Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திடீரென தோன்றிய சிவலிங்கம்
திடீரென தோன்றிய சிவலிங்கம்
திடீரென யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.
குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.
குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவலிங்கம் காணப்படும் இடத்யிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்
விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்
விபத்தில் ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறை – கடவத்தை பகுதியில் இருந்து பயணித்த லொறி ஒன்றும், குறித்த குழுவினர் பயணித்த வேனும் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த வேன் சாரதி 25 வயதுடையவர் மற்றும் 59 வயதுடைய ரஷ்ய ஆண் ஒருவரும் ரஷ்ய பெண் ஒருவரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்
உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்
சோசலிசம், பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் தரப்புகள் அதிகாரத்துக்காக தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான கட்சி என்ற வகையில்,
மனிதாபிமான முதலாளித்துவத்தை எப்போதும் நம்புவதாக தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் த புளு பிரின்ட் பொருளாதார மாநாடு புதன்கிழமை (29) காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
நமது நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை என்றும் இந்த கோட்பாட்டை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஓர் அரசாங்கத்தால் செல்வத்தை உருவாக்க முடியாது எனவும், சமூக சந்தைப் பொருளாதாரத்தை
மையமாகக் கொண்ட தேவை மற்றும் வழங்கலை அடிப்படையாகக் கொண்ட சந்தை சக்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியாண்மைகளுக்கு முன்னுரிமையளிப்பதே செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும் எனவும் தெரிவித்தார்.
உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்
இந்த முதலாளித்துவம் ஒருசிலரை போஷிப்பதானதாகவே அல்லது நட்பு வட்டார முதலாளித்துவமாகவோ இருக்கக் கூடாது என்றும்,நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானதாக அது அமைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பவர்களிடம்
சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர வேறு வழிகள் உள்ளதா என்று கேட்க வேண்டியுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
தாம் பார்ப்பது போல், சர்வதேச நாணய நிதியத்தை சரியாக கையாள்வதன் மூலம் நாடு முகம்கொடுக்கும் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள முடியும் என்றாலும், சர்வதேச நாணய
நிதியத்தை தமதமாக அணுகியதால் வலுவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை எட்ட முடியாது
போனதாக சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமை குறித்து
எதிர்க்கட்சியிடம் விமர்சனங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தா
விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது
விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது
விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (31) பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் தொடர்புபட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்
சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்
சாணக்கியன் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை (30) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு முன்னெடுத்த போராட்டம் காரணமாக மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
இன்று காலை மாவட்ட செயலகத்தின், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே, முறுகல் நிலையேற்பட்டதுடன், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு வாயில் கதவுகள் மூடப்பட்டன.
சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்
இதன்போது மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு மாவட்டச் செயலக கதவினை மறித்து பொதுமக்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
வாகனேரி பகுதியில், சூரிய மின்கல மின்திட்டத்தினை அமைப்பதற்காக, விவசாய காணியை எடுக்க முனையும் செயற்பாட்டைக் கண்டித்தும், வாகரைப் பகுதியில், இல்மனைட் அகழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை நிறுத்தக்கோரியும், வாகரைப் பகுதியில், காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடாத்தாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினை நடாத்தி, காணி தொடர்பான தமக்கு சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதேநேரம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை உள் நுழைவதற்கு அனுமதிக்காத நிலையில், பொலிஸாருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையும் காணக்ககூடியதாக இருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சாணக்கியன் பாரிய ஆர்ப்பாட்டம் – பெண் ஒருவர் வைத்தியசாலையில்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.
இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.
மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால்
வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான
நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.
அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக
கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை
கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை
கொஸ்கம மற்றும் கம்பஹாவில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபரொருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாகெவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்களாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
இதன்போது கூரிய ஆயுதத்தால் பெண் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை
கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனமலேவத்த பகுதியில் தகராறு நீண்டதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் களுஹக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு
மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு
மிதிகம மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குழுவொன்றினால் உணவகம் ஒன்றின் முன்னால் வைத்து அதன் உரிமையாளர் இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த 32 வயதுடைய நபர் உணவகத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த போது வேனில் வந்த குழுவினர் டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அஹங்கம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்
இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்
இலங்கை பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்
கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்
நாம் சற்றேனும் நினைத்துப்பார்த்திராத பேரிழப்பாக நிகழ்ந்தேறியுள்ள தம்பி கஜீபரனின் அகாலமறைவு எமக்கு சொல்லொணாத் துன்பம் தருவதாக அமைந்துவிட்டது. மிகத் துடிப்புள்ள இளைஞனாக சமூகப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்ட கஜீபரன், இளவயதிலேயே தீவிரமான தமிழ்த்தேசியப் பற்றாளனாகவும் தன்னைப் பதியமிட்டிருந்தான்.
