Author: நிருபர் காவலன்
ரசியா இலங்கைக்கு இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பம்
ரசியா இலங்கைக்கு இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பம்
ரசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையின் உல்லாச பயண துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் ,இந்த Red Wings விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வராம் தோறும் இரண்டு முறை இந்த Red Wings சேவைகள் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது .
இந்த Red Wings சேவைகள் December 28, 2022 முதல் ஆரம்பிக்க படும் என தெரிவிக்க படுகிறது.
வடகொரியா விமானங்கள் மீது தென்கொரியா தாக்குதல் VIDEO
வடகொரியா விமானங்கள் மீது தென்கொரியா தாக்குதல் VIDEO
தென்கொரியா எல்லைக்குள் நுழைந்த வடகொரியா விமானங்கள் மீது தென்கொரியா தாக்குதல் ,ரசியா விமான தளம் மீது உக்கிரேன் தாக்குதல் ,விமானம் சுட்டு வீழ்த்தல் ,ரசியா படைகள் காயம் .
காணொளியை முழுமையாக பார்க்க பத்து செய்திகள் உள்ளே
இதில்; அழுத்தி புதிய காணொளி செய்திகள் பார்க்க
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
லண்டன் Abbey Wood காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனை வேட்டையின் பொழுது ஆயுதங்கள் சிக்கின .
மிக பெரும் ஆயுத குழுக்கள் ,ஆயுதங்களை ,ஆயுத தொழில் சாலைகளில் கொள்வனவு செய்து அதனை ,
குழுக்களுக்கு விற்று வந்துள்ளனர் .
இவ்விதமான தகவலை மேப்பம் பிடித்த குற்ற தடுப்பு காவல்துறையினர் ,
சந்தேகத்திற்கிடமான woodland. பகுதியை சுற்றி வளைத்தனர் .
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
இந்த முற்றுகையின் பொழுது எட்டு கை துப்பாக்கிகள் ,
மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன ,புதிய பொதிகளுடன் மீட்க பட்டன .
ஆயுதங்கள் மீட்க பட்டதை அடுத்து ,
தொடர் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இவர்களினால் ஆயுதங்கள் வழங்க பட்ட குழுக்களை,
மடக்கி பிடிக்கும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
குறித்த துப்பாக்கி மீட்பு காட்சிகளை ,
போலீசார் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .

மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
அமெரிக்காவில் நத்தார் தினமான காலை வேளை, தோர்ன்டன், கொலராடோ உள்ள ,யெகோவா தேவாலயத்தில் கணவன் தனது மனைவியை ,
சுட்டுக் கொன்றுவிட்டு ,துப்பாக்கியால் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் ,
சோதனைகளை நடத்தினர் ,
அப்பொழுது அங்கு சில வெடி பொருள் சாதனங்கள் காணப்பட்டன .
மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
இந்த படுகொலை சம்பவத்திற்கான ,
கரணம் தெரிவிக்கப்படவில்லை .
தொடர்ந்து குற்றப்புலனாய்வு துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
ஜேசு பாலன் பிறப்பை, குதுகலமாக கொண்டாடி கொண்டிருந்த மக்களுக்கு ,
இந்த் சூட்டு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
வட மேற்கு ஸ்பெயின் பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள்,
பயணிகள் பேரூந்து வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விபத்தில் ஆறுபேர் பலியாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
ஸ்பெயின் நாட்டின் Lugo பகுதியில் இருந்து Vigo பகுதிக்கு
பயணித்து கொண்டிருந்த பேரூந்து ,ஆற்றுக்கு மேலால் அமைக்க பட்ட ,
உயரமான பாலத்தை கடக்க முற்பட்ட வேளை ,
சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து ,பாலத்தின் பாதுகாப்பு கம்பிகளை
உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கியது .
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
இதன் பொழுது 63 வயதுடைய சாரதி உள்ளிட்ட
நால்வர் நீரில் அடித்து செல்ல பட்ட நிலையில்,
தீயணைப்பு வீரர்களினால் காப்பாற்ற பட்டு ,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
விபத்தினை ஏற்படுத்திய சாரதி மீது,
நடத்த பட்ட சோதனையில் ,அவர் மதுவோ ,போதைவஸ்துக்களோ ,
அருந்தி இருக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து ,
தப்பியவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இலங்கை நூரைச்சேலை பகுதியில் வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார் .
