Author: நிருபர் காவலன்
சுரங்கத்தில் வீழ்ந்து மூவர் பலி
சுரங்கத்தில் வீழ்ந்து மூவர் பலி
இலங்கை அவிசாவளை பகுதியில் சுரங்கம் ஒன்றுக்குள் வீழ்ந்த கோழியை மீட்க முனைந்த பொழுது
அதற்குள் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இவர்கள் பலியாகியுள்ளனர்
பலியானவர்கள் சடலம் அவிசாவளை மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
இலங்கை கொத்மலை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தாயாரை அடுத்து மனைவியை
கணவன் சமையலறை கத்தியை எடுத்து வெட்டி கொன்றுள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,கணவன் தற்பொழு காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
விபச்சார நிலையம் முற்றுகை -பெண்கள் கைது
விபச்சார நிலையம் முற்றுகை -பெண்கள் கைது
இலங்கை திருமலை உப்பு வெளிப்பகுதியில் மிக இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று காவல்துறையின் முற்றுகைக்கு உள்ளாந்தது .
இந்த சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்களே இந்த விபச்சார நிலையத்தை நடத்தி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது
ஆட்டோ சாரதியை கொன்று பணத்தை கொள்ளையடித்த கும்பல்
ஆட்டோ சாரதியை கொன்று பணத்தை கொள்ளையடித்த கும்பல்
ஏக்கல பகுதியில் இருந்து குறித்த முச்சக்கரவண்டியில் வாடகைக்கு சென்றுள்ள சந்தேகநபர்கள் பாழடைந்த
இடமொன்றில் வைத்து சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி ஜா-எல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக
சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாரில் நபர் அடித்து கொலை
பாரில் நபர் அடித்து கொலை
இலங்கை கல்கிசை பகுதியில் உள்ள கிளப் ஒன்றில்
இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் நபர் ஒருவர்
அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் .
சடலம் மீட்கப் பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
தற்போது கொலையாளி கைது செய்யப்பட்டு தீவிர
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
50 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி – நால்வர் காயம்
50 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி – நால்வர் காயம்
கடந்த இரவு கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சரக்குகளை ஏற்றிய வண்னம் பயணித்த லொறி ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்தது ஐம்பதடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
இதில் அவ்வேளை பயணித்த நால்வர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
லொறியை மீட்கும் பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது
இலங்கையில் இப்பொழுது இவ்விதமான விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவது குறிப்பிட தக்கது
மலையக சிங்கங்களின் மீண்டும் ஒரு உலக சாதனை
மலையக சிங்கங்களின் மீண்டும்
ஒரு உலக சாதனை
கடந்த மாதம் 28.01.2020 முதல் 31.01.2020 நேபாளம் தலைநகர் காட்மன்டுவில் நடைபெற்ற ஹட்டியா பட்டியா போட்டிகள் நடைபெற்றன. இந்தியா இலங்கை உட்பட 06 ஆசிய
நாடுகள் கலந்துக் கொண்ட இந்த போட்டியில் இலங்கை மலையகத்தை சேர்ந்த ஆடவர் மற்றறும் மகளீர் அணி வெள்ளி பதக்கம் வென்று நாடு திரும்பி உள்ளது. 02.02.2020
அணி பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்ட இந்த போட்டியில். ஆடவர் மற்றும் மகளீர் பிரிவுகளுக்கு இடையே நடாத்தபட்ட போட்டிகளில் இலங்கை மலையக அணி
வீரர்கள் வெற்றி பெற்றமை ஒரு சிறப்பு அம்சமாகும். ஆடவர் அணியின் இருதி போட்டி இந்தியா அணியுடன் நடைபெற்று இலங்கை அணி வெள்ளி பதக்கத்தை வென்றது. மகளீர்
அணியும் இருதி போட்டிக்கு முன்னேரி வெள்ளி பதக்கங்களை பெற்றுக் கொண்டது
அட்டியா பட்டியா என்பது கிளிதட்டு போட்டி போன்ற ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டு போட்டியில் மலையகத்தை பிரதிபளிக்கும் வீர வீராங்கனைகள்

