Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video

அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video

அவுஸ்ரேலியா கடற்பரப்பில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

திடீரென கரை ஒதுங்கியுள்ளன
இந்த திமிங்கலங்கள்

இவ்வாறு ஏன் திடீரென வருகை தந்தன என்பது தொடர்பில் கடல் சார்

ஆய்வியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இவ்விதம் ஒதுங்குவதால் பெரும் கடல் பேரிடர் இடம் பெற கூடும் என அஞ்ச படுகிறது

அவ்விதம் எனின் சுனாமி வருவதற்குரிய வாய்ப்பு உள்ளதா …?

Posted in உலக செய்திகள்

இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் இருந்து உயிரோடு மீட்க பட்ட 4 வயது சிறுவன்

இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் இருந்து உயிரோடு மீட்க பட்ட 4 வயது சிறுவன்

இந்தியாவில் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது ,இதில் சிக்கி பலர்

படுகாயமடைந்தும் ,இறந்தனர் ,ஆனால் நான்கு வயது சிறுவன் ஒருவன்

தெய்வாதீனமாக உயிருடன் மீட்க பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

அவ்வாறான காட்சி ஒன்று கீழே

Posted in உலக செய்திகள்

நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்

நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்

சிம்பாவே நாட்டில் உள்ள அருவியில் நீரை அருந்திய காட்டு

யானைகள் 330 பேர் திடீரென இறந்துள்ளது

குறித்த யானைகள் ஏன் இவ்விதம் இறந்தன என பரிசோதனை செய்த

பொழுது அந்த நீரில் கொடிய பக்டீரியா கிருமிகள் பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டன

இதனை அடுத்தே குறித்த யானைகள் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது

தொடர்ந்து இது தொடர்பான பகுப்பாய்வு மற்றும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

தாஜ்மஹால் மீள திறப்பு – குவியும் மக்கள்

தாஜ்மஹால் மீள திறப்பு – குவியும் மக்கள்

இந்தியாவின் புகழ் பூத்த காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மகால்

தற்போது மீள மக்கள் பாவனைக்கு திறக்க பட்டுள்ளது ,

இதனை அடுத்து மீள உல்லாச பயணிகள் படை எடுத்து வருகின்றனர்

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை

லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை

பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயானது லெவல் நான்கை எட்டியுள்ளது


இது ஆள் ஒருவர் பலியாக முன்பு கோமா நிலையில் உள்ள செயளுக்கு ஒப்பானது

அதுவே இப்பொழுது நிலவி வருகிறது ,அதனை தொடர்ந்து அவசரமாக 15 விதிகளின் கீழ் தடைகள் பிறப்பிக்க படவுள்ளன ,

அவற்றில் உணவகங்கள் ,பார்கள் என்பன வரையறை செய்யப்பட்டவை

மட்டும் திறப்பது ,ஏனையவை அடித்து பூட்டுதல் ,மேலும் சமூக இடைவெளி

கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் ,முக கவசம் ,கையுறை என்பன அணியப்படல் வேண்டும் .

வீட்டுக்கு ஒருவர் என்கின்ற விகிதத்தில் வெளியில் நடமாடுதல் ,அதைவிட

பத்து மணிக்கு பின்னர் ஊரடங்கு பிறப்பிக்க பட்டு மக்கள் முடக்க படுதல் என்ற சட்டம் பாயவுள்ளது

மக்களே ஓடி சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

மறக்காது மருந்து பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்

,நாளை இந்த அறிவுப்பு திடிரென வெளியாகலாம் ,பிரதமர் முக்கிய உரை ஆற்றவுள்ளார்

அதன் பின்னர் இவை நடைமுறைக்கு கொண்டுவர லண்டன் மேயர் நடவடிக்கை எடுத்து வருகிறார்

நாள் ஒன்றுக்கு 49,000 பேர் இந்த நோயால் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி கொள்ளுங்கள்

Posted in உலக செய்திகள்

3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.12 கோடியைத் தாண்டியுள்ளது.

உலக அளவில் 3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்கள்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு

மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.12 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.64 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.28 கோடியைக் கடந்துள்ளது.

Posted in உலக செய்திகள்

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்-தப்பிய டிரம்ப்

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு

முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம்

அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Posted in உலக செய்திகள்

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என ஈரான் உறுதியளிக்க, அதற்கு

பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டது.

எனினும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை ஈரான் மீறினால், அந்த நாட்டின் மீது ஐ.நா. தடையை மீண்டும்

அமல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் ‘மீள் தடை’ என்றழைக்கப்படுகிறது.

இதனிடையே அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக கூறி வந்த டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது தொடங்கி இப்போது வரை ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதால், தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க

முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அமெரிக்கா தனது முடிவில் தீர்க்கமாக இருந்தது.

