Posted in இலங்கை செய்திகள்

குளிக்க சென்ற சிறுமி – நீரில் மூக்கி மரணம்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில்

மூழ்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்று (05) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் காலிகோவில் வீதி 06ம் குறுக்கை சேர்ந்த சன்முகநாதன் விஜய ரூகினியும் அவரது சகோதரியும் நேற்று

மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச்சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06 ல் கல்வி பயின்று வந்த சன்முகநாதன் விஜய ரூகினி (வயது 12) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று பேர் உள்ள குடும்பத்தில் இச் சிறுமி மூன்றாவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

தென் இலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்- விக்கி காட்டம்

தென் இலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்- விக்கி காட்டம்

தமிழ் மொழி மூத்த மொழியென இந்திய உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் கூறப்படுகின்றதென தெரிவிக்கும் நாடாளுமன்ற

உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தான் அதனை கூறிய போது, தென்னிலங்கையில் உள்ளவர்கள் அதனை அறியாதவர்கள் போல நடிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சி சந்தைக்கு அருகில் இன்று (05) நடைபெற்ற மக்கள் சந்திபொன்றில் ​கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

தன்மை நாடாளுமன்றத்துக்கு​ தெரிவு செய்து மக்கள் தனது பொறுப்புக்களை அதிகரித்துள்ளனர் என்றும், தனித்து பயணிப்பது

தனக்கொரு புதிய அரசியல் அனுபவமாக உள்ளதெனவும் தெரிவித்தார்.

தமிழ் தலைமையகள் காலத்துக்கு காலம் செய்வது ஒன்றும் சொல்வது ஒன்றுமாக இருந்த காரணத்தாலேயே மக்களுக்கு

அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதெனவும், தற்போ​​தைய மாற்றம் தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கு வழி செய்யும் என்றும் தெரிவித்தார்.

தென்னிலங்கை அரசியல் சக்திகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகலரும் தன்மீது பெரும் அவதூறுகளை சாட்டியுள்ளனர்

எனத் தெரிவித்த அவர், அவற்றை நம்பாது தனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதன்படி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும்

தோல்வியாகவும் அமைகின்றது எனத் தெரிவித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்ற எனக்கு முன்னால் மிகப் பெரும் கடமைகள் காத்திருக்கின்றன என்றார்.

இப்போது, நாடாளுமன்றத்தில் தனக்கு எதிர்ப்பு வருகின்ற போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மௌனிகளாக

இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அவர், தான் அவர்களுக்காத்தான் மறந்துபோயுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி உலகின் மூத்த மொழி என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கூறப்படுகின்றதென தெரிவித்துள்ள அவர், அதனை

தான் கூறும்போது தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள் என்றும், சாடினார்.

Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (04) வெளியிடப்பட்டுள்ளது.

1982 ஆண்டு இலக்கம் 10 யின் கீழான பயங்கரவாதததை; தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன்

வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48யின் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக) ஒழுங்கு விதிகள்

சட்டததின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள

பணிகளுக்காக – தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு

அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை

நாடெங்கும் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ

அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,மன்னார்மற்றும்முல்லைத்தீவுமாவட்டங்களிலும் சில

இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை

குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின்

அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (06ஆம் திகதி) பெந்தோட்டை, மீகம, தொடம்பபிட்டிய, பெலவத்தை,

போதகம மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Posted in உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப்

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப்

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப் நம்பிக்கை
டிரம்ப்
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். மேலும் அந்த கட்சியின்

சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.

எனவே அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்கு ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம்

குடியரசு கட்சியினரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் இருந்து எங்களுக்கு

பெரும் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு

இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.

Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

கனடாவில் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி
துப்பாக்கிச்சூடு நடந்த இடம்
ஒட்டாவா:

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஒரு

பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் உயிருக்கு

போராடிக்கொண்டிருந்தார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை.

இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் இந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதலுடன்

தொடர்புடையது அல்ல என்றும் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Posted in உலக செய்திகள்

ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்

ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக எனது

சிறந்த சேவையைச் செய்வேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் – ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் – ரஜினிகாந்த்
நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில்

நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று. இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது

நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில்

நுழைவதற்கு இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும்,

நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். நான் எனது சேவையை எனது சொந்த வீட்டில் குழந்தைகளுக்காக தொடங்கினேன்.

எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பேன் அதற்கு எனக்கு அனைவரும்

உறுதுணையாக இருந்துள்ளனர். கலைஞர் அய்யா, ஸ்டாலின் சார், அன்புமனி ராமதாஸ் சார் போன்றோர் பல இதய அறுவை

சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். ஜெயலலிதா அம்மா, எடப்பாடி. கே.பழனிசாமி ஐயா, ஓ.பன்னீர்செல்வம் சார், விஜய பாஸ்கர் சார் மற்றும் பலர் பல்வேறு சேவைகளை செய்ய எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் – ரஜினிகாந்த்

நான் அரசியலில் நுழைந்தால் ஒற்றை மனிதனாகச் செய்வதை விட அதிக சேவையைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன், ஆனால் நான் அரசியலில் நுழையாததற்கு காரணம், எதிர்மறை அரசியலை நான் விரும்பாததால் தான், என் அம்மாவுக்கும் அதே கருத்துதான்.

ஏனென்றால் நாம் எல்லோரையும் பற்றியும் மோசமாக பேச வேண்டும், மற்றும் காயப்படுத்த நேரிடும். ஆனால் நான் அதை செய்யமாட்டேன், அனைவரையும் மதிக்கிறேன். எனவே, யாராவது எதிர்மறை அல்லாத ஒரு கட்சியைத் தொடங்கினால், நாங்கள்

மோசமாகப் பேசவோ அல்லது மற்றவர்களைப் புண்படுத்தவோ தேவையில்லை என்றால், அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய நான் எனது பங்களிப்பை அளிப்பேன். இந்தியாவில்

நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனெனில் அவர் ஒரு

அரசியல் காரணத்திற்காக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, அவர் கட்சியைத் தொடங்கினாலும் அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்த மாட்டார்.

தலைவர் தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால்,

அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன் என்று கூறியிருக்கிறார்..

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்குள் கடத்திவரப்பட்ட 133.6 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள்

இலங்கைக்குள் கடத்திவரப்பட்ட 133.6 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள்

இலங்கையில் கடந்த 12 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து

சுமார் 133.6 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டுளள்ன

சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையோ

நடவடிக்கையின் பொழுது மேற்படி கடத்தல்கள் முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் தொடருந்து முன்னெடுக்க படும் கடத்தல்கள் கடும் சோதனை காரணமாக முறியடிக்க படுவதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்- எகிறி பாயும் கோட்டா சட்டம்

இலங்கை காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்- எகிறி பாயும் கோட்டா சட்டம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள

பரிந்துரைகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் சேவையை மருசீரமைப்பதற்கு குறித்த பரிந்துரைகளை அமைச்சு

அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மருசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமது சொந்த கருத்துக்களை வழங்குமாறு

பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், பொலிஸ் சேவையை மேலும் வினைத்திரன்கொண்டதாக மாற்றி

அமைக்க அவர்களது கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று (செப்டம்பர், 2) விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ராஜபக்ஷ, பொலிஸ்

அதிகாரிகள் சிறந்த முறையில் சேவையாற்றும் சூழலை உருவாக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

“சிறந்த மற்றும் தரமான பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு வழங்க பணியாற்றுவதற்கான சிறந்த சூழல் மற்றும் தொழில் திருப்தி முக்கியமானதாகும்” என அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையாக கட்டிடத்தின் தற்போதைய வெளித்தோற்றத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜபக்ஷ, பொலிஸ்

அதிகாரிகளின் நலன்புரிகளை கருத்திற்கொண்டு அவர்களின் சேவையின் மதிப்பை உயர்த்துவதற்காக நாட்டின் பொலிஸ்

நிலையங்களின் வெளிப்புற தோற்றங்களை மேம்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களின் நிலை உள்ளிட்ட உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிரேஷ்ட பொலிஸ்

அதிகாரிகளினால் வலுவான கண்காணிப்பு முறைமையை மேற்கொள்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நான் பொலிஸ் சேவையில் இருந்த நாட்களில், எங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் கூட அவற்றை ஆராயும் அளவிற்கு கடுமையான கண்காணிப்பு முறைமையினை

மேற்கொண்டிருந்தனர், பொலிஸ் சேவையின் சிறந்த நற்பெயரை பெற இதுபோன்ற முறைமையினை நாங்கள் மீண்டும் கொண்டுவர வேண்டும். இல்லாவிடில் அது அரசிற்கு ஒரு அவப்பெயராக

காணப்படும். மக்களின் எதிர்பார்ப்புக்களை அடைய பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் சிறந்த ஒழுக்கத்தினை பராமரிப்பதன் அவசியத்தையும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என

எதிர்பார்தே மக்கள் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், எனவே அவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின்

எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இங்கு தெரிவித்தார்.