கலந்துக் கொண்டு வெற்றி பெற்று இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்.
கறுப்பு நாள் …
கறுப்பு நாள் …
நிலம் பிடித்து குழியெடுத்து
நீண்டு போரு செய்தாய் …
நிலம் பிடித்த படம் பிடித்து
நிகழ்ச்சிகளை செய்தாய் …
அடம் பிடித்து அபகரித்து
ஆக்கினைகள் தந்தாய் …
அகதியாக்கி அவர் விரட்டி
ஆடி நன்று மகிழ்ந்தாய் ….
படை திரட்டி போரெடுத்து
பாதகங்கள் செய்தாய் ….
பாவியராம் தமிழ் அழித்து
பாடி தானே நின்றாய் …..
உயிர் குடித்த வெறியடங்கா
உயிர் நின்ற உடல் தின்றாய் ..
உலகம் எல்லாம் உனை இழிக்க
உன் வதைகள் பகர்ந்தாய் ….
புத்தன் அவன் தர்மத்தை
புத்தியில காணோம் ….
யுத்த முனை புத்தகத்தை
யுத்தியிலே கண்டோம் ….
இலங்கையது ஒரு நாடு
என்று தானே சொன்னோம் ….
இல்லை என்றால் இரு நாடு
என்று தானே பகிர்ந்தோம் …
கொன்று விட்டு வாசல் வந்து
கொடு வாக்கு என்றால் …
தந்திடவா போகிறார்கள்
தமிழர் தானே சொல்லு …?
ஒரு மதமே உன் மதமே
உலகில் முதல் என்றால் …
உலக மகா சாந்தியினை
உலகில் எங்கே காண்பாய் …?
இன்று உந்தன் இனம் மகிழும்
இலங்கை ஒரு நாடாம் …?
இனிமையான சுதந்திரத்து
இன்ப பொங்கல் நாளாம் …..
அடிமையாகி வாழும் தமிழ்
அவர் கறுப்பு நாளாம் ….
அகில தமிழ் உனை வெறுக்கும்
அகம் இழந்த நாளாம் ……
இனம் அழித்த உன்னுடனே
இன்று தமிழ் வாழுமோ ..?
இனி வரும் காலமதில்
இணைந்து கூடி ஆளுமா …?
வன்னி மைந்தன்
ஆக்கம் -02-02-2020

யப்பான் போர் கப்பல் ஈரான் கடல் பகுதி நோக்கி நகர்வு வீடீயோ
யப்பான் போர் கப்பல் ஈரான் கடல் பகுதி நோக்கி நகர்வு வீடீயோ
ஈரான் கடல் பகுதி நோக்கி விரைந்து செல்லும் ஜப்பானின் போர் கப்பல் .
அமெரிக்கா ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் ,மற்றும் போர் பதட்டத்தை அடுத்து இந்த விசேட போர்க் கப்பல் அனுப்பி வைக்க பட்டுள்ளது
குறித்த கடல் பகுதியை ஈரான் எவ்வேளையும் தடுக்கலாம் ,எனவும் ,அவ்வழி கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம்
என்ற நிலையில் ஜப்பான் முன் எச்சரிக்கை நிலையில் இந்த கப்பலை அனுப்பி வைத்துள்ளது
விரிவான செய்திகள் காணொளியில்

லண்டன் Streatham பகுதியில் கத்தி குத்து -பலர் காயம் –ஒருவர் சுட்டுக்கொலை video
லண்டன் Streatham பகுதியில் கத்தி குத்து -பலர் காயம் –ஒருவர் சுட்டுக்கொலை
இன்று மதியம் இரண்டு மணியளவில் லண்டன் Streatham ,Streatham High Road பகுதியில் தீவிரவாதி ஒருவர் மக்களை
கத்தியால் குத்தியுள்ளார் இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் .
மூன்று துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும் மக்கள் பலர் அவசர சிகிச்சை பிரிவு அம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
அதனை அடுத்து அங்கு விரைந்த ஆயுத போலீசார் குறித்த நபரை சுட்டு கொன்றுள்ளனர் .
தற்போது போலீசார் குவிக்க பட்டுள்ளனர் ,இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை
உலங்கு வானூர்திகள் மூலம் தீவிர கண்காணிப்பு இடம்பெற்ற வண்ணம் உளள்து
மேலதிக செய்திகள் விரைவில் இதே பகுதியில்