உள்ளக முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிவடைந்துள்ளது .
இருவரும் அதிக போதையில் காணப்பட்ட நிலையில் ,இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது .
பலியானவர் முப்பத்தி ஐந்து வயதுடைய, ஆண் என அடையாளம் காணப் பட்டுள்ளார் .
இந்த கொலையினை புரிந்த ஐம்பத்தி நான்கு வயதுடைய ,நபர் கைது செய்யப்பட்டு ,நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளார் .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ,புத்தளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக இதுவரை 1500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம்களில், தங்க வைக்க பட்டு பராமரிக்க பட்டு வருகின்றனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பருவகால மழை காரணமாக குளங்கள் நிரம்பி வழிகின்றன .
இதனால் குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .
தாழ்நில பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள், வெள்ள நீர் புகுந்ததினால் ,மக்கள் பாதிக்க பட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
உயிர் ,உடமை இழப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .பரவலாக இலங்கை எங்கும் இந்த வெள்ள பெருக்கு காணப்படுகிறது .
பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவசர நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது .
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
இலங்கை மாத்தளை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ,53 குடும்பங்களை சேர்ந்த 263 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த கால நிலை சீர்கேட்டால், பாதிக்க பட்ட மக்கள் ,தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்களுக்கு ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .
மேலும் அந்த பகுதியில் ,மண்சரிவு எச்சரிக்கை அபாயம் விடுக்க பட்ட வண்ணம் உள்ளது .
அதிக மழை வீழ்ச்சியே ,இந்த மண்சரிவுக்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .
ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
ராஜபக்ச விமான நிலைய செல்வுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
இலங்கை மாத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 2021 ஆண்டுக்கான செலவுகள் வரவை விட 21 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது .
இந்த விமான நிலையம் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நிறுவ பட்டு ,அவரால் அந்த விமான நிலையத்திற்கு அவரது பெயர் சூட்ட பட்டது .
கோட்டபாய ராஜபக்ச ஆட்சியில் குறித்த விமான நிலையத்தின் வருமானம் ,அதனை விட 21 மடங்கு பெரும் இழப்புடன் முடிவடைந்துள்ளது .
இது கோட்டபாய ரடாஜபக்ச குடும்பத்தால் நடத்த பட்ட ,பெரும் மோசடி என நம்ப படுகிறது .
இந்த இழப்பு மற்றும் பண கையாடல் தொடர்பிலான, விசாரணைகள் ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
நாட்டை கொள்ளையடித்து ,இன்று பிச்சைக்கார நாடக மாற்றியுள்ள ராஜபக்ச ஆட்சியின் ,லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.
என ,இலங்கை மக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கையை வைத்து வருகின்றனர் .
அவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டால் ,ராஜபக்சாக்கள் மோசடிகள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா
கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஆண்கள் கழிவறையில் ,துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
காவல்துறையினருக்கு விடயம் தெரிவிக்க பட்ட நிலையில் ,துப்பாக்கி தோட்டா மீட்டு செல்ல பட்டுள்ளது .
விமான நிலையத்தில் உள்ள கமராக்கள் மூலம் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த தோட்டாவை கழிவறையில் வீசி சென்ற நபரை ,கைது செய்யும் வேட்டையில் ,குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
சுனாமி பேரழிவு நினைவு நாள்
சுனாமி பேரழிவு நினைவு நாள்
இலங்கை முதல் பல நாடுகளில் சுனாமி தாக்கம் ஏற்பட்டது .இந்த பேரழிவில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகினர் .
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் ,இன்றும் மக்கள் மனதில் மறையாத வடுவாக பதிய பெற்றுள்ளது .
மனித உடல்கள் ,வீடுகள் ,சொத்துக்கள் நீரில் அடித்து செல்ல பட்டன .
