Posted in கிசு கிசு

தேடி வந்த வாய்ப்பை நழுவவிட்டு புலம்பும் நடிகர்

தேடி வந்த வாய்ப்பை நழுவவிட்டு புலம்பும் நடிகர்

நான்கெழுத்து நடிகரின் இரண்டெழுத்து படம் வெற்றி என்ற செய்தி, மன்னர் நடிகரை வடபோச்சே! என வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். ஏனேனில், அது அவர் நடிக்க

வேண்டிய படமாம். தயாரிப்பு பிரிவுக்கும் அவருக்குமான உரசல்களால் நடிக்க முடியாமல் போனதாக தனக்கு

நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.

மன்னர் நடிகரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் சரிவர ஓடாததால், அடுத்த படத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறாராம்.

இதனால் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் முனைப்பில் இருக்கிறாராம் அந்த நடிகர்.

Posted in கிசு கிசு

வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை

வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை

மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக

இருந்தாராம். ஒரு பிரபல டைரக்டரை காதல் திருமணம் செய்து, அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து கொண்டாராம்.

டைரக்டரை விவாகரத்து செய்த பின், தனக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தாராம்.

ஆனால், அது நடக்கவில்லையாம். அதன் விளைவு, அந்த நடிகை மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டாராம்.

போதை அதிகமானால், தனது நிலையை எண்ணி வாய்விட்டு அழுகிறாராம்!

Posted in கிசு கிசு

அந்த காட்சி நோ – அடம்பிடிக்கும் நடிகை

அந்த காட்சி நோ – அடம்பிடிக்கும் நடிகை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மையானவராக இருக்கும் வீரமான நடிகை,

தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளாராம். கம்பீரமான பீரியாடிக் படங்களாக இருக்கட்டும், ஆக்‌ஷன், கூல் கேர்ள்,

காமெடி என அனைத்து விதமான படங்களிலும் தன்னை நிரூபித்து வருகிறாராம்.

அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகை படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனத்துடன்

இருக்கிறாராம். மேலும் எந்த ஒரு மொழிப் படமாக இருப்பினும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னரே, தான்

முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மிகவும் கண்டிப்புடன் கூறிவிடுகிறாராம்.

இதுவரையில் நடிகை எந்த ஒரு திரைப்படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாதாம். அதை என்றும் நான் மாற்றி கொள்ளப்போவதில்லையாம்.

இதற்கு ஒப்புதல் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கண்டி‌ஷனாக தெரிவித்துள்ளாராம் நடிகை.

Posted in கிசு கிசு

வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு

வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு

முதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது வாய்ப்பில்லாததால் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

வாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு
கிசுகிசு
முதல் படத்தில் கண்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து மிகவும் பிரபலமான நடிகை, அடுத்தடுத்து பல படங்களில்

நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். ஆனால், அந்த படங்கள் வெளியாகவில்லையாம். மேலும் புதிய பட வாய்ப்புகளும் நடிகைக்கு கிடைக்க வில்லையாம்.

நடிகையை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக புதிய புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பரப்பி

வருகிறாராம். இதைப்பார்த்த சிலர் நடிகைக்கு வாய்ப்பில்லாமல் இப்படி செய்து வருகிறார் என்று பேசி வருகிறார்களாம்.

Posted in கிசு கிசு

இயக்குனருக்கு தூது அனுப்பும் நடிகை

வீரமான நடிகர் கடைசியாக நடித்த அதே கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார்களாம்.

இந்த படத்தில் நடிக்க நையாண்டியான நடிகை மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நடிகையின் தீராத ஆசையாம்.

முந்தைய படத்தில் இருந்தே நடிகை முயற்சி செய்து வருகிறாராம். ஆனால், இயக்குனர் கண்டுக்கொள்ள

வில்லையாம். இந்த முறை எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று இயக்குனருக்கு தூது அனுப்பி வருகிறாராம்.

Posted in மருத்துவம்

கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை

கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை

கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு

அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள்.

கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து

உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஏதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும்

இடது கைப்புறமாக படுப்பது மிகவும் சிறந்தது. மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை

அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது. இரவு நேரத்தில் எளிதில்

உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும்.

எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை

தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம்.

இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும்.

அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், செரிமான கோளறுகளினால் சிரமப்படுவார்கள்.

இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இதுவே நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது.

எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும்

. அதே சமயம் குளிர்பானங்கள், காபி போன்றவைகளை இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள் குறிப்பாக மன அழுத்தத்தினால்

பாதிக்கப்படாமல் இருக்க யோகா, மனதிற்கு இதம் தரும் பாடல்கள் போன்றவற்றை கேட்கலாம்.

அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கம் வரும் கரு வளர்ச்சியும் சீராக இருக்கும்.

இன்னைக்கு டிபனுக்கு ரவா இட்லி இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க|Instant Rava Idli with chutney in 15 min samayal tamil
Posted in மருத்துவம்

ஆஸ்துமா உடல் பருமனால் ஏற்படும்

உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பருமனான உடல்வாகு கொண்ட நபர்களின் நுரையீரலில் கொழுப்புத் திசுக்களை ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது,

பி.எம்.ஐ. எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமாஅபாயம் அதிகரிக்கிறது

என்பதை இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இவர்களின் உடல்நிலையைச் சீராக மாற்றியமைக்க முடியுமா

என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆஸ்துமா உடல் பருமனால் ஏற்படும்

நுண்ணோக்கி மற்றும் சாயங்களைப் பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து சுமார் ஆயிரத்து 400

சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

பி.எம்.ஐ. அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி நுரையீரலை வீக்கமடையச் செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமாஅபாயம் இருப்பதை விளக்குகிறது.

அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமாபாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள்

இருக்கும் என இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் உள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார்.

அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே

நுரையீரல் வீக்கம் அடைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் பீட்டர் நோபல்.

நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக

இருப்பதே ஆஸ்துமாஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்குக் காரணம் எனக் கருதுவதாகத் தெரிவிக்கிறார், பீட்டர் நோபல்.

உடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகப்

பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று

ஐரோப்பிய சுவாசக் கழகத்தின் தலைவர் தியரி டுரூஸ்டர்ஸ் கூறுகிறார்.

உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கொழுப்புத் திசுக்களின் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்க

முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

பிரிட்டிஷ் தொராக்சிக் சொசைட்டி என்ற அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை

நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்.

பொதுவாகவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

Posted in மருத்துவம்

புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்

பீடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்

சிகரெட்டுகளை விட அதிக கேடு விளைவிக்கும், எளிய பீடி மீது அரசு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

சமீபத்தில் இ-சிகரெட்டுகளை மத்திய அரசு தடை செய்ததையும், பின்னர் தமிழக அரசு இதை தடை

செய்ததையும் பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் முக்கிய பிரச்சினையான, பரவலாக இருக்கும் பீடி பிடிக்கும் பழக்கம்

மற்றும் புகையிலை போடும் பழக்கங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது பற்றி கவலை தெரிவிக்கின்றனர்.

புகையிலை புகைப்பதினால் புற்றுநோய் உண்டாகிறது என்பது 1950-களில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ச்சியான

புகை பழக்கத்தினால் நுரையீரல், சிறுநீர் குழாயின் கீழ் பகுதி, சிறுநீரக பகுதிகள், சிறுநீர்ப்பை, காற்று செல்லும்

செரிமான பாதையின் மேல் பகுதி, தொண்டைக் குழி, குரல் வளை, உணவுக் குழாய் மற்றும் கணையம் ஆகிய

உறுப்புகளில் புற்றுநோய் உண்டாகும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. நாசிக் குழி, மூக்கு எழும்பின்

உட்பகுதி, மூக்கு துவாரம், வயிறு, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் உண்டாக்கும் என்பதற்கும்

சான்றுகள் உள்ளன. காளப்புற்று நோய் மற்றும் எழும்பு மஜ்ஜைகளில் ரத்தப் புற்றுநோயும் இதனால்

உண்டாகின்றது என்று மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரகம், “பீடி பழக்கமும், பொது சுகாதாரமும்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்

பீடி புகையில் அதிக அளவில் தார், நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைட், அமோனியா, ஹைட்ரஜன் சையனைட், இதர எரிதன்மை கொண்ட பீனால்கள் மற்றும் புற்றுநோய்

உண்டாக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன்கள், பென்சான்த்ராசீன், பென்சோபைரீன் மற்றும் கதிரியக்கத் தன்மை கொண்ட யுரேனியம் ஆகியவை உள்ளன.

