Author: நிருபர் காவலன்
மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதானிகளை சந்தித்த சிறீதரன் எம்.பி
மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதானிகளை சந்தித்த சிறீதரன் எம்.பி
இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
பிரதானிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான கலந்துரையாடல், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதானிகளை சந்தித்த சிறீதரன் எம்.பி
வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்த விவரண அறிக்கையை, கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பித்த சிறீதரன் எம்.பி,
அவ் அறிக்கையின் பிரதிகளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள் என்பவற்றுக்கு தனித்தனியே அனுப்பிவைத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அவ் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, ஆணைக்குழுவின் பிரதானிகளால் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, தனியாருக்கோ, மத நிறுவனங்களுக்கோ சொந்தமான காணிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் உரிய தரப்பினர் எதிர்ப்புப் போராட்டங்களை
முன்னெடுக்கின்ற போது, பொலிஸ் முறைப்பாடு செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளையும் கையாளும் பட்சத்தில், இதுவிடயமாக தமது
நிறுவனம் சார்ந்து மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர், நீதிபதி ரோகினி மாரசிங்க சுட்டிக்காட்டியதாக சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு காலக்கெடு
கடன் மறுசீரமைப்பு காலக்கெடு
கடன் வேலைத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் அளவில் உள்நாட்டு, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மே 11 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு செப்டம்பர் மாதம் நடத்தப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூவர், பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மசஹிரோ நொசாகி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தோண்டப்படும் தினேஷ் ஷாப்டரின் உடல்
தோண்டப்படும் தினேஷ் ஷாப்டரின் உடல்
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று (25) முற்பகல் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நீதிமன்ற விசேட வைத்தியர்கள் குழுவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட
கோரிக்கைக்கு அமைவாக அவரது உடல் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொரளை மயானத்திற்கு பொரளை பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
சிலாபம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (24) மாலை தமது செல்லப்பிராணிகளை நீராட்டுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சிலாபம் – மைக்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்
ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
கருங் கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தலில் , ஈடுபட்டு கொண்டிருந்தரஸ்யாவின் ,இவான் ஹர்ஸ் கப்பல் ,
மீது உக்ரைன் வேகப்படகுகள் திடீர் தாக்குதலை நடத்தின .
எனினும் ரஷ்ய கடல் படைநடத்திய பதிலடி தாக்குதலில் ,
உக்ரைன் படகுகள் முற்றாக அழிக்க பட்டு மூழ்கடிக்க பட்டன .
ஆள் இலலாத தற்கொலை படகுகளுக்கு ஒப்பான ஒன்றாக ,
இந்த வேகப்படகுகளை ,உக்ரைன் வடிவமைத்து
சண்டையில் ஈடுபடுத்தி வருகிறது .
அவ்வாறான வேகப்படகினையே ,தாம் மூழ்கடித்துள்ளதாக
ரஷ்யா தெரிவித்துள்ளது .
ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
ரஷ்ய கப்பல்களை இலக்கு வைத்து ,உக்ரைன் வலிந்து தாக்குதலை நடத்திய நிலையில் ,உக்ரைன் பகுதிகள் எங்கும் ,வரும் நாட்களில் ,கடுமையான ,
ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்த கூடும் என எதிர்
பார்க்க படுகிறது .
இந்த தாக்குதலின் பின்புலத்தில் ,அமெரிக்கா,மேற்கு நாடுகள் ,
கரங்கள் ஓங்கி இருப்பதாக ,
ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளதால் பதட்டம் நிலவுகிறது .
உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்
உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்
உக்ரைன் இராணுவத்தினர் தொடர்ந்து ரஸ்யாவுடம் போராடுவதற்கு ,பீரங்கி குண்டுகள் வாங்கிட
260 மில்லியன் யூரோக்களை வழங்குகிறது .
155 மிமீ பீரங்கி குண்டுகளை அதிகமக உக்ரைன் இராணுவம் பயன் படுத்தி வருகிறது .
நாள் ஒன்றுக்கு மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் எறிகணைகளை வீசி வருகிறது
மணித்தியாம் 200 பீரங்கி குண்டுகளை சராசரியாக வீசிய வண்ணம் உள்ளது .
இதனால் ,இந்த கணக்கின் அடிப்படையில் பீரங்கி குண்டுகளை வழங்கிட
நெதர்லாந்து முடிவு செய்த்துள்ளது
உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்
எதிர் வரும் ஏழுமாதத்திற்கு ஒரு மில்லியன் எறிகணைகளை வழங்கிட ,
ஐரோப்பிய யூனியன் தயராகி வருகிறது .
