Author: நலன் விரும்பி
காலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை
காலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை
கொரோனா தொற்றாளர்களுக்காக, காலி மாவட்டத்தில் 3 வைத்தியசாலைகள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஹிக்கடுவ- ஆரச்சிகந்த வைத்தியசாலை, அம்பலாங்கொட,
கரந்தெனிய ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களுக்கு
சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையின் பின்னர், இதுவரை காலி மாவட்டத்தில்
4,837 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டா -பொம்பியோ பேச்சு
ஜனாதிபதி கோட்டா -பொம்பியோ பேச்சு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்
மைக்கல் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி
செயலகத்தில் வைத்து சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்திப்பார்.

புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்
புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்
புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள மொத்த வர்த்தக நிலையங்களை
நாளாந்தம் காலை 5.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்கமைவாக இன்றைய தினம் அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.
வியாபாரிகள் கணிசமான அளவு பொருட்களை கொள்வனவு செய்ய வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் 50மூ ஊழியர்களை பணியில் ஈடுப்படுத்தி மொத்த
வர்த்தகம் இடம் பெறுவதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுகாதார பாதுகாப்புடன் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.
தட்டுபாடு இன்றி அனைத்து அத்தியவசிய பொருட்களும் புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் இருப்பதாகவும்
உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி. பிரெண்டா பார்டொன்
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார்.
நாட்டின் மூலோபாய திட்டம் 2018-2020 ஊடாக உலக உணவுத் திட்ட உதவியின் மூலம் அதற்கான ஒத்துழைப்பை தொடர தேசிய
முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அதற்கேற்ப தற்போதைய நாட்டின் மூலோபாயத் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உலக உணவுத் திட்ட
நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த
ரணசிங்க, ஐநாவின் உலக உணவு த் திட்ட கொள்கை திட்ட அதிகாரி திரு. அபேரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை திருமதி. பார்டன் பாராட்டினார்.
மேலும், தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக முன்னெடுகப்படும் நடவடிக்கைகள் மற்றும் தற்போது நாட்டில் நிலவும் நிலைமைகளின் போது உலக உணவுத் திட்டத்தினால்
இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நாட்டில் குறிப்பாக தொற்று நோய் பரவல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்ற வேளையில் உலக உணவுத் திட்ட நிறுவனம் இணை
நிறுவனங்களுடன் இணைந்து அவற்றுக்கு நிலையான தீர்வு காணும் வகையில் செயற்பட வேண்டிய விதம் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்தங்களின் போதான அவசர நிலைமைகளின் போது கடந்த காலங்களில் உலக உணவுத்திட்ட நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட
உதவிகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இதன்போது குறிப்பிட்டார்.
முப்படை மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க பிரிவினரால் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் சிறப்பான
நடவடிக்கைகள் குறித்து உலக உணவுத்திட்ட நிறுவனத்தினால் வதிவிடப் பிரதிநிதி இதன் போது குறிப்பிட்டார்.
தொற்று நோய் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைள் குறித்து கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, ஊரடங்குச் சட்டம்
அமுல்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு உயர்வான சேவையை வழங்க இராணுவ – சிவில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வலுவான ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சமாதானத்திற்கான நோபல் பரிசை வெற்றிகொண்ட
உலக உணவுத்திட்ட நிறுவத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை துவங்குவதற்கு முன்னர் மாவட்ட மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் செய்வதற்காக உணவு
அல்லாத உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தகவல் தொழிநுட்ப உபகரணங்களை உலக உணவுத் திட்ட நிறுவனம் இதன் போது வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் தெற்குப் பொலிஸ் வலயங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்
ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் தெற்குப் பொலிஸ் வலயங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்
மேலும் பல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19
தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் நேற்று இரவு அறிவித்தது.
இதற்கமைவாக ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்
அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்
ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அது தற்சமயம் நடைமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துவகைகளை கொள்வனவு
செய்வதற்காக வாரத்திற்கு இரண்டு நாட்கள் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்.
கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்.
காலை 8.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை வர்த்தக நிலையங்கள் திறந்திருக்குமென கொவிட்-19 தொற்றுப் பரவலைத்
தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் நேற்று இரவு அறிவித்தது.
லண்டனில் முக கவசம் அணியாதவரை அடித்து ரயிலுக்குள் வீசிய கும்பல்
லண்டனில் முக கவசம் அணியாதவரை அடித்து ரயிலுக்குள் வீசிய கும்பல்
பிரிட்டன் London Underground Circle line service,High Street Kensington station.
பகுதியில் ரயிலில் பயணித்த பயணிகளில் சிலர் முக கவசம் அணிய மறுத்து பயணம் செய்துள்ளனர்
இதனை அவதானித்த குழு ஒன்று அந்த நபர்கள் மீது வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர் ,திடீர் தாக்குதலை நடத்தி ரயிலுக்கு வெளியே வீசியுள்ளனர் ,
இதனால் அவரது கண்ணில் பலத்த காயமடைந்த நிலையிலும் ,உடலின்
சில பகுதிகளில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் .
தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா
நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா
நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா
நிலவில் தண்ணீர் இருக்கலாம் என அங்கீகரிக்கப்படும் பகுதிகளின் :
இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர்
இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது
நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது.
இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர்
மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர் நிலவின் குறிப்பிட்ட பகுதிகளில் இல்லாமல் பெருமளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. நீர் மூலக்கூறுகள்
நிலவில் பனிசூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.
சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவில் நாம் முன்பு நினைத்ததை விட அதிகமான தண்ணீர் இருக்க கூடும்.
சந்திர துருவ பகுதிகள் நிரந்தரமாக நிழலாடிய குளிர் பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது.
நிலவின் தென் அரை கோளத்தில் அமைந்துள்ள, பூமியில் இருந்து கண்ணுக்கு புலப்படும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி நீண்டகாலமாக சூரிய ஒளி படாத பனித்திட்டுகளில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும் நீர் மூலக்கூறுகள்
மறைந்து உள்ளன. முந்தைய ஆய்வின்படி அல்லாமல் நிலவில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் நீர் ஆதாரம் காணப்படுகிறது.
இதுகுறித்து விஞ்ஞானி ஹொன்னிபால் கூறும்போது, “புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதியில் கூட மூலக்கூறு
நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் ரசாயண ஆதாரம் கிடைத்துள்ளது.
தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம். அது எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதை கண்டால்
அதை மனித ஆய்வுக்கான வளமாக பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் எரி பொருளாக பயன்படுத்தலாம்” என்றார்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் மனிதன் அல்லது ஆய்வு கலன்கள் நிலவை அடையும் போது குடிநீர் அல்லது எரிப்
பொருளுக்கான மூலப் பொருட்களாக இந்த நீர் மூலக்கூறுகள் விளங்கும் என்று நாசா தெரிவித்து உள்ளது.
லண்டனில் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு கொரனோ தடுப்பூசி
லண்டனில் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு கொரனோ தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல நோய் எதிர்ப்பு – நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி?
4 கோடியே 37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 11 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.
ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.
பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல மற்றும் ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு
சக்தியை உருவாக்குவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அனைத்து தரப்பினருக்கும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ள நிலையில்
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இங்கிலாந்தில் விரைவில் பயன்பாட்டிற்குவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள தவலின் படி, லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் தொகுப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில்
(நவம்பர் 2) வழங்கப்படும் எனவும் இதற்காக தயார் நிலையில் இருக்கும்படி மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் விரட்டியடிப்பதும் கைது
செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மீனவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். பல
லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இலங்கை கடற்படை அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.
கைது செய்யப்பட்ட குஷ்பு
கைது செய்யப்பட்ட குஷ்பு
ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த முயற்சிக்கும்போது எங்களுக்கு அனுமதி தடுக்கப்படுவது
ஏன்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் – கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்
கைது செய்யப்பட்ட குஷ்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர்.
ஆனால், சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
ஆனாலும், தொல்.திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சிதம்பரம் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக குஷ்புவை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டது தொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுவிட்டேன்…. போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்கின்றனர். பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும்
பெண்களின் பாதுகாப்பு பற்றியே பேசுவார். அவரின் பாதையில் செல்வோம். அங்குள்ள சிலரின் அட்டூழியங்களுக்கு நாங்கள் தலைவணங்கப்போவதில்லை… பாரத மாதவுக்கு ஜே..
கோழைகள் விடுதலை சிறுத்தைகள். மகிழ்ச்சியில் இருக்காதீர்கள். இது உங்கள் தோல்விதான். எங்கள் சக்தி எவ்வளவு என்று அவர்களுக்கு தெரியும் அதனால் தான் கைது செய்யப்பட்டுள்ளோம்
. பாஜக ஒரு போதும் தலைவணங்கப்போவதில்லை. இந்த மண்ணின் ஒவ்வொரு மகளின் மரியாதையையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நரேந்திரமோடி மேற்கொள்வார்.
கோழைகள் விடுதலை சிறுத்தைகள். பெண்களுக்கு மரியாதை அளித்தல் உங்களுக்கு கூட்டணியா?