பீடியை அடிக்கடி பற்ற வைக்க வேண்டியிருக்கும். பீடி சுற்றப் பயன்படுத்தப்படும் இலையின் ஊடுருவு திறன் குறைவாக இருப்பதாலும், முறையான வடிகட்டி

இல்லாததாலும், சிகரெட் புகையைவிட பீடி புகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பொருட்கள் வெளியாகின்றன. சிகரெட்டை விட பீடியை இரண்டு

அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஊத வேண்டியுள்ளதால், நிக்கோட்டின், தார் மற்றும் கார்பன் மோனாக்சைட் ஆகியவை அதிக அளவில் உள்ளிழுக்கப்படுகின்றன.

நிரந்தரமான மூச்சுக்குழாய் அழற்சி நோய் மற்றும் இதயநோய்களை உருவாக்கும் ஆற்றல் பீடிகளுக்கு உண்டு.

“இ-சிகரெட்டுகளை மட்டுமல்லாமல் அனைத்து வகையான புகையிலை பொருட்களையும் தடை செய்ய மாநில அரசை கோருகிறோம். கிராமப்புறங்களில் பீடிப்பழக்கம் மிக

அதிகமாக, குறைந்த வருமான கொண்ட மக்களிடம் உள்ளது. சிகரெட் பிடிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட பீடி பிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக

உள்ளதால், பீடி தடை செய்யப்பட வேண்டும். ஜி.ஏ.டி.எஸ் 2 (உலக வயது வந்தவர்கள் புகையிலை கணக்கெடுப்பு 2016-17) அறிக்கையின்படி, தமிழகத்தில் பீடி புகைப்பவர்களின்

விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது. இது ஜி.ஏ.டி.எஸ் 1 (2009-10) அறிக்கையின் 5.3 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு புகையிலை

கட்டுபாட்டுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிரில் அலெக்சாண்டர் கூறுகிறார்.

Posted in மருத்துவம்

காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்…

டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு

வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2,

டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும்

. இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும்.

நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாட்கள் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் 4 முதல் 7 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றும்.

குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும் ஜலதோஷம், வாந்தி, பேதியுடன் அறிகுறிகள் தொடங்கும்.

பெரியவர்களுடைய அறிகுறியை விட குறைவாக குழந்தைகளுக்கு தோன்றும் நோய்தாக்கம், பின்னர் அதிபயங்கர நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கும்.

நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் 20 சதவீதத்தினர்களுக்கு நோய் அறிகுறியான, அதிவிரைவு காய்ச்சல், கண்ணிற்கு பின்னால் வலி, தசை வலி மற்றும் தோலில் தடிப்புகள் உருவாகும்.

நோய் உடலில் தங்கும் நேரத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவம், அபாயகரமான பருவம் மற்றும் மீழும் பருவம் என பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பருவத்தில் பயங்கர காய்ச்சலோடு ஆரம்பிக்கும் நோயானது அதிகபடியான உடல் வலியையும், தலைவலியையும் குறைந்தது 2 முதல் 7 நாட்களுக்கு கொடுக்கும்.

இந்த நேரத்தில் 50 முதல் 80 சதவீத நோயாளிகளுக்கு தோல் தடித்து பின் தோலில் ஏற்படும் தடிப்புகள்போல் உருவாகும். சிலருக்கு லேசான ரத்தப்போக்கு வாயிலும், மூக்கிலும் ஏற்படலாம்.

நோய் அபாயகரமான கட்டத்திற்கு செல்லும் போது ரத்த நாளங்களும், சிறு நரம்புகளின் சுவர்களும் பலவீனமடைந்து இவற்றிலிருந்து திரவங்கள் நெஞ்சு கூட்டிற்கும்,

வயிற்றிற்குள்ளும் வந்து சேரும். இதனால் ரத்தத்தில் நீரின் அளவு குறையும், முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவும் குறைவுபடும். இதனால்

காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்…

இந்தக்கட்டத்தில் உறுப்புகள் செயலிழப்பதும், அதிக ரத்தப்போக்குகளும் குறிப்பாக குடல் பகுதிகளில் ஏற்படும். நோயிலிருந்து மீழும் கட்டத்தில் ரத்த நாளங்களிலிருந்து

வெளியேற்றப்பட்ட நீரானது மீண்டும் நாளங்களுக்குள் உள்ளிழுக்கப்படும். இந்த நிகழ்வுகள் 2 முதல் 3 நாட்களுக்கு நடைபெறலாம்.

இந்நிகழ்வு பயங்கர உறுத்துதல்களையும, இதயத் துடிப்பை குறைக்கவும் செய்யும்.

சில நேரங்களில் ரத்த நாளங்களில் அதிகப்படியான நீர்சேர்க்கை உருவாகும். இதனால் மூளை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் 67 சதவீத சுயநினைவிழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து இதய தொற்றுகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும்.

இவ்வாறாக இந்நோய் பாதிப்புகள் இரண்டு வகையான பாதிப்பை உருவாக்கும் ஒன்று மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல்

. இவை அதிக ரத்தப் போக்கையும், ரத்த தட்டையணுக்களையும், ரத்தத் திரவங்களையும் குறைவுபடச் செய்யும்.

இரண்டாம் வகை டெங்கு, ஷாக் அறிகுறியை உருவாக்கி இதயத்துடிப்பை வெகுவாக குறைத்து அபாயக் கட்டத்தை அடையச் செய்யும்.

காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்…

டெங்கு வைரஸ்களை தாங்கி வரும் ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது அதன் எச்சிலோடு வைரஸ் கிருமிகள் மனித தோல்களுக்குள் உட்புகும்.

இந்த வைரஸ் கிருமிகள் பின்னர் தந்திரமாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுவுக்குள் நுழைந்து,

தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உடலில் உலாவரும். இந்த ரத்த வெள்ளையணுக்கள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தன்னுள் இருக்கும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.

இந்த செல்கள் வைரஸ்களை அழிக்கும் “இன்டர்பெரான்” எனும் பொருள்களை உடலில் உருவாக்க சமிக்ஞைகளை வெளியிடும்.

இதன் மூலம் உடலில் அதிகபடியான இன்டர்பெரான் எனும் புரத பொருள்கள் உருவாகும். இதனால், உடல் வெப்பம் மிக விரைவாக அதிகரிக்கும்,

உடல் வலியையும் உருவாக்கும். அதே சமயம் வைரஸ்களும் முடிந்தவரை தன் இனத்தைப் பெருக்க முயற்சியெடுக்கும். இதனால், எலும்பு மஜ்ஜைகளும், கல்லீரலும் பாதிப்படையும்

. இதனால், ரத்தத்தை உறையவைக்கும் தட்டையணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். விளைவுரத்த நாளங்களின் துவாரங்கள் வழியாக திரவங்கள் வெளியேறி மேலே குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படும்.

பகல் நேரங்களில் கடிக்கும் தன்மையுடைய இக்கொசுக்கள் ஒரு கடி மூலம் நோய்களை உருவாக்கும் சக்தியுடையது.

பெண் கொசுக்கள் நோய் தாக்கிய மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது வைரஸ் கிருமிகள் கொசுவின் உடலுக்குள் செல்கின்றன. பின் கொசுக்களின் குடல் சுவரில்

8 முதல் 10 நாள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும், பின்னர் கொசுக்களின் பிற உடல் உறுப்புகளுக்குள் செல்லும், பின்னர் கொசுவின் எச்சில் வழியாக வெளிப்பட்டு பிறரை

கடிக்கும்போது அந்த மனிதர்களுக்குள் செல்லும். இந்த வைரஸ் கொசுக்களுக்கு எந்த பிரச்சினைகளையும்

உருவாக்காது. டெங்கு கொசுக்கள் மனிதர்கள் வாழும் பகுதிகளின் மிக அருகிலுள்ள நல்ல தண்ணீர்தேக்கங்களில் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும்.

காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்-இந்நோயை கண்டறிவது எளிதான காரியமில்லை, சாதாரணமாக வெள்ளையணுக்கள் எண்ணிக்கை, தட்டையணுக்கள் எண்ணிக்கையை வைத்து டெங்கு

காய்ச்சலைக் கண்டறிவது சரியான வழிமுறையில்லை. ஏனென்றால், பல நோய்களுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைவுபடலாம். டெங்கு காய்ச்சலை சரியாக கண்டறிய,

உடலிலுள்ள வைரஸ்களை வளர்த்தெடுக்கும் முறையையோ, வைரஸ் பி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டறியும் பி.சி.ஆர் முறையையோ, வைரஸ்

புரதங்களைக் கண்டறியும் முறையையோ அல்லது வைரஸ் நோய்களின் தொற்றுகளால் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் முறையையோ பயன்படுத்தலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி.

காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்-இந்நோயை பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வளருவதால் வீட்டின் உள்ளேயும், அருகேயும் தண்ணீர்தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொசுக்கள் பகல்

வேளைகளில் கடிப்பதால் அந்த நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை மறைக்கும் உடைகளை உடுக்க வேண்டும்.

நோய் அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அந்த வீடுகளில் டெங்கு வைரஸ் தாங்கிய கொசுக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

Posted in சினிமா

லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – மீரா மிதுன்

லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – மீரா மிதுன்

சென்னை நட்சத்திர விடுதியில் நடிகை மீரா மிதுனின் நிரூபர்களிடம் பேசியதாவது:-

40 நாட்கள் நான் இங்கு இல்லை அதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு , என்னை குறித்த பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா வருகின்றன , காவல் துறை

நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது, இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதை விட பெரிய இடத்திற்கு சென்றால் கிடைக்கும் என்றால் செல்வேன்.

ஆனால் அப்படி சென்றால் தமிழகத்திற்கு அசிங்கம், எனக்கு இதனால் அசிங்கமட்டுமல்ல மிரட்டல்களும் வருகின்றன, என் மேல் இரண்டு முதல் தகவல்

அறிக்கை பதிவு செய்யப்பட்டது இரண்டுமே பொய்யானவை, என்னிடம் எந்த விசாரணையும் செய்யால் பதிவு செய்தார்கள், லஞ்சம் வாங்கி கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள்.

நானும் பணம் கொடுத்தால் அதையும் வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்வார்கள் போல, இதற்கு காரணமானவர்கள். ஆய்வாளர்கள் சிலர் மற்றும் விஜய் டிவி, நிகழ்ச்சி

முடியும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு இப்போது எனக்கு முறையாக பதில் அளிக்கவில்லை, எனக்கு வரவேண்டியது முழுமையாக வரவில்லை. சேரன்

விவகாரத்தில் நான்இந்த நிகழ்ச்சியை குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் அப்படி அளித்து நிகழ்ச்சியை நிறுத்தினால் தான் எனக்கு

கிடைக்கவேண்டியது கிடைக்கும் என நினைக்கிறேன், நிகழ்ச்சியை முறையாக நடத்திய போதும் எனக்கு கொடுக்கப்பட்ட வேண்டியவை கொடுக்கப்படவில்லை.

விஜய் டிவி தலைமையில் இருப்பவர் என்னிடம் கெஞ்சினார் அதற்காக தான் குறைவான தொகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். என்னிடம் முறையாக

குறிப்பிட்ட காலத்தில் தருகிறேன் என கூறலாம் எதையும் கூறவில்லை. எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.

லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – மீரா மிதுன்

அட்வான்ஸ் கூட வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் மொத்தம் 35 நாட்கள் இருந்தேன் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்

யாரிடமும் உறவாடவில்லை பழகவும் இல்லை என் எண்ணம் யாரிடமும் இல்லை, சரவணன் நல்ல நபர் அவரிடம் மட்டும் பேசியுள்ளேன். எனக்கு ஒரு கால் செய்து கால

அவகாசம் கூறியிருந்தால் கூட போதும், உயிருக்கு பயந்து நான் மும்பையில் இருந்தேன் மும்பை, கேரளா , கர்நாடக போலீசார் சிறப்பாக பணியாற்றுகின்றனர் பாதுகாப்பாக உள்ளது. மும்பையில் குடியேறிவிட்டேன்.

