Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அமெரிக்கா செல்ல இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வாவுக்கு தடை
அமெரிக்கா செல்ல இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வாவுக்கு தடை
அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா ,மற்றும் அவரது குடும்பத்தினர்
உள் பிரவேசிக்க அமெரிக்கா தடை வித்தித்துள்ளது .
இவருக்கு எதிரான வழக்கு அந்த நாட்டு நீதிமன்றில் உள்ள
நிலையில் அமெரிக்கா முந்தி கொண்டு இந்த தடையினை விதித்துள்ளது
இது இவரை காப்பாற்றும் நகர்வின் முன் ஏற்படா என
அச்சம் கொள்ள படுகிறது
திருமணமான 3ம் நாளில் சோகம்- விபத்தில் மனைவி பலி; கணவன் காயம்
திருமணமான 3ம் நாளில் சோகம்- விபத்தில் மனைவி பலி; கணவன் காயம்
வவுனியா, முருகனூர் பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் முருகனூரை சேர்ந்த தர்சினி (வயது-25) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும் அவரது கணவரும் முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது
வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த
முச்சக்கர வண்டி அருகில் இருந்த மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி அம்யூலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார். இவர்கள்
இருவருக்கும் கடந்த இரு தினங்களிற்கு முன்னரே திருமணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரனோ வைரஸ் சிகிச்சை அளித்த 1,716 ஊழியர்கள்பாதிப்பு – 6 பேர்பலி
கொரனோ வைரஸ் சிகிச்சை அளித்த 1,716 ஊழியர்கள்பாதிப்பு – 6 பேர்பலி
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை
வழங்கி வந்த மருத்துவர்கள் மற்றும் தாதி மார்களுக்கு இந்த நோய் பரவியுள்ளது அம்பலமாகியுள்ளது
ஆறு பேர் பலியாகியும் மேலும் 1,716 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர் என சீனா அறிவித்துள்ளது .
இந்த நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் பலர் இறந்து வருவது அண்மைய நாட்களாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

தப்பி ஓடிய 776 இராணுவத்தினர் மீள இணைவு
தப்பி ஓடிய 776 இராணுவத்தினர் மீள இணைவு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சுமார் 772 இராணுவத்தினர் மீளவும் படையில் இணைந்துள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது
ஜனாதிபதியினால வழங்க பட்ட பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் மீளவும் படையில் இணைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
புலிகளுடனான போரில் தாக்கு பிடிக்க முடியாது தமது உயிர்களை பாதுகாத்து கொள்ளும் முகமாக இவர்கள் தப்பி ஓடி இருந்தமை குறிப்பிட தக்கது
குவைத்தில் இருந்து 46 வீட்டுப் பணிபெண்கள் நாடு திரும்பினர்
குவைத்தில் இருந்து 46 வீட்டுப் பணிபெண்கள் நாடு திரும்பினர்
குவைட் நாட்டிற்கு வீட்டுப்பணிப் பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 இலங்கைப்
பணிப்பெண்கள் இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
இவர்களில் அதிகமானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தான் பணிபுரிந்த வீடுகளின் எஜமான்களால் இடம்பெற்ற துன்புறுத்தல்கள், இன்னல்களை தொடர்ந்தும்
பொறுத்துக் கொள்ள முடியாமல் குறித்த வீடுகளில் இருந்து தப்பிச் சென்ற போது அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்களில் 13 பேர் அந்நாட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும்
ஏனைய 33 பேரும் குவைட்டிற்கான இலங்கை தூதரகத்தின் “சுரக்ஷா” தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த நிலையிலும், தற்காலிக கடவுச்சீட்டின் கீழ் இந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை 6.20 மணியளவில் குவைட்டில் இருந்து வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான
யூ.எல்.230 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.

திடீர் நோய் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
திடீர் நோய் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று
(14) காலை கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது மாணவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள்
ஏற்பட தொடங்கியதன் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12 மாணவர்களும் மற்றும் 3 மாணவிகளும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி காமினி மத்துமகே அவர்களை தொடர்பு கொண்டு வினவியதில், மாணவர்களுக்கு ஒவ்வாமை
ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சஜித் ரணில் இன்று சந்திப்பு – என்ன பேச போறாங்க …?
சஜித் ரணில் இன்று சந்திப்பு – என்ன பேச போறாங்க …?
இலங்கையின் யானைக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு இடம்பெறுகிறது .
எதிர்வரும் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிடும் சஜித் யானை தலைவருடன் என்ன பேச போறார் என்ற கேள்வியே பரவலாக எழுந்துள்ளது
குள்ள நரி ரணில் இவரை தேர்தலில் வெல்ல விடுவாரா என்பதே இனறைய கேள்வியாக உள்ளது video

உதயங்க வீரதுங்க இலங்கை வந்தார் – விசாரணைகள் தீவிரமாம்
உதயங்க வீரதுங்க இலங்கை வந்தார் – விசாரணைகள் தீவிரமாம்
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று இலங்கை வந்துளளர்
இலங்கை வந்துள்ள இவரிடம் வான்நிலையத்தில் வைத்து குற்ற புலனைவு பிரிவினர் டெஹெவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
வருகை தந்த இவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த படலாம் என கருத படுகிறது
.இவரது வழக்கை தள்ளுபடி செய்து விடுதலை அளிக்கும் நகர்வில் கோட்டா ஈடுபட்டுள்ளதாக நம்ப படுகிறது
வவுனியாவில் ஆலயத்திற்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா -பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது .
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பொழுது பிச்சை எடுத்து தனது வாழ்வை ஒட்டி வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவிலை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அரசுக்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையெடுக்கும்- செல்வம் எம்.பி.
அரசுக்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையெடுக்கும்- செல்வம் எம்.பி.
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதனூடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும்
சோதனைச்சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி
தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம்
ஆட்சிப்பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
வடக்கில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் ஓமந்தை, கொள்ளர் புளியங்குளம், மாங்குளம், ஆனையிறவு என அனைத்து இடங்களிலும்
சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் மக்களும் பேரூந்துகளில் இருந்து இறக்கி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையை சிங்களப்பகுதிகளில் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாரா? மதவாச்சியில் வைத்து சோதனை செய்து காட்டட்டும். சிங்கள மக்கள் தமக்கு எதிராக
கொந்தளிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே இந்த அரசாங்கம் தமிழர் பகுதிகளில் இவ்வாறான இராணுவ
சோதனைச்சாவடிக்களை அமைத்து தமிழ் மக்களை இன்னல் படுத்துகின்றது.
எனவே எதிர்வரும் காலங்களில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் மக்கள் பிரதிநிதிகளாக தமிழர்கள்
உருவாக்குவார்களேயானால் இராணுவ சோதனைச்சாவடிகளே மிச்சமாக இருக்கும் என்பதனை எமது தமிழ் மக்கள் உணர வேண்டும்.
எப்போதும் தமிழ் மக்களுக்கான துணையாக இருக்கப்போவது தமிழ் தேசியக்கூட்டப்பினரே என்பதனை மக்கள் காலத்திற்கு காலம் உணர்த்தி வரும் நிலையிலேயே
தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடப்பெற்ற குழப்ப நிலையை தடுத்து நிறுத்திய வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் photo
வவுனியாவில் இடப்பெற்ற குழப்ப நிலையை தடுத்து நிறுத்திய வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்
வவுனியா 04கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாம் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்று
(வியாழக்கிழமை) துப்புரவாக்க சென்றபோது வனவள திணைக்களம் அதற்கு தடையை ஏற்படுத்தியமையால் சற்றுநேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியை விளையாட்டு மைதானமாக
பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் 2007 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த நிலையில் அதில் சிறிய இராணுவசாவடி
ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த பகுதியை அபகரிப்பதற்கு பலர் முயற்சி செய்தபோதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது குறித்த பகுதி பற்றை வளர்ந்து காடுகளாக இருப்பதை அவதானித்த இளைஞர்கள் அவ்
காணியை மீண்டும் மைதானமாக பயன்படுத்துவதற்காக நேற்றையதினம் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி அதனை துப்புரவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் போது அப்பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள், இது தமது திணைக்களத்திற்கு உரிய பகுதி
என்று தடை ஏற்படுத்தியமையால் இளைஞர்களிற்கும் அவர்களிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.
இன்று காலை (13.02.2020) சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன வருகை தந்து இரு தரப்புடனும்
கலந்துரையாடிய குறித்த பகுதியை மைதானமாக பயன்படுத்துவதற்கான வேண்டுகோளை எழுத்து மூலமாக வழங்குமாறு தெரிவித்ததுடன், அதனை மாவட்ட
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இன்று முன்வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டமைக்கமைய சுமூகமான நிலை ஏற்பட்டது.






வவுனியாவில் தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறந்து வைப்பு photo
வவுனியாவில் தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறந்து வைப்பு photo
தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்க அலுவலகம் வவுனியா சமயபுரம் கிராமத்தில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் இ.யோ.கேமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னைபயிர்செய்கை சபையின் வலய இணைப்பாளர்
ஜெயந்த பமுனுஆராட்சி முதன்மை அதிதியாக கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
கிராம மட்டங்களில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காகவும் தென்னையின் மூலம்
மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை அதிகரித்து அதனால் வரக்கூடிய உப வருமானங்களை பெருக்குவதுடன், தொழில்
வாய்ப்பினை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு குறித்த சங்கம் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் உதயச்சந்திரன், தென்னை
அபிவிருத்தி சங்கங்களின் இணைப்பாளர் மா.ரோய் ஜெயக்குமார், பயிர்ச்செய்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




வியட்னாமில் 10,000 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிப்பு
வியட்னாமில் 10,000 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிப்பு
வியட்னாமில் இதுவரை சுமார் பத்தாயிரம் பேர் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் ,அந்த
நோயின் அறிகுறியில் இவர்கள் சிக்கியுள்ளனர் என அந்த நாட்டு சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது
மேலும் இதுவரை 19 பேர் அந்த நோயின் தாக்கத்தில் உள்ளது கண்டு பிடிக்க பட்டுளள்து ,மேலும் இந்த நோயின்
தாக்குதல் எதிரொலி அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது
இந்த நோய் தாக்கத்தில் சிக்கி இதுவரை லட்ச்சக்
கணக்கான மக்கள் பலியாகியுள்ளதாகவும் சீனா அதனை மறைத்து வருவதாக குற்றம் சுமத்த படுகிறது

கொரனோ வைரஸ் தாக்குதல் 1355 பேர் பலி – ஒரே நாளில் 252 பலியான அதிர்ச்சி
கொரனோ வைரஸ் தாக்குதல் 1355 பேர் பலி – ஒரே நாளில் 252 பலியான அதிர்ச்சி
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 1355 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 48 ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர் .
ஆனால் குவான் மாகாணத்தில் ஐந்து மில்லியன் மக்கள்
வரை காணமல் போயுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
நேற்று மட்டும் ஒரே நாளில் 252 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது
மனிதர்களை சுட்டு கொன்று சீனா அரசு எரித்து வரும்
காட்சிகள் வெளியாகியுள்ளன ,இவை பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
ஆனால் சீனா அரசோ அதனை மறுத்து வருகிறது

வாடகைக்கு வீட்டில் இருந்த பெண்ணை தும்பு தடியால் தாக்கிய பெண்
வாடகைக்கு வீட்டில் இருந்த பெண்ணை தும்பு தடியால் தாக்கிய பெண்
இலங்கை – நுகோடை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு அமர்த்திய பெண் ஒருவர் மாதம் இருபதாயிரம்
ரூபா தொகையை செலுத்தியுள்ளார் ,இந்த பணத்தை அவர் மொத்தமாக செலுத்தியுள்ளார் .
இதனை அடுத்து தினம் தோறும் வீட்டுக்கு வரும் அந்த வீட்டு உரிமையாளரான பெண்மணி அந்த பெண் வீடடை சரியாக வைத்து கொள்ளவில்லை என குறை கூறி வந்துள்ளார் .
இதனால் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து அந்த பெண்ணை தும்பு தடி கொண்டு தாக்கியுள்ளார் .
அவர் அடித்த அடியில் மயக்கும் உற்று வீழ்ந்த பெண்ணை அயலவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர் .இவர்
வழங்கிய முறைப்படடினை அடுத்து வழக்கு இடம்பெற்று வந்தது .
தீர்ப்பு வழங்க பட்டது ,அதில் எயமானிக்கு ஆறு மாதங்கள் சிறை தணடனையும் ஒரு லட்சம் ரூபா பாதிக்க பட்ட
பெண்ணுக்கு நாஷ்டா ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது

நுவரெலியா – கட்டன் பகுதியில் காடுகள் மீண்டும் எரிகிறது
நுவரெலியா – கட்டன் பகுதியில் காடுகள் மீண்டும் எரிகிறது
இலங்கை நுவரெலியா காட்டன் பகுதியில் உள்ள
மலைக்காடுகள் மீது விஷமிகள் தீ வைக்க பட்டு அது மீண்டும் எரிந்து வருகிறது ,
மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்று வருகிறது ,
மகிந்த ஆட்சியில் இவ்விதம் காடுகள் தொடராக எரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
கிறிஸ் மனிதர்கள் ,மர்ம மனிதர் ,ஆவா குழு போன்றவற்றை கோட்டா உருவாக்கி விட்டுள்ள நிலையில்
இந்த காடுகளும் எரிந்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

மூன்று காவல்துறை அதிகரிகளுக்கு திடீர் இடமாற்றம்
மூன்று காவல்துறை அதிகரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கையில் மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் செய்ய பட்டுள்ளது ,
போலீஸ் ஆணையத்தின் அதிரடி உத்தரவில் உடனடி
நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மாற்றங்கள்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பெரட்டாசி தோட்டத்திற்கு மேலும் ஒரு அபிவிருத்தி திட்டம் photo
பெரட்டாசி தோட்டத்திற்கு மேலும் ஒரு அபிவிருத்தி திட்டம் photo
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவிற்கு நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின்
பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்
நிர்மாணிக்கபட்ட சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம
அதிதியாக கலந்துக் கொண்டு கையளிக்கப்பட்டது. இதன்
பொழுது இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன



மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் video
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் video
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்; நாளை அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவு
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனை பார்வையிட்ட
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் நாளை அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வுவைத்தியசாலையை
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் video
நிர்மாணிப்பதற்கான அடிக்கல்நாட்டி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலையில் கட்டடங்களை
அமைப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.
இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாகதெரிவித்து அந்த பகுதிக்கு வருகை தந்த மனிதநேய கண்ணிவெடி
அகற்றும் பணியாளர்கள் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்தகாணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் மனித எலும்புக்கூட்டு எச்சங்களை பார்வையிட்டதுடன்
முல்லைத்தீவு மாவட்டநீதிபதி எஸ் லெனின்குமார் அவர்களின் கவனத்திற்குகொண்டு சென்றனர்.
இன்று பிற்பகல் குறித்த இடத்திற்கு வருகை தந்தமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் அவர்கள் குறித்த இடத்தை பார்வையிட்டார்.
இதனையடுத்து குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாளை அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த பகுதியில் ஊடகவியலாளர் வீடியோ எடுப்பதற்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது

சீன் போட சிட்டாக பறந்த மோட்டர் சைக்கிள்களை மடக்கிப் பிடித்த பொலிசார் photo
சீன் போட சிட்டாக பறந்த மோட்டர் சைக்கிள்களை மடக்கிப் பிடித்த பொலிசார் photo
வவுனியா வைரவபுளியங்குளம், குருமன்காடு, பூங்கா வீதிகளில் மாலை வேளைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களை பயமுறுத்தும்
பாணியில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது நேற்று போக்குவரத்து பொலிசாரால் வழிமறிக்கப்பட்டு அவர்களின் மோட்டார் சைக்கிள்கள்
பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை சட்ட மேற்கொள்ளப்படவுள்ளதாக
வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் பல வீதிகளில் இளைஞர்களினால் செலுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் அதிகவேகத்துடனும் பொதுமக்கள், மாணவர்களை
அச்சுறுத்தும் சத்தங்களுடனும் செலுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து குறித்த பகுதிகளில் போக்குவரத்துக்கடமைகளை மேற்கொண்டு வரும்
போக்குவரத்துப் பொலிசார் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய நான்கு இளைஞர்களுடைய மோட்டார் சைக்கிள்களை
கைப்பற்றியதுடன் அவர்களுக்கு எதிராக நாளைய தினம் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து
பொலிசாரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொதுமக்கள்
பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் மேலும் தெரிவித்துள்ளார்.











