பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு.

Spread the love

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு.

வீடு மற்றும் ஓட்டல்களில் இருக்கும் மெத்தைகளில் மூட்டைப் பூச்சிகளைக் கண்டால் உடனே அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு

பிரான்ஸ் நாடு தற்போது ஒரு வினோதமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அளவுக்கு அதிகமாக உள்ளது. படுக்கும் மெத்தைகளை

குறிவைக்கும் இந்த மூட்டைப் பூச்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வீடு மற்றும் ஓட்டல்களில் இருக்கும் மெத்தைகளில் அதிக மூட்டைப்

பூச்சிகளைக் கண்டால் உடனே அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என்று அந்த நாட்டு அரசு

அறிவித்துள்ளது. மேலும் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்கும் வரை மெத்தை மற்றும் சோபாக்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மூட்டைப் பூச்சிகள் கொசுக்களை போல் மனிதர்களை கடிக்கும் தன்மை கொண்டது. ஒரு இரவில் 90 முறை கடிக்குமாம்.

இவை எந்த நோய் தொற்றையும் உண்டாக்காது என்றாலும், அவை கடிக்கும் இடங்களில் தோல் சிவத்தல், அரிப்பு, வீக்கம் போன்றவை

ஏற்படும். 100 நாட்களுக்குள் அனைத்து மூட்டைப் பூச்சிகளையும் ஒழிக்க வேண்டும் என பிரான்ஸ் அரசு சபதம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை

Leave a Reply