Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வவுனியாவில் இ.போ.சபை பேருந்துகள் செய்யும் வேலை
வவுனியாவில் இ.போ.சபை பேருந்துகள் செய்யும் வேலை
வவுனியாவில் இ.போ.ச பேரூந்து சேவைகள் உள்ளூர் சேவைகள் நேரகாலத்தில் முறையாகவும், சரியாகவும்
இடம்பெறுவதில்லை. இதனால் சரியான நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியவில்லை எனவும் பணம்
கொடுத்து பெற்றுக்கொள்ளப்பட்ட பருவகால பயணச்சீட்டுக்கள் பலனளிக்கவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா இ.போ.ச பேரூந்து சாலையிலுள்ள பேரூந்துகள் அதிகளவில் வெளிமாவட்டங்களை நோக்கிச் செல்கின்றன. வவுனியாவிலுள்ள கிராமப்புறங்களுக்கு உரிய நேரத்திலும்,
முறையாகவும் இடம்பெறுவதில்லை. இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன்
பாடசாலை ஆரம்பமாகிய பின்னரே பாடசாலைக்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.
அத்துடன் கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களிலுள்ள வியாபார வர்த்தக நிலையங்களில் பணியாற்றும்
இளைஞர்கள், யுவதிகள் பேரூந்து உரிய நேரத்தில் இடம்பெறாமையினால் உரிய நேரகாலத்தில் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா இ.போ.ச சாலையினால் வவுனியாவிலுள்ள மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இ.போ.ச சாலையினால் மேலும் மாணவர்கள் உட்பட பலர்
நிர்க்கதி நிலைக்குக்தள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலைமைகளை அகற்றி பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பான
சேவைகளையும் தன்னிறைவான சேவைகளையும் வழங்க வவுனியா இ.போ.ச சாலை முன்வரவேண்டும் என்று மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் குறித்து வவுனியா இ.போ.ச சாலையின் முகாமையாளர் எச்.சாஹிருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
வவுனியா சாலைக்கு 15 பேரூந்து சாரதிகளும், நடத்துனர்களும் தேவைப்படுகின்றனர். இவ்வாறான ஆளணிப்பற்றாக்குறை காரணமாக
கிராமப்புறங்களுக்கான சேவைகள் மேற்கொள்ள முடியவில்லை. போதியளவு பேரூந்துகள் சாலையில் காணப்படுகின்ற போதிலும் ஆளணி பற்றாக்குறையை
நிவர்த்தி செய்து தருமாறு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தர்மபால, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளாக கே. காதர் மஸ்தான்,
ரிஷாட் பதியூதீன் மற்றும் இ.போ.ச போக்குவரத்துச்சபைப்ணிப்பாளர் ஆகியோரிடம்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் பகிடிவதை விசாரணைகள் ஆரம்பம்
யாழ் பகிடிவதை விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் தற்பொழுது குற்ற புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இவ்வாறு ஆரம்பிக்க பட்டுள்ள இந்த விசாரணைகளின் மூலம் பலியான மாணவிக்கு தீர்வு கிடைக்குமா ..? மேலும்
சில மாணவர்களை மிரட்டி வந்த இந்த கயவர்கள் தண்டிக்க பட்டு தகுந்த தண்டனை வழங்க படுமா ..?
இலங்கையின் நீதி விசாரணைகள் அரசியல் கலப்பு இன்றி நேரிய முறையில் நடக்குமா ..?
வரும் காலத்தில் மேலும் மாணவர்கள் இவ்விதம் பாதிக்க
படாது காப்பற்ற படுவார்களா என்ற கேள்வியே தற்பொழுது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

மாங்குள வைத்தியசாலைக்குள் மனித எச்சங்கள்
மாங்குள வைத்தியசாலைக்குள் மனித எச்சங்கள்
மாங்குள வைத்தியசாலைக்குள் புதிய கட்டடம் அமைக்கும்
முயற்சிகளில் ஈடுபட்ட பொழுது அங்கிருந்து மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன .
மேலும் கண்ணிவெடிகள் உள்ள நிலையிலும் அதனை
மீட்கும் பணிகளும் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
தொடர்ந்து இராணுவம் ,போலீசார் குவிக்க பட்டு தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்
வாள்வெட்டு காயங்களுடன் வீதியில் கடந்த மனித உடல்
வாள்வெட்டு காயங்களுடன் வீதியில் கடந்த மனித உடல்
இலங்கை தெகிவளை பகுதியில் பலத்த வெட்டு
காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் ஒருவர் மீட்க பட்டு
வைத்திய சாலையில் அனுமதிக்க பட்ட பொழுதும்
சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
இந்த படு கொலைகளுக்கான கரணம் உடனடியாக
தெரியவரவில்லை, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் பகிடிவதை புரிந்த மாணவர் வீடு அடித்து நொறுக்கு
யாழில் பகிடிவதை புரிந்த மாணவர் வீடு அடித்து நொறுக்கு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை குற்றசாட்டை புரிந்த மாணவரின் வீட்டுக்குள் புகுந்த
நால்வர் அடங்கிய குழு அந்த மாணவனை தேடியுள்ளனர் ,அவர் அங்கு இல்லாத நிலையில் அங்கு நிறுத்தி வைக்க
பட்டிருந்த கார் ,மற்றும் மோட்ட சைக்கிள் என்பனவற்றை அடித்து நொறுக்கி விடுதி தப்பி சென்றுள்ளனர்
மாணவி ஒருவர் பாலியல் பால்தாக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் ஐவர் இவ்வாறு பல்கலை
கழகத்திற்குள் உள்நுழைய தடை விதிக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

காதலி கர்ப்பம் – காதலன் கைது -காட்டி கொடுத்த காதலி
காதலி கர்ப்பம் – காதலன் கைது -காட்டி கொடுத்த காதலி
இலங்கையில் தாய் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாலும் ,தந்தை வேறு மனம் முடித்து விட்ட
நிலையிலும் ,தனிமையில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர்
தனது காதலனை வீட்டுக்கு அழைத்து இன்புற்று மகிழ்ந்துள்ளார் .
சம்பவ தினம் அன்று தந்தையார் ர் இவரது செயலை அறிந்து காதலின் வீட்டுக்கு வரவே அவரிடம் பழகிடவோ
பேசிடவோ கூடாதது என மிரட்டியுளளார் .அத்துடன் வாறு புரிந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்
இதனால் மன வீரகத்தி அடைந்த மகள் அருகுகில் உள்ள கங்கையில் குதித்து தற்கொலை செய்ய முனைந்துளளர் .
இந்த பெண் அங்குள்ள கங்கை அருகே நீண்ட நேரமாக இருப்பதை அவதானித்த மக்கள் பொலிசாருக்கு தகவல்
வழங்கிய நிலையில் அவர் காப்பாற்ற பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
மருத்துவ சோதனையில் அவர் கர்ப்பமாக உள்ளது தெரிய வந்துள்ளது
தற்போது காதலன் பலத்தகார வழக்கின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்

தீயில் எரிந்த புத்த விகாரை – நடந்தது என்ன …?
தீயில் எரிந்த புத்த விகாரை – நடந்தது என்ன …?
இலங்கை கென்காலா பகுதியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றுக்குள் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த விகாரையின் மூன்றாவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
எனினும் இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவிலை
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்திய கடலில் நில நடுக்கம் – சுனாமி அபாயம் தவிர்ப்பு
இந்திய கடலில் நில நடுக்கம் – சுனாமி அபாயம் தவிர்ப்பு
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 2.34 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி
முன்னெச்சரிக்கை நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை இன்று அதிகாலை 2.34
மணிக்கு விடுக்கப்பட்டிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை, இலங்கையின் கரையோர பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா சென்ற மகிந்தா நாடு திரும்பினார்
இந்தியா சென்ற மகிந்தா நாடு திரும்பினார்
இலங்கையின் அளவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸா இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு சென்றிருந்தார்
அவர் இன்று மீளவும் தனது தாய் நாடாம் இலங்கை திரும்பினார் .