அதன்வழியே, எமது கட்சியின் வாலிபர் முன்னணி உறுப்பினராக இணைந்துகொண்ட கஜீபரன் மிகுந்த நேர்மையும், நெஞ்சுரமும், விசுவாசமும், விடாமுயற்சியும் மிக்க இளைஞன் என்பதை, அவனோடு நெருங்கிப் பழகக் கிடைத்த சந்தர்ப்பங்களில் நான் அறிந்துகொண்டேன்.
மிகக் குறுகிய காலம் எனது அலுவலகத்தில் அவன் பணியாற்றிய நாட்களில், அவனது கடின உழைப்பையும், தன்னார்வத்தையும், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவனது தீரத்தையும் நான் நேரிடையாகக் கண்டிருக்கிறேன்.
கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்
தன் எதிர்காலம் குறித்த முழுமையான கனவுகளோடு பயணப்பட்ட ஒரு இளைய புதல்வனை இயற்கை தன்வசம் எடுத்திருப்பதை அன்பின்பாற்பட்டஎம் இதயங்கள் ஏற்க மறுக்கின்றன.
தான் பிறந்து, வளர்ந்த விசுவமடு மண்ணையும், தருமபுரம் மண்ணையும் முழுமூச்சாய் நேசித்த அவன், அந்த மக்களின் நலவாழ்வுக்காக தன்னாலான பல பணிகளை இக்குறுங்காலத்திலேயே ஆற்றிமுடித்திருக்கிறான்.
கட்சியின் எந்த நிகழ்வாயினும், மக்களின் எந்தத் துயராயினும் அதைத் தன் தோள்மேல் தானாய் ஏற்பதற்கு என்றுமே தயாராயிருந்த என் மனதிற்கு மிக நெருங்கிய தம்பி கஜீபரனின் ஆத்மா அமைதிபெறவும், இந்தப் பேரிழப்பால்
பெரிதும் கலங்கிநிற்கும் அவனது குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் அவனது இழப்பை ஏற்கும் மனவலிமை வாய்க்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி
நாடு விரைவில் மீளும்- கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை
நாடு விரைவில் மீளும்- கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை
நாடு ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று (29) முங்காவிலுள்ள மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கி வைத்தார்.
இதற்குக் காரணமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 332.87 முதல் ரூ. 333.49 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்குக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது.
3 பெண்களை பலாத்காரம் இருவர் கைது
3 பெண்களை பலாத்காரம் இருவர் கைது
மூன்று சக ஊழியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதானவர்களாவர்.
புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட பின் சந்தேக நபர்கள் இருவரும் தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதி செவணப்பிட்டி பகுதியில் கனரக வாகனமும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பட்டை பிரதான வீதி திருக்கோவிலைச் சேர்ந்த 46 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் பரமசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்று கனரக வாகனமும் இன்று (29) அதிகாலை 2 மணிக்கு செவணப்பிட்டி சிரிகம பகுதியில்
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பிரயாணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையவல் அனுமதிக்கப்பட்டுள்ளர்
இதனை தொடர்ந்து கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.
ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணம் வழங்கி வைப்பு
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணம் வழங்கி வைப்பு
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா 10,000 ரூபா வீதம் நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவுகள் (28) இறக்காமம் சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது.
சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சமுர்த்தி
தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முகம்மட் இம்தாத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.
(அபு அலா)
விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்
விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்
இலங்கை கடந்தகால ஆட்சியாளர்களின் சுரண்டல் காரணமாக ,பொருளாதார வங்குரோத்துக்கு சென்றது .
அதன் பின்னர் வரலாறு காணாத அளவுக்கு இலங்கை பணவீக்கம் ஏற்பட்டது .
அதனை அடுத்து தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து,
நான்கு பில்லியன் டொலர் கடனாக பெறப்படுகிறது .
இவை மீள் செலுத்த வேண்டிய பணம் .மாதம் தோறும் வட்டியுடன் ,
மீள செலுத்த வேண்டிய காலம் ஏற்படும் பொழுது .
அதனை இலங்கையால் செலுத்த முடியாமல் போகும் நிலை ஏற்படும் வாய்ப்பு ,
உருவாகும் நிலை காணப்படுகிறது .
விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்
லஞ்ச ஊழலில் மூழ்கிய இலங்கை அரசியல் வாதிகளினால் ,
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்களை ஒன்று படுத்தி,
பயணிக்க முடியுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
அவ்வாறான நிலை தற்போது ஆளும் அரசில் காணப்படவில்லை ,
ஆகையால் சிங்கள பவுத்த தேசத்து சிந்தனையில் மாற்றம் ஏற்படா நிலையில்,
ஐந்து வருடஙக்ளின் பின்னர் இலங்கை சோமாலியாவாக மாற்றம் பெறும் நிலை,ஏற்பட போவதை ,தற்கால அரசியல் வாதிகளின் சிந்தனை போக்கு கட்டியம் இடுகிறது .
கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி
கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் தெரிவு இடம்பெற வேண்டும் என்கின்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன .
கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கி வரும், சுமந்திரன் தான்தோன்றி தனமான செயல் பாடு காரணமாக, தமிழர்களின் வெறுப்பிற்கு காரணமாக விளங்கிய,சுமந்திரனால் ,கூட்டமைப்பு பல துண்டுகளாக உடையும் நிலைக்கு சென்றுள்ளது
காலாவதியான சம்பந்தன்
வயதான காலத்தில் கட்சியை வழிநடத்தி செல்ல முடியா
படுக்கையில் முடங்கி போன சம்பந்தரின் செயலாற்ற நிலை
காரணமாக ,ஸ்ரீதரன் தலைவராகும் நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காண படுகிறது .
இலங்கை மற்றும் வெளிநாட்டு தமிழர்களின் மனங்களில் ,
ஆழமாக கால் ஊன்றியவர் ,கல்விமானாகவும் ,வாய்மை நிலை நாட்டும் பண்பாளனாக ,ஸ்ரீதரன் எம்பி விளங்கி வருகிறார் .
அவ்வாறான ஸ்ரீதரன் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க பட்டால் ,இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல ,வீழ்ந்து கிடக்கும் இலங்கை பொருளாதாரத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது .
கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி
சுமந்திரன் தானே தலைவர் என போட்டிக்கு சென்றால் ,எதிர்த்து நிற்க அதனை எதிர்கொள்ள தயார் என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் .அதில் ,ஸ்ரீதரன் மக்கள் வாக்கில் முதன்மை பெறும் நிலைக்கு செல்வார் என்பது வெளிப்படையாக உள்ளது .
சுமந்திரன் இரட்டை வேடம்
தமிழர்களின் பிரதிநிதிகள் என கோரியவாறு, இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் ,தமிழர்களை எவ்வாறு பிரதி நிதி படுத்த முடியும் என்கின்ற கேள்வி தமிழர்களினால்
வாதங்களுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது .
ஸ்ரீதரன் எம்பியை போல வெளிப்படை தன்மையாகவும் ,உண்மை தன்மையாகவும் ,நட்பு நிலையோடும் ,சிறந்த தமிழர் பண்பாளனாக விளங்கும் நிலையில் கூட்டமைப்பில்
எவரும் இல்லை என்பதே மக்கள் கருத்தாக உள்ளமை குறிப்பிட தக்கது .
காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது
காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 சிறுமி ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு சிறுமியின் காதலனும் அவனின் நண்பனும் வாள் மற்றும் கூரிய ஆயதங்களுடன் தொலைபேசி டிக் டொக் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து இருவரையும் சனிக்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள் மற்றம் பஞ்ச சக்கரம் கொண்ட கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட
காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது
பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக் டொக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து; சம்பவ தினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுபோகத்துக்கு இலவச உரம் விநியோகம்
சிறுபோகத்துக்கு இலவச உரம் விநியோகம்
2023 சிறுபோக நெற் செய்கைக்கு இலவசமாக ரீ.எஸ்.பி உரம் கமநல சேவை மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக, பாலமுனை கமநல சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப் தெரிவித்தார்.
பாலமுனை கமநல சேவை மத்திய நிலைய பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புகளுக்கு கையளிக்கும் வைபவம், பாலமுனை உர களஞ்சிய சாலையில் நேற்று (27) நடைபெற்றது.
விவசாய அமைப்புகளினூடாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 22 கிலோகிராம் ரீ.எஸ்.பி உரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, கமத்தொழில் அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச ரீ.எஸ்.பி உர விநியோகம், அம்பாறை மாவட்டத்தில் சகல கமநல மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நீண்ட காலத்துக் பின்னர் அரசாங்கத்தால் ரீ.எஸ்.பி உரம் வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் தத்தமது விவசாய அமைப்புகளினூடாக ரீ.எஸ்.பி.உரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
இம்முறை சிறுபோகத்தில் அம்பாறை மாவட்டத்தில் 01 இலட்சத்து 35,000 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படவுள்ளது











































