Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்
பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்
பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் ,அடுத்த இரண்டு மாதங்களில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பெற்றோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், பேருந்து கட்டணக் குறைப்பால் பொதுமக்கள் பயனடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் இதன் பாதகங்கள் ஜூலை மாதத்தில் வரும் என்றார்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தங்களில் இந்த முறை 12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டண திருத்தங்கள் செய்யப்படுவதால், பேருந்து கட்டணங்களில் நிச்சயமாக அதிகரிப்பு இருக்கும் என்றார்.
இரண்டு வயது சிறுவன் பஸ்ஸூக்கு பலி
இரண்டு வயது சிறுவன் பஸ்ஸூக்கு பலி
இரண்டு வயது சிறுவன் ஒருவன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க என்ற சிறுவன் என்று பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்றும் களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறைந்த விலையில் போசாக்கான உணவு
குறைந்த விலையில் போசாக்கான உணவு
குறைந்த விலையில் போசாக்கான உணவு ,மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்திக் கீழ் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் ‘பெலெஸ்ஸ’ (Palessa) உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (01) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார அறிவத்துள்ள ‘Clean Sri Lanka’ திட்டத்துடன் இணைந்து, தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய
அமைச்சு மற்றும் வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.
இந்த போசாக்கான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போசாக்கான சிற்றூண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என குறிப்பிட்டார்.
இதன்போது, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (போசாக்கு) வைத்தியர் மொனிகா
விஜேரத்ன மற்றும் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகர்களும் கலந்துகொண்டனர்.
முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை
முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை
முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
பண்டிகைக் காலத்தில் நிவாரணப் பொதிகள் விநியோகம்
பண்டிகைக் காலத்தில் நிவாரணப் பொதிகள் விநியோகம்
பண்டிகைக் காலத்தில் நிவாரணப் பொதிகள் விநியோகம் ,பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதி இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும்.
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களடங்கிய நிவாரணப் பொதி 2,500 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய முடியும்.
இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நிவாரணப் பொதியை விலைக்குக் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கடலில் குளித்துக்கொண்டிருந்த 15 பெண்களில் இருவர் உயிரிழப்பு
கடலில் குளித்துக்கொண்டிருந்த 15 பெண்களில் இருவர் உயிரிழப்பு
கடலில் குளித்துக்கொண்டிருந்த 15 பெண்களில் இருவர் உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை
கடலில் குளித்துக்கொண்டிருந்த 15 பெண்களில் மூவர் அலையில் சிக்கினர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றுமொரு பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும்,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கெப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு, திங்கட்கிழமை (31) வந்துள்ளனர்.
குறித்த பெண்கள் நாயாற்றுகடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் 47, 21 வயதுடைய இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 வயதுடைய மற்றைய யுவதியொருவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கபட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கபட்டவர் இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா என தெரியவந்துள்ளது.
நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு
வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு
வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு ,இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்
ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
அதிகாரிகளால் மார்ச் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகளால் பாதிக்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவி
யானைகளால் பாதிக்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவி
யானைகளால் பாதிக்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவி ,காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச்
செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் பாதிக்கப்பட்ட, காயங்களுக்கு உள்ளாகியவர்கள் இருக்கின்ற குடும்பங்களுக்கு இதன்போது
முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் சொத்துச் சேதங்களை எதிர்கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
பிரதேச செயலாளரின் மேற்பார்வைக்கு அமைய நிதியுதவிக்கு தகுதியுடைய குடும்பமாக இருக்க வேண்டும் என்பதுடன், 1 ஆம் வகுப்பு தொடக்கம் க.பொ.த
சாதாரண தரம் அல்லது க.பொ.த உயர்தரம் வரையில் கல்வி பயிலும் பிள்ளைகள் இருக்கின்ற குடும்பமாக இருப்பதும் இந்த நிதியுதவிக்கான தகுதியாக கருதப்படும்.