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சென்ற அவர் ,முக்கிய பேச்சுக்களில் ஈடுபடடார் ,இதில் தமிழர் விடயம் தொடர்பிலு பேச பட்டதாம் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் -நாள் தோறும் 60 பேர் கான்சர் நோயால் பாதிப்பு
இலங்கையில் -நாள் தோறும் 60 பேர் கான்சர் நோயால் பாதிப்பு
இலங்கையில் நல்தோறும் அறுபது முதல் எழுபது பேர் கான்சர் நோயால் பாதிக்க பட்டு வருவதாக இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டுப்படுத்த பலவேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்ட
பொழுதும் இதனை தடுக்க முடியவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

சர்வதேச விமான நிலையமாக உயரும் – மாத்தள விமான நிலையம்
சர்வதேச விமான நிலையமாக உயரும் – மாத்தள விமான நிலையம்
மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வருகை தரும் விமான நிலையமாக மேம்படுத்துவதற்காக
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. விமான நிலையம் மற்றும்
விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத் திட்டத்திற்கு உரிய பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பில் சகல விமான
நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். சர்வதேச விமான நிறுவனங்களுடனும்
பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக சந்திர ஸ்ரீ தெரிவித்தார்.
கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் மத்தள விமான நிலையத்தின் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் விமான சேவைகள் அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இந்த விமான
நிலையத்தை அபிவிருத்தி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு முன்பாக போராட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு முன்பாக போராட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் நோக்கி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை
மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள்
கலந்துகொண்டு பாலியல் வன்முறை மற்றும் பகடி வதைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொரனோ வைரஸ் தாக்குதல் 1011 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதல் 1011 பேர் பலி
சீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது
உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் 25க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் வௌவால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என
கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்றுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 908 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 ஆயிரத்து 640
பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, வைரஸ் பாதிப்பிற்கு தற்போதைய நிலவரப்படி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கூடுதலாக 2 ஆயிரத்து 97 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ்
பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.

புஸ்ஸல்லாவை – சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகருமான மலையக காந்தி கே. இராஜலிங்கம் அவர்களின் 57ஆவது சிரார்த்த தினம் இன்று
இ.தொ.காவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் புஸ்ஸல்லாவை – சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகருமான மலையக காந்தி கே. இராஜலிங்கம்
அவர்களின் 57ஆவது சிரார்த்த தினம் இன்று (11.02.2020) புஸ்ஸல்லாவ சங்குவாரி தோட்டத்தில் அமைந்துள்ள அனனாரின் சமாதியில்
நினைவு கூரப்பட்டது.
இந் நிகழ்வில் அன்னாரின் குடும்பத்தார் உட்பட அவரின் கனவு பாடசாலையான சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள்
நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துக் கொண்டதுடன் சமாதியில் 02 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தபட்டு
பாடசாலையின் கீதம் இசைக்கப்பட்டு நினைவு சுடர் ஏற்றி நினைவு கூரப்பட்டது.
மலையக மக்களுக்கு கல்வி கண் திறப்பதற்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சொத்துகளையெல்லாம் விற்றுஇ
கிடைத்த அரச சேவையையும் துறந்து – திருமணம் கூட முடிக்காமல் செத்து மடியும்வரையும் மக்களுக்காகவே
வாழந்த மலையக காந்தி கே. இராஜலிங்கம் ஐயாவின் 57ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படடது
அடக்குமுறையாலும் வறுமையின் கோரத்தாண்டவத்தாலும் வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்களின் வாழ்வில் ஒளிபிறக்கவேண்டி தமது வாழ்வையே
அர்ப்பணிப்பவர்களையும் சொத்து பணமென அனைத்தையும் மக்களுக்காகவே வாரிவழங்கிய எவ்வித
பந்தாவும் கட்டாமல் எளிமையாகவே வாழ்ந்து மடியும் மனிதர்களை இன்றைய நவீன உலகில் சினிமாப்படங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் நிஜவாழ்விலும் இப்படியான மகான்கள் வாழ்ந்திருந்தாலும் அவர்கள் தற்புகழை தேடிச்செல்லாததால் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு
செய்யப்பட்டுள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். அத்தகையவர்களை இன்றைய தலைமுறையினருக்கு
அறியப்படுத்துவதுதான் பச்சை தங்கத்தின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும்.
இப்படிதான் மலையக மக்களுக்கு கல்விகண் திறப்பதற்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சொத்துகளையெல்லாம் விற்றுஇ
கிடைத்த அரச சேவையையும் துறந்து – திருமணம்கூட முடிக்காமல் செத்து மடியும்வரையும் மக்களுக்காகவே
வாழந்தவர்தான் மலையக காந்தியென போற்றப்படும் கே. இராஜலிங்கம்.
இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகவும் அன்று இலங்கை இந்திய காங்கிரஸாகவும் இருந்த அமைப்பின் ஸதாபகப் பொதுச்செயலாளர் இவர்தான். அவ்வமைப்பின்
தலைமைப்பதவியையும் அலங்கரித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டவர். புஸல்லாவை – சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகர்.
தோட்டத்தொழிலாளர்களுக்காக இவர் செய்த சேவைகளையும் தியாகங்களையும் வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரித்துவிடமுடியாது.
இப்படியானதொரு மகானை வரலாற்று ஏற்றில் இடம்பெறவைக்கும் நோக்கில் அவர் வாழ்ந்த வீடுதேடி சென்று தகவல்களை திரட்டியது பச்சை தங்கம் குழு. பல
வியக்கவைக்கும் தகவல்களை கிடைத்ததுடன்இ அடஇ நம் மலை மண்ணில் இப்படியும் தலைவர்கள் வாழ்ந்துள்ளனரேயென நெஞ்சமும் நிமிர்ந்துநின்றது.
பிறப்பும் கல்வியும்
18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பெரும் பஞ்சத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி
தொழிலாளர்களை கைக்கூலிகளாக இலங்கை அழைத்துவந்தது முதலாளி வர்க்கம்.
இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களில் ராமன் என்பவரும் ஒருவர். ( 1930 – ராஜலிங்கத்தின் தாத்தா) கம்பளையிலிருந்து புஸல்லாவை நோக்கி செல்லும் வழியிலுள்ள சங்குவாரி
தோட்டத்தில் குடியேறினார். கடின உழைப்பால் காலப்போக்கில் பெரிய கங்காணியாகவும்
நியமிக்கப்பட்டார். இவரின் மூத்த மகன்தான் காளிமுத்து. இவரும் சங்குவாரி தோட்டத்தில் பெரிய கங்காணியாக பதவிவகித்தார்.
காளிமுத்து கங்காணிக்கும்இ காளியம்மாலுக்கும் பிறந்த ஆறுக்குழந்தைகளில் மூத்தவர்தான் நமது நாயகன் கே.
ராஜலிங்கம். 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி பிறந்த அவர்இ சிறுவயது முதலே கல்விமீதும்இ சமூகம்மீதும் அதிக பற்று வைத்திருந்தார். தனது தந்தை பெரிய
கங்காணியென்பதால் ஆரம்பக் கல்வியை கம்பளைஇ அன்றூஸ் கல்லூரியில் பயின்றார்.
உயர்கல்வியை கண்டிஇ புனித அந்தனீஸ் கல்லூரியில் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர்இ தமிழ்இ
ஆங்கிலமென இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். சர்வதேச பரீட்சைகளிலும் சித்தியடைந்தார்.
இதனால்இ தமது பாடசாலைக்கே இவரை ஆசிரியராக நியமித்தது பாடசாலை நிர்வாகம்.
சரஸ்வதி பாடசாலை உதயம் – 1932
தொழிலுக்கு இவர் பாடசாலை செல்லும்போதுஇ தோட்டப்பகுதியிலுள்ள பிள்ளைகள்இ தேயிலை மலைகளுக்கோரம் காலை முதல் மாலைவரை இருப்பதை
கண்டுள்ளார். ஏன் எமது மக்கள் இவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர்இ ஓரங்கட்டப்படுகின்றனர் என சிந்தித்த அவர்இ தோட்டப்பகுதி பிள்ளைகளுக்கு கல்வி
அமுதூட்டும் முடிவுக்கு வந்தார். இதனால்இ ஆசிரியர் பதவியை துறந்து – சங்குவாரி தோட்டத்தில் கூடாரம்
அமைத்து பாடசாலை அமைத்தார். தோட்டங்களுக்கு சென்று கல்வி விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தினார்.
இதற்காக தனது தந்தையிடமும்இ சகோதரர்களிடமுமே பணம் பெற்றார். ஏனைய தோட்டப்பகுதிகளிலுமுள்ளவர்கள்
பயிலவேண்டும் என்ற நோக்கில் புஸல்லாவை சரஸ்வதி வித்தியாலயத்தை 1932 இல் ஆரம்பித்தார்.
