Author: நிருபர் காவலன்
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன்
தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்
. அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர்
பட்டியலில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் 6 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.
வேல்முருகன்
மீதமுள்ள ஆஜித், வேல்முருகன், நிஷா, சோம் சேகர், சுரேஷ் ஆகிய ஐந்து பேரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில்,
இன்று வெளியான புரோமோவில் வேல்முருகனை தவிர்த்து அனைவரும் வீட்டில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் வேல்முருகன் எலிமினேட் ஆனது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
வடகொரியா அதிபரை குண்டர் என சாடிய பைடன் -எல்லோருக்கும் சேர்த்து அடிப்போம் என மிரட்டல்
வடகொரியா அதிபரை குண்டர் என சாடிய பைடன் -எல்லோருக்கும் சேர்த்து அடிப்போம் என மிரட்டல்
வட கொரியாவின் வீர தலைவர் கிங் யோங் உன் உலக நாடுகளினால்
கூர்ந்து கவனிக்க படுபவர் ,மேலும் இவரை கொலை செய்யவும் நகர்வுகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அவ்வாறே நான் இறந்தாலும் எனது மக்களும் ,நாடும் செழிப்பாக இருக்க
எங்களிடம் சிறந்த ஏவுகணைகள் உள்ளன ,இவை அணுகுண்டுகளை காவி சென்றும் தாக்கும் சக்தி வாய்ந்தவை
வட கொரியாவில் இருந்த படியே அமெரிக்காவை முற்றாக அழிக்க முடியும் என்கிறது வடகொரியா
இவ்வாறான போர்வெடித்து பறக்கும் நிலையில் தேர்தல் நடக்கிறது இதில் டிரம்ப் தோல்வி அடைந்து பைடன் வெல்வார் என்பது கணிப்பு
அப்படி வெல்ல போகும் பைடன் வடகொரியா அதிபரை குண்டர் என்கிறார் ,
அதற்கு வடகொரியா எவர் வந்தாலும் அனைவருக்கும் போட்டு தாக்குவோம் என்ற தொனியில் பதிலடி வழங்கியுள்ளது
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதே வடகொரியா நிலைப்பாடாக உள்ளது
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
ஆப் கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா துருப்புக்கள் அங்கிருந்து
எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்னதாக தமது வீடுகளுக்கு
திரும்புவார்கள் என் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார் .
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தேர்தலில் வழங்க பட்ட
வாக்குறுதியின் இம்முறை அவர் மீள தெரிவித்து தேர்தல் நாடகத்தை நடத்தி முடித்துள்ளார்
அனைத்து படைகளும் அந்த மண்ணில் இருந்து முற்றாக விலக்க என
இப்பொழுது தடலடியாக டிரம்ப் அறிவிக்க காரணம் வெற்றி பெறுதலின் உள்நோக்கம் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா தேர்தல் வாக்கு பெட்டிக்குள் புகுந்த ஈரான் கைக்கார்கள் – டிரம்புக்கு ஆப்பு
அமெரிக்கா தேர்தல் வாக்கு பெட்டிக்குள் புகுந்த ஈரான் கைக்கார்கள் – டிரம்புக்கு ஆப்பு
அமெரிக்காவை எதிர் வரும் மூன்றாம் திகதி இடம் பெற உள்ள தேர்தலில்
டிரம்ப் பலத்த தோல்வியை சந்திப்பார் என ஆருடம் வெளியிட பட்டுள்ள
நிலையில் ,டிரம்புக்கு நெத்தியடி வழங்கும் முகமாக ஈரானிய கைக்கர்கள்
வாக்கு பெட்டிகளுக்குள் புகுந்துள்ளதாக அமெரிக்கா பர பரப்பாக தெரிவித்துள்ளது
பல்லாயிரம் மக்களுக்கு மின் அஞ்சல் மூலம் அவர்கள் விபரங்களை பெற்றுள்ள
ஈரானிய கைக்கர்கள் அதன் ஊடக வாக்கு பெட்டிகளுக்குள் நுளைந்து
தமது வாக்குகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது
காலம் கடந்த நிலையியல் அமெரிக்கா உளவுத்துறைக்கு இந்த விடயம் சிக்கியுள்ளது ,மூன்றாம்
திகதியின் பின்னர் ஈரான் என்ன செய்தது என்பதை அமெரிக்கா வெளிப்டையாகவே போட்டுடைக்கும் என நம்பலாம் .
