கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்

Spread the love
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. கார்கில் போர் போன்ற மிகப்பெரிய யுத்தங்களும் நிகழ்ந்து பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சமீபத்தில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் சென்று 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையை இந்தியா கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கையும் தாக்கியது.

இந்த சோதனை நடந்து இரண்டு தினங்கள் ஆகி உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம், ‘ஷகீன் -1’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இன்று சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவ கட்டளை படைப்பிரிவின் செயல்பாட்டு தயார்நிலையை சோதிக்கும் நோக்கில், ஷகீன்-1 ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 650 கி.மீ. வரை அனைத்து வகையான ஆயுதங்களையும் தாங்கிச்செல்லக்கூடியது என பாகிஸ்தான் ராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author: நலன் விரும்பி

Leave a Reply