Author: நிருபர் காவலன்
கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா?
கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா?
முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.
முதல்முறையாக கர்ப்பம்… கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா?
தாம்பத்தியம்
பெண்கள் தாய்மையடையும்போது இயற்கை அவர்களது உடலில் மிகப்பெரிய அற்புதம் ஒன்றை நிகழ்த்துகிறது. அதாவது கருவுறும் தொடக்க காலத்திலே, பிறக்கப்போகும் குழந்தையின் உணவுக்காக
தாயின் மார்பகங்கள் பால் உற்பத்திக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுவிடும். அத்தகைய மாற்றங்கள் தாய்மையடைந்த
ஆறாவது வாரத்திலேயே மார்பகங்களில் தென்படும். அப்போது மார்பகங்களுக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து ரத்த நாளங்கள் புடைத்து எழுவதால் வலியும் தோன்றும்.
முழு சுரப்பியின் பரிமாணமும் அதன் வெளிப்புற நுண்ணறைகளில்தான் முதலில் வெளிப்படும். அப்போது மார்பகங்கள் கெட்டியாகவும், மேடான முனைப்புகளுடனும்
காணப்படும். மெதுவாகத் தொட்டாலே வலிக்கும். இந்த நிலை கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தின் இறுதியில் தொடங்கி, குறிப்பிட்ட காலம் வரை இருந்துகொண்டிருக்கும்.
மார்பகத்தின் வெளிப்புறத்தை மெதுவாக அழுத்தினால் மார்பகக் காம்பு வழியாக தெளிந்த கசிவு கொஞ்சமாக வெளிப்படும். சிலருக்கு தாமாகவேகூட வெளிப்படும். அது முதலில் மெல்லிய
வைக்கோல் நிறத் திரவம் போலவும், பிறகு கெட்டியாகி அடர் மஞ்சள்நிறமாகவும் தோன்றும். 14-வது வாரத்தில் மார்பகக் காம்பு
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நிறம்மாறும். கர்ப்பகாலத்தில் பெண்களின் மார்பகங்களில் பலவிதமான மாற்றங்கள் தோன்றும். அவை இயற்கையானவைதான்.
முதல்முறையாக கர்ப்பிணியாகும் அனைத்து பெண்களுக்கும், அந்த காலகட்டத்தில் கணவருடன் தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எழுகிறது.
இயல்பான கர்ப்பமாக இருந்தால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. தாம்பத்யம் கொள்வதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் பொருத்தமான முறையில் உடலுறவு கொள்ளலாம்.
இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை தாம்பத்யத்தை தவிர்ப்பது நல்லது. சிறிது ரத்தக்கசிவு இருப்பது
தெரியவந்தாலோ, பிறப்புறுப்பு அல்லது அடிவயிற்று வலி இருந்தாலோ, தாம்பத்யத்தை தவிர்த்து முழுமையாக ஓய்வெடுக்கவேண்டும். கர்ப்பகாலத்தில் எப்போதுமே
கர்ப்பிணியின் மனநிலை, உடல்நிலை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். கர்ப்பிணி விரும்பும்பட்சத்தில் பாதுகாப்பான ‘பொஷிஷனில்’ தாம்பத்யத்தை அமைத்துக்கொள்ளலாம்.
முதல்முறையாக கர்ப்பம்தரிக்கும் பெண்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் எழும். அனைத்து சந்தேகங்களுக்கும் அவர்கள் மகப்பேறு டாக்டரிடம் விளக்கம்
கேட்டு விடைதேடிக்கொள்ளவேண்டும். அப்போது கர்ப்பகால தாம்பத்யம் குறித்தும் கூடுதல் தகவல்களை கேட்டுத்தெரிந்துகொள்வது அவசியம்.
