Author: நிருபர் காவலன்
ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை
ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை.
பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்டு, தான் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை – நலமுடன் இருப்பதாக டுவிட்
அர்னால்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படம்
நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், மருத்துவ குழுவுக்கு நன்றி. நான் தற்போது அருமையாக உணர்கிறேன். ஏற்கனவே
கிளீவ்லேண்டின் தெருக்களில் உள்ள அற்புதமான சிலைகளை கண்டுகளித்தவாறு
நடைபயிற்சி செய்தேன். எனக்கு சேவை செய்த செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி” என கூறி உள்ளார்.
அர்னால்டின் டுவிட்டர் பதிவு
மேலும் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட
புகைப்படத்தையும், நடைபயிற்சி செய்த போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி
நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.
நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி
மகேஷ் பாபு, நயன்தாரா
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி
அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன்
இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்
ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி
இப்படத்தின் டிரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை வெளியிடப்போவது யார் என்ற தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.
அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு டிரெய்லரை வெளியிட உள்ளார்.
இதன் தமிழ் டிரெய்லர் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் இடையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி
டி.ராஜேந்தர்- முரளி- பி.எல்.தேனப்பன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள்
பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள். செயலாளர்கள்
பதவிக்கு ‘கலைப்புலி’ ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு
கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
வேட்பு மனு தாக்கல், கடந்த 15-ந் தேதி தொடங்கியது. டி.ராஜேந்தர், முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வேட்பு
மனு தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிற 29-ந்தேதி கடைசி நாள். ஓட்டுப்பதிவு நவம்பர் 22-ந்தேதி காலை 8
மணிக்கு தொடங்கும். அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
துருக்கிய கடற்படை ஆக்கிரமிப்பு – கிரேக்க போர்க் கப்பல்கள் படையெடுப்பு
துருக்கிய கடற்படை ஆக்கிரமிப்பு – கிரேக்க போர்க் கப்பல்கள் படையெடுப்பு
துருக்கி ,கிரேக்க மற்றும் ,சிரியா ,லிபியா மீது கடும் போரை தொடுத்து
வருவதுடன் ,ஆக்கிரமிக்க முற்பட்டு வருகிறது ,இவ்விதமான பலத்தை
துருக்கி ஏற்படுத்த அதற்கு பதிலடியாக கிரேக்க நாடானது போர்க் கப்பல்களை
தமது கடற்பரப்பு மற்றும் Aegean கடல்பகுதியில் சுற்றுக் காவல்
நடவடிகையை தீவிர படுத்தியுள்ளதுடன் ,பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன
தூக்கி நாடாது இராணுவம் சிரியாவில் இருந்து உடனடியாக விலக வேண்டும்
என ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்த நிலையில் இந்த
நகர்வுகள் இந்த பிராந்திய கடல் பகுதிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
அமெரிக்கா இராணுவ விமானம் ஒன்றை ரசியா மிகையொலி
விமானங்களை துரத்தி சென்றன
இந்த பின் தொடர்ந்தல் மற்றும் தூரத்தி சென்ற காட்சிகள் தற்போது
வைரலாகி வருகிறது
இரு நாடுகளுக்கு இடையில் இவ்விதம் இடைவிடாத பின் தொடர்தல்
மற்றும் வழி மறித்து திசை திருப்புதல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதுவே விரைவில் பெரும் போர் ஒன்றை தோற்றுவிக்கும் என நம்ப படுகிறது
ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா video
ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா
ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு என தற்போது ,மிக நீண்ட தூர வான் தடுப்பு ஏவுகணையை தயாரித்து சோதனை செய்து வெற்றியை பறித்துள்ளது
இந்த ஏவுகணையானது கைபிரட் முறையில் தயாரிக்க பட்ட ஏவுகணைகளை விட துல்லியமாக சுட்டு வீழ்த்த கூடிய ஒன்றாகும்
ஈரானிடம் உள்ள அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையாக பவர் -373 எனப்படும் இந்த ஏவுகணை முன்னிலை பிடித்துள்ளது .
