Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா
நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா
பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட நடிகைக்கு உதவி இருக்கிறார்.
நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா
சமந்தா
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அடுத்து இந்தி படங்களிலும் நடிக்க இருக்கிறார். அத்துடன் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சமூக சேவை பணிகளுக்கும்
செலவிட்டு வருகிறார். ஏழை சிறுமிகளுக்கு கல்வி கற்கவும் உதவி வருகிறார். சமீபத்தில் நடிகர்
பவன் கல்யாண் கூட சமந்தாவிடம் இதுபோன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டினார்.
சமந்தாவிடம் உதவி பெற்றவர்களில் ஒரு நடிகையும் இருக்கிறார். அந்த நடிகையின் பெயர் தேஜஸ்வி மாதிவாடா. இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்
பங்கேற்றும் பிரபலமானார். தேஜஸ்வி மாதிவாடா கூறும்போது, “சிறுவயதிலேயே தாயை இழந்து
தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன்.
சமந்தா
சமந்தா – தேஜஸ்வி மாதிவாடா
இந்நிலையில் எனக்கு ‘டிபி’ நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள
பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்” என்று தெரிவித்துள்ளார்.
கல்யாணம் முடிக்காம -ஒன்றா வாழ போறாங்க – அந்த நடிகை
கல்யாணம் முடிக்காம -ஒன்றா வாழ போறாங்க – அந்த நடிகை
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார்.
லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே… ரைசா வில்சன்
ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடலான
இவர் இதற்கு முன்பே தனுஷ் நடித்திருந்த “வேலையில்லா பட்டதாரி 2“ படத்தில் நடிகை காஜோலுக்கு உதவியாளராகவும் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு நடிகை ரைசா வில்சன் “பியார் பிரேமா காதல்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்ஷுடன் “காதலிக்க யாருமில்லை“, நடிகர்
விஷ்ணு விஷாலுடன் “எஃப்ஐஆர்“, நடிகர் பிரபுதேவாவுடன் “பொய்க்கால் குதிரை”, “திசேஸ்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை ரைசா வில்சன் ரசிகர்களுடன் வீடியோ
உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் “லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா?“ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ரைசா வில்சன்
இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, “லிவ்விங் டுகெதர் ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால்
அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்“ என்று பதிலளித்துள்ளார்.
38 வயதில் திருமணம் செய்த நடிகை
38 வயதில் திருமணம் செய்த நடிகை
தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லட்சுமண், டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை
கணவருடன் நடிகை சந்திரா லட்சுமண்
தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லட்சுமண்.
மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
சந்திரா லட்சுமண் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை
காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் சந்திரா லட்சுமண் தெரிவித்தார்.
சந்திரா
இந்த நிலையில் சந்திரா லட்சுமண்-டோஷ் கிறிஸ்டி திருமணம் கேரளாவில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து
கொண்டனர். இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிகினி உடையில் லுங்கி டான்ஸ்.
பிகினி உடையில் லுங்கி டான்ஸ்.
பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிகினி உடையில் லுங்கி டான்ஸ்… ஜான்வி கபூர் புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.
ஜான்வி கபூர் தற்போது தனது தங்கை குஷியுடன் விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு அவருடைய சுற்றுப் பயணத்தின் சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குஷி சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, “99 பிரச்சினைகள், ஆனால், பீச் அதில் ஒன்றல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
ஜான்வி கபூர்
ஆனால், ஜான்வி ‘லுங்கி டான்ஸ்’ என்று மட்டும் குறிப்பிட்டு பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு
ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு
மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு
பா.ரஞ்சித்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில்
நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி விமர்சித்தார்.
இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்து அமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம்
தெரிவித்தன. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
ரஞ்சித்
இந்நிலையில், ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாக இயக்குநர்
பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே குறிப்பிட்டதாக பா.ரஞ்சித் பதில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
முதலிரவில் என்ன செய்வார்கள்- நடிகை
முதலிரவில் என்ன செய்வார்கள்- நடிகை
லவ் யூ ரச்சூ என்கிற கன்னடப் படத்தில் நடித்துள்ளார் நடிகை ரச்சிதா ராம்.
2013 முதல் கன்னடப் படங்களில் நடித்து வரும் ரச்சிதா, லவ் யூ ரச்சூ படத்தில் அஜய் ராவுடன்
நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் காதல் காட்சிகள் குறித்த கேள்விகள்
கேட்கப்பட்டன. இதற்கு அவர் பதில் அளித்ததாவது:
இங்குப் பலரும் திருமணம் செய்தவர்களாக உள்ளீர்கள். உங்களை யாரும் சங்கடப்படுத்த
விரும்பவில்லை. பொதுவாக முதலிரவில் என்ன செய்வார்கள்? ரொமான்ஸ் தானே செய்வார்கள்! அதுதான்
படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகளில் நான் நடிப்பதாக இருந்தால் அதற்குக்
காரணம் இருக்கும். படத்தைப் பார்க்கும்போது அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்றார்
அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை
அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை
தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்கிறாராம்.
அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை
தமிழ் சினிமாவில் ஒல்லி நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து விட்டாராம். இதனால் தான் பெரிய நடிகை என்று எனக்கு ஆரம்பித்துவிட்டாராம்.