தனது தந்தைக்கு சொந்தமான தேயிலை தோட்டமொன்றை விற்பனை செய்தே பாடசாலை நிறுவினார். ( கம்பளையிலிருந்துஇ புஸல்லாவை செல்லும் வழியில்இ
அட்டபாகை எனும் நகரம் தாண்டியதும் உள்ள பாஸ்ரோக் தோட்டமே விற்கப்பட்டது). அதன்பின்னர்
ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட சேவைகளுக்காக வீட்டிலிருந்து தங்க ஆபரணங்கனை விற்பனை செய்தார்.
குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் எதிர்த்துள்ளனர். எனினும்இ மக்களுக்காக அனைத்தையும் அவர் செய்தார். இதனால்இ அவரது தந்தையும்இ சகோதரர்களும்
பொருளாதாரமட்டத்தில் கீழிறங்கினர். இவரால் ஆரம்பிக்கப்பட்ட சரஸ்வதி வித்தியாலயம்இ இன்று ஒரு தேசிய பாடசாலையாக சிறந்து விளங்குகின்றது.
தோட்டப்பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். சமூக மாற்றத்துக்கு கல்விபுரட்சியே சிறந்த வழி. அதை அன்றே உணர்ந்தவர்தான் கே. இராஜலிங்கம்.
இலங்கைஇ இந்திய காங்கிரஸ்உதயம் – 1939
இலங்கைஇ இந்திய காங்கிரஸ் 1939 ஆம் ஆண்டு உதயமானது. மகாத்மா காந்தியின் சிறப்பு பிரதிநிதியாக நேரு கொழும்பு வந்திருந்தார். அவரின்
மத்தியஸ்தத்துடனேயே அவ்வமைப்பு உதயமானது. அதன் ஸ்தாபகப் பொதுச்செயலாளராக இராஜலிங்கமே நியமிக்கப்பட்டார்.
காந்தி நேரு ஆகியோர் இலங்கை வந்தபோதெல்லாம் அவர்களை சந்தித்து பெரும் வரவேற்றை பெற்றிருந்ததால் இவர்களின் ஆசியுடனேயே பொதுச்செயலாளர் பதவி
அவருக்கு வழங்கப்பட்டது. தனது பேச்சை உரைபெயர்ப்பதற்கு இராஜலிங்கத்தையே நேரு அழைப்பார்.
1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது மாநாடு கம்பளையில் நடைபெற்றது. தொண்டமானுடன் இணைந்து இவரே
மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். 47 முதல் 50 வரை இதொகாவின் தலைவராகவும் பதவிவகித்தார். அன்று சந்தாப்பணம் இருக்கவில்லை. இதனால் சொந்த பணத்தை
பயன்படுத்தியே இவர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். ஜெனிவா மாநாடு உட்பட பல இடங்களுக்கு சொந்த பணத்திலேயே தொழிலாளர்களுக்காக சென்றுள்ளார்.
சௌமியமூர்த்தியின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்தவர். ஏன் தளபதி என்றுகூட சொல்லாம். அஸீஸ் வெள்ளையன் வேலுப்பிள்ளையென முக்கிய தலைவர்கள்
கட்சிலிருந்து வெளியேறும்போது தொண்டமானுக்கு பக்கபலமாக இவரே கைகொடுத்தார். 42 இல் அஸீஸ் காங்கிரஸை கைப்பற்றியபோது – தொண்டமான் பக்கம்
நின்று குரல்கொடுத்தார். இப்படி இன்றுள்ள இ.தொ.காவின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்குண்டு.
போராட்டக்களத்திலிருந்தவர்களுக்காக காரைவிற்று பணம்கொடுத்த கர்ணன்
தொழிலாளர்களுக்காக அவர் பல இடங்களுக்கு செல்வதால்இ தந்தையால் காரொன்று வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. நாவலப்பட்டியஇ லட்சுமி
தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சென்றிருந்த அவர்இ அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பதை அறிந்தார். உடனே காரை விற்பனை செய்த
அவர்இ அந்த பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிவிட்டுஇ பாதி தூரம் கால்நடையாகவும்இ மீதி தூரம்
பஸ்ஸிலூமாக வீடுவந்து சேர்ந்தார். தொழிலாளர்களின் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
1947 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர் எந்தவொரு சலுகையையும் பெற்றதில்லை. திருமண வாழ்வில்
இணைந்தால் குடும்பத்தை சுமக்கவேண்டிவரும் என்பதால் அதை நிராகரித்தவர். இப்படி மக்களுக்காகவே வாழ்ந்தவர்.