சிரியாவுக்குள் புகுந்த துருக்கி இராணுவம் -வெடித்தது கடும் மோதல் – video
சிரியாவுக்குள் புகுந்த துருக்கி இராணுவம் -வெடித்தது கடும் மோதல் – video
தற்போது துருக்கி நாட்டின் இராணுவம் கனரக ஆயுதங்களுடன் சிரியா எல்லைக்குள் புகுந்துள்ளது
குருதிஸ் கட்டுப் பாட்டு பகுதிகளை ஆக்கிரமித்து அதனை அபகரிக்கும் நோக்குடன் தனது படையெடுப்பை அது நடத்தியுள்ளது
பார்ப்பவர்களை மிரள வைக்கும் கனரக ஆயுதங்களுடன் நுழையும் துருக்கிய இராணுவத்தின் காட்சிகள்
காணொளியில் உள்ளதுடன் மேலதிக திகில் செய்திகள் அதிர்ச்சி தகவல்கள் அதில் உள்ளன
காணொளியை பார்க்க

இரவு தொடங்கி அதிகாலை வரை ஓடப்போகும் இ.போ.சபை பஸ்: வவுனியாவில் ஆரம்பம்
இரவு தொடங்கி அதிகாலை வரை ஓடப்போகும் இ.போ.சபை பஸ்: வவுனியாவில் ஆரம்பம்
வவுனியாவிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு- பொத்துவில் மட்டும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் முதன் முதலாக சேவையில் ஈடுபட்டுள்ளன.
இ.போ.சபை வவுனியா சாலையின் ஏற்பாட்டில் பயணிகளின் போக்குவரத்து வசதி கருத்தி இச் சேவை நேற்று (01.02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாலை 7.30 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருகோணமலையை அடைந்து இரவு 10.00
மணிக்கு திருகோணமலையிலிருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை 06.00 மணிக்கு பொத்துவில் பஸ் நிலையத்தை சென்றடையும்.
அதேபோல் இரவு 10.00 மணிக்கு பொத்துவிலிருந்து புறப்படும் இ.போ.சபை பேரூந்து மறுநாள் காலை 07.00 மணிக்கு வவுனியா வந்தடையும்.

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்க கொடிகள் விற்பனை
72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்க கொடிகள் விற்பனை
72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்கக் கொடிகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை
காண முடிகிறது. எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு இனம்இ மதம் இமொழிஇ
வேறு பாடுகளை விசேட மத வழிபாடுகள் இப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், தேசியக் கொடியை ஏற்றுமாறு
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