தற்போது குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் பெரும்பாலான பெண்கள் திருமணமானதும், ‘தமக்கும் குழந்தையில்லாத நிலை
ஏற்பட்டுவிடுமோ!’ என்று பயம்கொள்கிறார்கள். எந்த கருத்தடை முறையையும் கடைப்பிடிக்காமல் இயல்பாக தாம்பத்ய உறவு மேற்கொண்டு குறைந்தது ஆறு மாதம் வரையில்
கருத்தரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். முப்பது வயதுக்குள் உள்ள பெண்கள், திருமணமாகி இரண்டாண்டு வரை கருத்தரிப்புக்காகக் காத்திருக்கலாம். முப்பது வயதுக்குமேல் ஆகி,
கருத்தரிக்கக் காலதாமதமானால் விரைந்து குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
பொதுவாக திருமணமாகி ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும், பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பில் அதிக சிக்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். 30 முதல் 35 வயதுக்கு இடையே கருத்தரிக்கும் வாய்ப்பு, அதற்கு முன் கருத்தரிப்பதில் இருந்த
வாய்ப்பைவிட பெருமளவு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு விஷயம் என்னவென்றால், புகையிலையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுத் தன்மை உள்ள பொருள்கள் உள்ளன. இவற்றில் சுமார் நாற்பதுக்கும்
மேற்பட்டவை, புற்றுநோயைத் தூண்டக்கூடியவை. அவற்றுள் பல மலட்டுத்தன்மையையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு தரமான சினைமுட்டையும், ஆற்றல்மிகுந்த உயிரணுவும் தேவையாக இருக்கிறது. சினைமுட்டை முதிர்ந்து வெடித்து மாதந்தோறும் சினைப்பையில் இருந்து
வெளியேறும். முட்டையானது சினைப்பையில் இருந்து வெளியான பிறகு 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். கருத்தரிப்பு நடைபெற, இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவோடு சேர்ந்துவிட
வேண்டும். அவ்வாறே, உயிரணுவானது 48 முதல் 72 மணி நேரம்வரை உயிருடன் இருக்கும். ஆகவே கருத்தரிக்க சிறந்த நேரம், முட்டை வெளியான காலத்தை சார்ந்தே இருக்கிறது.
சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போன நடிகர்
சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போன நடிகர்
மாநாடு படத்தில் பிசியாக நடித்து வரும் சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போனதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போன நடிகர்
சிம்பு
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில்
பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப்
படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.
தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொள்ள பாண்டிச்சேரி கிளம்பியிருக்கிறார் சிம்பு. நடிகர் படவா கோபி
தற்போது மாநாடு படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் சென்னை 28 படங்களில் நடித்திருக்கிறார்.
படக்குழுவினர்
இது குறித்து பதிவிட்ட படவா கோபி “குழுவிற்கு நன்றி.. எங்கள் தம்பி சிலம்பரசனின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து
திகைத்துப் போனேன். மிகவும் உத்வேகமாக உள்ளது. அவர் தொடர்ந்து பலருக்கு ஊக்கமளிக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த அஜித்… வைரலாகும் புகைப்படம்
பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த அஜித்… வைரலாகும் புகைப்படம்
முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தனது பெற்றோருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.
பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த அஜித்… வைரலாகும் புகைப்படம்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது
. எச்.வினோத் இயக்கி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் தனது பெற்றோர்களுடன் கோவிலிலிருந்து வெளியே வருவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வழக்கம் போல அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.
அஜித்
இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. வலிமை படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் அஜித் தனது
பெற்றோர்களான சுப்ரமணியம் மற்றும் மோகினி இருவருடனும் இருப்பதை போன்ற இந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது – பிரிட்டன் முக்கிய இராணுவ தளபதி
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது – பிரிட்டன் முக்கிய இராணுவ தளபதி
உலகத்தின் கொரனோவுடன் மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து
விட்டது என பிரிட்டனின் முக்கிய இராணுவ தளபதியான General Sir Nick Carter தெரிவித்துள்ளார்
செய்தியாளர் ஒருவர் இவரை செவ்வி கண்ட பொழுது மேற்படி அதிரும் அதிரடி அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார்
நாடுகள் இதனால் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதனால் எழுந்துள்ள
நெருக்கடி ,அதன் ஊடாக எழப்போகும் மூன்றாம் போர் எதுவாக இருக்கும்
என்கின்ற தெளிவான முன்னோட்டத்தை அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளது ,
விரைவில் ஏதோ ஒரு நாட்டின் ஊடாக மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறது என்கின்ற செய்தி இதன் ஊடாக வெளிப்பட்டுள்ளது
ஆயுத உற்பத்திகள் மற்றும் அதன் பாவனைகள் ,அரசுகளின் நகர்வுகள்
என்பனவற்றை இவர் உருமறைத்து சொல்வதன் ஊடாக இவர் கூறுவது போன்று மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறது என்பதே பொருளாகிறது
அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் – அனுஷ்கா
அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் – அனுஷ்கா
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் அனுஷ்கா, அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் என்று கூறியிருக்கிறார்.
அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் – அனுஷ்கா
அனுஷ்கா
நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. திருமண வயதை தாண்டியும் இன்னும் திருமணத்துக்கு அவர்
தயாராகவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அனுஷ்கா அளித்த பதில் வருமாறு:
“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. குழந்தைகளை கொஞ்சவும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும்
பரவாயில்லை. அதிக நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பிடித்தவரை சந்திப்பது வரை காத்திருப்பேன். பிடித்தவராகவும் மனதை
கவர்பவராகவும் இருந்தால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன்.
அனுஷ்கா
பார்த்தவுடன் இவரைத்தான் மணக்க வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை திருமணம் செய்துகொள்ள
மாட்டேன். பெற்றோர் எனக்கு 20 வயது நிரம்பியதில் இருந்தே திருமணம் செய்துகொள் என்று நெருக்கடி கொடுத்துக் கொண்டே
இருந்தனர். ஆனால் இப்போது அதுபோல் நிர்ப்பந்திப்பதை நிறுத்தி விட்டனர். எனக்கும் சினிமாவில் நடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா… கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா… கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்
எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும்,
அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.
இதையறிந்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள
கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும்
இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து
பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார்.
ஆனால் அவர் கேட்கவில்லை. விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் போஸ்டில் இருந்தும் நான் விலகிட்டேன் என்றார்.
நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளருமான சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை போனில் பேசிய மர்ம நபர், “கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகரும்,
சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளருமான சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இது தொடர்பாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம்
தலைமையிலான போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரத்குமார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சுமார் 2 மணிநேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா ஆகியோர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நபர்தான் சரத்குமார்
வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரசிய அதிபருக்கு கொடிய நோய் – பதவி விலக தயாராகிறார்
ரசிய அதிபருக்கு கொடிய நோய் – பதவி விலக தயாராகிறார்
உலகை மிரள வைத்து வரும் கம்பீரமான தோற்றத்துடன் நடமாடும் ரசியாவின்
அசைக்க முடியாத அதிபர் புட்டீன் தற்போது நரம்பியல் நோயினால் பீடிக்க பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த நோயின் காரணமாக அவர் பேனா பிடித்து எழுதவோ ,நடக்கவோ
முடியாத நிலையில் சிக்கி தவித்து வருகிறார்
இதனால்
வரும் ஆண்டு இவர் பதவி விலக உள்ளதாக அந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த இருபது ஆண்டுகளாக அசைக்க முடியாத உயரத்தில் வசித்து
,உலகை ஆட்டம் காட்டி வந்த புட்டீன் இந்த விலகல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்
அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்
இளையதளபதி நடிகர் விஜய் அவரது பெயரில் அவரது தந்தை
சந்திரசேகர் புதிய அரைசியல் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்
ரஜனி ,கமல் ,விஷால் ,என பலர் காட்சிகளை தொடங்கிய நிலையில்
விஜய் இதே ஆடு களத்தில் இப்பொழுது குதித்திருப்பது பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
ரஜனி ,கமல் சீமானுக்கு எதிராக விஜய் களத்தில் ,அரசியலுக்கு நுழைந்ததினால்
அவரது திரைப்பயணம் பாதிக்குமா ..? காணாமல் போவாரா எதிர்காலம் தான் அந்த பதிலை சொல்ல வேண்டும்
பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?
பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?
இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?
தாம்பத்தியம்
தாம்பத்தியம்… திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம்தான் என்றாலும் அது இருமனமொத்து நடக்க வேண்டிய
ஒன்று. அதேவேளையில் இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள்.
சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது.
உடலுறவு நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தி உறவு
கொண்டால் உடலில் சூடு அதிகரித்து ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல், விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதால் முழுமையாக இன்பம் அனுபவிக்க முடியாது.