மலையகத்தின் சர்வதேச விளையாட்டு சாதனையாளர்களுடன் இணைந்து புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் நடைபெற்ற 2020 மெய்வள்ளுனர் விளையாட்டு போட்டி
மலையகத்தின் சர்வதேச விளையாட்டு சாதனையாளர்களுடன் இணைந்து புஸ்ஸல்லாவ சரஸ்வதி
மத்திய கல்லூரியில் நடைபெற்ற 2020 மெய்வள்ளுனர் விளையாட்டு போட்டி
மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் 2020 வருடாந்த மெய்வள்ளுனர் இல்ல
விளையாட்டு போட்டிகள் மலையகத்தின் சர்வதேச விளையாட்டு சாதனையாளர்களுடன் இணைந்து நடாத்தபட்டது. 10.02.2020
பாடசாலையின் அதிபர் ஆர்.எஸ்.ரவிசந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு அதிதிகளாக மத்திய மாகாண கல்வி உதவி கல்வி
பனிப்பாளர்கான திருமதி வி.அமுதவள்ளி எஸ்.தாமோதரம் கம்பளை கல்வி வலயத்தின் மேலதிக கல்வி பனிப்பாளர்களான சி.வி.கணேசன்¸ எஸ். கிருஸ்ணபிள்ளை
புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.பலிபான¸ விசேட அதிதிகளாக மலையகத்தின் சர்வதேச விளையாட்டு சாதனையாளர்களான ஒட்ட வீரர்களான
எம்.அஜந்தன்¸ கே. சந்திரதாஸ்¸ எம். மனோகரன்¸ தடை தாண்டல் வீரர் எம்.சத்தியசீலன்¸ உலக தடகள போட்டி வீரர
து.விஜிந்த் உட்பட அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்
போட்டிகளில் ஓட்டம்¸ அஞ்சல் ஒட்டம்¸ உடற்பயிற்சி¸ பழைய மாணவ மாணவிகளுக்கான போட்டிகள்¸
பெற்றோர்களுக்கான போட்டிகள் மரியாதை அணிவகுப்பு பரிசில்கள் வழங்கள் அதிகள் உரைகள் ஆகியன நடைபெற்றன
இராஜலிங்கம் இல்லம் நடேசன் இல்லம் சேதுகாவலர் இல்லம் என மூன்று இல்லங்களுக்கு இடையோ நடைபெற்ற இந்த மெய்வள்ளுனர் விளையாட்டு போட்டிகளில்
சேதுகாவலர் இல்லம் 705 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. நடேசன் இல்லம் 685 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் இராஜலிங்கம் இல்லம் 665
புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றது. இல்லங்களின் பெயரை பொருத்தவரையில் இராஜலிங்கம்
இந்த பாடசாலையின் முதல் அதிபர் சேதுகாவலர் முதல் ஆசிரியர் நடேசன் முதல் மாணவன் என்பதும் குறிப்பிடதக்கது.



தனக்கு நியமனம் மொட்டிலா, நாற்காலியிலா என்றுக்கூட தெரியாத எஸ்பி. திசாநாயக்க, இராதாவை பற்றி உளறுகிறார்.மனோ கணேசன்
தனக்கு நியமனம் மொட்டிலா, நாற்காலியிலா என்றுக்கூட தெரியாத எஸ்பி. திசாநாயக்க, இராதாவை பற்றி உளறுகிறார்.மனோ கணேசன்
எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், எமது கூட்டணியின் சார்பில் நாம் உருவாக்கிவரும் புதிய எதிரணி கூட்டணியில் நுவரேலியா மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுவார். அதை நமது கூட்டணியும், கூட்டணி கட்சியான மலையக மக்கள் முன்னணியும், நமது மக்களும் கவனித்து கொள்வார்கள்.