தேசிய கீதம் தமிழ் மொழி பாடுவது தொடர்பில் கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை எடுங்கள் கோட்டாவுக்கு மனோ பகிரங்க கோரிக்கை
தேசிய கீதம் தமிழ் மொழி பாடுவது தொடர்பில் கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை எடுங்கள்
கோட்டாவுக்கு மனோ பகிரங்க கோரிக்கை
முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி கோடாபய ராஜபக்சவிடம், இந்த கடைசி தருணத்திலாவது நல்ல
முடிவை நீங்கள் எடுக்க வேண்டும் என கோர விரும்புகிறேன். சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியில் இலங்கை தேசிய கீதம் பாடப்படும் கடந்த
நான்கு வருட நடைமுறையை உங்கள் நிர்வாகம், மாற்றி விடக்கூடாது என நான் விரும்புகிறேன். தமிழ் மொழியில் பாடப்படும் தேசிய கீதம் என்பது இன்னொரு வழமையான
பாடல் அல்ல. அது தமிழ் பேசும் இலங்கையர்களின் “இலங்கையர் அடையாளம்”. இதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவை, என தமிழ் முற்போக்கு
கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பீயுமான மனோ கணேசன் தனது டுவீடர் தளத்தின் மூலம் ஜனாதிபதி கோடாபய ராஜபக்சவுக்கு பகிரங்க கோரிக்கை
விடுத்துள்ளார். இந்த டுவீடர் செய்தி, ஜனாதிபதி கோடாபய ராஜபக்சவின் டுவீடர் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து சக்கர நாற்காலியின் ஜனாதிபதிக்கு செல்லும் தகவல் video
வடக்கில் இருந்து சக்கர நாற்காலியின் ஜனாதிபதிக்கு செல்லும் தகவல்
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 3
மாற்றுத்திறனாளிகள் இணைந்து ஆரம்பித்த சக்கரநாற்காலிப் பயணம் வவுனியாவைக் கடந்pது தெற்கு நோக்கி இன்று சென்றது.
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலியுடன் இணைந்து ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமசந்திர
ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும்,
மும்மதங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணம் பேருந்து
நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலி பயணம் இன்று (02.02) வவுனியா புதிய பேருந்து நிலையத்தினை வந்தடைந்தது.
குறித்த நடைபவனியானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (01) ஆரம்பமாகி இன்று (02) வவுனியாவை
வந்தடைந்து வவுனியா ஊடாக தென்பகுதி நோக்கிச் சென்று நான்காம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர நிகழ்வினை சென்றடையவுள்ளது.
வவுனியாவை வந்தடைந்த அவர்களுக்கு புதிய பேருந்து நிலைய முன்றலில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், வவுனியா மாவட்ட சமூக சேவை
உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு கௌரவம் வழங்கினார்கள்.
அத்துடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர் ரூபா 10,000 மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பினர் ரூபா 10,000
அவர்களின் செலவுக்காக அன்பளிப்பாக வழங்கி வைத்திருந்தனர்.
குறித்த பயணத்தில் ஈடுபட்டுள்ளோர், இன ரீதியான நல்லிணக்கத்தை இந்த நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஏனையோர்
அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் அனுபவிக்க வழிசமைக்க வேண்டும், நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5000
ரூபாவை வழங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சமய கலாச்சார விளையாட்டு கல்வி பொருளாதார விடயங்களில்
சமவாய்ப்பு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும், அனைவருக்கும் அணுகு வசதிகளை பொது நிறுவனங்கள், அரங்கு மேடைகள், பொது மலசலகூடங்கள்,
பொதுப்போக்குவரத்துகள், பொதுக்கட்டிடங்கள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள், சேவை மையங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள் என சகல துறைகளிலும்
ஏற்படுத்தப்பட வேண்டும், வங்கிகள் வைத்தியசாலைகள் போன்ற சேவை பெறும் மையங்களில் எமக்கு முன்னுரிமை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அடையாள
அட்டை வழங்கப்பட வேண்டும் ஆகிய 6 கோரிக்கைகளை முன்வைத்து இப் பயணம் மேற்கொள்ளப்படுவதுடன் பயண முடிவில் ஜனாதிபதிக்கு மகஜரும் வழங்கப்படவுள்ளது.

இராணுவமும் பொலிசாரும் வவுனியா ஏ9 வீதியில் விசேட சோதனை 29 பேர் கைது
இராணுவமும் பொலிசாரும் வவுனியா ஏ9 வீதியில் விசேட சோதனை 29 பேர் கைது
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனங்களை வவுனியாவின் நான்கு இடங்களில் மறித்து இராணுவமும்
, பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 29 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான 09 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸல்லால்டி சில்வா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்
மல்வலகே ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் விசேட கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம், கனகராயன்குளம், ஓமந்தை,
ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியில் பயணித்த வாகனங்களை வழி மறித்து சோதனையிட்ட போதே, பயண பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த 60
கிலோ கேரளா கஞ்சா மற்றும் 600 மில்லிக்கிரேம் ஹெரோயின் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டு
பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் எண்பது இலட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவற்றை உடமையில் வைத்திருந்தமை மற்றும் கொண்டு சென்றமை தொடர்பில் 29 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தானர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பிரித்தானியாவில் மரணித்த திக்சிகாவிற்கு அஞ்சலி
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பிரித்தானியாவில் மரணித்த திக்சிகாவிற்கு அஞ்சலி
உடல்நலகுறைவால் சாவடைந்த தமிழர் இளையோர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான முக்கியஸ்தர் திக்சிகா
சிறிபாலகிருஸ்ணனிற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியாவில் கடந்த 1078 நாட்களாக சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவரது உருவம்
தாங்கிய பதாதைக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவுகள்,
மரணித்த திக்சியாவிற்கு எமது அஞ்சலிகள். அத்துடன் பிக்குகளினால், யாழில் ஏற்படுத்தப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் யாவும் போலியானதும் சர்வதேச
ஈடுபாட்டை தடுப்பதற்கும் ஆகும். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை முன்னர் சுமந்திரன் சர்வதேசத்திடமிருந்து பாதுகாத்தார் என்பது போலவே இதுவும். யாழில் நடக்கும்
இந்து-புத்த மத மாநாடு, இந்து மற்றும் கிறிஸ்தவர்களின் ஒற்றுமையை பிளவுபடுத்துவதாக ஒரு வதந்தி உள்ளது.
ஆனால் இருவரும் தமிழர்கள். எம்மிருவருக்கும் பூர்வீக வரலாறு திடமாகவுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு வந்த பிக்குகள், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளிக்கின்றனர்.
2009 ல் ராஜபக்ச 150,000 தமிழர்களைக் கொன்றபோது அவர்கள் எங்கே இருந்தார்கள் என தெரிவித்தனர்.