இவற்றை அடிப்படையாகக்கொண்டே குளிர்ச்சியான சூழல் உள்ள இரவில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக இரவு அல்லது அதிகாலை 4 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் உறவு வைத்துக் கொள்வது ஏதுவான சூழலாகும். வயிற்றில் உணவு இருக்கும் நேரத்தில் உறவு வைத்துக்கொண்டால்
உணவு செரிமானமாகாமல் போவதுடன் வேறு சில பிரச்சினைகள் எழும். குறிப்பாக, சாப்பிட்டதும் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால்
மூலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இரவில் படுக்கைக்குச் சென்றதும் சில மணி நேரம் கழித்து உறவு கொள்வதே சரி.
இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. குறிப்பாக, பல ஆண்கள் பகல் வேளையில் கண்டுகொள்ளாத தம்
மனைவியரை இரவில் படுக்கைக்கு மட்டும் அழைப்பதால் பலர் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு உறவுக்கு மறுப்பார்கள். ஆகவே
, மனைவியாக இருந்தாலும் அவரது ஆசாபாசங்களுக்கு மதிப்பளித்து நடந்தால்தான் உறவுக்கு சம்மதிப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உடலுறவு என்பது மனிதன் உள்பட அனைத்து உயிரினங்கள் மத்தியில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். இதில் மனித இனத்தில் மட்டுமே பெண்களைவிட ஆண்களே முதலில் தயாராகின்றனர்.
நேரம், காலம் பார்க்காமல் உறவு கொள்வதில் ஆண்களே ஆர்வம் காட்டுகின்றனர். பகலில் உறவு கொள்வதைவிட இரவில்
உறவுகொள்வதே நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உடலுறுப்பு பகுதிக்கு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைக்க வேண்டியது அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கும். இரவில் எத்தனைமுறை உறவு கொண்டாலும் ஆழ்ந்த உறக்கம்
வந்துவிடும். இதன்மூலம் உடலுறுப்புக்குத் தேவையான அளவு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைத்துவிடும் என்பதால் இரவில்
தாம்பத்தியம் வைத்துகொள்வதே உடல்நலத்துக்கும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
சிலர் இரவு முழுவதும் உறவு வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை உறவு கொண்டபிறகு ஆழ்ந்து உறங்கினால் ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் நடக்கும். இதனால்
மீண்டும் மீண்டும் வைத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. அதுவே பகல் நேரமாக இருந்தால் உடல் சோர்வடைவதுடன் வேறு
சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் பகலில் உடலுறவு பரிந்துரைக்கப்படுவதில்லை
தாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க
தாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க
கணவன் மனைவி படுக்கையில் உறவை தொடங்கும் முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்யவேண்டுமோ
அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை நாம் கட்டாயம் செய்யக்கூடாது.
திருமணம் என்பதும் தாம்பத்திய உறவு என்பதும் மிகவும் புனிதமான ஓன்று. உயிரினங்கள் அனைத்தும் தங்களது
இனப்பெருக்கத்திற்காக உறவில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே உறவில் ஈடுபட்டு இனத்தை பெருக்குகின்றன. ஆனால்,
மனிதர்களாகிய நமக்குத்தான் இதன் விசயத்திற்கு நேரம் காலம் பார்ப்பது இல்லை. பொதுவாக, படுக்கையில் உறவை தொடங்கும்
முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்ய வேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை
நாம் செய்யவேண்டும். ஆனால், சோர்வு காரணமாகவும், களைப்பு காரணமாகவும் பலரும் இதனை பின்பற்ற தவறுகிறார்கள்.
கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று வாங்க பாக்கலாம்.
- உடனே எழுந்திருப்பது கூடாது
உறவுக்குப்பின் படுக்கையில் இருந்து உடனே எழுந்து போவதை தவிர்க்க வேண்டும். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என அடுத்த கணமே படுக்கையில் இருந்து எழுந்து செல்வது சில ஆண்களின்
வழக்கம். இப்படி செய்வதால் தம்பதியினரிடம் நெருக்கம் நீடிக்காது. இதற்க்காக மட்டும் தான் நான் இருகிறேன என்ற எண்ணம் மனைவி
மனதில் தோன்ற வாய்ப்புண்டு. எனவே உறவுக்கு பின் சிறிது நேரம் துணையுடன் விளையாடவேண்டும்.