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முறியடிக்க பொலிஸ் அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி தற்போது

பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் குறித்த குற்றச்செயல்களுக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வருவம் அதேவேளை, ஊழலில் ஈடுபடும் சில பொலிஸ்

அதிகாரிகளை திருத்தி அவர்களை சரியான பாதையில் இட்டுச்சென்று பொலிஸ் சேவையினை மக்கள் நட்பு சேவையாக

மாற்றுவது சிரேஷ்ட அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.70 கோடியைத் தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது
சிகிச்சை பெறும் நோயாளிகள்
ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு

மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.70 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8.82 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60,930 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ்

தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 1.91 கோடியைக் கடந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி, கனேடிய

பிரதமரின் வாயில்தளத்தினை நோக்கி நீதிக்கான நெடு நடைப்பயணம் ஒன்று இடம்பெற்று வருவதோடு, பல்வேறு

புலம்பெயர்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த  ஓகஸ்ற் 30ஆம் நாள் பிரம்ரன் நகரசபை வாயிலில் இருந்து

தொடங்கிய இந்த நெடு நடைப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை 6வது நாளினை எட்டியுள்ளது. 424 கிலோ மீற்றர்களை கடந்து ஒட்டவா நாடாளுமன்றத்தினை அடையவிருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கோரிக்கை மனுவினை நெடு நடைப்பயணத்தின்

செயல்வீரர்கள், கனேடிய பிரதமர் ஐஸ்டின் ட்ருடோ அவர்களிடம் கையளிக்கவுள்ளனர்.


வலிந்து காணாமற் ஆக்கப்படுதல் என்பது அடக்குமுறையின் ஒரு வடிவமாக மட்டுமல்லாமல், அது இனஅழிப்பின் கருவியாகவும்

உள்ளது என்பதனை சுட்டிக்காட்டும் இம்மனுவானது, தமிழர்கள் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட

இனஅழிப்பினை குறித்துரைத்துக் கொள்வதோடு, அதற்கான பன்னாட்டு நீதியினை இந்நெடு நடைப்பயணத்தின் ஊடாக வலியுறுத்துகினற்து.

ஒடுக்கும் அரசுகள் ஓவ்வொன்றும், திரைக்குப் பின்னால் சனநாயக விழுமியங்களையும், சட்டத்தின் ஆட்சியின்பால் மதிப்பையும், கிழித்தெறிந்து கொண்டே, பன்னாட்டு மனிதவுரிமை

நெறிகளை மதிப்பது போல் நாடகமாடுகின்றன. சிறிலங்கா போன்ற இனவழிப்பு அரசுகளின் நிலை இதுவே.

 சிறிலங்காவில் அரசு  வலிந்து ,காணாமற் ஆக்கப்படுதல்களைத், தமிழினவழிப்பின் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. வலிந்து காணாமற் போனவர்களைப் பற்றிய ஒரு தரவுத்தளத்தைப்

பதிவேற்றுவதற்கென்று சொல்லி காணாமற் போனோர் அலுவலகம் ஒன்றை சிறிலங்கா நிறுவிய போதிலும், ஆயுத மோதலின் போது சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை

வெளியிடவே இல்லை. இந்தச் செயலின்மையும், பொறுப்புக்கூறாமையும்  ஆண்டுக்கணக்கில் தொடர்வதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தாய்மார்கள் போராடி வருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன

நேரிட்டது என்று தெரியாமலே கல்லறைக்குச் செல்லும் கொடுமைக்கு உற்படுத்தப்பட்டுளார்கள்! வலிந்து  காணாமல் ஆக்குதல் பற்றிய ஐ நா ஒப்பந்தத்தை சிறிலங்கா ஏற்று உறுதி

