சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளரை பாராட்டி கௌரவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளரை பாராட்டி கௌரவிப்பு

சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளரை பாராட்டி கௌரவிப்பு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றிய வி.திவாகர சர்மா தனது அரச சேவையிலிருந்து இன்றைய

தினம் (31) ஓய்வுபெறவுள்ளதையடுத்து அவரின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு
நிகழ்வில் அமைச்சின் கணக்காளர் எஸ்.சட்குணேஸ்வரன்,
திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், நிருவாக உத்தியோகத்தர்

எஸ்.ஸ்ரீவாணி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
(திருமதி) எஸ்.விஜயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள்,


ஊழியர்கள் கலந்துகொண்டு அவரின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தனர்.

அபு அலா –

No posts found.
இஸ்ரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் ஈரான் மிரட்டல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் ஈரான் மிரட்டல்

இஸ்ரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் ஈரான் மிரட்டல்

நாட்டின் எந்தவொரு இராணுவவ தளத்தையும் ,
எம்மால் தாக்க முடியும் என ,ஈரான் அறிவித்துள்ளது .

ஈரான் நாட்டின் இந்த அதிரடி அறிவிப்பால் ,இஸ்ரேல் கொதிப்பில் உறைந்துள்ளது .

ஈரான் இராணுவத்தால் ,தொடராக ,
ஈரானுக்குள் வைத்து ,இஸ்ரேல் மோசட் உளவாளிகள் கைது ,
செய்யப்பட்டு வரும் நிலையில்,
இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .

இஸ்ரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் ஈரான் மிரட்டல்

ஈரான் அணு உலைகள் மாற்றும் முக்கிய தளபதிகள் ,
தலைவர்களை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் தாக்குதலை நடத்த தயாராகி வருகின்ற ,
தகவல் கிடைக்க பெற்ற நிலையில் ,ஈரானின் புரட்சிகர இராணுவ படையின் தளபதி ,
அறிவித்துள்ளார் .

எமது அணு உலைகள் மற்றும் இராணுவ மையங்கள் இஸ்ரேலினால்,
தாக்க பட்டால் ,இஸ்ரேல் பாரிய விளைவை ,
இதன் மூலம் அனுபவிக்கும் என மிரட்டியுள்ளது .

பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,
இஸ்ரேல் நாட்டின் தலைநகரை இலக்கு வைத்து ,
ரொக்கட் தாக்குதலை நடத்தி இருந்தனர் .

இவ்வாறான ரொக்கட் தாக்குதல்கள் குறுகிய நாட்களில் ,
இஸ்ரேல் சீர் குலைந்து காணப்பட்டதுடன் ,
முதல் தடவையாக இஸ்ரேல் மக்கள் காயமடைந்து
பதறி ஓடிய பயங்கரம் இடம்பெற்றது .

அவ்வாறான தாக்குதல் ஒன்றை ஈரான் அதிரடியாக ஆரம்பித்தால் ,
அது மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் சந்திக்க நேரிடும் .

முஸ்லீம் நாடுகளை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான ,
படுகொலைகள் ,மற்றும் அடக்குமுறைகள் அழித்தொழிக்க பட வேண்டும் என்பது ,
பாதிக்க பட்ட நாடுகளின் மக்கள் கருத்தாக உள்ளது .

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்
Posted in இலங்கை செய்திகள்

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

வளர்ப்பு நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபா நட்டஈட்டை கோரி ஆசு மாரசிங்க வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, ஆசு மாரசிங்க மீது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

பிரேமசந்திர மற்றும் ஆஸூ மாரசிங்கவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படும் ஆதர்ஷா கரதனா ஆகியோர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

குறித்த இருவரும் ஊடக சந்திப்பில் காண்பித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், போலியாக தயாரிக்கப்பட்டவை எனவும் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தன்மீது தேவையற்ற எண்ணமொன்றை மக்களுக்கு ஏற்படுத்தவும், மக்களை தவறாக வழிக்கு கொண்டு செல்லும் வகையிலும் இந்த இருவரும் செயற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஹிருணிகா பிரேமசந்திரவிடம் 500 பில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனாவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் நட்டஈடாக கோரியுள்ளார்.

No posts found.
youtube பிரபலம் செய்த வேலையால் அல்டியில் குவிந்த மக்கள்
Posted in உலக செய்திகள்

youtube பிரபலம் செய்த வேலையால் அல்டியில் குவிந்த மக்கள்

youtube பிரபலம் செய்த வேலையால் அல்டியில் குவிந்த மக்கள்

பிரிட்டன் கிரேவ்சன்ட் பகுதியில் உள்ள,
அல்டி கடை ஒன்றுக்கு முன்பாக மக்கள் திடீரென குவிந்தனர் .