- குளிப்பது
உறவு முடிந்த உடனே குளிக்க செல்வது ஆண், பெண் இருவரிடமும் உள்ள பழக்கம். இதனை முதலில் குறைத்துக்கொள்ள வேண்டும்.
உறவுக்கு பிறகு சிறிது நேரம் மனைவி அல்லது துணையுடன் தலையை கோதி மனம் விட்டு பேசி பேச வேண்டும். இதனால் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும்.
- வீட்டைவிட்டு வெளியேறுவது
உறவு முடிந்து சிலமணி நேரம் துணையுடன் வீட்டில் நேரம் செலவிட வேண்டும். அதேபோல் வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் குளித்துவிட்டுதான் செல்ல வேண்டும்.
- உணவு மற்றும் மருந்து மாத்திரை
உறவுக்கு முடித்த பிறகு வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. அதே போல, உறவுக்கு முன்பும் வயிறு முட்டசாப்பிடக்கூடாது. பால் அளவாக
குடிக்கலாம். உடனடியாக மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுக்கு கடுமையான வேலை செய்வதைதவிர்த்து விட வேண்டும்.
விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசளித்துள்ளார்.
விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
இயக்குனர் விருமாண்டி
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இதில் விஜய் சேதுபதியுடன்
ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள்.
ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் விருமாண்டி
இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ், இயக்குனர் பெ.விருமாண்டிக்கு கார் ஒன்றை பரிசாக
அளித்துள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா சுசித்ராவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகர் செல்ல இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?
கமல்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத், ரம்யா
பாண்டியன், நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, வேல் முருகன், கேபிரில்லா உள்ளிட்ட 16 பேருடன் தொடங்கப்பட்டது.
வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்துள்ளனர். இதில் நடிகை ரேகா, வேல்முருகன் ஆகியோர்
வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகர் வீட்டுக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிம்
சின்னத்திரை நடிகரான ஆசிம் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஆசிம்
பகல் நிலவு உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக ஆசிம் நடித்திருந்தார்.
சதீஷ் – சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது.
சதீஷ் – சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது.
பிரபல நகைச்சுவை நடிகை சதீஷ் – சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி,
மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சதீசுக்கும், வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாக்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம்
நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
சதீஷின் பதிவு
இந்நிலையில் நடிகர் சதீஷ்-சிந்து தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
விபத்தில் உயிர் தப்பிய விஜய் ஜேசுதாஸ்
விபத்தில் உயிர் தப்பிய விஜய் ஜேசுதாஸ்
பிரபல பின்னணி பாடகரான விஜய் ஜேசுதாஸ் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.
விபத்தில் உயிர் தப்பிய விஜய் ஜேசுதாஸ்
விஜய் ஜேசுதாஸ்
பிரபல பின்னணி பாடகரான ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ். இவர் இரவு 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு
காரில் சென்றார். தரவூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது விஜய் ஜேசுதாஸ் சென்ற கார் மீது மோதியது.
விஜய் ஜேசுதாஸ்
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. எனினும் காருக்குள் இருந்த விஜய் ஜேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக
உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா
கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா
தமிழில் பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமான நடிகை கனிகா உருவ கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா
கனிகா
‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்
அறிமுகமானவர் கனிகா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்
வந்தார். டப்பிங் கலைஞராகவும், பாடகியாகவும் கனிகா பணிபுரிந்துள்ளார்.
2008-ம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற பொறியாளரைத் திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார் கனிகா. இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். குழந்தைப் பிறந்த பிறகும்
திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார் கனிகா. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலமைப்பு, உடற்பயிற்சி உள்ளிட்டவை குறித்து கருத்துகள் தெரிவித்து வருபவர் கனிகா.
தற்போது, அவருடைய பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து கனிகா கூறியிருப்பதாவது: “உங்களில் பலரைப் போல நானும் எனது பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் எவ்வளவு ஒல்லியாக இருந்தேன், வயிறு எவ்வளவு தட்டையாக, தலைமுடி எவ்வளவு அழகாக இருந்தது என்பது போல சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயத்தை உணர்ந்தேன்.
நான் ஏன் அப்படிச் செய்தேன்? இப்போது எனது தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதாலா? கண்டிப்பாக இல்லை. ஏன் முன்னெப்போதையும் விட இப்போதுதான் என்னை நான் அதிகமாக நேசிக்கிறேன்.
கனிகா
அந்தத் தழும்புகள், அடையாளங்கள், பிழைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அழகான கதை இருப்பதாக நான் நம்புகிறேன். எல்லாமே கச்சிதமாக இருந்துவிட்டால் அதில் என்ன சுவாரசியம்
இருந்துவிடப்போகிறது? நம்மை ஏற்றுக்கொண்டு நம் உடலை விரும்புவது மிக மிக முக்கியமானது. உங்களை மற்றவர்களுடன்
ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அனைவரின் கதைகளும் வித்தியாசமானது.
தயவு செய்து உங்களைக் குறைவாக நினைப்பதை நிறுத்துங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். யாராவது உங்கள் உருவத்தைக்
கிண்டல் செய்தால் அவர்களை வாயடைக்கச் செய்துவிட்டு விலகிச் செல்லுங்கள்” இவ்வாறு கனிகா தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – அமீர்கான் மகள்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – அமீர்கான் மகள்
தனது 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கான் கூறியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – அமீர்கான் மகள்
அமீர் கான் – ஐரா கான்
நடிகர் அமீர் கானுக்கும், முதல் மனைவி ரீனாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பகிர்ந்துள்ள வீடியோவில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் பேசியுள்ளார்.
“என் சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் நான் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ஏனென்றால்
இணக்கமான முறையில் விவாகரத்து நடந்தது. அவர்கள் இன்னும் நண்பர்களே. ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படித்தான். எங்கள் குடும்பம் உடைந்துவிடவில்லை.
எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது.
ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது
தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது.
அமீர் கான்
எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும்
நடக்கவில்லை, முடிந்துவிட்டது என்று நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை.
ஏனென்றால் நானே அதைக் கையாள வேண்டும் என்று நினைத்தேன். மேலும், எனது உணர்வுகளை வைத்து மற்றவர்களைத்
தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தேன். எந்தப் பிரச்சினையுமே நீண்ட நாட்கள் நாம் சிந்திக்கும் அளவு பெரியதல்ல” என்று ஐரா கூறியுள்ளார்.
Sethu போனது என் Life-ல எனக்கு மிகப்பெரிய இழப்பு video
Sethu போனது என் Life-ல எனக்கு மிகப்பெரிய இழப்பு video
அவர் குடும்பத்தில் இவ்வளவு சிறிய வயதில் இறந்து மிகப்பெரிய
இழப்பு அவர்கள் குடும்பத்திற்கு , ஆழ்ந்த இரங்கல்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என ஷாக்கான போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என ஷாக்கான போட்டியாளர்கள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பிரபல பாடகி ஒருவர் 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில்
போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா
பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சுசித்ரா
இந்நிலையில், 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். சுசித்ராவின்
என்ட்ரியை பார்த்து சில போட்டியாளர்கள் சந்தோஷப்பட்டாலும், பலர் ஷாக் ஆகினர். பாடகி சுசித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்கப்
புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை
3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை
கமல் பட நடிகை ஒருவர் தான் 3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில்
வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாக்சி 420 படத்தில் கமலின் மகளாக நடித்தவர். .
இந்நிலையில், படவாய்ப்புகளுக்காக படுக்கைக்கு வரச் சொல்லி திரையுலகைச் சேர்ந்தவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாக பேட்டி ஒன்றில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அப்பேட்டியில் அவர் கூறியதாவது: “3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் அது
குறித்து பேசுவது இல்லை. ஆனால் தற்போது இந்த உலகம் மாறும் என நம்புகிறேன். பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது அதிகம்
விழிப்புணர்வு உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரச் சொல்லிய பிரச்சனையை நானும் சந்தித்துள்ளேன்.
பாத்திமா சனா ஷேக்
பாலியல் உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே பட வாய்ப்பு தருவோம் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். படுக்கைக்கு
செல்ல மறுத்ததால் பல முறை பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு சிலர் பரிந்துரை
செய்ததால் எனக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்ததும் நடந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். பாத்திமா சனா ஷேக்கின் இந்தப் பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