தற்போதைய தன்னை அணுகும் புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்கிறாராம். தான் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டதால் தனக்கு ரசிகர் கிடைத்துவிட்டதாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாராம்
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு
சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் விஜய் -சூர்யா இருவரும் திடீரென சந்திந்துக் கொண்டனர்.
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு
சூர்யா – விஜய்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று
வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.
சூர்யா – விஜய்
இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில்
படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று
வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் – சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம்
ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன்
லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் – டோவினோ தாமஸ்
‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின்
மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வாஷி படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா
இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா
ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா
சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ஜெய்
பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக
கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா
சூர்யா – சிவா
ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான், 24 உள்ளிட்ட சில படங்களில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்
ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்
பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்
ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் ‘கிராண்மா’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை
ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.
மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சோனியா அகர்வால்
சோனியா அகர்வால் – விமலா ராமன்
கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையிலும்
காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
இப்படத்தை ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில்
தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷன் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்
எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷன் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கான பத்ம விபூஷன் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார்.
எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷன் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்
விருதை பெறும் எஸ்.பி.சரண்
பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன்,
பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. மொத்தம் 119 பேர் விருதுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
இதில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 29 பேர்
பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். இறந்துவிட்ட 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
எஸ்.பி.சரண்
பத்மவிருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த நிகழ்வில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணித்திற்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண்
பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி
சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம்
மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.
இதனால், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், அந்தவகையில்,
நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவருடன், அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, புனித் ராஜ்குமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பெரியவர் அய்யா ராஜ்குமார் எனது தாத்தாவுடன் நட்பு பாராட்டியவர்.
நெருக்கமாக இருந்தவர். எனது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த
நேரத்தில் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்து தலைவர் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை
ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை
பிரபல நடிகை ஒருவர் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை… வைரலாகும் வீடியோ
லட்சுமி மேனன்
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’கும்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’
உள்பட பல படங்களில் நடித்தார். மேல்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
லட்சுமி மேனன்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தியேட்டரில் விஜய் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
தியேட்டரில் விஜய் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடித்த திரைப்படம் ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதை உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
தியேட்டரில் விஜய் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
விஜய்
கொரோனா பரவல் பிரச்னையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது கேரளா. நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகளவில் கோவிட்-19 வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக அங்குள்ள திரையரங்குகள் எதுவும் இயங்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
விஜய்
மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை கொண்டு வரும் நோக்கில், விஜய் நடித்த கில்லி
திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் கூட்டமாக கூட்டமாக வந்து ரசிகர்கள் குவிந்து கில்லி படம் பார்த்துள்ளனர்.
காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன்
காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன்
அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தான் நடித்த படத்தின் விழாவில் தனது காதலிக்கு புரபோஸ் செய்து அசத்தி இருக்கிறார்.
பட விழாவில் காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன்
கார்த்திகேயா
அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர் கார்த்திக்கேயா. இவர் ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில்
நடந்த போது தனது காதலிக்கு அவர் முழங்காலிட்டு மலர் கொடுத்து புரபோஸ் செய்து இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கார்த்திகேயா
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடிகர் கார்த்திக்கேயாவுக்கும் லோகிதா ரெட்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் தனது காதலை படக்குழுவினர்
முன்னிலையில் புரபோஸ் செய்த கார்த்திகேயா தங்களது திருமணம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்த திருமணத்தில் இரு வீட்டார் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
12 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் பிரபல நடிகை
12 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் பிரபல நடிகை
வண்ண வண்ண பூக்கள்” படம் மூலம் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்களின் மனதை கிறங்கடித்த நடிகை வினோதினி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.
12 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் பிரபல நடிகை
வினோதினி
இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும்
இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது. கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர
வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர்.
வினோதினி
திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புக்கள் தேடி வருவதால் மீண்டும் நடிப்பில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர் இவர்தான்
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர் இவர்தான்
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர் இவர்தான்
பிக்பாஸ் 5 லோகோ
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன்
நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்
படலம் நடக்கும். அதன்படி இதுவரை, நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக, சுருதி
வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் சக்தி
கொண்ட காயின் சுருதி வசம் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இவரால் -குறி வைக்க பட்ட விஜய்
இவரால் -குறி வைக்க பட்ட விஜய்
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இயக்குனர் சிவாவின் அடுத்த டார்கெட் விஜய்
இயக்குனர் சிவா, விஜய்
தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம்,
வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம்
தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.
அடுத்ததாக சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ள இயக்குனர் சிவா, அதன்பின் விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் நடித்த பத்ரி படத்தில் தான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியதாகவும்,
அப்போதிலிருந்தே, தனக்கும், விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருவதாகவும் இயக்குனர் சிவா கூறியுள்ளார்.
கலக்கிய வடிவேலு – குஷியில் ரசிகர்கள் video
கலக்கிய வடிவேலு – குஷியில் ரசிகர்கள்video
வைகை புயல் வடிவேலு இல்லாத படங்கள் இல்லை எனலாம் ,ஆனால் சில இடைவெளியின் பின்ன
அதன் பின்னர் தற்போது புதிய ஆட்சி
தமிழகத்தில் வந்தான் பின்னர் தற்போது முதன் முறையை தொலை காட்சி ஒன்றில் பர பரப்பாக
வழங்கிய நேர்காணல்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்