2025-01-01 திகதி அல்லது அதற்கு பின்னரான தினங்களில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்த காரணத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பமாக இருக்க வேண்டும் என்பதோடு, தற்போதும் ஜனாதிபதி நிதியத்தினால்
செயற்படுத்தப்படும் க.பொ.த உயர்தர புலமைபரிசு வேலைத்திட்டத்தின் பயனாளியாக இல்லாதிருப்பதும் தகுதியாக கருத்தப்படும்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக 1 ஆம் வகுப்பு முதல் 11 வரையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட பிள்ளையொன்றுக்காக 3,000 அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாத காலத்திலற்கும், 12 மற்றும் 13 வகுப்புக்களில் கல்வி
கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5,000 அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாத காலத்திற்கும் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி தமது பிரதேச செயலாளர் பிரிவுகளில் தகுதியை பூர்த்தி செய்த குடும்ப பிள்ளைகளின் தகவல்களை பெற்றுக்கொண்டு தமது தனிப்பட்ட மேற்பார்வை மற்றும் பரிந்துரையுடன் குறித்த விண்ணப்பங்களை
தாமதமின்றி ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ
வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ
வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ ,அரகலயவின் போது செவனகலவில் மற்றொரு நபரின் வீடு எரிக்கப்பட்டதற்காக இழப்பீடு
பெற்ற ராஜபக்ச உறுப்பினர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புத்தளவில் திங்கட்கிழமை (31) தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் புத்தள கண்காட்சி மைதானத்தில் நடைபெற்ற
மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ, எரிந்த வீட்டின் உரிமையாளர் அல்ல என்று கூறிய ஜனாதிபதி அனுர திசாநாயக்க, நிலப் பத்திரம் வேறு பெயரில் இருப்பதாகவும், வீட்டுப் பத்திரம் வேறு பெயரில் இருப்பதாகவும் கூறினார்.
இருப்பினும், இழப்பீட்டைப் பெற்றவர் ஒரு ராஜபக்ஷ என்று ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
தொடர்புடைய அறிக்கை சமீபத்தில் தனக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அது இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது
முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது
முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது ,ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மிமீ துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொடை, புத்கமுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி
திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி
திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ஜனாதிபதி ,சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதை குறிப்பிட்டார்.
மேலும், மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்றும் சுட்டிக்காட்டினார்.
திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டத்தை வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்.
யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. “எங்கள் தாய்நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் இறையாண்மையையும் மீண்டும் நிலைநாட்டுவதே எங்கள் எதிர்பார்ப்பு.” என்றார்
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு ,பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால்
அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.
இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், கொட்டு உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்டு வருகின்றனர்.
தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான அரிசியையும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
அரிசி விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினால், மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த மாட்டோம்.
அரிசி பற்றாக்குறை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன்
நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன்
நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன் ,நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக
தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு தடை விதித்துள்ளது. இதனை நாம் முதலில் வரவேற்கின்றோம். ஆனால் வினோதம்
நடைபெறுகிறது. தென்னிலங்கையில் தற்போது உள்ளஅரசு சார்ந்தவர்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாக நின்று இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றார்கள்.
ஜேவிபி அரசாங்கம் ஆரம்பத்தில் எமது இனப்பிரச்சினை தொடர்பில் ஐ.நா தீர்மானம் எடுக்கப்பட்ட உடனேயே அதை நடை முறைப்படுத்துவதற்கான ஆதரவை கொடுக்கவில்லை. இப்பொழுது நான்கு பேருக்கு தடை விதித்ததை
வைத்துக் கொண்டுஅமைச்சர் அனைவரும் கூக்குரல் போடுவது இனவாதத்தின் அடிப்படையில் இந்தஅரசாங்கம் செயற்படுவதை தெட்டத் தெளிவாக காட்டுக்கின்றது.