மக்களை மிரள வைத்த ஆழிப் பேரலை நினைவின் துயரை சுமந்து ,இலங்கை இந்தியா முதல் ,பல நாடுகளில் மக்களினால் நினைவு கூற படுகிறது .
பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் இந்த வருடத்தின் 12 மதங்களில் பிரிட்டன் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 400 பப் ,சாராய கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
கொரனோ மற்றும் இந்த சாராய கடைகளினால் குறித்த பகுதிகளில் ,
குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது என்கின்ற குற்ற சாட்டாலும் ,
அதன் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன .
அவ்விதமாக 400 பப் அடித்து பூட்ட பட்டுள்ளது .
பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் 40,173 சாராய கடைகள் பப் இயங்கி வந்தன ,
அவற்றில் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ,
2,663 அடித்து மூடப்பட்டுள்ளன .
இதனால் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர் .
மேலும் அதிக வருமானத்தை அரசும் இழந்துள்ளது .
இந்த கடைகள் பூட்டால் குடி மக்கள் பெரிதும் கவலையில் உறைந்துள்ளனர் .
இந்த மக்கள் குடிப்பதனால் தான் அரசுகள் நாட்டை ஒட்டி செல்ல முடிகிறது .
ஒரு நாட்டின் வருமானத்தின் முதுகெலும்பாக சாராய விற்பனை உள்ளது .
அதன் மூலமே அரசுக்கு பெரும் தொகை வரி பணம் கிடைக்கிறது .
அதனையே அரசு இழந்துள்ளது எனலாம் .
இவ்வாறான சாராய கடைகள் தமிழகம் மற்றும் இலங்கையில் அடித்து பூட்ட படவேண்டும் ,
ஆனால் அங்கே இவை நடைபெறுவதில்லை என்பதே
வேதனையான விடயமாகும் மக்கள் நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு
பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு
உக்கிரேன் மீதான போரை விரைவுக்கு
விரைந்து முடிவுக்கு கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம் .
அதனால் உக்கிரேனை பேச்சுக்கு அழைக்கிறோம் ,ஆனால் அவர்கள்
நமது அழைப்பை தட்டி கழித்து செல்கின்றனர் என
ரசியா அதிபர் தெரிவித்துள்ளார் .
உக்கிரேன் பேச்சுக்கு சம்மதிக்க முயன்றாலும் ,அதனை தடுத்து நிறுத்தி
போரை நீடித்து செல்கிறது மேற்குலக நாடுகள் என ,ரசியா
ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார் .
பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு
பொறுப்பு கூறலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை ,
கண் துடைப்புக்கு ரசியா காண்பித்து வருகிறது எனவும் ,
இவர்கள் உணமையான பேச்சுக்கு எம்மை அழைக்கவில்லை என ,
உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸியின்
ஆலோசகராக விளங்கும் ,மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார் .
மேற்குலக முதுகில் ஏறி சவாரி செய்யும், உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி ,
ரசியாவுக்கு நேர்ந்து விட்ட பலியாடு என்கிறது ,புட்டீன் ஆதரவு தரப்புக்கள் .
எனினும் எப்பொழுது உக்கிரேன் ரஷியா போர்,
முடிவுக்கு வரும் என ஆவலுடான் ,
எதிர்பார்த்து காத்துள்ளது ,பொருளாதாரத்தில் பாதிக்க பட்ட நாடுகள் .
கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்களா விரிகுடாவில் ஆரம்பமான காற்றழுத்த தாழமுக்கம் இலங்கை உள்ளே நுழைந்துள்ளதால் ,மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
காலி முதல் பொத்துவில் வரையான கடல் பகுதியில் ,இந்த காற்றழுத்தம் நிலவும் என்பதல் ,மறு அறிவித்தல் வரை, மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
உயிரை உடமைகளை காப்பாற்றி கொள்ளும் நோக்கில் ,இந்த முன் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்
வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்
இலங்கை கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது .
இந்த வெள்ள நீர் வடிந்து சென்றுள்ள நிலையில் ,நீர் புகுந்த பகுதிகளில் துப்பரவு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வெள்ள நீர் புகுந்து சேதங்களை ஏற்படுத்திய நிலையில் ,குறித்த ரயில்வே நிலையம் பாதிப்புக்கு உள்ளாகியதுடன் ,போக்குவரத்துக்கள் தடை பட்டன .
மீளவும் கண்டி ரயில் நிலையத்தை இயங்க வைத்து ,இயல்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்லும் நடவடிக்கைகள் முடுக்கிவிட பட்டுள்ளன .
பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
பிரிட்டன் லிவர்பூல் Lighthouse Inn in Wallasey கிராம பகுதியில்
சனிக்கிழமை இரவு 11,30 மணியளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார் .
மேலும் மூன்று ஆண்கள் படுகாயமடைந்த நிலையில் ,
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குற்ற புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
நத்தார் பாண்டியின் பொழுது தமது சகா பலியானது ,
அவர்கள் நன்பர்கள் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்
ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்
ரசியா இராணுவத்தின் mercenary குழுவுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்று வருகிறது .
இந்த ஆயுத விற்பனை நாடுகளின் பாதுகாப்பிற்கு , எதிரானது என தெரிவித்து வடகொரியாவுக்கு கனடா மிரட்டல் விடுத்துள்ளது .
அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு மிரட்டல்களுக்கு எதிராக ,வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது .
அணு ஆயுத மற்றும் ஏவுகணை அசுர பலத்தில், வடகொரியா முதன்மையாக விளங்கி வருகிறது .
இவ்வாறான நிலையில் வாய் சாடல்கள் மூலம் ,வடகொரியாவை கனடா மிரட்டியுள்ள செயல் நகைப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது .
உக்கிரேன் போர் களத்தில் வெற்றியை பறிக்க ,வடகொரியா முக்கிய ஆயுதங்களை ரசியாவின் மெர்சண் குழுவுக்கு வழங்கி இருந்தது .
அதன் எதிரொலியை இந்த மிரட்டலுக்கு காரணமாக அமைந்துள்ளது .
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
புத்தளம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு, பக்தர்களினால் வழங்க பட்ட காணிக்கை பெட்டிகளை பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி ஒன்றுக்குள் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்க பட்டன .
இதனை கண்ணுற்ற தேவாலய நிர்வாகம் ,காவல்துறைக்கு தெரியப் படுத்திய நிலையில், அவை மீட்டு செல்ல பட்டுள்ளன .
இந்த பொதியினை வழங்கியவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிரமங்கள்
தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிராமங்கள்
தேடுறு ஓயா வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளது .
அதிக மழை வீழ்ச்சி காரணமாக இந்த வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .
பள்ள தாக்கு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ,தற்காலிக கூடாரங்களில் மக்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் .
நாடெங்கும் கனத்த மழை பொழிவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .
வெடித்து சிதறிய காஸ் வண்டி – 8 பேர் பலி – 50 பேர் காயம்
வெடித்து சிதறிய காஸ் வண்டி – 8 பேர் பலி – 50 பேர் காயம்
தென்னாப் பிரிக்காவின் போக்ஸ் பர்க் நகரில், ஏரி வாயுவை ஏற்றிச் சென்ற ,
டிரக் ஒன்று பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளது .
அவ்வேளை அதில் இருந்த ,எரிவாயு காஸ் வெடித்து சிதறியதில் ,
சம்பவ 8 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 50 பேர் காயமடைந்தனர்.
மேலும் பாலம் முற்றாக சேதமடைந்து இடிந்து வீழ்ந்துள்ளது .
அதன் அருகில் இருந்த டசின் கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன .
இவற்றுடன் அவ்வேளை பயணித்த வாகனங்கள் என்பனவும் எரிந்தும் ,
சேதமாகியும் உள்ள காட்சிகள் பார்ப் பவர்களை மிரள வைக்கிறது .
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் உடனடி
விசாரணை நடத்த படும் என ஆளும் அரசு அறிவித்துள்ளது .

















