சொலைமானியை கொலை செய்த டிரம்ப்பை உயிருடன் விட்டு வைப்பார்களா என்ன …?
ஈரான் எண்ணெய்களை பறித்து விற்கும் அமெரிக்கா – இது தான் கடல் கொள்ளை
ஈரான் எண்ணெய்களை பறித்து விற்கும் அமெரிக்கா – இது தான் கடல் கொள்ளை
வெனிசுவிலாவிற்கு எண்ணெய்களை ஏற்றி சென்ற ஈரான் கப்பல்களை
வழிமறித்த அமெரிக்கா போர் கப்பல்கள் அந்த கப்பல்களை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தன
,அதில் இருந்த சுமார் 1,1 மில்லியன் பெறல்களை கடத்தி சென்றது ,மேற்படி எண்ணெய்களை தாம் விற்று பணம் சம்பாதித்துள்ளது அமெரிக்கா
இந்த மகா கடல் கொள்ளை தான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
உலக நாடுகளை மிரட்டி அடிபணிய வைத்து அந்த வளங்களை சுரண்டி
ஏப்பம் இடும் அமெரிக்காவுக்கு ஈரான் ,வடகொரியா என்பன பெரும் சவாலாக உள்ளன ,
இவ்விதம் திருட்டு தனமாக எண்ணெய்களை விற்று ஏவுகணை
சோதனையை ஈரான் நடத்துவதாக புலுடா அறிக்கை விட்டுள்ளது அமெரிக்கா
தாங்கள் மிக பெரும் கடல் கொள்ளையர்கள் என்பது இந்த சம்பவம் மூலம் அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது
திருமணத்திற்கு பின்பு பெண்கள் எடை கூடுவைத்து ஏன் தெரியுமா ..?
திருமணத்திற்கு பின்பு பெண்கள் எடை கூடுவைத்து ஏன் தெரியுமா ..?
திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது
பொதுவானது என்றாலும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்
திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை
அதிகரிப்பது பொதுவானது. இருப்பினும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு பிந்தைய எடை அதிகரிப்புக்கு பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
உணவுப் பழக்கம்:
புதுமண தம்பதியர் தங்கள் புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அனுபவிக்க விரும்புவார்கள். பெரும்பாலான வீடுகளில் திருமணமான புதிதில் புதுப்பெண்ணை வீட்டு வேலைகள்
செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே செய்தாலும் சமையலை தவிர வேறு எந்த வீட்டு வேலையையும் செய்ய
விடமாட்டார்கள். வெளி இடங்களில் சாப்பிடுவது, உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது என பிசியாக இருப்பார்கள்.
அந்த சமயங்களில் பெரும்பாலான புதுமண தம்பதியர் சாப்பிடும் விஷயத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது உணவு
கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. அதுவே ஆரம்ப ஆண்டுகளில் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
மகிழ்ச்சி:
திருமணமான புதிதில் தங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.
ஆரம்ப நாட்களில் மகிழ்ச்சிதான் பிரதான அங்கம் வகிக்கும். அப்போது தங்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை விரும்பி ருசித்துக்கொண்டே உரையாடலை தொடர்வார்கள்.
அத்துடன் கணவருக்கு பிடித்தமான உணவு பட்டியலை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை சமைத்து கொடுப்பதற்கும் மனைவி
ஆர்வம் காட்டுவார். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஈர்ப்பதற்கு புதிய சமையல் குறிப்புகளையும் கையாளுவார். அதுவும் உடல்
எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சுவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை பேணும் விதத்தில் சமையலை செய்வது நல்லது.
மன நிம்மதி:
திருமணமான புதிதில் நிம்மதியான வாழ்க்கை சூழலை அனுபவிப்பார்கள். திருமணத்திற்கு முன்பு எதிர்கொண்ட
பிரச்சினைகள், மன வருத்தங்கள், துயரங்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக
இருப்பார்கள். அதிக நேரம் ஓய்வும் எடுப்பார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரிப்பதற்கு மற்றொரு பொதுவான காரணமாகும்.
வீட்டில் அதிக நேரம் செலவிடுவது:
திருமணத்திற்கு முன்பு வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு வீட்டில்தான் அதிக நேரம் செலவிடுவார்கள்.
