Posted in சினிமா

நீச்சல் உடையில் ஹன்சிகா.

நீச்சல் உடையில் ஹன்சிகா.

திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்துள்ளனர்.

நீச்சல் உடையில் ஹன்சிகா…. லைக்குகளை அள்ளிக்குவித்த ரசிகர்கள்
ஹன்சிகா


தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர்

தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஹன்சிகா
ஹன்சிகாவின் புதிய புகைப்படம்

இந்நிலையில், ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து

இருக்கிறார்கள். இதுவரைக்கும் இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளது.

    Posted in Uncategorized சினிமா

    இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்

    இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்

    மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் 2 பேருக்கு பார்வை கொடுத்து இருக்கிறார்.

    இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்
    புனித் ராஜ்குமார்


    நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், நாராயணா நேத்ராலயா கண்

    மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி, உடனே வந்து புனித் ராஜ்குமாரின் உடலில் உள்ள கண்களை தானம் செய்வதாக கூறினர்.

    புனித் ராஜ்குமார்

    இதையடுத்து டாக்டர் புஜரங்கி தலைமையிலான குழுவினர் விக்ரம் மருத்துவமனைக்கு வந்து, புனித் ராஜ்குமாரின் கண்களை எடுத்து சென்றனர். அவரின் 2 கண்கள், 2 பேருக்கு

    பொருத்தப்படும் என்றும், 2 நாட்களுக்குள் இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர்

    கூறினார். இதன் மூலம் புனித் ராஜ்குமார் இறந்த பிறகும் 2 பேருக்கு பார்வை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in சினிமா

      அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

      அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

      ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

      ‘அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
      ரஜினிகாந்த்


      நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள

      இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

      சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

      இதனிடையே, அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு

      இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

        Posted in சினிமா

        சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்

        சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்

        சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, பல்வேறு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டார்.

        சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்
        பா.இரஞ்சித், சூர்யா


        நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில்

        பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

        இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

        இந்நிலையில், நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, ஜெய் பீம் பட தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

        ஜெய் பீம் படத்தின் போஸ்டர்

        அவர் கூறியதாவது: “ஜெய் பீம் படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.இரஞ்சித் வைத்திருந்தார். அவரிடம் சென்று கேட்டபோது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், ‘ஜெய் பீம்’

        எல்லோருக்கும் சொந்தமானது, தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார். அவருக்கு நன்றி” என சூர்யா தெரிவித்துள்ளார்.

          Posted in சினிமா

          அண்ணாத்த டிரைலரை கொண்டாடிய தனுஷ்

          அண்ணாத்த டிரைலரை கொண்டாடிய தனுஷ்

          அண்ணாத்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.

          இது தலைவர் திருவிழா… அண்ணாத்த டிரைலரை கொண்டாடிய தனுஷ்
          ரஜினி


          ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கு இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி

          பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீசர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

          தனுஷ் பதிவு

          இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பல பிரபலங்களும் ரஜினியை புகழ்ந்து இந்த டிரைலரை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்

          தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘அண்ணாத்த, வின்டேஜ் ரஜினிசம், முத்து, அருணாசலம், படையப்பா படங்களின் அதிர்வுகளை பார்க்க முடிகிறது. திரையில் பார்க்க

          ஆர்வமாக காத்திருக்கிறேன். இது தலைவர் திருவிழா’ என்று பதிவு செய்து இருக்கிறார்

            Posted in சினிமா

            மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்

            மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்

            நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.

            முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்
            சவுந்தர்யா ரஜினிகாந்த் – மு.க.ஸ்டாலின்


            இளைய மகளான சவுந்தர்யாவின் ஹூட் (Hoote) ஆப்பை கடந்த திங்கட்கிழமை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக

            மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் மற்ற சமூக வலைத்தளங்கள் போல, இந்த hoote செயலி

            பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் தெரிவித்து இருந்தார்.

            ஹூட் ஆப் அறிமுக விழாவில் பேசிய சவுந்தர்யா, கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி

            வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவித்தார்.

            இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் சவுந்தர்யா. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர்

            அவர்களை சந்தித்து ‘Hoote’ App-ஐ பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

              Posted in சினிமா

              கை கட்டப்பட்ட நிலையில் இனியா

              கை கட்டப்பட்ட நிலையில் இனியா


              சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இனியா, புதிய போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

              கை கட்டப்பட்ட நிலையில் இனியா… வைரலாகும் புகைப்படம்
              இனியா


              ‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா

              இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.

              நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை சொல்லும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

              இனியா
              காபி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

              இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் கை கட்டப்பட்ட நிலையில் இனியா நிற்கும் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                Posted in சினிமா

                ரஜனிக்கு தமிழ் எழுத தெரியாது – மகள் அதிரடி பேட்டி

                ரஜனிக்கு தமிழ் எழுத தெரியாது – மகள் அதிரடி பேட்டி

                தமிழகத்தில் சூப்பர் ஸ்ட்டாராக விளங்கி வரும் ராஜனிக்கு தமிழ் எழுத தெரியாது என அவரது

                மகள் சவுந்தர்யா
                பர பரப்பாக தெரிவித்துள்ளார்

                மேற்படி விடயம் தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது

                  Posted in சினிமா

                  தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்

                  தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்.


                  ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

                  தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்
                  விஜய்


                  விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை

                  ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார்.

                  ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். இளம் தலைமுறையினரை

                  ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்களோ என்னவோ தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

                  விஜய்

                  இந்தச் செய்தி விஜய் எட்டியவுடன் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து அவர்களின் வெற்றி விபரங்களைக் கண்காணித்துச் சொல்லக் கட்டளையிட்டார். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில்

                  விஜய்யின் அலுவலகம் பரபரப்பானது. தொடர்ந்து வந்த தேர்தல் நிலவரங்களை உன்னிப்பாகக்

                  கவனித்து இறுதியாக 110 பேர் வெற்றி பெற்ற விபரம் வந்தவுடன் மக்கள் மன்றத்து ஆட்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

                  இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பல நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மக்கள் மன்ற

                  நிர்வாகிகளை நேற்று அழைத்துப் பாராட்டியிருக்கிறார். வெற்றி பெற்ற குழுவினரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.

                    Posted in சினிமா

                    தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை

                    தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை

                    சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் தன்னை புண்படுத்தின என முறையிட்டுள்ள விஜய், அதனை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.

                    நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

                    நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

                    அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். என்றாலும், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு

                    விசாரணையின்போது, பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்து தேவையற்றது.

                    உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார்

                    வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

                    இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

                      Posted in சினிமா

                      என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்..

                      என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்..

                      தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று பேசினார்.

                      என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்
                      ரஜினிகாந்த்


                      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                      மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும்

                      விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை

                      ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

                      ரஜினிகாந்த்

                      விருதை பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேசும்போது, ‘எனக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி, இந்த விருதை என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர்

                      கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி. ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என்றார்.

                        Posted in சினிமா

                        சினேகனை வாழ்த்தி சிறப்பு பரிசு கொடுத்த இளையராஜா

                        சினேகனை வாழ்த்தி சிறப்பு பரிசு கொடுத்த இளையராஜா

                        சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட பாடலாசிரியர் சினேகனை அழைத்து பரிசு கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

                        சினேகனை வாழ்த்தி சிறப்பு பரிசு கொடுத்த இளையராஜா
                        இளையராஜா – சினேகன் – கன்னிகா


                        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                        தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியை ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார்.

                        சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.

                        இளையராஜா – சினேகன் – கன்னிகா

                        சினேகன் – கன்னிகா திருமணத்திற்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துகளை

                        தெரிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, சினேகனையும் அவரது மனைவி

                        கன்னிகாவையும் தனது ஸ்டுடியோவிற்கு அழைத்து வாழ்த்தி இருக்கிறார். அதோடு சினேகனுக்கு சிறப்பு பரிசாக மோதிரம் ஒன்றை பரிசளித்து இருக்கிறார்

                          Posted in சினிமா

                          ஜான்வி கபூர் நடனத்தை பார்த்து பட வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்

                          ஜான்வி கபூர் நடனத்தை பார்த்து பட வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்

                          மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நடனத்தை பார்த்து பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

                          ஜான்வி கபூர் நடனத்தை பார்த்து பட வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்
                          ஜான்வி கபூர்


                          பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு உரியத் தொகையைப் பெற்றுக்

                          கொள்கிறார்கள். தமிழில் மட்டும்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுப்பது என்பது கௌரவக் குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது.