மூன்று கட்டமாக இந்த குண்டுகளை வழங்க படவுள்ளன .
இந்த ஆட்டிலறி குண்டுகள் 24 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை ,
இவ்வாறான ரங்கியை மீட்ட விடுதலை புலிகள், பலாலி வவுனியா விமானதளங்களை குறி வைத்து
தாக்கி சிங்கள படங்களை அலறவிட்டமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமான கப்பல்களை மூழ்கடிக்கும் சீனா ஏவுகணை
அமெரிக்கா விமான கப்பல்களை மூழ்கடிக்கும் சீனா ஏவுகணை
அமெரிக்கா விமான கப்பல்களை மூழ்கடிக்கும் சீனா ஏவுகணை ,
அதிர்ச்சியில் அமெரிக்கா இராணுவம் ,
,
மணிப்பூரில் சிக்கிய ஆயுதம் தப்பிய இராணுவம்
மணிப்பூரில் சிக்கிய ஆயுதம் தப்பிய இராணுவம்
மணிப்பூர் பகுதியில் இந்தியா இராணுவத்தினரை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்தும் முகமாக, வாகனம் ஒன்றில் மறைத்து வைக்க,
பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .
இதில் ஐந்து சொட் கண் ,ஐந்து கைகுண்டுகள் ,மற்றும் இயந்திர துப்பாக்கிகள் ,
கண்ணிவெடிகள் ,என்பன உள்ளடக்க பட்டதாக, இந்திய படைகள் தெரிவித்துள்ளன .
குறித்த பகுதியில் ,இந்திய இராணுவத்தினர் மற்றும் ,போராளி குழுக்களுக்கு இடையில்கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த மோதல்களில் சிக்கி
இரு தரப்பிற்கும் இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம், உள்ளமை குறிப்பிட தக்கது
ரஸ்யாவின் 16 மில்லியன் டொலர் பெறுமதியான உலங்குவானூர்தி வீழ்த்தல்
ரஸ்யாவின் 16 மில்லியன் டொலர் பெறுமதியான உலங்குவானூர்தி வீழ்த்தல்
உக்ரைன் இராணுவம் கடந்த இருபத்தி நான்கு ,
மணித்தியாலத்தில் ,தமது வான் பரப்புக்குள் நுழைந்து,
தாக்குதல் நடத்தி கொண்டிருந்த ,ரஸ்யாவின் ,
முன்னணி Ka-52 attack helicopter. தாக்குதல் உலங்கு வானூர்தி ஒன்றை
சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது .
தமது வான்காப்பு படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில்
இந்த ,உங்களவனூர்த்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளனது .
ரஸ்யாவின் 16 மில்லியன் டொலர் பெறுமதியான உலங்குவானூர்தி வீழ்த்தல்
இவ்வேளை அந்த உலங்குவானூர்தியில் பயணித்த நான்கு இராணுவத்தினர்,
பலியாகியுள்ளனர் என்கிறது .
இதன் மொத்த விலை 16 மில்லியன் எனவும் ,ரஸ்யாவுக்கு இது மிக பெரும் இழப்பு என உக்ரைன் தெரிவித்து மகழ்ச்சி கொண்டுள்ளது ,.
தொடர்ந்து உக்ரைன் ,கேர்சன் பகுதிகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேலும் உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ,வான்வெளி மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன .
ஏவுகணை இன்றி தவிக்கும் உக்ரைன் கைவிட்ட பிரிட்டன்
ஏவுகணை இன்றி தவிக்கும் உக்ரைன் கைவிட்ட பிரிட்டன்
ஏவுகணை இன்றி தவிக்கும் உக்ரைன் கைவிட்ட பிரிட்டன் ,
சுற்றிவளைத்து தாக்கும் ரஷ்யா ,
ஏவுகணை இன்றி தவிக்கும் உக்ரைன் கைவிட்ட பிரிட்டன்
உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
உக்ரைன் நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் இந்த வருடத்தின் இதுவரையான,
ஐந்து மாதங்களில் மட்டும், இரண்டு லட்சத்து இருபதாயிரம் ஏவுகணைகள் ,
எறிகணைகளை வழங்கியுள்ளதக தெரிவித்துள்ளது .
மேலும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் எறிகணைகளை வழங்கும் நோக்குடன் ,ஐரோப்பா தயாராகி வருவதாகவும் ,தொகுதி தொகுதியாக ,
இந்த ஏவுகணைகள் ,எறிகணைகள் வழங்க படும் என்ற
இவர்களது கூற்று ,உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு
வரும் ,திட்டம் ஏதும் காணப்படவில்லை .
உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
உக்ரைனும் ரஸ்யாவுக்கு இடையிலான போரை நீடித்து ,
செல்வதில் அக்கறை கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து
காட்டுகின்றன .
முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுதங்களா குவிக்க பட்ட பொழுதும் ,ரஷ்ய
கடுமையான தாக்குதலை நடத்தி வருவதே ,மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
14 பேரின் சடலங்கள் மீட்பு
14 பேரின் சடலங்கள் மீட்பு
இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது
இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டனர். கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்களை மீட்டுள்ளன,
வைத்தியரை கொலை செய்த யாசகர்
வைத்தியரை கொலை செய்த யாசகர்
தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியரை கொலை செய்த யாசகர்
சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், 38 வயதுடைய சந்தேகநபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து
பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு
24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு
ஆப்கனிஸ்தான நாட்டில் 24 லட்சம் மக்கள் அவையவங்கள் இன்றி,
வசித்து வருவதான புதிய புள்ளி விபரம்
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் ஆப்கான் ,
நாட்டை ஆக்கிரமித்த பின்னார் ,
இடம்பெற்ற கடும் போர் காரணமாக ,தலிபான்கள் ,
மற்றும் முன்னைய அரசுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கிய,
அப்பாவி மக்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளனர் .
அவையவங்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு உடனடியாக கால்,கை ,பொருத்திடஇவ்ரகளுக்கு உரிய உதவைகளை வழங்க வேண்டும் என ,தன்னார்வு நிறுவனம் ஒன்றுகோரிக்கை விடுத்துள்ளது .
மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்
மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்
மாலியில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐநா அமைதி காக்கும் படையினர்,
காயமடைந்துள்ளனர் .
இவர்கள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில்
நல்லவர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்
ஞாயிற்றுக்கிழமை, கிடால் பகுதியில், பாதுகாப்பை வழங்கி சென்று கொண்டிருந்த வாகனம் மீது
நடத்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியே ,
இலங்கை படைகள் காயமடைந்தனர் .
சம்பவம் நடந்து 40 நிமிடங்களுக்குப் பிறகு,
சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் நடத்தியதில்,
இரண்டாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஈரான் அணுகுண்டு உலைகளை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்
ஈரான் அணுகுண்டு உலைகளை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்
ஈரான் அணுகுண்டு உலைகளை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல் ,
விசேட விமானங்களுடன் தயார் நிலையில் இஸ்ரேல் ,
எரியும் ரஷ்யா ஆயுத கிடங்கு
இஸ்ரேல் எல்லையில் ஈரான் இராணுவம் கடுமையாக தாக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் எல்லையில் ஈரான் இராணுவம் கடுமையாக தாக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் எல்லையோரத்தில் நெருங்கி வரும் ஈரான் இராணுவத்தை ,
குறிவைத்து அடித்து வீழ்த்தி வருகிறோம்
என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் .
ஈரானின் புதிய ஆட்சி பீடம் ஆட்சிக்கு வருகை தந்த நாள் முதல் ,
சிரியா வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்று ,
இஸ்ரேல் எல்லையோரம் நிலை கொள்ள முயலும் ,
ஈரானிய இராணுவத்தின் திட்டங்களையும் ,அவர்க்ளின், இராணுவ
முகாம்களையம் கடுமையாக தாக்கி வருகிறோம் .
இஸ்ரேல் எல்லையில் ஈரான் இராணுவம் கடுமையாக தாக்கும் இஸ்ரேல்
மேலும் சிரியாவுக்குள் ,நிலைகொண்டு புலனாய்வு பணிகளை
செய்து இராணுவம் ,போராளிகளை ஒன்றிணைத்து ,
தாக்குதல்களையும் ,திட்டங்களையும் நகர்த்தி வரும் ,
உளவுத்துறை முக்கிய நபர்களையும் குறிவைத்த வீழ்த்தி வருகிறோம் .
சொல்ல போனால் எமது தாக்குதல் ஈரான் படைகளுக்கு ,
சிரியாவில் இரட்டிப்பாக கிடைத்து வருவதாக இஸ்ரேல் உறுமியுள்ளது .
இஸ்ரேலின் இந்த பதட்டம் ,ஈரான் எம்மை ,அழித்து விடும்
என்பதாகவே உள்ளது போலும் .













