ஆகவே,எங்களைப் பொறுத்தவரை எப்படி சிங்கள தேசத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றால் ஆட்சியாளர்கள், கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு
அதற்குஎதிராக குரல்கொடுக்கின்ற விடயத்தை நாம் வரலாற்று ரீதியாக பார்க்கின்ற விடயம்.தற்போதும் பார்க்கின்றோம். ஆனால் எங்களுக்குள் ஒற்றுமையீனத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
எங்களது போராட்டங்களும் ஒருமித்த போராட்டமாக நடைபெறுவதில்லை. ஆகவே தொடர்ந்து, மனித உரிமை மீறல்கள் செய்தவர்களுக்கு ஐ.நா சபை கூட
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகின்ற நிலையில், தமிழ் மக்கள் அனைவரும் இதனைஆதரிக்க வேண்டும்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச நீதமன்றத்தின் மூலம் நீதி வருவதற்கு நாம் அதனை செயற்படுத்த வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் தென்னிலங்கையில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருந்து
எம்மை அழிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுப்பார்கள். புதிய அரசாங்கம் கூட போராட்ட இயக்கம் என்கின்ற நிலை மாறி ஒரு இனவாதஅரசாக பார்க்க
கூடியநிலையில் உள்ளது.பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரைசெல்ல வேண்டும். அதன் மூலம் நீதி கிடைக்க வேண்டும்.
எங்களுக்குள் இருக்கும் பகைமைகளை மறந்து எங்களுக்காக மரித்த மக்கள்,போராளிகள் அனைவருக்காகவும், தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில்
இடம்பெற்ற பௌத்தமயமாக்கல், நிலஅபகரிப்பு தொடரும் அரசஅடக்கு முறைகளுக்கு எதிராக ஓரணியில் செயல்பட வேண்டும்.
புதிதாக வந்தஅரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருகின்ற போது அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறினார்கள்.
தற்போது அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக நாட்கள் செல்லும் என கூறியுள்ளது. ஆகவே,அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் என்பதைஇந்தஅரசுஒத்துக் கொண்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பில் பேசுவதை கவனத்தில் கொள்ளவேண்டும். தேர்தல் காலங்களில் மாவட்டஅபிவிருத்திக்
குழுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. என்ன வேலைத்திட்டங்களை செய்யப் போகின்றோம் எனக் கூறுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களை பெற எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோல் வடக்கு,கிழக்கில் பல சபைகளை
கைப்பற்றும் நோக்கில் செயற்படுகிறார்கள் என தெரிகின்றது எனத்தெரிவித்தார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு ,நோன்பு பெருநாள் தினமாகிய திங்கட்கிழமை (31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையை தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம் பெற்றது.
இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டனப் பேரணியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்தது டன் இதனை
திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது பலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர் .
இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்ட பலஸ்தீனத்துக்கு ஆதரவான மற்றுமொரு நிகழ்வும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி vc மைதானத்தில் இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த எம்.எம்.மஹ்தி பாலஸ்தீன மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டு புனிதமான இந்த நாளிலே
இருக்கிறார்கள்.இஸ்ரேல் இன அழிப்பு விடயத்தை செய்து கொண்டிருக்கின்றது. இதனை இந்த நாடு கண்டிக்க வேண்டும் என்பதுடன் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் .
அண்மையில் முஹம்மது ருஸ்தி எனும் இளைஞன் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவே
ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இளைஞனை விடுதலை செய்ய வேண்டும்.
பாலஸ்தீன மக்களுக்கு அநுர அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும். பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு , தனி இராஜ்ஜியம் என்ற அடிப்படையில்
வழங்கப்பட வேண்டும் .இன அழிப்பை செய்யும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும் நிலை காணப்படுகின்றது.
ஆகவே கைது செய்யப்பட்ட முஹம்மது ருஸ்தி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம்.தற்போதைய
அரசாங்கமும் பாலஸ்தீன மக்களுக்கு குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண் ,பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-
களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார்.
அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது.
இந்நிலையில், அலெக்சான்ட்ரா தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை கடந்த 19-ம் திகதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என
பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் இயற்கைவழியில்தான் இவர் கருத்தரித்திருக்கிறார்.
இதுகுறித்து அலெக்சான்ட்ரா கூறும்போது, “சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்கிறேன். 2 மணி
நேரம் ஓடுகிறேன். புகை மற்றும் மது பழக்கம் இல்லை. கருத்தடை சாதனங்களை பயன்படுத்தியதே இல்லை” என்றார்.