வவுனியாவில் குடும்ப பெண் மாயம் – கண்ணீரில் குடும்பம்
வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்த 47 வயதுடைய மகேஸ்வரி செந்தில்செல்வன் என்ற குடும்ப
தலைவி ஒருவர் காணமல் போயுள்ளார் .இவரை நேற்றில் இருந்து காணவில்லை என அவரது மகன் கிரிஷாந்த் நமக்கு தற்போது தெரிவித்துள்ளார் .
இந்த தாயாரை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .
இவருக்கு என்ன ஆனது எங்கு உளளார் என்பது தெரியாது குடும்பத்தினர் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர் .
இவரை யாராவது கண்டால் தங்களுக்கு அறியத்தரும்படி வேண்டப் பட்டுள்ளது .
கீழே உள்ள இலங்கை தோலை பேசி இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு தெரிவிக்கலாம் ,அல்லது பொலிஸாருக்கோ ,அன்றி எமக்கோ அறியத்தரலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .

அமெரிக்கா கப்பல்களில் லேசர் ஏவுகணைகள் வீடியோ
அமெரிக்கா கப்பல்களில் லேசர் ஏவுகணைகள் வீடியோ
உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் உச்சம்
,அமெரிக்கா போர் கப்பல்களில் லேசர் ஏவுகணைகள்
பொருத்த பட்டு பயன் பாட்டுக்கு விட பட்டுள்ளது .
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் இந்த லேசர் மற்றும்
கைபிரட் ஏவுகணைகள் ஆதிக்கம் …அதிகம் காணப்படும் என நம்ப படுகிறது
உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் புதிய பரிணாம
வளர்ச்சியாக இது பார்க்க படுகிறது
ரசியா கைபிரட் ஏவுகணைகளை கண்டு பிடித்ததன் பின்னர்
தற்பொழுது அமெரிக்கா இந்த லேசர் ஏவுகணை பயன்பாட்டை தமது கப்பல்களில்
பொருந்தியுள்ளதும் அவற்றை பயன்பாட்டிற்கு விட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
தமிழ் மக்களை இலங்கை அரசு மதிக்கவில்லை – விக்கி காட்டம்
தமிழ் மக்களை இலங்கை அரசு மதிக்கவில்லை – விக்கி காட்டம்
இலங்கையில் சிங்கள அரசுகள் தமிழ் மக்களை அந்த நாட்டின் குடிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
இலங்கை தேசிய கீதம் தமிழில் பாட மறுக்க பட்டமை ,தொடர்பில் கருத்துரைக்கும் பொழுதே அவர் இதனை தெரிவித்த்துள்ளார்
தமிழர் கலை,கலாச்சார ,மொழி,மற்றும் பண்பாடுகளை சீரழிக்கும் நகர்வில் சிங்கள அரச பயங்கரவாதம் செயல்பட்டு வருகிறது
அதனது தொடர்ச்சியே இது என்பதாக அவர் தெரிவித்துள்ளார்