எஸ்.பி.திசாநாயக்க, தனக்கு எங்கே வேட்பாளர் நியமனம் கிடைக்க போகின்றது என்பதை பற்றி கவலை பட வேண்டும். அவரது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை,
பொதுஜன பெரமுன கழற்றி விட்டு விட்டது. எனவே மொட்டுக்கும், நாற்காலிக்கும் இடையில் வௌவால் போல பரிதவித்து தொங்கும் எஸ். பி. திசாநாயக்க, முதலில்
தன்னை பற்றி கவலைப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் எம்பி, தங்களுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்துகிறார் என முன்னாள்
அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்த கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் எம்பி, திசாநாயக்காவின் கூற்றை
மறுத்து, தான் அத்தகைய எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மறுத்து தான் கூட்டனியின் வேட்பாளாராக புதிய எதிரணி கூட்டணியிலேயே
போட்டியிட போவதாக கூறியிருந்தார். இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த தேர்தலில் தோல்வியடைந்து, பின்னர் நாம் பதவிக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபாலாவின் தோளில் தொங்கி, தேசிய பட்டியல் நியமனம் பெற்று, பாராளுமன்றம்
வந்து, எமது அமைச்சரவைக்குள்ளும் நுழைந்து எமது அரசை நாசம் செய்த எஸ்.பி.திசாநாயக்க, தேர்தலில் வெற்றி
பெற்று வந்த எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது.
எஸ்.பி.திசாநாயக்க, அரசியல் தகிடுதத்தம் செய்து இந்த முறையும் எவரது தோளிலாவது சவாரி செய்து
பாரளுமன்றம் வர எத்தனிப்பது நன்கு தெரிகிறது. இம்முறை தோள் பாய்ச்சலுக்கு இடம் கிடையாது. சொந்த முயற்சியில்தான் வர வேண்டும்.
இந்த முறை எஸ். பி. திசாநாயக்கவுக்கு தேசிய பட்டியல் நியமனம் எதுவும் கிடைக்க போவதும் இல்லை என்பது
நிச்சயம். மொட்டா, நாற்காலியா என்ற இறுதி தீர்மானமும் இதுவரை இல்லை. இந்நிலையில் தனது எதிர்காலமே
கேள்விக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் அடுத்தவரை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு, தன்னை பற்றி அவர் கவலைப்பட வேண்டுமென நினைக்கிறேன்.
கோட்டாபய வெலிக்கடை சிறைக்கு திடீர் பயணம்
கோட்டாபய வெலிக்கடை சிறைக்கு திடீர் பயணம்
இலங்கை ஆளும் ஜனாதிபதி வெலிக்கடை சிரைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார் .
இவரது இந்த பயணம் ஏன் என தெரிவிக்க படவில்லை .பழிவாங்கும் அரசியல்வாதிகளை அங்கு அடைக்கும் நோக்குடன்
சிறை அறைகளை தயார் படுத்தும் நோக்குடன் அங்கு சென்றாரா என தெரியவில்லை என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலில் 8 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலில் 8 பேர் பாதிப்பு
பிரிட்டனில் சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரையில் எட்டு பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் .
மேலும் பல டசின் பேர் இந்த நோய் அறிகுறிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இதுவரை 900 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .
இதன் எணிக்கை இறப்பு வீதம் பல லட்சங்களை எட்டும் என்கின்ற செய்தியும் பரவி வருகிறது

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம்: இருந்த இடம் விசமிகளால் உடைப்பு photo
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம்: இருந்த இடம் விசமிகளால் உடைப்பு photo
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளது.
இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்த போதே குறித்த மாதா சொரூபம் காணாமல் போயிருந்தது. வவுனியா, பூந்தோட்டம், சாந்தசோலை வீதியில்
தனியாருக்கு சொந்தமான வீட்டு வாயில் முன் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் இருந்த பகுதி
விஷமிகளால் உடைக்கப்பட்டு சொரூபத்தை தூக்கிச் சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் இச்செயற்பாடானது குறித்த பகுதியில் சற்று பதற்றத்தை
உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக வவுனியா காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது
தொடர்பில் வவுனியா பொலசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக கல்விப்பணிப்பாளர் நியமனம்photo
வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக கல்விப்பணிப்பாளர் நியமனம்photo
வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நியமனம்
வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி
கல்விப்பணிப்பாளர் சுப்பையா அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில்
வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் இடம் இருந்து இதற்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
வவுனியாவில் பல பாடசாலைகளில் அதிபராகவும், வவுனியா தெற்கு பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும்
கடமையாற்றி கடந்தமாதம் ஓய்வு பெற்ற நிலையிலேயே வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