அதன்படி ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இதனை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்கா வரவேற்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடை; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பது மற்றும் சோதிப்பதற்கான தடை; அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில் நுட்பங்களை மாற்றுவதற்கான தடை போன்ற கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.

அதேபோல் மற்ற நாடுகள் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பங்களை ஈரானுடன் பகிர்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடைகளை அமல்படுத்துவதற்கான கடமைகளை ஐ.நா. உறுப்பு நாடுகள் நிறைவேற்றத் தவறினால் அவற்றுக்கான விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்கும். ஒரு விரிவான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்கா ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தத்தை தொடரும்.

எதிர்வரும் நாட்களில் ஐ.நா. பொருளாதார தடைகளை அமல்படுத்துவதை வலுப்படுத்தவும், அதை மீறுபவர்களை பொறுப்புக்கூற வைக்கும் பல கூடுதல் நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபை முறைமையை அழிக்கும் கோட்டா அரசு

மாகாண சபை முறைமையை அழிக்கும் கோட்டா அரசு

மாகாண சபைகளை இல்லாமற் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ள

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அம்முறைமையில், ஏதாவது

பிரச்சினைகள் இருப்பின், அதனை திருத்தி, மாகாண சபை முறைமை, நாட்டுக்குள் பேணப்படவேண்டும் என்றார்.

மாகாண சபை முறைமை நீக்குவதற்கான முயற்சியை, முன்னாள் முதலமைச்சர் என்றவகையில், நானே முதலில் எதிர்ப்பேன் எனத்

தெரிவித்த அவர், மாகாண சபை முறைமை அமுலில் இருக்கவேண்டும் என்றார்.

கொக்கல ஏற்றுமதி வலயத்தில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்காக, அடிக்கல் நாட்டும்

நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13ஆவது திருத்தம் ஊடாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை​யானது இந்தியாவால் பலவந்தமாக

திணிக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

“என்றாலும் நிர்வாக அதிகாரத்தை பிரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை நீக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலே​யே நான் இருக்கின்றேன்” என்றார்.

“மாகாண சபைகளை “வௌ்ளை யானை” என குற்றம் சுமத்தினாலும் வேலைச் செய்யாதவர்களை முதலமைச்சர்

ஆசனங்களில் அமரவைத்தமையால், வேலைச் செய்யக்கூடிய திறமையானவர்களுக்கும் மாகாண சபைகள் ஊடாக வேலை செய்ய முடியாமல் போனது” என்றார்.

மாகாண சபைகளின் ஊடாக, சம்பளம் வழங்கப்படுகின்றமை கூடுதலான நிதி விரயமாக காட்டப்படுகின்றது. ஆனால், மாகாண

சபைகள் ஒழிக்கப்பட்டாலும் மாகாண சபைகளில் பணிபுரிந்த அந்த அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட ஊழியர்கள், அரச சேவைக்குள்

உள்வாங்கப்படுவர். அப்போது, அதேயளவான செலவையும் அரசாங்கம் ஏற்கவேண்டும் என்றார்.

எனவே, மாகாண சபைகள் என்ற வார்த்தை எவருக்கும் பிடிக்காமல் போகுமாயின், அதனை திருத்துவது பிரச்சினை இல்லையென்றும்

அதனை விடுத்து மாகாண சபைகளை நீக்குவது அதற்கான தீர்வு இல்லையெனத் தெரிவித்த அவர், அது தனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்

Posted in இலங்கை செய்திகள்

கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா

கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 257 பேர் ஓகஸ்ட் 02ஆம் திகதி கேப்பாப்பிலவு விமானப்படைத்தளத்தில்

அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டம்

கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போது, 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை (19) 8 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 10 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

கணவனை உயிரோடு எரித்த பெண் – முல்லைத்தீவில் நடந்த பயங்கரம்

கணவனை உயிரோடு எரித்த பெண் – முல்லைத்தீவில் நடந்த பயங்கரம்

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் கணவனின் தொல்லை

தாங்கமுடியாத மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய கணவன் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, கணவன் வெளியிடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று, தனது பிள்ளைகளை பார்க்க வீட்டுக்கு

சென்ற கணவனால் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கண்டி சம்பவம்-விசாரணைகள் ஆரம்பம்

கண்டி சம்பவம்-விசாரணைகள் ஆரம்பம்

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் இடிந்து விழுந்த 05 மாடி கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதால், சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (20) அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை மாத சிசு உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு

குழுவினரால், மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசு உயிரிழந்தது.

பின்னர், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த ​​​தம்பதியினர் பிற்பகல் 2 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டனர்.

இதேவேளை, கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதி

பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு

மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை

பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக

அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிகளுடன் இருவர் திடீர் கைது

துப்பாக்கிகளுடன் இருவர் திடீர் கைது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இருவர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் வைத்து ஒருவரும்,

உடவலவை பகுதியில் வைத்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் இன்று (19) அதிகாலை கைதானவர் 31 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உடவலவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்

கல்பொத்தயாய பகுதியை சேர்ந்த 48 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மன்னார் மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி கோட்ட புத்தளம் பயணம்

ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ நேற்று (19) புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம்

அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில்

மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த

பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து

கொடுக்குமாறு இராணுவத் தளபதிக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன்,

இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும்

அமைத்துக் கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை

பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக

முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக

நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டன.

Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு எச்சரிக்கை – கடுமையாகும் புதிய சட்டம்

இந்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் கொழும்பின் 4 பிரதான வீதிகளில்

அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்குவிதிகள் நாளையிலிருந்து

கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு நாளை (21) முதல் ஆலோசனை

வழங்கும் வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோரை அடையாளம் காணும் விசேட நடவடிக்கை

முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி

பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி

கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து

வீழந்ததுள்ளதால், குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை

மாத குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு குழுவினரால்,

மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

இதன்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த ​​​மேலும் இருவரைக் காணவில்லை

என்றும் இவர்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Posted in உலக செய்திகள்

சீனா இந்தியா எல்லையில் பதட்டம் – குவிக்க படும் இராணுவம்

சீனா இந்தியா எல்லையில் பதட்டம் – குவிக்க படும் இராணுவம்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

,இதன் காரணாமாக இரு நாடுகளும் தமது இராணுவத்தை அந்த பகுதியில் குவித்து வருகின்றனர்

மேலும் உணவு பொருட்கள் என்பன பல மாதங்களுக்கு தேவையானவை

சேமிக்க ப்படும் வருகின்றன ,இவ்விதம் போர் ஒன்று மூண்டால்

அதில் இந்திய படைகள் படு தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும் என்றே அடித்து கூற படுகிறது

அமெரிக்காவுடனேயே முட்டி மோதும் சீனாவை இந்திய அடக்கிவியிட முடியாது என்பதும் ,அதன் ஆயுத பலத்திற்கு

இந்தியாவால் ஈடு கொடுக்க முடியாது போகும் என்பதும் கணிப்பாகிறது

இருவரும் போருக்கு சளைத்தவர்கள் அல்லர் என்ற நிலையினை உருவாக்குவதற்கே இந்த பதட்டம் ஏற்படுத்த படுவதாகவும் இதனை அவதானிக்க முடிகிறது

Posted in உலக செய்திகள்

விமான குண்டு தாக்குதலில் 30 பேர் பலி – 50 க்கு மேற்பட்டோர் காயம்

விமான குண்டு தாக்குதலில் 30 பேர் பலி – 50 க்கு மேற்பட்டோர் காயம்

வடக்கு ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள தாலிபான் கிளர்ச்சி

படைகள் மீது அரச இராணுவ போர் விமானங்கள் திடீர் குண்டு தாக்குதலை நடத்தின


இதில் முப்பது மக்கள் படுகொலை செய்ய பட்டும் ஐம்பதுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்

மேற்படி தாக்குதலில் ஏழு போராளிகள் பலியாகியும் 11 பேர்

படுகாய மடைந்துள்ளதாக அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

இலங்கை சிங்கள இராணுவத்தின் பொய் பரப்புரைகளில் ஒன்றாக இவை பார்க்க முடிகிறது

Posted in இலங்கை செய்திகள்

தள்ளாடும் கோட்டா அரசு – தகருமா 20 ..?

தள்ளாடும் கோட்டா அரசு – தகருமா 20 ..?

இருபதாவது அரசமைப்புத் திருத்தத்துக்கு 2/3 பெரும்பான்மை ஒருபோதும் கிடைக்காதெனவும், அந்த திருத்தத்துக்கு எதிரான சகல

நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இருவதாவது அரசமைப்பை பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்க பிரஜையான ஒருவர் அமெரிக்க கொடியின் முன்பாக

சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஒருவர், இலங்கையிலுள்ள

சொத்துக்களை சூறையாடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிட முடியுமெனவும் சாடினார்.

இந்த திருத்தத்துக்கு ஒருபோதும் 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதன தெரிவித்த அவர், அரசாங்கத்துக்குள் உள்ள

குழுவினரே 20 க்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி 20

ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட நாள் தொடக்கம் அதற்கு

எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்ததெனவும், இனிவரும் காலங்களில்

நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் அந்த போராட்டம் தொடருமெனவம் தெரிவித்தார்