உங்கள் பயணம் பலத்தால் தடுத்து நிறுத்தப்படும்போது நீங்கள் சரியாக பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மற்ற கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்போது ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த அனுமதி கேட்கும்போது நாங்கள் தடுக்கப்படுவது ஏன்? என
அதிமுக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் கேள்வி எழுப்புகிறேன். இந்த பாரபட்சம் ஏன்? அல்லது விடுதலை சிறுத்தை கட்சி கலவரத்தை
ஏற்படுத்த திறனுடையவர்கள் என அதிமுக அரசுக்கு தெரிந்திருப்பதால் அவர்கள் பயப்படுகிறார்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்
அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ
இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை
முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் 3 மாவட்டங்கள் அதி அபாய வலயமாக அறிவிப்பு
இலங்கையில் 3 மாவட்டங்கள் அதி அபாய வலயமாக அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை
ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு மாட்டத்தின் ஏழு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 19 பொதுசுகாதார பரிசோதகர்
பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் நுகேகொட, பத்தரமுல்ல, கொலொன்னாவ, கஹத்துடுவ, மொரட்டுவ, கடுவலை ஆகிய மாநகரசபைப் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில், ராகம, வத்தளை, திவுலப்பிட்டிய, ஜாஎல, ஏக்கல, கட்டான, சீதுவ, கம்பஹா, அத்தனகல்ல, வெயாங்கொட
மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்கள் அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம மற்றும் வாத்துவ ஆகிய பிரதேசங்கள் கொரோனா வைரஸ் அதிகம் பரவிவரும் அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக மேற்படி மாவட்டங்களின் 27 சுகாதார பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா
வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா
பேலியகொட மீன்சந்தை கொரோனா தொற்றுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட கோரளைப்பற்று மத்தி
பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்புடைய இரண்டாங் கட்ட தொடர்பாளர்கள் 500 பேர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும்வகையில் தொற்று பரவாமலிருக்க இறுக்கமான தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. க.
கருணாகரன் தலைமையில் நேற்று (26) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். தொற்று அபாயம் நிலவும் பிரதேசங்களில் அரச திணைக்களங்களில் 15 தொடக்கம் 20 வரையான
உத்தியோகத்தர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பேணி செயற்பட அனுமதிக்கபட்டுள்ளது.
இன்று (27) முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகளை இடைநிறுத்தவும் மிக
அவசியமாக நடாத்தப்படவிருப்பின் மதகுரு உட்பட ஐவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.
மேலும் சிகை அலங்கார நிலையங்கள் உடன் செயற்படும் வண்ணம் மூடப்படவேண்டும்.
ஏற்கனவே தீர்மனிக்கப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு அப்பகுதி சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகமைவாக செயற்படுவதுடன்,
மரணங்கள் ஏற்படின் 15 பேர் மாத்திரம் நல்லடக்க நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும்.
இதுதவிர நகர்ப்புறங்களான மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் சனநடமாட்டத்தினைக்
கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்படும்.
சந்தைகளை திறந்த மைதானங்களில் நடாத்துவதுடன், உணவகங்களில் உட்காந்து உண்பதற்கு 50 வீதம
அனுமதிக்கப்படுவர். பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களுக்கு அளவான பயணிகளையே ஏற்றப்படல் வேண்டும்.
இவற்றுக்கு மேலதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மக்கள் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் நடமாடும் காவல் பிரிவு செயற்படுவதுடன்
பொதுமக்கள் இருவருடன் அரச உத்தியோகத்தர்கள் மூவரும் இணைப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விசேட பணிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொவிட் – 19 தனியார்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சம்பளம்
கொவிட் – 19 தனியார்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சம்பளம்
கொவிட் – 19 வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை
வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு Zoom தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் சற்று முன்னர் நடைப்பெற்றது.
இதன் போது அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இது தொடர்பாக தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கொவிட் – 19 தொற்றின் காரணமாக ஏற்ப்பட்டுள்ள
நிலைமை தொடர்பாக நேற்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனை தொடர்ந்து தனியார்துறை ஊழியர்கள் சம்பளம் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்கமைவாக ஏற்கனவே இதற்காக அமைக்கப்பட்ட செயலணியிளால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவர்களுக்கான சம்பள நடைமுறையை இவ்வருடம் செப்டம்பர் மாதம் தொடக்கம்
டிசம்பர் மாதம் வரையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையை அரசாங்கம் தனியார்துறையினருக்கு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானம் வருமாறு.
17) கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள ச10ழ்நிலையால் தனியார்துறைப் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக உடன்பாடு தெரிவித்த காலப்பகுதியை நீடித்தல்
கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள ச10ழ்நிலையால் தனியார்துறைப் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற் சங்கங்கள், தேசிய தொழிலாளர்
ஆலோசனைச் சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியால் 2020 மே மாதம்
தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் கீழ்காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடன்பட்டு அதற்கமைய மேற்கொள்ளப்பட்டது.