சில குடிபானங்கள் மற்றும் உணவு பொதிகள்,
இப்பொழுது புதிதாக அறிமுகம் ,யூகம் செய்யப்பட்டுள்ளன .

வாங்கி கொள்ளுங்கள் என யுடுப் பிரபலங்களான,
KSI and Logan Paul ஆகியோர் செய்த விளம்பர செய்முறை விரிவாக்க காட்சிகள் ,
அவரது பல மில்லியன் ரசிகர்களை சென்றடைந்துள்ளது .

இதனால் அவரது ரசிகர்கள் குறித்த அல்டி கடைக்கு படை எடுத்தனர் .

குளிர் நிலவி வரும் நிலையில் ,
கடைக்கு வெளியே சுமார் 50 க்கு மேற்பட்ட மக்கள்,
காலை எட்டு மணி முதல் காத்திருந்து ,பொருட்களை வாங்கி சென்றனர் .

தீ பொறிகள் எங்கிருந்து ஆரம்பமாகிறது ,
என்பதை , இதன் மூலம் மக்கள் மன்று அறிந்து கொள்கிறது .

மலையில் இறங்கிய விமானம் பலர் காயம்
Posted in உலக செய்திகள்

மலையில் இறங்கிய விமானம் பலர் காயம்

மலையில் இறங்கிய விமானம் பலர் காயம்

அதிக சினோ பொழிவு கொண்ட மலை பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று ,
அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது .

விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தரை இறக்கம் ,மேற்கொள்ள பட்டது .

இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த ,மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர் .

மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரும் வரை ,
குறித்த விமானத்தின் பயணிகள் அதிக குளிரில் நடுங்கிய வண்ணம் இருந்துள்ளனர் .

உலங்குவானூர்திகள் வரவழைக்க பட்டு அதில் ,
விமானி மற்றும் ,பயணிகள் மீட்டு செல்ல பட்டனர் .

மலை பகுதியில் விமானம் தரை இறங்குவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் .

அவ்வாறான சூழ்நிலையில் விமானி ,
சாதூரியமாக விமானத்தை தரை இறக்கி மனித உயிர்களை காப்பாற்றி உள்ள,
செயல் பாராட்ட பெறுகிறது .

மயிரிழையில் தப்பிய சீனா அமெரிக்கா விமான மோதல்
Posted in உலக செய்திகள்

மயிரிழையில் தப்பிய சீனா அமெரிக்கா விமான மோதல்

மயிரிழையில் தப்பிய சீனா அமெரிக்கா விமான மோதல்

தெற்கு சீனா கடல் பகுதியில் பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த ,
அமெரிக்கா விமானம் அருகில் வேகமாக பறந்து சென்ற சீனா விமானம்,
மோதல் ஒன்றை நடத்தும் வகையில் அருகில் பறந்து சென்று,
மிரட்டி கடந்து சென்றது .

சீனா இராணுவத்தின் Navy J-11 போர் ஜெட் விமானம் ஒன்று,
அமெரிக் இராணுவத்தின் ,
RC-135 போர் விமானத்துடன் மோதும் நிலையையை ஏற்படுத்தி,
பறந்து கடந்து சென்றது .

மயிரிழையில் தப்பிய சீனா அமெரிக்கா விமான மோதல்

இந்த விமான விபத்து மோதல் காட்சிகளை ,
இந்தோ பசுபிக் பிராந்திய அமெரிக்கா கட்டளை பீடம் வெளியிட்டுள்ளது .

சீனாவின் சர்ச்சைக்குரிய தெற்கு கடல் பகுதியில் ,
அமெரிக்கா இராணுவத்தின் கடற்படையினர் ,
தரித்து நின்று சீனாவின் ,நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர் .

இவ்வாறான நிலையில் ,அமெரிக்காசீனா இராணுவத்தினருக்கு இடையில் ,
முறுகல் உச்சம் பெற்றுள்ளது .

மேலும் எமது கடல் பகுதிக்குள் ,அமெரிக்கா விமானங்கள் பறப்பில் ஈடுபட்டால் ,
சுட்டு வீழ்த்த படும் என, சீனா அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

2 கரை திருதியை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

2 காரை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு

2 காரை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு

பிரிட்டன் Dawlish Drive, Bentilee பகுதியில் ,இரண்டு கார்களை திருடி சென்ற திருடர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .

காவல்துறையினருக்கு கார் களவு போனது தொடர்பாக அறிவிக்க பட்டதை அடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் பின்னர் ,திருட்டு போன இரண்டு கார்களும் மடக்கி பிடிக்க பட்டன.

33.மற்றும் 34 வயதுடைய திருடர்கள் இருவரும் ,அதிக போதையில் நிலவிய நிலையில் வாகனத்தை திருடியதாக தெரிவித்துள்ளனர் .

தொடர்ந்து இவர்கள் மீதான குற்ற வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து

உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட்கிளப் ஒன்றில் ,
உதை பந்தாட்ட வீரர் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டார் .

இந்த கொலை சம்பவத்தை அடுத்து ,
அந்த நைட்கிளப் உரிமம் இரத்து செய்யப் பட்டுள்ளது .

உதைபந்தாத்தா வீர்ரர் அந்த நைட்கிளப்பில் நடனம் ஆடும்
பகுதியில் ,நடனம் ஆடி கொண்டிருந்த பொழுது ,
மர்ம நபர்களினால் கோரமாக குத்தி கொலை செய்யப்பட்டார் .

உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து

குறித்த நைட்கிளப்பில் போதை பொருள் விற்பனை,
என்பனவும் இடம்பெற்று வருவதாகவும் ,
இந்த நைட் கிளப் ஒரு பாதுகாப்பபு அற்றது ,
என காவல்துறையினர் தெரிவித்து அதன் உரிமம்,
அந்த கவுன்சிலனினால் இரத்து செய்யப் பட்டுள்ளது .

நைட் கிளப் பாதுகாப்பு விதிகள் ,சீரற்று காணப்பட்டமையே இந்த கொலைக்கு கரணம் என கண்டறியப்பட்டுள்ளது .

மீள இந்த கிளப் இயக்க பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக,
மறு பரிசீலனை செய்த பின்னரே தீர்மானிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 4000 அரசு அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு 4000 ரூபாய்கள் சிறப்பு முறைப்பணமாக செலுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

இலங்கையில் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் ,மக்களை நாடி அரசு புதிய புதிய சலுகை அறிவிப்புகளை அறிவித்து வருகிறது .

தேர்தல் முடிவுற்றதும் இவை நிறுத்த படும் . அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு அரசு தனது தாண்டவத்தை ஆடும் .

இது வாக்காளர்களின் மறதியை மனதில் வைத்து ,அரசுகள் செய்து வரும் அரசியல் நிலை செயற்பாடுகளாகும் .

பணம் இன்றி தவித்து வரும் இலங்கையில் ,மேலதிக பணத்தை மக்களுக்கு இவ்வாறு வழங்க முடியும் என்பதை மக்கள் நினைவில் வைத்தால் நன்று .

No posts found.
இலங்கையில் கொரனோ தாக்கம் இல்லை அரசு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்கம் இல்லை அரசு

இலங்கையில் கொரனோ தாக்கம் இல்லை அரசு

இலங்கையில் உலகில் பரவி வரும் கொரனோ தாக்குதல் இல்லை என இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகளில், பல நூறு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ள நிலையில் ,இலங்கையில் பாதிப்பு இல்லை என்கிறது இலங்கை .

இலங்கை வரும் உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சி அடைந்து விடும் என்பதால் , இலங்கை சுகாதார அமைச்சு ,கொரனோ பாதிப்பு இல்லை என்கின்ற கதையினை கட்டவிழ்த்து விட்டுள்ளது .

No posts found.
பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்
Posted in இலங்கை செய்திகள்

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

தம்புள்ளையில் ஆட்டோ வண்டியொன்றில் இருந்து பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் ,ரொட்டியை கொள்வனவு செய்தமைக்காக, குழந்தையொன்றை தரையில் வைத்து அடித்து உதைத்துள்ளார்.

குழந்தை பணத்தை திருடி வருவதாக நினைத்து அந்த நபர் அடித்துள்ளார் .விசாரணிகளில் குழந்தை தனது தாத்தவைதாம் இருந்து பணத்தை பெற்று பொருளை கொள்வனவு செய்ததது தெரியவந்துள்ளது .