இந்தப் பெண் இவ்வளவு அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொண்டது ஒன்றும் புதிது அல்ல. கடந்த 2023-ம் ஆண்டு உகாண்டாவைச் சேர்ந்த சபினா
நமுக்வாயா என்ற பெண், 70-வது வயதில் ஐவிஎப் மூலம் இரட்டை குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு ,இலங்கையில் எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் பரவும் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் நாட்டில் எச்.ஐ.வியுடன் வாழும் புதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறித்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும், புதிய எச்.ஐ.வியுடன் வாழும் 824 பேர் பதிவாகியுள்ளனர். அவர்களில் 718 பேர் ஆண்கள் என கூறியுள்ளது.
சமீபத்திய காலங்களில் 15-24 வயதுக்குட்பட்டவர்களில் புதிய எச்.ஐ.வியுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும், 15-24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் புதிய எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், 2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட எய்ட்ஸ் இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆகும். 2023 ஆம் ஆண்டில், எய்ட்ஸ் இறப்புகள் 20% குறைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த கூடுதல் தகவல்களை www.aidscontrol.gov.lk இல் காணலாம்.
அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி
அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி
அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் ஜனாதிபதி ,அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.
இதேவேளை, மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
வழக்குப் பதிவு செய்து வழக்கை விசாரித்த பிறகு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பெலியத்தயில் இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
“நாட்டை திவாலாக்கியவர்கள் மீண்டும் அரசாங்கங்களை அமைக்க வருகிறார்கள். யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். அவை வெறும் கனவுகள்தான். அவை ஒருபோதும் நிஜமாகாது.”
மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என்றும் ஜனாதிபதி கூறினார்
ரணில் வீடு எரிப்பு பிரதி அமைச்சருக்கு தொடர்பில்லை
ரணில் வீடு எரிப்பு பிரதி அமைச்சருக்கு தொடர்பில்லை
ரணில் வீடு எரிப்பு பிரதி அமைச்சருக்கு தொடர்பில்லை ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் வழக்கில், இளைஞர் விவகார பிரதி
அமைச்சர் எரங்க குணசேகர சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை இளைஞர் விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி அன்று நடந்த சம்பவம் தொடர்பாக குணசேகர சந்தேக நபராக அடையாளம் காணப்படவில்லை
என்றும், பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் துணை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.
“வழக்கை கையாண்ட கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டபோது, அத்தகைய பிடியாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீயை அணைக்கும் போது தீயணைப்புப் படையினர் தடுத்தனர் என்ற கூற்று முற்றிலும் தவறானது” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பெண் வேட்பாளர்களுக்கு சிறப்புத் திட்டம்
பெண் வேட்பாளர்களுக்கு சிறப்புத் திட்டம்
பெண் வேட்பாளர்களுக்கு சிறப்புத் திட்டம் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சிறப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இணையம் மற்றும் சமூக ஊடக
தளங்களில் நிகழும் வன்முறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்தார்.
பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் வன்முறை, அடக்குமுறை, அவமதிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலை ஒன்லைனில் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு திட்டம் பல தரப்பினரின் ஈடுபாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
இந்த முயற்சிக்கு “அவர்களுடைய பயணத்தை ஆதரிப்போம்” (Let’s Support Her Journey) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடற்கரை வீதியில் புதிய மின்விளக்குகள்
கடற்கரை வீதியில் புதிய மின்விளக்குகள்
கடற்கரை வீதியில் புதிய மின்விளக்குகள் ,கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களில் மக்கள் ஒன்று கூடுகின்ற பல முக்கிய இடங்கள் பிரகாசமிக்க மின்விளக்குகளால் ஒளியூட்ட பட்டுள்ளன.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடற்கரைப் பகுதிகளுக்கு வருகை தருகின்ற பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் கருத்தில்
கொண்டும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கிலும் கல்முனை மாநகர சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்தார்.
இதன் பிரகாரம் விஷேடமாக ஒரு தொகுதி பிரகாச மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு, அவை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கடற்கரைப்
பிரதேசங்களில் மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்று கூடுகின்ற பகுதிகளில் துரிதமாக பொருத்தப்பட்டு, ஒளியூட்ட பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடற்கரை வீதியில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் தெரு விளக்குகளுக்கு மேலதிகமாக கடற்கரைப் பகுதிகளை நோக்கியதாக இந்த புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


























