. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Posted in சினிமா

தலைகீழாக தொங்கிய நடிகை

தலைகீழாக தொங்கிய நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் தலைகீழாக யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தலைகீழாக தொங்கிய நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்
அஞ்சலி


‘கற்றது தமிழ்’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. எங்கேயும் எப்போதும்,

இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி

துணியில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    Posted in சினிமா

    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

    டாக்டர், அயலான், டான் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை
    சிவகார்த்திகேயன்
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து

    பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதேபோல் அயலான் படமும் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘ஜாதி ரத்னலு’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய

    அனுதீப், சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், இப்படதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயன்
    சிவகார்த்திகேயன் – ராஷ்மிகா மந்தனா

    பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in சினிமா

      அனிருத் பாடிய ‘நட்பு’ பாடல் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

      அனிருத் பாடிய ‘நட்பு’ பாடல் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

      ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக கீரவாணி இசையில் நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடலை 5 மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடி உள்ளனர்.

      ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்காக அனிருத் பாடிய ‘நட்பு’ பாடல் – ரிலீஸ் தேதி அறிவிப்பு
      ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், அனிருத்


      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா

      மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

      இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தீம் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என

      தெரிவிக்கப்பட்டுள்ளது. கீரவாணி இசையில் நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை 5 மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடி உள்ளனர்.

      அதன்படி தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும்,கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடி உள்ளனர். முன்னணி பாடகர்கள் பாடி உள்ளதால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

      Posted in சினிமா

      4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்.

      4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்.

      நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 4 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

      4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்
      சூர்யா


      தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவரின் 39-வது படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ

      வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

      நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்படி ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர் சூர்யா,

      பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவந்தது.

      இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு,

      கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஜெய் பீம் திரைப்படம் வெளியிடப்படும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

        Posted in சினிமா

        ஒரே மாதத்தில் வெளியாகும் ஆர்யாவின் 2 படங்கள்

        ஒரே மாதத்தில் வெளியாகும் ஆர்யாவின் 2 படங்கள்

        நடிகர் ஆர்யா நடித்துள்ள 2 திரைப்படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

        ஒரே மாதத்தில் வெளியாகும் ஆர்யாவின் 2 படங்கள்
        ஆர்யா


        அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் எனிமி. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார்.

        இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

        எனிமி, அரண்மனை 3 படத்தின் போஸ்டர்கள்
        எனிமி, அரண்மனை 3 படங்களின் போஸ்டர்கள்

        எனிமி படத்தை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா

        நடித்துள்ள ‘அரண்மனை 3’ படமும் அதே மாதத்தில் ரிலீசாக உள்ளது. ஒரே மாதத்தில் ஆர்யாவின்

        இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

          Posted in சினிமா

          நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்

          நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்

          பாடலாசிரியர் சினேகனின் திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடத்தி வைக்கிறார்.

          நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்
          சினேகன்


          தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ள அவர், இதுவரை

          2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். இவருடைய பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுதவிர சில படங்களில் நடித்துள்ள சினேகன், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

          இந்நிலையில், பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார். ‘தேவராட்டம்’ படத்தில்

          நடித்துள்ள நடிகை கன்னிகா, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

          இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

          வருகிற 29-ந் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற உள்ளது.

          அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை

          நடத்தி வைக்கிறார். இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

          Posted in சினிமா

          ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

          ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

          கஜினிகாந்த் திரைப்படத்தின் போது நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்த ஆர்யாவிற்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

          ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது
          ஆர்யா – சாயிஷா
          இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

          தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. இவர்

          நடிப்பில் ‘அறிந்தும் அறியாமலும்’ ‘நான் கடவுள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

          சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு நல்ல வரவேற்பு

          கிடைத்து வருகிறது. இவர் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த போது சாயிஷாயுடன் காதல் மலர்ந்தது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

          ஆர்யா – சாயிஷா

          திருமணத்துக்குப் பிறகு சாயிஷா தொடர்ச்சியாக நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு

          சாயிஷா கர்ப்பமானார். இந்நிலையில் ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு நேற்று (ஜூலை 23) இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்

          Posted in சினிமா

          4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன் – வனிதா அதிரடி

          4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன் – வனிதா அதிரடி

          பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

          இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

          பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

          சில தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது

          போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள் வனிதா 4வது திருமணம் செய்துக் கொண்டதாக கூறினார்கள்.

          இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார்,

          பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் பிக்கப் டிராப் என்ற படத்தில் தான் நடிப்பதாகவும், அந்த படத்தின் போஸ்டர்கள்தான் அவை என்று எடுத்துரைத்தார்.

          அப்போது பேசிய வனிதா விஜயகுமார், ‘நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது

          என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால்தான் தற்கொலைகள் அதிகரிக்கிறது’ என்றார்.

            Posted in சினிமா

            எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு

            எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு

            அவன் இவன் படத்திற்குப் பிறகு ஆர்யா – விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

            எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்
            எனிமி படத்தில் விஷால் – ஆர்யா
            இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

            பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இப்படத்தில்

            இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

            இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்

            இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

            இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில், எனிமி

            படத்தின் டீசரை ஜூலை 24 ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

              Posted in சினிமா

              அந்த நடிகரை புகழும் இந்த நடிகை

              அந்த நடிகரை புகழும் இந்த நடிகை

              தென்னிந்திய நடிகையும், பிக்பாஸ் வெற்றியாளருமான ரித்விகா, தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், அறிமுக இயக்குனர் அரவிந்த் சாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

              அவரது நுணுக்கமான அறிவு அபாரம் – ரித்விகா
              ரித்விகா
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை

              கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரௌத்திரம்” கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது.

              இப்படம் பற்றி ரித்விகா கூறும்போது, ‘அரவிந்த் சாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகப்பெருமையான தருணம். ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக அவரை

              அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது’ என்றார்.

              நவராசா ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 190 நாடுகளில் வெளியாகிறது.

                Posted in சினிமா

                கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா

                கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா

                முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

                தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது கடின உழைப்பால் தரமான படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். இது அவருக்கு சாதாரணமாகக்

                கிடைத்ததல்ல. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் தொடர் போராட்டம் என்றே சொல்லலாம். மேலும் சமூகத்தின் மீதான அக்கறை, கல்விக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்று அவருக்கு ரசிகர்களைத் தாண்டி பொது மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

                நட்சத்திர அந்தஸ்து

                புகழ்பெற்ற நடிகரான சிவகுமாரின் மகனாகப் பிறந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தைப் போராடி உழைத்துப் பெற்றிருக்கிறார் சூர்யா. தொடக்க ஆண்டுகள் போராட்டம் மிக்கவையாக இருந்தன.

                படிப்படியாக உழைத்து குறைகளைக் கடந்து நிறைகளை அதிகரித்துப் பல வகையான படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.

                தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்த உடல்ரீதியாகவும் உள்ளத்தாலும் உருமாற சூர்யா அளிக்கும் மெனக்கெடல் வியக்கவைக்கும். 30 வயதுகளில் 60 வயது முதியவராக ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்தபோது அனைவரும் அவரை அப்படியே

                ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தார். அதே படத்தில் ராணுவ வீரராக நடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து சிக்ஸ் பேக் வைத்தார். மேலும், அயன், 7 ஆம் அறிவு படங்களிலும் சிக்ஸ் பேக்

                வைத்திருந்தார். இவரது வியக்க வைக்கும் மெனக்கெடல் மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பு இளைஞர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

                24 ஆண்டு திரைவாழ்வில் பல இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறார் சூர்யா. மணிரத்னம், வசந்த், விக்ரமன், பாலா, அமீர், கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன்,

                கே.எஸ்.ரவிகுமார், ஹரி, கே.வி.ஆனந்த், லிங்குசாமி, வெங்கட் பிரபு, பாண்டிராஜ் என முக்கியமான இயக்குனர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். இவர்களில் சூர்யாவுடன் அதிகபட்சமாக ஐந்து

                படங்களில் ஹரி பணியாற்றியுள்ளார். கே.வி.ஆனந்துடன் மூன்று படங்களிலும், வசந்த், பாலா, கெளதம் மேனனுடன் தலா இரண்டு படங்களிலும் பணியாற்றியுள்ளார். விக்ரம் குமார், விக்னேஷ்

                சிவன் போன்ற இளம் இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார். சுதா கொங்கராவுடன் ‘சூரரைப்

                போற்று’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நட்சத்திர நடிகர் ஒருவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.