பூண்ட போதிலும், குறிப்பாக உறுப்பு 31க்கு மட்டும் ஆதரவளிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இந்த உறுப்புதான் இந்த ஒப்பந்தத்தைத் தங்கள் நாடு மீறியது குறித்து பாதிப்புற்றவர்கள்

தாமே வலிந்து காணாமற் ஆக்கப்படுதல் பற்றிய குழுவிடம் பேச வாய்ப்பளிப்பதாகும். இந்தக் காரணத்தால் தான் ஈழத்

தமிழர்களுக்கும், உலகெங்கும் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களினால் பாதிப்புற்ற அனைவருக்கும் உங்கள்

ஆதரவு தேவை என கனேடிய பிரதரை நோக்கி இந்நெடு நடைப்பயணம் கோருகின்றது.

இதேவேளை, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி , ஒஸ்றேலியா , அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வலிந்து காணாமற்

ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த  ஓகஸ்ற் 30ஆம் நாளன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் குழிக்குள் வீழ்ந்த வீடு – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

அமெரிக்காவில் குழிக்குள் வீழ்ந்த வீடு – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

அமெரிக் அப்புலிரிடா பகுதியில் இருபதடி ஆழத்தில் குழி ஒன்று தோன்றியுள்ளது .


இந்த குழியினால் அழகிய பெரும் வீடொன்று அந்த குழிக்குள் பாதி வீழ்ந்துள்ள நிலையில் காண படுகிறது

இது இயற்கையாக ஏற்பட்ட குழி என தெரிவிக்க படுகின்ற பொழுதும்

எவ்வாறு இந்த குழி ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

அமெரிக்காவில் குழிக்குள்
அமெரிக்காவில் குழிக்குள்
Posted in இலங்கை செய்திகள்

ஜஸ்மின் சுக்காவிடம் 5 மில்லியன் இழப்பீடு கோரும் சிங்கள இராணுவத்தளபதி

ஜஸ்மின் சுக்காவிடம் 5 மில்லியன் இழப்பீடு கோரும் சிங்கள இராணுவத்தளபதி

இலங்கை இராணுவ தளபதி ஒருவர் தொடர்பாக ஜஸ்மின் சுக்கா வெளியிட்ட கடிதத்தில்
தவறாக பிற அதிகாரி ஒருவரது படத்தை வெளியிட்டுள்ளனர்

இதனால் சீற்றம் உற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் படத்தை வெளியிட்ட

நிலையில் அவர் தனது பேருக்கும் ,புகழுக்கும் களங்கம் விளைவித்த நிலையில் ஐந்து மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கேட்டுள்ளார்

தவறாக அந்த அதிகாரி புகை படத்தை வெளியிட்டமைக்கு ஜாஸ்மின் சுக்கா மன்னிப்பு கேட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

34 ஆண்டுகள் கடற்படை சேவையில் இருந்து விடை பெற்றார் உயர் அதிகாரி

34 ஆண்டுகள் கடற்படை சேவையில் இருந்து விடை பெற்றார் உயர் அதிகாரி

ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல நேற்று (04) 34 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

நேற்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த

அதிகாரிக்கு பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அதன்பின் அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை

வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி வீதியின் இருபுறமும்

உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்களினால் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் கடற்படைக்கு சேர்ந்த ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல,

தனது பதவி காலத்தில் வடக்கு, வட மத்திய மற்றும் தெற்கு கடற்படை

கட்டளைகளில் துணைத் தளபதியாகவும், கடற்படை நல இயக்குநர், கடற்படை

தகவல் தொடர்பு மற்றும் இயக்குநர் பொது சேவைகள் போன்ற மூத்த பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள்

நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம். இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார,

பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம்

மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. எனினும்,

இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை

எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.

எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி

வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின்

பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை

முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்

தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்

கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள MV New Diamond கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல்

பகுதிக்கு இழுத்துச் செல்ல முடிந்துளளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தனது Twitter பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது

அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பல் நேற்று முன்தினம் தீ பற்றிக்கொண்ட

இந்த கப்பலில் எரிபொருள் கலஞ்சிய பிரிவில் எரிபொருள் ஒழுக்கு ஏற்படவில்லை என்றும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா -பீதியில் கட்சி

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா -பீதியில் கட்சி

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது.