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

ரொட்டியை வாங்குவதற்காக குழந்தை வாகனத்தை அணுகியபோது ,குழந்தையை தூக்கி தரையில் அடித்ததற்காக அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சந்தேக நபர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜனவரி 09 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

படுகாயமடைந்த குழந்தை உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

No posts found.
கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்

கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் ‘ராஜபக்‌ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத்

தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்,

கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வவுனியாவில் போராட்டம்

ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் என கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.


இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம்.
நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும்,வைத்தியசாலையில் இருந்தும்,வீடுகளில் இருந்தும்

இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம்.

அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி


அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

No posts found.
ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை

ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை

ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் எமது மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.


அண்மையில் இடம்பெற்ற நேபள அரசின் கலாச்சார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதை இயக்கிய தம்பி மதிசுதா அவர்கள் அழைத்துக் கெளவிக்கப்பட்டிருந்தார்.


தயாரிப்பாளரே கிடைக்காத உள்நாட்டு சினிமாவில் ஐபோனில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பெரிய பெரிய நிறுவனங்களின் படங்களுக்குள் இவ் விருதைப் பெற்றிருக்கின்றது.

எம்மவர்களின் வலிகளை
தனது திறமை மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கும் தம்பி மதிசுதாவிற்கு எம் வாழ்த்துக்கள்.


உங்கள் திரைப்பயணம் வெற்றிகரமாக தொடரட்டும் என பாரளுமன்ற உருபினர் ஸ்ரீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

No posts found.
யாழ் கொட்டலில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

யாழ் கொட்டலில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு

யாழ் கொட்டலில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ் கொட்டலில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு

நேற்று (29) இரவு 7.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத மர்மக் கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

காயமடைந்தவர் 21 வயதான பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்

பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்

போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கெப் வாகனத்தில் சென்று பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவர் வத்தளையில் உள்ள உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் போலி இலக்கத் தகடுகள், பொம்மை கைத்துப்பாக்கிகள் மற்றும் போலி இலக்கத் தகடுகள் கொண்ட கெப் வண்டியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறிப்பிடுகின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (29) ஜாஎல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் பொம்மை துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீடொன்றுக்கு சென்று அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிசிடிவி கெமராவில் சந்தேக நபர் ஒரு குழுவினருடன் வாக்குவாதம் செய்வதும் பொம்மை துப்பாக்கியை எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

No posts found.
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை
Posted in உலக செய்திகள்

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை

இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை

அதை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது. தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதன் மூலம் தற்போது அவரது சிறைத் தண்டனை காலம் 26 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மீதான 18 மாத விசாரணையில் மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் இராணுவ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளது.

அதன்படி, அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியான்மார் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறையில் உள்ள ஆங் சான் சூகி நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த பள்ளிவாசல்

போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.

அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த விண்ணப்பத்தை பரீசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்பட்டவர் என்பது

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த பள்ளிவாசல்

உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே, திருமண சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவிர்த்துள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.

அத்துடன் குறித்த திருமணத்திற்கான மணமகனை போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும் பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

குறித்த இவ்விடயம் சமூக ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
அழகு சாதனப் பொருட்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அழகு சாதனப் பொருட்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

அழகு சாதனப் பொருட்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு வைத்திய நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்

இதுதொடர்பாக வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க தெரிவிக்கையில்,சமூக ஊடகங்களின் மூலம் பல்வேறு வகையிலான அழகு சாதனப்பொருட்கள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதிகளவிலானோர் இவற்றின் தரம் பற்றி கவனம் செலுத்துவதில்லை என்று சுட்டிக்காட்டினார்

சருமததுடன் சேரும் சில ரசாயண பொருட்களினால் உடலுக்கு
பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படலாம் என்றும் வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

No posts found.
வாகன இலக்கத்தகட்டில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன இலக்கத்தகட்டில் மாற்றம்

வாகன இலக்கத்தகட்டில் மாற்றம்

வாகனங்களை புதிதாகப் பதிவுசெய்தல் மற்றும் வாகன உரிமையில் மாற்றத்தை மேற்கொள்ளும் போது வழங்கப்படும் வாகன இலக்கதகட்டில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக வாகன இலக்கத்தகட்டில் தற்போதுள்ள மாகாணத்திற்கான குறியீட்டு எழுத்து நீக்கப்படவுள்ளது.

No posts found.
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
Posted in உலக செய்திகள்

பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்

பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார் .

காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.

தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்

தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி தயாரின் மறைவு குறித்து தெரிவித்திருந்தார்.

அகமதாபாத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று காலை (30) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 100.என்பது குறிப்பிடத்தக்கது.