எனக்கு தெரிந்து தமிழில் சரியாக காட்டினார்களா எனக்கு தெரிவில்லை நான் பார்க்கவில்லை, ஆனால் சிலர் என்னை புரிந்து கொண்டார்கள். நான் அரசியலுக்கு

வரவுள்ளேன், என்னை போல பிரபலங்களுக்கு இந்நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும்?

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இருந்த வரை சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது பெண்கள் அமைச்சர் பதவிக்கு வரவேண்டும், கமலை

சந்தித்து கோரிக்கை வைத்தீர்களா? என்ற கேள்விக்கு கமலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை புரோடக்‌‌ஷன் குழுவில் தான் பேசினேன், கமல் குறித்து பேசியதால் தான் பணம் கொடுக்கவில்லை என்று கூறமுடியாது.

எதிராக செயல்பட்ட அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள், இதன் பின்னரும் எனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் விஜய்டிவி சேனல் முழுவதும்

பிரச்சனையை சந்திக்க நேரிடும். நான் வாங்கிய பட்டங்கள் பொய்யானவை என்றால் என்னால் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர்களிடமும் திரும்ப பெறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

    Posted in சினிமா

    அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்

    அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்

    வினோத் இயக்கும் தல 60 படத்திற்கு பின் அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்
    அஜித்https://www.youtube.com/user/ethiricom1
    நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின் வினோத் இயக்கத்திலேயே இரண்டாவது முறையாக அஜித் தொடர்ந்து நடிக்கிறார். அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு

    அன்றே படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு குழு

    அறிவித்துவிட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

    அஜித்

    இந்த நேரத்தில் அஜித்தை வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், புஷ்கர்-காயத்ரி, சிறுத்தை சிவா என பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக

    தெரிகிறது. இதில் யாருடன் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் இணைய இருக்கிறார் என்பது வலிமை படம் முடியும் சமயத்தில் தான் தெரியும்.

    Posted in சினிமா

    தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க எதிர்ப்பு

    தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க எதிர்ப்பு

    தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் ஒரு குழுவினர் ஐதராபாத்தில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    அதில் கூறியிருப்பதாவது:- “தெலுங்கு பட உலகில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு

    கொடுக்கின்றனர். இதனால் தெலுங்கு குணசித்திர நடிகர்கள் வருமானம் இன்றி வீட்டு வாடகை கூட கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

    ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாளிலேயே தெலுங்கிலும் ரிலீசாகிறது.

    தமிழ் நாட்டில்தோல்வி அடையும் சில படங்கள் கூட ஆந்திராவில் வசூல் குவிக்கின்றன.

    ஆனாலும் தெலுங்கு நடிகர்களை தமிழ் படங்களில் அவர்கள் நடிக்க வைப்பது இல்லை. ஆனால் தெலுங்கு நடிகர்கள் தமிழ், கன்னடம், மலையாளத்தில் தங்கள் படங்கள் வியாபாரம் ஆக அங்குள்ள நடிகர்களை இறக்குமதி செய்கிறார்கள்.

    விஜய் சேதுபதி, சத்யராஜ்,

    தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க எதிர்ப்பு

    சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவிகிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க

    வைக்கின்றனர். பிரபாஸ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் அவரைத் தவிர யாருமே தெலுங்கு பேசுபவர்கள் இல்லை.

    சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் பிறமொழி நடிகர், நடிகைகளே அதிகம் இருந்தனர்.

    தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபாத்திரங்களுக்கும் பிறமொழிகாரர்களையே அழைக்கின்றனர்.

    அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்

    . தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும்.”