அதனடிப்படையில் சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை

சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, அந்த இடத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சார்பில், ‘பினாமி தடுப்பு

சட்டத்தின் கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த இடம் மட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக சிறையில்

இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இப்பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக

எதிர்கொள்வோம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை.

ஏனென்றால் அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

இந்த இடம் 2013-2014-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். ஒருவர் பங்குதாரராக

சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்?

இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள்.

அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?

ஒருவர் தான் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய

முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ‘ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி’ என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும். வருமான

வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு சட்டம் இடம் கொடுக்காது. எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.

நான் சசிகலாவின் வக்கீலாக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறை நோட்டீஸ்

நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சசிகலா கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம்.

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை

குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எனவே 43 மாத காலம் சிறைவாசம் முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் தண்டனை

குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in உலக செய்திகள்

உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்

உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்

உலக பணக்கார பெண்கள் பட்டியலில் ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம் பிடித்துள்ளார். விவாகரத்து மூலம் கிடைத்த பணத்தால் இந்த இடம் கிடத்துள்ளது.

உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்
மெக்கென்சி ஸ்காட்


2020-ம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார்.

50 வயதாகும் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 6 ஆயிரத்து 800 கோடி டாலராகும். இவர் ‘அமேசான்’ நிறுவன சி.இ.ஓ.-வும் உலக

பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவருமான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி ஆவார்.

மெக்கென்சி ஸ்காட் தனது கணவர் ஜெப் பெசோசுடனான 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து

பெற்றபோது அவரிடம் இருந்த ‘அமேசான்’ நிறுவன பங்குகளில் 4 சதவீத பங்குகளை பெற்றார்.

அவற்றின் அப்போதைய மதிப்பு ரூ.3500 கோடி டாலர் ஆகும். தற்போது அந்த பங்கு மதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால்

மெக்கென்சி ஸ்காட்டின் சொத்து மதிப்பும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

விவகாரத்து மூலம் கிடைத்த பணத்தால் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த பணக்காரர்களில் அவர் 12-ம் இடத்தில் உள்ளார்.

உலக பெண்கள் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த லோரியால், அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர்

பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டாலர் சொத்துடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை

கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை

கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலின் தற்போதைய நிலையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது.


அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பல் நேற்று தீ

பற்றிக்கொண்டமை. தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கடற்படையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தீ பற்றிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் பட்சத்தில், அதிலிருந்து சுற்றாடலை

பாதுகாக்க சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எரிபொருளை உறிஞ்சக் கூடிய கருவிகளை பயன்படுத்துவதற்கும், தெற்காசிய பிராந்திய நாடுகளின் உதவிகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கப்பலில் ஏற்பட்ட தீ எண்ணெய் களஞ்சியசாலையை நோக்கி பரவுவதை தடுக்க முயற்சி செய்து வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.

தீயை அணைப்பதற்கு எட்டுக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இழுவைக் கப்பல்கள் மூன்றும்

அடங்குவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டீ சில்வா குறிப்பிட்டார்.

இந்தக் கப்பலிலுள்ள இரண்டரை இலட்சம் பீப்பாக்களுக்கு மேலான எரிபொருட்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

தீ பரவியுள்ள ஆவு நேற னுயைஅழனெ கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ்

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ்

வடக்கு விவசாயிகள் சுமார் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்ற

நிலையில், அவர்களுக்கு தேவையான உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கடந்த புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த விடயம்

தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் சுமார் 200

ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்செய்கைக்கு விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும்

வகையில் உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

குறித்த திட்டம் வடக்கில் வெற்றியளிக்குமாயின், உருளைக் கிழங்கு இறக்குமதியை கணிசமான அளவு குறைத்து அந்நியச் செலாணியை மீதப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் உருளைக் கிழங்கின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தீன்பண்டங்களை உற்பத்தி செய்யும் சர்வதேச தரத்திலான

தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை வரவேற்ற ஜனாதிபதி, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான

ஒத்துழைப்புக்களை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் வடக்கு விவசாயிகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் தேவையான உருளைக்

கிழங்கு விதைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார்.