Tag: வவுனியா பூந்தோட்டம் பகுதியில்
Posted in இலங்கை செய்திகள்
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம்: இருந்த இடம் விசமிகளால் உடைப்பு photo
Author: நிருபர் காவலன் Published Date: 10/02/2020 Leave a Comment on வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம்: இருந்த இடம் விசமிகளால் உடைப்பு photo
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம்: இருந்த இடம் விசமிகளால் உடைப்பு photo
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளது.
இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்த போதே குறித்த மாதா சொரூபம் காணாமல் போயிருந்தது. வவுனியா, பூந்தோட்டம், சாந்தசோலை வீதியில்
தனியாருக்கு சொந்தமான வீட்டு வாயில் முன் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் இருந்த பகுதி
விஷமிகளால் உடைக்கப்பட்டு சொரூபத்தை தூக்கிச் சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் இச்செயற்பாடானது குறித்த பகுதியில் சற்று பதற்றத்தை
உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக வவுனியா காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது
தொடர்பில் வவுனியா பொலசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









