Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வட்டி விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு
வட்டி விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்தில், மத்திய வங்கியின் நிலைப்பு வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலைப்பு கடன் வசதி விகிதத்தை (SLFR) தற்போதைய நிலைகளில் முறையே 5 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக பராமரிக்க முடிவு செய்தது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்பார்த்த முன்னேற்றங்களை கவனமாக பரிசீலித்த பிறகு வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
வரவிருக்கும் காலத்தில் பொருளாதாரம் அதன் திறனை அடைய உதவுவதோடு, தகுந்த நடவடிக்கைகளுடன் நடுத்தர காலப்பகுதியில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மட்டத்தில் பணவீக்கத்தை பராமரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வாரியம் மீண்டும் வலியுறுத்தியது.
பறக்கும் படை வேட்டை – 81 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 81 பேர் கைது
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் 30 முதல் இதுவரை 80,790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க மகிந்தா இணக்கம்
ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க மகிந்தா இணக்கம்
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும். அடுத்த இரண்டு
பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான ஒரு
சந்திப்பு நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயல்படுவதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்வை வழங்கி இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அங்கு குறிப்பிட்டார்.
இதேவேளை முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய (13) தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!
பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!
ஒன்லைன் படிப்பிற்காக போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ஒன்லைன் படிப்பு நின்று விட்டது. மகன் பின்னர் கேம் விளையாட பழகி விட்டார். பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன். பிள்ளைகளுக்கு போன் கொடுக்கவே வேண்டாம்…” என தனது ஒரேயொரு பிள்ளையை இழந்த தந்தை தெரிவித்துள்ளார்.
பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன் என்ற மாணவன் அவரின் வீட்டில் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு கைப்பேசி ஒன்றை உயிரிழந்த மாணவரின் தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த தினம் 11 வயதுடைய அஷேன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் அவரது தந்தை தெரிவித்ததாவது…
மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. பின்னர் நான் மகனை அழைத்தேன். மகன் விரைவாக வந்தார். பின்னர் மகனிடம் நான் கூறினேன், விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்று. அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன்
கூறினார். நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். பின்னர் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகனே என்று
அழைத்த போது மகன் கதைக்க வில்லை. வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று
பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற
முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. 5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார். என்றார்.
சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் இடம்பெறவுள்ளது
வேலையாட்களை துரத்தி குற்றிய குளவிகள்
வேலையாட்களை துரத்தி குற்றிய குளவிகள்
நோர்வூட்- ஸ்டொக்கம் தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் இன்று (13) காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான 19 பேரும் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐவர் மாத்திரம் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தேயிலை மலையிலிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை கழுகொன்று கலைத்ததன் காரணமாக, குளவிகள் கலைந்து, தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீமெந்து, மா விலை அதிகரிப்பு
சீமெந்து, மா விலை அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் அரசினால் சீமெந்து மூடையின் விலையை 93 ரூபாவால் மற்றும் மாவின் விலையும் அதிகரித்துளளது
மா விலை அதிகரிப்பை அடுத்து பாண் ,மற்றும் இதர மாவினால் உருவாக்க படும் பொருட்களும் அதிகரிக்க படலாம் என மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றுக்கு புதிதாக வீடொன்று அமைக்கப்பட்டு, நேற்று (10) இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் றாயன் அவர்களின் நிதி உதவியில், இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன், இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட இரணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுரியபண்டார மற்றும் சமூக செயற்பாட்டாளர் றாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது வருகை தந்த கிராமத்தவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,560 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10,935 படையினருக்கு பதவியுயர்
10,935 படையினருக்கு பதவியுயர்
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா 567 அதிகாரிகளையும், 10,368 பிற பதவிகளையும் உயர்த்தியுள்ளார்.
ஆயுதப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மூத்த பிரிகேடியர்கள் எண்மர் மேஜர் ஜெனரல்களாகவும், 17 கேர்ணல்கள் பிரிகேடியர் பதவிக்கும், 42 லெப்டினன்ட் கேர்ணல்கள் கேர்ணல் பதவிக்கும், 60 மேஜர்கள், லெப்டினன்ட்
கேர்ணல்களாகவும், 256 கேப்டன்கள் மேஜர்களாகவும், 10 லெப்டினன்ட்கள் கெப்டன் பதவிக்கு, லெப்டினன்ட்
பதவிக்கு 152 இரண்டாவது லெப்டினன்ட்கள் லெப்டினன்ட்களாகவும் மற்றும் லெப்டினன்ட் (கியூஎம்) பதவிக்கு 22 நன்னடத்தை அதிகாரிகள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவியேற்ற இரண்டு வருட காலத்திற்குள், இலங்கை இராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் இதர பதவிகளுக்கு மிக அதிகமான பதவி உயர்வுகளை வழங்கியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்தப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
புத்தர் சிலை உடைப்பு
புத்தர் சிலை உடைப்பு
மாவனெல்ல நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இம்மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது.
கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்திலேயே இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி ஜகத் ஏ கஹந்தகமகே (தலைவர்) தலைமையில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜயகீ டி அல்விஸ் மற்றும் இந்திக காலிங்கவங்ச ஆகியோர், ஏனைய நீதிபதிகளாவர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 16 பேரில், 14 பேர் மட்டுமே அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏனைய இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
வழக்கு விசாரணைக்குப் பின்னர், அனைவரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
வடக்கில் இடியுடன் கூடிய மழை
வடக்கில் இடியுடன் கூடிய மழை
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2021 ஒக்டோபர்09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2021 ஒக்டோபர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவான மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில்காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது
அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பால்மா கேஸ் சீமெந்து கட்டுப்பாட்டு விலை நீக்கம்
பால்மா கேஸ் சீமெந்து கட்டுப்பாட்டு விலை நீக்கம்
பால்மா, சீமெந்து, கேஸ் என்பனவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.
இதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டு நேற்று(8) வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டாலும் உரிய பொருட்களை கூடுதலான விலையில் விற்பனை செய்யும்
நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி வர்த்தக அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடு நீடிப்பு
பயணக் கட்டுப்பாடு நீடிப்பு
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை செல்லும் முன் கட்டாயமாக மாணவர்களுக்கு வீட்டில் வழங்கவேண்டிய பயிற்சி
பாடசாலை செல்லும் முன் கட்டாயமாக மாணவர் களுக்கு வீட்டில் வழங்கவேண்டிய பயிற்சி
பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்கள் வீட்டினுள் இருக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கு முகக்கவசம் அணிவது, அதனை நீக்குவது மற்றும் அணிந்து கொண்டு இருப்பது போன்ற விடயங்களை பழக்கப்படுத்துவதில் பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுஇ கடந்த முறைஇ சில வாரங்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள்
முகக் கவசம் அணிந்து கொண்டிருப்பதை பெரிதும் விரும்பவில்லை. எனவே முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தெளிவவுபடுத்த
வேண்டும் என்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா மேலும் கேட்டுக்கொண்டார்
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 96 பேர் கைது
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 96 பேர் கைது
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று(08) காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 80,284 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்துக்குள் நுழையும், வெளியேறும் 2,555 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 325 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சிறைகளில் அடைபட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவியுங்கள்; பா.உ முஷாரப்.
சிறைகளில் அடைபட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவியுங்கள்; பா.உ முஷாரப்.
பைஷல் இஸ்மாயில் –
ஈஸ்டர் தாக்குதல் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரஃப் அவர்கள் தெரிவித்தார்.
2021-10-06 அன்றைய பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுள் எந்தவொரு குற்றமும் புரியாத பலரும் உள்ளனர். க.பொத. சா/த, உ/த பரீட்சைகளைத் தொடர்ந்து கிடைக்கின்ற விடுமுறையை பயனுள்ள வகையில்
கழிக்கும் நோக்குடன் சன்மார்க்க நற்போதனைகள் கேட்பதற்காக சென்ற இளைஞர்கள் கூட சந்தேகத்தின் பேரில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதியான முறையில் விரைவாக விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்.
“ஒரு தேசத்தின் சிறைகளுக்குள் இருக்கும் வரை யாரும் உண்மையிலேயே ஒரு தேசத்தை அறிய மாட்டார்கள். ஒரு தேசம் அதன் உயர்ந்த குடிமக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதிலன்றி,
கீழ்நிலை மக்களை எவ்வாறு நடத்துகின்றது என்பதிலேயே தேசம் குறித்து தீர்மானிக்கப்படல் வேண்டும்” என்கிறார் தென்னாபிரிக்காவின் தந்தை நெல்சன் மண்டேலா.