மலைவாசஸ்தலங்களுக்கு சென்று அங்கு நேரத்தை செலவிட விரும்புவார்கள். தேனிலவு காலம் உடல் பருமன் பிரச்சினைக்கு
அடித்தளம் அமைத்துவிடக்கூடியது. ஏனெனில் அன்றாட செயல்பாடுகளை சில காலம் விலக்கி வைக்க வைத்துவிடும்.
தேனிலவுக்கு செல்லும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானது. கடற்கரையில் நடந்தபடி பேசுவது, காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி அல்லது
உடற்பயிற்சி செய்வது, ஜாக்கிங் செய்வது என உடல் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில் உடல் எடையை
அதிகரிக்க வைப்பது எளிது. குறைப்பதுதான் கடினம். அலட்சியமாக இருந்தால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்.
கர்ப்ப காலம்:
திருமணமான உடனேயே தம்பதியர் குழந்தை பெற திட்டமிட்டால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள்
இருக்கிறது. கர்ப்ப காலத்தில் காரமான, எண்ணெய்யில் தயாரான உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். அத்துடன்
உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் விதவிதமான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். ஆதலால் திருமணமா
ன புதிதில் எடை அதிகரிப்பதற்கான காரணங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்.
மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்.
மறைந்த டாக்டரும், நடிகருமான சேதுராமன் கட்டிய மருத்துவமனையை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்
சேதுராமனின் கட் அவுட் அருகே சந்தானம்
தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன்.
இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
36 வயதே ஆன சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சேதுராமன் உயிருடன் இருக்கும் போது ஈ.சி.ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்டி வந்ததாகக் தெரிகிறது.
அந்த மருத்துவமனையின் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில், சேதுராமனின் பிறந்ததினமான இன்று அந்த
மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
திறப்பு விழாவின் போது சேதுராமனின் ஆளுயர கட் அவுட் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை, சந்தானம் தனது சமூக வலைத்தள
பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நட்பின் அடையாளமாக மறைந்த தனது நண்பரின் மருத்துவமனையை துவக்கி வைத்த சந்தானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்
காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்
முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.
காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்
காஜல் அகர்வால் – நிஷா அகர்வால்
காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா
வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே நடத்துகிறார்கள். காஜலும்,
கவுதம் கிட்ச்லுவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.
காஜல், கவுதமை எங்கு சந்தித்தார், எப்படி காதல் ஏற்பட்டது, யார் காதலை முதலில் சொன்னது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள்
ஆவலாக இருக்கிறார்கள். திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள். காஜலின் உறவினர்கள் ஏற்கனவே அவர் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து காஜலின் தங்கை நிஷா அகர்வால் கூறியதாவது, கொரோனா பிரச்சினையால் நாங்கள் திருமணத்தை
எளிமையாக நடத்துகிறோம். ஹல்தி மற்றும் மெகந்தி சடங்குகள் வீட்டிலேயே நடக்கும். இரண்டுமே இன்று நடக்கிறது. காஜலை
நினைத்து நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவர் புது வாழ்க்கையை தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
காஜல் அகர்வால்
காஜலின் திருமணத்தை பார்க்கத் தான் என் தந்தை பல காலமாக காத்துக் கொண்டிருந்தார். அதனால் இது எங்கள் அனைவருக்கும்
முக்கியமான தருணம். விரைவில் காஜல் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவார் என்பதால்
கவலையாகவும் இருக்கிறது. அதனால் எங்களால் முடிந்த அளவுக்கு காஜலுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
மணமகள் என்பதால் அனைவரும் காஜலுடன் நேரம் செலவிட விரும்புகிறார்கள். அதனால் என்னால் அக்காவுடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்
மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். திருமண நாள் அன்றே சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
அதனால் அன்று ஆட்டம், பாட்டம் என்று செமயாக இருக்கும். கவுதம் நல்லவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி
அடைகிறேன். அவர்களின் காதல் கதையை நான் சொல்ல மாட்டேன். அதை காஜல் தான் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்
வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு
வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு
வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு
அஜித்
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக
இது தயாராகி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதமாக தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த மாதம்
சென்னையில் மீண்டும் தொடங்கியது. இதில் அஜித் தவிர்த்து இதர நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
ரசிகருடன் அஜித்
இந்நிலையில், தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்
மெலிந்த தோற்றத்தில் உள்ளார். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தவாரே தீவிரமாக உடற்பயிற்சி செய்து அஜித் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.
ஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா
ஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா
பிரபல பின்னணிப் பாடகியும் நடிகையுமான சுசித்ரா தான்
தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அலறியடித்து ஓடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா?
சுசித்ரா
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில்
போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி
அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16
பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுசித்ரா
இந்நிலையில் அவர் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது ஒரு பரபரப்பான
செய்தி வைரலாகி வருகிறது. அதாவது பாடகி சுசித்ரா ஹோட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக,
கத்திக்கொண்டே வரவேற்பறைக்கு ஓடியதாகவும், அவரது அறை கதவை
சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதை பார்த்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.
விவேக்கா இது..? ஷாக்கான ரசிகர்கள்
விவேக்கா இது..? ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான
விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விவேக். காமெடி
நடிகர் மட்டுமில்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கிறார்.
கருத்தோடு காமெடி சொல்லும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விவேக் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார்.
வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக
இருக்கும் விவேக்கின் இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விவேக்கின் புதிய தோற்றம்
என்னுடைய இந்த தோற்றத்திற்கு முழு காரணம் காஸ்ட்யூம் ஸ்டைலிஷ்
சத்யாவும், அவர் குழுவும் தான் காரணம் என்று கூறி அவர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார் விவேக்.
காதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை
தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா, காதலருடன்
நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட
தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, துரோகி, அரண்மனை 2,
குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
படம் வாய்ப்பு அதிகம் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது
வாழ்க்கைத்துணை குறித்து பதிவிட்டுள்ளார். சுனில் ரெட்டி எனும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள பூனம், அவருடனான காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.
காதலருடன் பூனம் பாஜ்வா
மேலும் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாஜ்வாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்
ஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்
ஈரான் அமெரிக்காவையும் சவாலாக அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து
முன்னெடுத்து வருகிறது ,இதற்கு அமைவாக அது புதிய யுரேனியம் செரிவாக்கல்
தளங்களை, நிலக்கீழ் சுரங்கத்தை அமைத்து உருவாக்க்கி வருகிறது
எனவும் அதற்காக அது இரண்டு புதிய நிலையங்கள்
ஆரம்பிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
கடந்த சில வாரங்களுக்குள் மூன்று ஏவுகணை சோதனையை
ஈரான் நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது

உனக்காக காத்திருக்கேன்
உனக்காக காத்திருக்கேன்
காந்த கண் பேரழகி
என்னை கவரந்தாய் நீ அழகி
உன் உதட்டை நான் மெழுக
உரிமத்தை தாராயா …?
அம்மியில நீ அரைக்க
ஆடி இடுப்பாட
என் மனசு கரையுதடி
என் வயது கொதிக்குதடி
குதிரை நடை பிடித்து
குமரி நீ போகையில
ஆகாயம் இடியுதடி
அகிலம் நடுங்குதடி
தொடை காட்டி நீ போக
தெரு நாய்கள் வழிமறிக்க
சிரித்து போறவளே
சிங்காரி நீ தாண்டி
உண்மை சொல்லிடவா
உள்ளத்தை தொலைத்தேண்டி
தேதி ஒன்று தருவாயா
தேறி நான் உறங்க …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் -27-10-2020
எண்ணெய் கப்பலுக்குள் ஏறிய பிரிட்டன் – பொலிஸ் – கடலில் நடந்த பரபரப்பு
எண்ணெய் கப்பலுக்குள் ஏறிய பிரிட்டன் – பொலிஸ் – கடலில் நடந்த பரபரப்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாய்க்குள் தரித்து நின்ற கிரேக்க நாட்டு
எண்ணெய் கப்பலுக்குள் பிரிட்டன் காவல்துறையினர் ஏறி சோதனை செய்துள்ளனர்
சந்தேகத்திற்கு இடமாக அந்த கப்பல் நடமாட்டம் இருந்தமையால் இவ்விதம்
தாம் நடந்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ள பொழுதும் காரணம் வேறு என தெரிவிக்க படுகிறது
ஈரானிய கப்பல்களை மடக்கிய பிரிட்டன் அதன் சில மதங்கள்
கழித்து இந்த கப்பலை மடக்கியுள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது
இதற்க்கு பின்னர் ஏதோ பெரும் அரசியல் ,மர்மம் புதைந்துள்ளது என்பதை அடித்து கூறலாம்

பிரான்ஸ் அதிபருக்கு மண்டை பழுது – துருக்கிய அதிபர் தாக்குதல்
பிரான்ஸ் அதிபருக்கு மண்டை பழுது – துருக்கிய அதிபர் தாக்குதல்
பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron முலீம் மக்களுக்கு எதிராக தனது நகர்வுகளை
மேற் கொண்டு வருகின்றார் ,அவர் தனி மனித சுதந்திரம் மற்றும் மதங்களுக்கு
எதிரான நிலையில் காணப்படுகிறார் ,குறிப்பாக முஸ்லீம் மதத்திற்கு எதிராக செயல் படுகிறார் .