அமெரிக்கா இராணுவ தளத்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணையை விட இது பல மடங்கு சக்தி வாய்ந்தது
எதிரிகளின் அடக்குமுறை ஆக்கிரமிப்பை உடைத்தெறிய இந்த ஏவுகணை
சோதனைகள் எமக்கு அவசியமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது எனவும் ,மேலும் பல
புதிய வடிவமைப்பில் நாம் தொடர்ந்து சோதனைகளை மேற் கொள்வோம் என புரட்சி காவல் படையினர் வீர முழக்கமிட்டுள்ளனர்
சொலை மானி கொலை செய்ய பட்டதன் பின்னர் ஈரான் அதிவேகமாக
தனது அணு குண்டு சோதனை மற்றும் ,ஏவுகணை சோதனையில் தீவிரமாக செயல் பட்டு வருகின்றது
இந்த் சோதனைகள் அமெரிக்கா ஏமாற்றும் ஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Clip has some old footage in it, however the Bavar-373 scene is reportedly new and from today’s exercise. pic.twitter.com/aNorclv74Y
— Aurora Intel (@AuroraIntel) October 21, 2020
ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்
ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்
பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷூக்கு, ரகசியமாக திருமணம் நடந்துள்ளது.
ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா?
ஆர்.கே.சுரேஷின் திருமண புகைப்படம்
தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய்
சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை
தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கும், சீரியல் நடிகை திவ்யாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமணம் நின்று போனது.
ஆர்.கே.சுரேஷின் திருமண புகைப்படம்
இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு
முன்பு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்களாம். இந்த
தகவல் கசிந்ததை அடுத்து, தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என ஆர்.கே.சுரேஷ் பதிவிட்டுள்ளார்..

தாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்
தாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டியை சுரேஷ் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்
சனம் – சுரேஷ்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதினாறு போட்டியாளர்
கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில், சுரேஷ் வைத்திருக்கும் தடியால் சனம் ஷெட்டியை தாக்குகிறார்.
அதன்பின் கோபமடையும் சனம் செட்டி சுரேசை திட்டுகிறார். சுரேஷின் இந்த செயலை ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
சனம் – சுரேஷ்
அதன்பின் பிக்பாஸ் இடம் பேசும் சுரேஷ், செய்த தவறுக்கு கதறி அழுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி
சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி
சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ என்று வனிதா வெளியிட்ட வீடியோவிற்கு கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி
கஸ்தூரி – வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து
சர்ச்சையானது. இந்த சர்ச்சை முடிந்து சுமுகமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வனிதா தனது 40வது பிறந்தநாளை
கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார்.
அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகும் பீட்டர் பால்
தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் ரொம்ப குடிக்கிறார், நம்பி
ஏமாந்துவிட்டேன். தற்போது என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை. அவர் வீட்டிற்கும் வருவது இல்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப்
செய்துவிட்டார். ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்த மனிதர் இப்படி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதுமாக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த ஒருவர், வனிதாவின் வீடியோ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கஸ்தூரியிடம் கேட்டார். அதற்கு கஸ்தூரியோ, வீடியோ வேறையா? பார்த்துட்டு சொல்றேன். என் அனுபவத்தில் இது சொல்வதெல்லாம் பொய் ரகம் என்றார்.
கஸ்தூரி – வனிதா
வீடியோ பார்த்த கஸ்தூரி, ஓமைகாட், நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். அருமையாக எடிட் செய்து, ஸ்டைலான கார்டு எல்லாம் இருந்தது. சொந்த வாழ்க்கையை வியாபாரம்
பண்ணுறது என்ன பொழப்போ, புரியலடா சாமி. எல்லாம் பொய், தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும் தான்
பாதிக்கப்பட்டவர். அது எல்லாம் எதிர்பார்த்தது தான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் புகார் தெரிவிக்கணும்? நம்ப முடியவில்லை.