                  Posted in சினிமா

                  தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை

                  தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை

                  தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து தற்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் நடிகை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறார்.

                  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை
                  பூஜா ஹெக்ட

                  Ethiri.com – எதிரி இணையம்


                  தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி

                  நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                  இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் தடுப்பூசி போட்டு இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

                  பூஜா ஹெக்டே
                  பூஜா ஹெக்டே

                  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகை பூஜா ஹெக்டே, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் சிகிச்சைக்குப் பிறகு தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

                    Posted in சினிமா

                    ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை

                    ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை

                    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

                    ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை?
                    ரஜினிகாந்த்
                    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்

                    ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

                    இதையடுத்து நடிகர் ரஜினியின் 169-வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

                    படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

                    இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே

                    நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

                      Posted in சினிமா

                      சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

                      சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

                      Ethiri.com – எதிரி இணையம்

                      தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டி மாஸ்டருக்கு குழந்தை பிறந்துள்ளது.

                      சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது
                      மனைவியுடன் சாண்டி மாஸ்டர்


                      தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இவர் இறுதிப்

                      போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார். சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் மகள் லாலா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ரசிகர்களை கவர்ந்தார்கள்.

                      சமீபத்தில் மனைவி சில்வியா கர்ப்பமாக இருப்பதாக சாண்டி மாஸ்டர் அறிவித்தார். பின்னர் சில்வியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி

                      வைரலானது. இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்

                      Posted in சினிமா

                      ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா

                      ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா

                      தமிழில் முன்னணி நடிகையாக வலம் நயன்தாரா, ஷாருக்கான் படத்தின் மூலம் முதல்முறையாக பாலிவுட்டில் என்ட்ரியாக இருக்கிறார்.

                      ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா
                      நயன்தாரா – ஷாருக்கான்


                      ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில்

                      ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

                      அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்

                      ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

                      ஷாருக்கான் – நயன்தாரா

                      இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக

                      உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

                        Posted in சினிமா

                        அந்த கோலத்தில் தர்ஷா குப்தா

                        அந்த கோலத்தில் தர்ஷா குப்தா

                        சின்னத்திரை சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        திருமண கோலத்தில் தர்ஷா குப்தா… வைரலாகும் புகைப்படம்
                        தர்ஷா குப்தா


                        தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. இப்படத்தை இயக்கிய

                        மோகன் ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி, இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

                        சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக

                        அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

                        தர்ஷா குப்தா
                        ரிச்சர்ட் ரிஷி – தர்ஷா குப்தா

                        இந்த நிலையில், ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிசி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

                          Posted in சினிமா

                          பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா

                          பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா

                          நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4-வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.

                          பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்
                          பவர்ஸ்டார் சீனிவாசன் – வனிதா


                          பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-

                          வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

                          சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது.

                          இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.

                          இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள்

                          பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                            Posted in சினிமா

                            தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை

                            தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை

                            கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ரஜிஷா விஜயன், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

                            தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை
                            ரஜிஷா விஜயன்


                            மலையாளத்தில் கடந்த 2016-ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு

                            விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

                            ரஜிஷா விஜயன்
                            ரஜிஷா விஜயன்

                            இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, அடுத்ததாக தெலுங்கில் அறிமுகமாக

                            உள்ளார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் ‘ராமாராவ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்க உள்ளார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்

                            Posted in சினிமா

                            படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்

                            படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்

                            நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான சாக்‌ஷி அகர்வால், படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

                            படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்
                            சாக்‌ஷி அகர்வால்


                            தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ்

                            நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்‌ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

                            மேலும் தி நைட் என்னும் படத்தில் சாக்‌ஷி அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இன்று பிறந்தநாள் காணும் சாக்‌ஷி அகர்வால், தி நைட்

                            படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

                            இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து, பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.