அவர் உண்மையில் மண்டை பழுதில் உள்ளார் ,மெண்டல் செக்
பண்ண வேண்டும் என துருக்கிய அதிபர் காரசாரமாக தெரிவித்துள்ளார்
ஐரோப்பிய யூனியன் துருக்கிய இராணுவம் சிரியவாயில் இருந்து விலக
வேண்டும் என கடும் உத்தரவு பிறப்பிக்க பட்ட பின்புலத்தில் பிரான்ஸ் உள்ளதே இந்த தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளது
துருக்கியின் ஒரு மகிந்த ராஜ்பக்சாவே எடகோன் என்பது குறிப்பிட தக்கது
இஞ்சி உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மை
இஞ்சி உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மை
இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என தெரியுமா? நம் உடலில் இஞ்சி எப்படி எல்லாம் மருந்தாகிறது என தொடர்ந்து பார்ப்போம்.
சிறிய இஞ்சி துண்டில் இத்தனை நன்மைகளா?
இஞ்சி
உணவில் இஞ்சியை சேர்த்து கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். இஞ்சியை சில உணவுகளில் சரியான விகிதத்தில் சேர்த்து
கொண்டால், குறிப்பிட்ட உணவின் ருசி அலாதியாகும் என்றும் அனைவருக்கும் தெரியும்.
இவற்றை தாண்டி இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என தெரியுமா? நம் உடலில் இஞ்சி எப்படி எல்லாம் மருந்தாகிறது என தொடர்ந்து பார்ப்போம்.
மற்ற உணவு வகைகளை விட இஞ்சியில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை நோய்,
பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இது 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
அழற்சியை நீக்கும் தன்மை இஞ்சியில் ஏராளம். இது மாரடைப்பு மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவை ஏற்படுவதை தடுக்க உதவும்.
அதிகளவு முட்டி வலி கொண்டவர்கள் ஆறு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை இஞ்சி சாறு குடித்ததால், வலி குறைந்ததாக 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சியை வேறு எந்த உணவும் மிஞ்ச முடியாது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல் ஏற்படும் போது மிகவும் பாதுகாப்பான உணவு இது.
தினமும் 250 மில்லி கிராம் இஞ்சி மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு குமட்டல் குறைந்ததாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதில் இஞ்சி சிறப்பாக வேலை செய்யும். இதில் உள்ள ரசாயனங்கள் வலி
நிவாரணியாக செயல்படும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த இஞ்சி சரியான உணவு ஆகும்.
இஞ்சியை அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்வது
- மசாலா டீயுடன் இஞ்சியை கலந்து பருகலாம்
- பொறியல் மற்றும் குழம்புகளில் சிறிது சிறிதாக நறுக்கிய
- இஞ்சியை சேர்க்கலாம்
- மோரில் இஞ்சி பொடியை சேர்த்து கொள்ளலாம்
- சூடான தண்ணீரில் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா?
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா?
உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகளை தெரிந்துகொள்ள இந்த பதிவை பார்க்கலாம்.
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகு
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை உள்ளது என்கிற கூற்று உலா வருகிறது. இதனாலேயே சிலர் தோலை சீவிவிட்டு சாப்பிடுகின்றனர்.
உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிளை எப்படித்தான் சாப்பிடுவது? தெரிந்துகொள்ள மேலும் படிக்க…
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். அப்படி பலவகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள்.
அதன் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தேதான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால்
செரிமானப் பிரச்னை இருக்காது. அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.
ஆப்பிளில் இத்தகைய எண்ணற்ற ஆரோக்கியங்களை கொண்டுள்ளதால் சந்தையில் அதற்கான டிமாண்ட் அதிகம்.
இதனால் கெமிக்கல் முறையில் பழுக்க வைத்தல், அதோடு அதன் தோலை பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். அதாவது வயிற்றுப்
போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர
வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.இருப்பினும் அவ்வாறு மெழுகு தேய்க்கப்பட்ட ஆப்பிளை எளிதில் கண்டறிய சில டிப்ஸுகளும் உண்டு.
அதாவது முதலில் அதன் தோலை வாங்கும்போது சுரண்டிப் பாருங்கள். வீட்டிலும் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால்
மெழுகு மட்டும் தனியே வரும். இந்த மெழுகானது கழுவினால் போகாது. அப்படியில்லை எனில் சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு
தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும்.
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு
முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை
மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்
35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்
முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள்
ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும்
ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது. அத்தகைய ஊட்டச்சத்துக்கள் குறித்து பார்ப்போம்.
இரும்பு சத்து: கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கோழி இறைச்சி, மீன், கீரை, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், பயறு, தானியங்கள் உள்ளிட்டவற்றில் இரும்பு சத்து அதிகம்
நிறைந்திருக்கும். மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது உடலில் முழுமையாக இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவும்.
அயோடின்: இந்த தாது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு தேவையான அயோடின் தாய்மார்களிடம் இருந்து கிடைக்கும். அதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும்
தாய்மார்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு அயோடின் முக்கியமானது. அதனால் கடல்
உணவுகள், முட்டை, பால், தானியங்கள் என அயோடின் நிறைந்திருக்கும் உணவு பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.
புரதம்: தசைகளின் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியம். வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடைய தொடங்கும். அதனை தவிர்ப்பதற்கு கோழி, மீன், பீன்ஸ், பயறு, குறைந்த கொழுப்புள்ள
தயிர், பால், பாலாடைக்கட்டிகள், நட்ஸ்கள், கொட்டைகள், முட்டை போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் புரதம் அதிகம் இருக்கிறது.
வைட்டமின் பி 12 : நரம்பு திசுகள், மூளையின் செயல்பாடு மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் பி 12 அவசியமானது. அவை அதிகம் நிறைந்த மீன், இறைச்சி, முட்டை,
பால், பால் பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும். இவை 35 வயதுக்கு பிறகு ஏற்படும் ரத்தசோகை போன்ற சிக்கல்களை போக்கவும் உதவும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி : எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்வது நல்லது. குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், பாலாடைக்கட்டி,
கொழுப்பு நிறைந்த மத்தி மீன் போன்றவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள். கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது. நேரடி சூரிய ஒளி மூலமும் பெறலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: இதயம், எலும்பு மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 அவசியம். மேலும் இவை மனம், கண்கள், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கடல்
உணவுகள், நட்ஸ்கள், ஆளி விதை, சோயா பீன் எண்ணெய், முட்டை, தயிர், ஜூஸ், பால், சோயா பானங்கள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்து: பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். வயது அதிகரிக்கும்போது ஊட்டச்சத்தின் தேவையும் அதிகரிக்கும் என்பதால் உணவு
அட்டவணை தயாரித்து அதற்கேற்ப உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றி வரலாம். அதன் மூலம் உண்ணும் உணவில் இருந்து அதிக
ஊட்டச்சத்துக்களை பெற முடியும். ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.
தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்
தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்
தளபதி 65 படத்தில் இருந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்?
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ரிலீசுக்காக
காத்திருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த
வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தில்
இருந்து விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு
பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்ய சொன்னதாம்.
அதில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு உடன்பாடு இல்லாததால் அவர் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்திலிருந்து
விலகி உள்ளதாக கூறப்படுவதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். சிலரோ இது வெறும் வதந்தியாக இருக்கும் என கூறி வருகின்றனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் எது உண்மை என்பது தெரியவரும்.