கஸ்தூரி பதிவு
வீடியோவில் நாலு விளம்பர இடைவேளை வேறு. ஸ்க்ரிப்ட் எடிட் செய்யப்பட்டு, நன்றாக பெர்ஃபார்ம் செய்யப்பட்ட இந்த வீடியோ
மூலம் நிறைய சம்பாதிப்பார். பீட்டர் பாலின் மருத்துவ செலவுக்கான பணத்தை சம்பாதிக்க பார்க்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்
விஜய் சேதுபதி
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற
தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன்
வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில் 800 என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டாம்
என்று கூறி இருந்தார். அதை ஏற்று விஜய்சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.
இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை
மிரட்டல் விடுத்து, நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
விஜய் சேதுபதி
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 3
சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல்
மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இலங்கையைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய இலங்கை
செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்
ஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்
ஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்
உலக நாடுகளுக்கு கைக்கிங் நபர்கள் பெரும் சவாலாக திகழ்ந்து வருகின்றனர்
அவ்விதம் ஜப்பான் தலைநகர் இடம்பெற இருந்த ஒலிம்பிக் போட்டியில்
குழப்பத்தை ஏற்படுத்த ரசிய கைக்கிங் இராணுவ நிபுணர்கள் முனைந்துள்ளது அம்பலமாகியுள்ளது
இதற்கு என அவர்கள் உருவாக்கிய கணனி செயல் இழப்பு வைரஸ் வலையமைப்பு மென் பொருட்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
தொடர்ந்து பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து பின் போட பட்டுள்ள
பொழுதும் ,ரசியா தொடர்ந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்று
வருவது மூன்று நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட தக்கது
இது வரை பில்லியன் டொலர்கள் சேதமாக்க பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது
பிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி
பிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி
பிருத்தானியாவில் மிக உயர் ரகத்தை சேர்ந்த அணுகுண்டுகளை காவி
செல்லும் நீர்மூழ்கி கப்பலுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் அதிக
போதையில் அந்த கப்பலுக்கு பணிக்கு வந்துள்ள செயல் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி அதிகாரியின் செயல் தொடர்பாக தொடர் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இது மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சூட்டு வீழ்த்த பட்ட நவீன ரக போர் விமானம் – சண்டை உக்கிரம்
சூட்டு வீழ்த்த பட்ட நவீன ரக போர் விமானம் – சண்டை உக்கிரம்
Azerbaijan நாட்டு இராணுவத்தினால் சு 25 ராகத்தை சேர்ந்த அதி உயர்
தாக்குதல் விமானம் ஒன்று விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு
வீழ்த்த பட்டுள்ளதாக குறித்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது
ஆனால் அர்மேனிய இராணுவமோ அதற்கு மேல் ஒரு படி மேல் சென்று
தாம் 25 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை போர் நடத்தி வருகிறது
இந்த பரப்புரைகள் ஒரு பக்கம் இடம்பெற்ற வண்னம் இருக்க ,மறுபுறத்தே
பல நகரங்களை மீட்டவாறு ஆர்மேனியா இராணுவம் நுழைந்த வண்ணம் உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துவருகின்றன
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமான இளம் நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருக்கிறார்.
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
சனுஷா
தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா, ரேணிகுண்டா படத்தில்
கதாநாயகியானார். தொடர்ந்து நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும்
நடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-
“கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை
பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.
தம்பியுடன் சனுஷா
அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள
முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன். பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன்.
அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம்
இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன்.”
இவ்வாறு சனுஷா கூறியுள்ளார்.
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
சென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
வம்ஷிகா
சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன ஓட்டிகள் ஆற்காடு
சாலையில் மடக்கிப் பிடித்தனர். ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர்
கர்நாடகவை சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பதும் தெரியவந்தது. பின்னர் பொது மக்களுடன் அந்த நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து
பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று மாலை விசாரணைக்காக பாண்டி பஜார்
காவல்நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காரின் பதிவு எண் கர்நாடக பகுதியை சேர்ந்தது ‘
என்பதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் இருந்ததாக தெரிவித்தார்.