• கொவிட் 19 தொற்றால் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர்களை தொழிலிலிருந்து நீக்காமல் இருத்தல்
• சமூக இடைவெளியைப் பேண வேண்டியிருப்பதால், நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் பணியில் அமர்த்துவதற்கு இயலாது
போவதால் ஊழியர்களை நேரசூசி அடிப்படையில் அல்லது வேறு பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி சமமாக பணிபுரியும் வகையில் பணியில் அமர்த்துதல்
• வேலை இல்லாததால் ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிடுவதால், நிறுவன ஊழியர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்ட
மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50மூ வீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்தல்
• அவ்வாறு செலுத்தும் சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான செலுத்தல்களை மேற்கொள்ளல்
தற்போது கொவிட் 19 தொற்று நாட்டில் பரவி வரும் நிலைமையில்
இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை மேற்குறிப்பிட்டவாறு செயற்படவும் குறித்த செயலணி உடன்பாடு தெரிவித்துள்ளதாக
தொழில் அமைச்சர் அவர்கள் முன்வைத்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.
தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது – இராணுவத் தளபதி
தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது – இராணுவத் தளபதி
இன்று தொடக்கம் தனிமைப்படுத்தல் நடைமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான
தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பதிய நடைமுறை குறித்து இராணுவத் தளபதி விளக்கமளிக்கையில .
கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில்
இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்றும் கூறினார்.
இதற்கு முன்னதாக, கொவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டதும் அவருடன் தொடர்பைப் பேணியவர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இனிமேல்
அந்த நடைமுறை அமுலில் இருக்காது. மாறாக தொற்றாளருடன் முதலாவது தொடர்பை பேணியவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார். இவ்வாறு வீடுகளில்
தனிமைப்படுத்தப்படுபவர்கள் உரிய விதிமுறைகளை அனுசரித்து வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காலகட்டத்தில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.
அவர்களுக்கு தொற்று உள்ளதா என கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள் முதியவர்கள்
மற்றும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் இதனை கருத்திற்கொண்டு
நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களை வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இராணுவத்திற்கு கொரனோ -3 இராணுவ முகாம்கள் அடித்து பூட்டு
இராணுவத்திற்கு கொரனோ -3 இராணுவ முகாம்கள் அடித்து பூட்டு
கொஹுவல, பேலியகொட, வெதமுல்ல ஆகிய STF முகாம்களிலுள்ள 9 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், குறித்த மூன்று STF முகாம்களும் முடக்கப்பட்டுள்ளன.
குறித்த முகாம்களில் சமைப்பதற்காக பேலியகொடையில் இருந்து மீன்
கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன்மூலமே கொரோனா தொற்று
முகாம்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிரிஹான மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களில்
கடமையாற்றும் 3 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக அடித்து பூட்டு
மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக அடித்து பூட்டு
நாரஹேன்பிட்டி, வெரஹேகர மோட்டார் போக்குவரத்J திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹேர
அலுவலகங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் திறக்கபடமாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொழும்புக்கு வரும் அனைத்து
தூர இடங்களுக்கான போக்குவரத்து பஸ் சேவைகள் பலவற்றை இரத்து
செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 16ஆவது கொரனோ நோயாளி மரணம்
இலங்கையில் 16ஆவது கொரனோ நோயாளி மரணம்
இலங்கையில் 16ஆவது கொவிட் நோயாளியின் மரணம் நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (25) அதிகாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என உறுதி செயப்பட்டுள்ளதாக . பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மரணமான இந்த நோயாளி 70 வயதைக் கொண்ட ஆண் ஆவார். அத்தோடு கொழும்பு 02 பகுதியச் சேர்ந்தவர்.
கடந்த 23 ஆம் திகதி இவரது இரத்தத்தில் கிருமி நுழைந்ததினால் ஏற்பட்ட
சிக்கலான நிலைமையின் காரணமாக கொழம்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையின் காரணமாகவே நோயாளி உயிரிழந்துள்ளார்.
இது இலங்கையில் பதிவான 16ஆவது கொவிட் நோயாளியின் மரணம் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
ஊரடங்கில் காட் விளையாட்டுக்கு தடை – மீறினால் தண்டம்
ஊரடங்கில் காட் விளையாட்டுக்கு தடை – மீறினால் தண்டம்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில்,
காட் விளையாட்டு, குழுவாக விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்
படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கம்பஹா மாட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு
மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறையில் மூன்று பொலிஸ் பிரிவுகளிலும், வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ,
முல்லேரியாவ மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் வீதிகளில், ஒழுங்கைகளில் மற்றும் அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடமுடியாது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில், அக்கம் பக்கத்தினருடன் விளையாடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை பேணும் வகையிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு.
கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு.
கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்
மீண்டும் அறிவிக்கும் வரையில் கோட்டை, புறக்கோட்டை,
பொரள்ளை, வெலிகடை ஆகிய பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட
பகுதிகளுக்குள் இன்று (25) மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல்
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக கொவிட் 19 வைரசு
தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.