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    சத்யராஜே பேச்சு ஒவ்வொன்றும் சர்ச்சையை கிளப்பும் விதமாக உள்ளதை தமிழர் தேசம் நன்கு புரியும் பட்டதை யாருக்கும் படமில்லாமல் கூறும் ஒரே நடிகர் சத்யராஜ் தான்

    தமிழன் என்ற திமிரோடு பேச கூடியவர் ஆனால் அப்பப்போ சர்ச்சையில் சிக்கி கொல்பவர் சத்யராஜ்

      மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet
      Posted in சினிமா

      சிறப்பு விருது மத்திய அரசுக்கு நன்றி- ரஜினிகாந்த் டுவிட்

      சிறப்பு விருது மத்திய அரசுக்கு நன்றி- ரஜினிகாந்த் டுவிட்

      சிறப்பு விருது மத்திய அரசுக்கு நன்றி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந்

      தேதி முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

      சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க மத்திய

      அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

      பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு “தாதா சாகேப் பால்கே விருது” வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவா சர்வதேச

      திரைப்பட விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் 50-வது

      ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

      சிறப்பு விருது….. மத்திய அரசுக்கு நன்றி- ரஜினிகாந்த் டுவிட்

      இது தொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த்

      செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’

      என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் மத்திய மந்திரி ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது வழங்கும் மத்திய

      அரசின் முடிவை நடிகர் ரஜினிகாந்திடம் தெரிவித்து விட்டோம். அவரும் அந்த விருதை வாங்க சம்மதித்துள்ளார்” என்று தெரிவித்தார்

      மத்திய அரசினால் சிறப்பு விருது பெற்று கொண்ட றிவிப்பிற்கு மத்திய அரசுக்கு நன்றி- தெரிவித்து ரஜினிகாந்த் டுவிட்

      மோடி அரசினால் வழங்க படும் பெருமித அறிவிப்பாக இதனை ரஜனிகாந்த் பார்க்கின்றார்

        இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்
        Posted in இலங்கை செய்திகள்

        காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்

        காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்…!

        காலி – அகுரெஸ்ஸ வீதியின் இமதுவ அகுலுகங்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

        மின்சார சபைக்கு சொந்தமான லொறி ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும்

        ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

        விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 7 பேர் காயமடைந்த நிலையில், கராபிட்டிய

        வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

          கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

          இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா  இல்லை  வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் தமிழில் உரையாற்றினார்.

          முன்னர்  ஊருக்குள் வெள்ளை வான்  தான் வந்தது  ஆனால் இன்று எமது ஆட்சியில்  தொலைபேசி அழைப்பு கொடுத்தவுடன் அவசர சேவை ஆம்புலன்ஸ் தான்   வருகின்றது என உரையாற்றியுள்ளார் .

          கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் எனக்கு ஒட்டு போடுங்கள் என்கிறார் ரணில் விக்கிரமசிங்கே .

            Posted in இலங்கை செய்திகள்

            யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

            யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

            தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்

            யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ் நாகவிரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

            ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக வடக்கிற்கு நேற்று விஐயம் செய்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர் யாழில் தங்கியிருந்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

            இன்று காலையில் யாழ் நகரிலுள்ள நாகவ்விகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் போது நாகவிகாரையின் விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

            Posted in இலங்கை செய்திகள்

            வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!

            வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!

            வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு இடம்பெற்று வருகின்றது.
            மாநாடு இன்று (03) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதற்காக அந்த பகுதியில் பாதுகாப்பை பொலிசார் பலப்படுத்தியிருந்தனர்.
            ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            தெற்காசிய விளையாட்டு போட்டியில் மோதவுள்ளார் யாழ் வீராங்கனை…!

            13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார்.

            நடந்து முடிந்த பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியின் பின்னர், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 7 பேர் கொண்ட பெண்கள், ஆண்கள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

            Posted in இலங்கை செய்திகள்

            பேஸ்புக் நண்பர்களாகி குடிவெறியில் ஆடிய 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது

            தெஹிவளை கடல் கரை பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் முக நூல் வாயிலாக இணைந்த நூறு பேர் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் 17 பெண்கள் உள்ளிட்ட நூறு ஆண்கள் போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகினார் என்ற குற்றம் சுமத்த பட்டு கைது செய்ய பட்டுள்ளனர் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            தேர்தலில் யாரை ஆதரிப்பது – வவுனியாவில் கூடும் தமிழரசு கட்சி _ (நாடகக்குழு )

            இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று வவுனியாவில் தமிழரசு காட்சி செயல் குழு கூடவுள்ளது ,இதிலேயே இந்த தீர்மான முடிவுகள் அறிவிக்க படும் என தெரியவருகிறது