வம்ஷிகா
மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதான், ஆனால் உலகில் யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என
விளக்கமளித்தார். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
மாஸ்க் அணியாமல் சுற்றுலா சென்ற பிரபல நடிகையிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
அதிதி பாலன்
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அனைத்து சுற்றுலா தலங்களும்
மூடப்பட்டன. தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதிதி பாலன்
அப்போது அங்கு முகக்கவசம் இன்றி வந்த நடிகை அதிதி பாலனிடம் சுகாதாரத்துறை
அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பின்னர் அதிதி பாலன் 200 ரூபாயை அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது
. அதிகாரிகளிடம் நடிகை அதிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சில மணி நேரம் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை
மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார்.
அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கங்கணாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்தது. மேலும், கங்கனா
மகாராஷ்டிர மாநிலம் வரவும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.
இதையடுத்து, ’ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் இமாச்சலபிரதேசத்தில் இருந்து கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார். அவர் தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசம் வசித்து வருகிறார்.
அவர் கடந்த சில நாட்களாக தனது சமூகவலைதள பக்கமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
பாலிவுட்டில் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47) நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை
மாணவர்களுக்கு காட்டியதற்காக 18 வயது இளைஞனால் நேற்று தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான கொலைதொடர்பாக நேற்று முதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா அடுக்கடுக்கான கருத்துக்களை பதிவு
செய்து வந்துள்ளார். கங்கனாவுடன் இணைந்து அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.
பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை
சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பர் புகார் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி
ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை
போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகினி கொடுத்த தகவலின் பேரில் அஜித் பட நடிகர் வீட்டில் விசாரணை நடைபெற்றுள்ளது.
போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை
ராகினி
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் போதைப் பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி
விட்டது. ஆனால் கர்நாடக திரை நட்சத்திரங்கள் மத்தியில் போதைப் பொருள் புழங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு விட்டது.
இந்த விசாரணை மத்தியக் குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல்
தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போதைப் பொருள்
பயன்படுத்தியது மற்றும் அந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக
நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது நண்பர்கள்
என 14 பேர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விவேக் ஓபராய்
இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி
அளித்த தகவலின்பேரில் மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்
வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்
முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற போது அவரது பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றிருக்கிறார்கள்.
வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்
தமன்னா
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை” எனக்கூறியிருந்தார்.
இதையடுத்து ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற தமன்னாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர்
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
தமன்னா
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு
வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். தான் மீண்டு
வந்ததைப் பற்றியும் உருக்கமான வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஈரான் அணு உலைகள் மீது சைபர் தாக்குதல் – இஸ்ரல் ,அமெரிக்கா கைவரிசை
ஈரான் அணு உலைகள் மீது சைபர் தாக்குதல் – இஸ்ரல் ,அமெரிக்கா கைவரிசை
ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து கடந்த மாதம் இரு வேறு
சைபர் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன ,இந்த சைபர் தாக்குதல் மூலம்
ஈரானின் அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதாக ஈரானிய தொழில் நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்
இதனால அந்த பகுதியில் இணைய வலையமைப்பு முற்றாக தடை செய்ய பட்டுள்ளது
தொடர்ந்து தமது எதிரி நாடுகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
இவ்விதமான தாக்குதல்களை தொடுத்து வருவதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது
இதற்கு சில மாதங்களுக்கு முன்னராக அமெரிக்கா இராணுவ தலைமையகத்திற்குள்
ஈரான் ,வடகொரியா புகுந்து தாக்குதலை நடத்தியுடன் அவர்கள் ஆயுத உற்பத்தி விபரங்களை அபகரித்து சென்றது
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது







