வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு ,இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்

ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

அதிகாரிகளால் மார்ச் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு ,மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் இராஜாங்க

அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.ஜே.முரளிதரன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று11) தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனு ஏற்பு மற்றும் சின்னம் வழங்குவதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் நடவடிக்கையின் போது ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம்

வியாழேந்திரனின் தலைமையில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சத்திய கடதாசி இணைக்கப்படாததால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்தார்.

கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் புளொட் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 2020ம் ஆண்டு தமிழ் தேசிய

கூட்டமைப்பில் இருந்து வெளியேறி கட்சி மாறி பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி இராஜாங்க அமைச்சரானார்.

இவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பைச்

சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது தலைமையில் போட்டியிடுவற்காக 8 பேர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை சுயேச்சைக் குழு ஒன்றின் தலைமை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யாது போட்டியிடும் 3வது நபர் வேட்புமனு தாக்கல்

செய்ததையடுத்து அதன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஒரு கட்சி 6 சுயேச்சைக்குளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.