எமது அரசியலமைப்புச் சட்டமும் எந்தவொரு கைதியும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடாது என்கிறது. இருப்பினும் மெகசின் சிறைச்சாலை உயிரிழப்பு சம்பவம், அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் என்பவற்றிற்கு பதில் கூற வேண்டிய அரசாங்கங்களின் பொறுப்பு கேள்வியாகவே
நீடிக்கிறது. சிறைகள், கைதிகளை புனர்வாழ்வளிக்கின்ற இடமாக இருக்க வேண்டுமே அன்றி குற்றங்களுக்கு துணைபோவதாக இருக்கக் கூடாது. சிறைக் கைதிகளின் உரிமைகள் கண்ணியத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- மகிந்தா முழக்கம்
யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- மகிந்தா முழக்கம்
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை நேற்று (06) முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.
நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் அலரி மாளிpகையில் இருந்து நேரடியாக கலந்து கொண்ட கௌரவ பிரதமர், மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகள் மற்றும் யாழ் நகர நீர் வழங்கலுக்கான நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை என்பவற்றை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டம் மற்றும் யாழ் நகர நீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம் சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைவதுடன் அத்திட்டங்களை 2023ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்யஎதிர்பார்க்கப்படுகிறது.1இப்புதிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்களுக்கு குழாய் மூலமான பாதுகாப்பான நீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பது விசேட அம்சமாகும்.
மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கான நீர் விநியோகம் முறைப்படுத்தப்படுவதுடன் இதன்மூலம் சுமார் 5000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைவர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கென்ச்சி யொகுஹாமா அவர்கள் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு இத்திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
நயினாதீவு விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பபுமகித்திதிஸ்ஸ தேரர், நயினாதீவு அம்மன் ஆலய பிரதான குருக்கள் சாமதேவ குருக்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள் மற்றும் யாழ். மக்கள் காணொளி தொழில்நுட்பம் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் உள்;ளிட்ட அரசாங்கத்திற்கு இத்திட்டம் ஊடாக கிடைக்கும் நன்மை குறித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 9.6 சதவீதமான பாதுகாப்பான நீர் குழாய் அமைப்பை 2025ஆம் ஆண்டளவில் 56.9 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.
நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார அவர்கள்,
‘எவரையும் தோற்கடிப்பது அன்றி யுத்தத்தை நிறைவு செய்வதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது. எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த தேவைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள் எமக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார். அதிகம் செலவாகும் என அமைச்சரவையில் குறிப்பிட்ட போது எவ்வளவு செலவானாலும் இந்த நீர் வழங்கல் திட்டத்தை நாம் அமைக்க வேண்டும் என கௌரவ பிரதமர் அவர்கள் கூறினார். இவை அனைத்தும் வடக்கு மக்களுக்காகவே ஆகும். இந்த பாய்ந்தோடும் நீருடன் கௌரவ பிரதமரின் இதயத்தின் கருணையும், நல்லிணக்கமும் பாய்ந்தோடுகிறது என கூற வேண்டும்.
நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார, கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புகையிலை, மதுபான அதிகாரசபை உறுப்பினராக திரு.அஜித் ரோஹண நியமனம்
புகையிலை, மதுபான அதிகாரசபை உறுப்பினராக திரு.அஜித் ரோஹண நியமனம்
தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையளித்தார்.
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், குற்றத் தடுப்பு மற்றும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரான அஜித் ரோஹண, சிறுவர்
பாதுகாப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினராக கடந்து ஜூலை 21 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை
அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் வாக்குறுதியளித்தபடி முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்
விவசாயப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு தாமதமின்றி தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்
செல்ல வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கான அனைத்து பிரவேசவீதிகள் அனைத்தையும் மட்டுமன்றி கிராமப்புற மருத்துவமனைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளும் முன்னுரிமை
அளிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பிரதிநிதிகளினால் தமது பிரதேசங்களில் அபிவிருத்தி செய்வதற்கு முன்வைக்ககும் யோசனைகள்
அனைத்தையும் முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
மகிந்தா -இந்தியாவுக்கு இடையில் பேச்சு
மகிந்தா -இந்தியாவுக்கு இடையில் பேச்சு
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா நான்கு நாள் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார் இந்திய வெளியுறவு செயலாளர்
பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் சந்திப்பு
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன், கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ஹர்ஷ்வர்தன் கூறுகையில், இந்தியாவின் நெருங்கிய நண்பரான இலங்கை பிரதமர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினேன்.
இந்த பேச்சு இருநாடுகளின் பரஸ்பர நல்லுறவுக்கு வலு சேர்க்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது. தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும் சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணம் பலாலிக்கு சென்ற ஹர்ஷ்வர்தன், அங்கு இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் விமான நிலையப் பணிகளைப் பார்வையிட்டார்.