                          சமீபத்தில் ரன்வீர்சிங் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கலந்து கொண்டிருக்கிறார். இதில் ஜான்விக்கு வைத்த வினாடி வினா போட்டியில் ஜான்வி

                          தோற்றுப் போனார். தோற்றாலும் அவர் ரன்வீர்சிங்கிற்கு அங்கேயே மேற்கத்திய நடனம் ஒன்றை

                          ஆடிக் காட்டியிருக்கிறார். இந்த ஆட்டத்தினால் ஜான்வி கபூருக்குத் தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ரன்வீர்சிங்

                            Posted in சினிமா

                            குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்

                            குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்

                            தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

                            குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்
                            கீர்த்தி சுரேஷ்


                            தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது

                            தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

                            இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

                            கீர்த்தி சுரேஷ்

                            இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி

                            சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.3 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் அவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

                              Posted in சினிமா

                              இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

                              இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

                              இசையமைப்பாளர் இனியவன் மரணம் அடைந்த செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

                              இசையமைப்பாளர் இனியவன் காலமானார்
                              இனியவன்
                              கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை மக்கள் கேட்கும் வண்ணம் இனிய இசை வழியில் தந்தவர் இனியவன். இவர் நேற்று மாரடைப்பினால் காலமானார்.

                              அவரது மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “இசை அமைப்பாளர் இனியவன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்

                              என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மிகச்சிறந்த இசை அமைப்பாளர். தஞ்சை மாவட்டத்துக்காரர். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்திருந்தால் திரை இசையைக் கலக்கியிருப்பார்.

                              ‘கவுரி மனோகரி’ படத்தில் கே.ஜே.ஜேசுதாசும் – எஸ்.பி.பியும் இணைந்து பாடிய “அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது” பாடல் கேட்டால் இவர் ஆற்றல் புரியும். தலைவர் பிரபாகரனுக்குப்

                              பிடித்த பாடல் அது என்று ஒரு ஈழ நண்பர் என்னிடம் சொன்னார். எனது ‘ஜென்மம் நிறைந்தது’ பாடலுக்கும் இசை இவரே.

                              ஐந்து நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். நல்ல உடல் நலனோடு இருந்தார். ‘ஓடங்கள்’ பட இசை அமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் இசை உதவியாளராக இருந்து அவர் மூலம் தனக்கு அறிமுகம்

                              ஆனவர். நீண்ட கால நண்பர். இவரது உடல் சொந்த ஊரான தஞ்சைப் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

                                Posted in சினிமா

                                பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் மலையாள நடிகை

                                பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் மலையாள நடிகை


                                நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.

                                ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் மலையாள நடிகை
                                விஜய்
                                நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர்.

                                இதுதவிர மலையாள நடிகை அபர்ணா தாஸும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் அவர், நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு இப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளாராம்.

                                அபர்ணா தாஸ், விஜய்
                                அபர்ணா தாஸ், விஜய்

                                அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இப்படம் தயாராகிறது.

                                  Posted in சினிமா

                                  மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு

                                  மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு

                                  சினிமாவில் வில்லன் மற்றும் காமெடி நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

                                  மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு
                                  மன்சூர் அலிகான்
                                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                  தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூர் அலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

                                  இந்நிலையில், சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுரடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதால் அவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

                                  நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அதிகாரிகள் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

                                    Posted in சினிமா

                                    ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்

                                    ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்

                                    முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

                                    ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்
                                    நயன்தாரா


                                    94-வது ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு

                                    செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழில் 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.

                                    இதில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூழாங்கல் படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

                                    நயன்தாரா

                                    ஏற்கனவே இப்படம், இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

                                    Posted in சினிமா

                                    தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி

                                    தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி

                                    தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

                                    ‘தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி
                                    ரஜினிகாந்த்
                                    சென்னை:

                                    இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது. தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் மத்திய அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

                                    இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

                                    இந்த ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.

                                    கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் நாளை (25-ந் தேதி) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.

                                    நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது எடுத்த படம்.

                                    இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக ரஜினி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முன்பு விருது கிடைத்து இருப்பது பற்றி ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:-

                                    தாதாசாகேப் பால்கே விருது நான் எதிர்பாராதது. விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பாலச்சந்தர் அருகில் இல்லாதது வேதனை அளிக்கிறது என்றார்.

                                    டைரக்டர் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதே விருதை பாலச்சந்தரும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இந்த விருதை பெற்றவர் ஆவார்.

                                    டெல்லியில் நடைபெறும் விழாவில் தங்கத்தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது.

                                      Posted in சினிமா

                                      விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி.

                                      விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி.

                                      மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                      நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு
                                      விவேக்
                                      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                      தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

                                      மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

                                      இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

                                      விவேக்

                                      இந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் உயர் ரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது.