6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் கையளிப்பு…
6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் கையளிப்பு…
06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய
இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்றது.
இதற்காகச் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 250 மில்லியன் ரூபாயாகும்.
பசுமை விவசாயத்துக்காக விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படும் “காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசனத்
திட்டம்” ஆகியவற்றின் கீழ், கமநலச் சேவை நிலையங்களுக்கு இந்த விவசாய இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
அறுவடை செய்யும் இயந்திரங்கள், களை பறித்தல் இயந்திரங்கள், நாற்று நடும் இயந்திரங்கள், 45 குதிரை வலுவுடைய டிரெக்டர் வண்டிகள் உள்ளிட்ட 7 வகையான
இயந்திரங்களே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன. வடக்கு, வடமத்தி, கிழக்கு, வடமேல்,
ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு உரித்தான 11 மாவட்டங்களில் அமைந்துள்ள 47 கமநலச் சேவை நிலையங்களுக்கே இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், விவசாயத்துறை அமைச்சின் செயலாளர்
டீ.எம்.எல்.பண்டாரநாயக்க ஆகியோரும் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்களும், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார் -சிக்கிய பெண்
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார் -சிக்கிய பெண்
லண்டன் கென்ட் Horsmonden Road in Brenchley பகுதியில் காலை பத்து முப்பது
மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து
தலைகீழாக கவிழ்ந்தது ,இதன் பொழுது அந்த காரை செலுத்தி சென்ற [பெண் அதற்குள் சிக்கி கொண்டார்
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காரின் கதவுகளை வெட்டி அதற்குள் சிக்கி இருந்த பெண்ணை மீட்டனர்
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பெண்மணி Tunbridge Wells மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது
துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள உள்ள துருக்கிய இராணுவத்தின் பிராதான
இராணுவத்தலமாக விளங்கும் Zelikan தளம் மீது திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
துல்லியமான இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியிட படவில்லை
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்
பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்
பாகிஸ்தானில் அரச இராணுவ தளத்தை இலக்கு வைத்து The Baloch Liberation Army
படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் 19 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்
இதில் சிலரை உயிருடன் சிறை பிடித்து சென்றுள்ளதான தகவலும் உள்ளது
அரச இராணுவ தகவல்களை விட இழப்பு அதிகம் இருக்கலாம் என நம்ப படுகிறது ,தொடர்ந்து அரச இராணுவம் தேடுதல்களை முடுக்கிவிட்டுள்ளது
அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்
அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார்.
அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம்
செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ்.
ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற
இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். மேலும் கொரோனா நேரத்தில் பெரும்
இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
அதுபோல் சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்
எழுதினார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார்.
இவருக்கு ஆதரவாக இவரது தந்தை சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார்.
நடிகையின் மச்சங்களை எண்ணிய நடிகர்
நடிகையின் மச்சங்களை எண்ணிய நடிகர்
நடிகையின் மச்சங்களை எண்ணி விட்டீர்களா…? பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்
டி ஜே டில்லு படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
நடிகையின் மச்சங்களை எண்ணி விட்டீர்களா…? பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்
டிஜே தில்லு படத்தின் காட்சி
தெலுங்கு திரை உலகின் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் படத்தயாரிப்பாளர் சுரேஷ் கொண்டேத்தி. அவர் சந்தோஷம் என்ற வார இதழை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் நடிகரிடம் அறுவறுக்கத்தக்க வகையில் கேட்ட கேள்வியால் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ‘டிஜே டில்லு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது படத்தின் கதாநாயகன் சித்து ஜொன்னாலகடாவிடம், படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல்,
நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு உள்ளீர்களா? என்று கேட்டு அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தினார்.
இப்படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அதனை குறிப்பிட்டு பேசிய சுரேஷ், “நடிகையின் உடம்பில் 16 மச்சங்கள் உள்ளன என்று படத்தில் கண்டுபிடித்துள்ளீர்கள். அதை போல நிஜ வாழ்க்கையிலும் அவரது
மச்சங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்களா?” என்று நாயகன் சித்துவை நோக்கி கேட்டார். இந்த கேள்வியால் அதிர்ந்துபோன சித்து, எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை மதிக்கத் தெரியாத சுரேஷ் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை நேஹா ஷெட்டியும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
‘இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. சுரேஷ் பெண்களை மதிக்கும் முறை அவரது கேள்வியின் மூலம் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது’ என்று நேஹா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் தனது கேள்வியை நியாயப்படுத்திய சுரேஷ், ‘நான் எவ்வித இரட்டை அர்த்தத்திலும் அவ்வாறு கேட்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
“இது ஒரு காதல் படம், நான் ரொமான்டிக் கேள்வி கேட்டேன். எனது நோக்கம் தூய்மையானது. தயவு செய்து என்னை தவறான முறையில் பேசாதீர்கள்” என்கிறார் சுரேஷ்.
எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்
எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்
ஒருவரை திருமணம் செய்த சில நாட்களுக்குப் பிறகு நகைகள் மற்றும் பணத்துடன் அவள் தப்பிச் சென்று விடுவாள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது
எட்டு ஆண்களை ஏமாற்றிய பெண் கைது
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஊர்மிளா அஹிர்வார். 28 வயதான அவருக்கு ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரும் உண்டு. வசதியான ஆண்களை வளைத்து பிடித்து மயக்கி
திருமணம் செய்து கொள்வதும் பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுதான் இவரது வேலை.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்திய பிரதேசத்தின் தாமோ மற்றும் சாகர் ஆகிய இடங்களிலும் இவ்வாறு ஏமாற்றிய வந்துள்ளார். ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்ற நபரை 8 வதாக திருமணம் செய்து கொண்ட ஊர்மிளா, காரில் அவரது கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஏற்பாடு செய்து வைத்திருந்த பாக்சந்த் கோரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து மணமகன் படேல் தன்னிடம் கொடுத்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கல்யாண பெண் ஊர்மிளா வழக்கம் போல் தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் அவரை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். திருமண மோசடிக்கு உதவியதாக அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங்
ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓம்டி காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.எஸ்.பாகேல் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஏழு ஆண்களை ஏமாற்றியதை ஊர்மிளா ஒப்புக் கொண்டார்.
யாழில் வெடித்த போராட்டம் – முடங்கிய வீதிகள்
யாழில் வெடித்த போராட்டம் – முடங்கிய வீதிகள்
யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது மாவட்ட செயலகத்தின் இரண்டு பிரதான வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்னால் மாவட்ட செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியையும் மறித்தும் போராட்த்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலையின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் நேற்று (02) கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவுகும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட
சர்ச்சை காரணமாக அதிபரும் ஆசிரியையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அபாயா அணிந்துகொண்டு சென்றமையால் இந்த சர்ச்சை வெடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (03) காலை 8.00 மணியலவில் பாடசாலைக்கு
முன்பாக ஒன்று கூடிய பெற்றோர் சிலர், திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று அங்கு ஒன்றுகூடி பதாதைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பினர்.
“அடாவடி ஆசிரியை எமக்கு வேண்டாம்”, “தமிழ் கலாசாரத்தை மிதிக்காதே”, “அதிபரை அடித்த ஆசிரியை வேண்டாம்”, “உனது கலாசாரம் உனக்கு எனது கலாசாரம் எனக்கு” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டனர்.
குறித்த இடத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை செய்வதற்கு சிலரை வருமாறு அழைத்தார். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வினயமாக வேண்டிக் கொண்டார்.
நீதிமன்ற நடவடிக்கை இருப்பதால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை சமுகத்தோடு பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
200 கிலோ போதைப்பொருளை கடத்திய கப்பல் சிக்கியது
200 கிலோ போதைப்பொருளை கடத்திய கப்பல் சிக்கியது
ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோகிராம் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும், கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (03) வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோகிராம் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும், கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (03) வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா
அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர்
கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஈரானில் இருந்து 200 கிலோகிராம் போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை, கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது, சுமார் 200 கிலோகிராம் போதைப்
பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர். எனினும், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் தங்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கடத்தல் காரர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்
ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்
பொருளாதாரத்தை வலுவூட்டும் கிராமத்துடன் கலந்துரையாடல் வரவு செலவு திட்ட ஒரு இலட்ச வேலைத்திட்டம் இன்று (04) காலை 8.52 மணிக்கு நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டத்திற்கு அமைவாக உற்பத்தி பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்குடன்
மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேசிய வேலைத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14 ஆயிரத்து 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதற்கமைவாக ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5 தொடக்கம் 6 வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளை கேந்திரமாக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் தமது தேவையை அவர்களினாலேயே அடையாளம் காணக்கூடிய வகையிலும் அதற்கான திட்டத்தை அவர்களே தேர்ந்தெடுத்து செயற்திறன் மிக்கதாக
முழுமையாக பன்முகப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம் நிதியமைச்சர் பெசில்
ராஜபக்சவினால் வகுக்கப்பட்டு அவரது வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைக்கு அடிமையான சாரதிகள்
போதைக்கு அடிமையான சாரதிகள்
வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10
சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தந்தோரை
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஒருநாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1 ஆயிரத்து 213 பேரில் 145 பேர் போதைபொருளை பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு போதைபொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
சிரேஸ்ட பொலிஸ் ஊடகபேச்சாளரும், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண் கொலை – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது
கர்ப்பிணி பெண் கொலை – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை நடந்த அன்றைய தினமே சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 17 மாத காலம் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்
பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்
பிரிட்டனில் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் புதிய சட்டம் அறிமுக படுத்த படுகிறது
,இதன் பிரகாரம் வண்டிகளை ஓட்டுபவர்கள் கைபேசி பேசியவாறு செலுத்தினால்
அவர்களுக்கு இருநூறு பவுண்டுகள் தண்டம் அறவிடுவதுடன் ,ஆறு புள்ளிகள் நிரந்தரமாக பறிக்க படும் என்ற புதிய சட்டம் அறிமுகமாகிறது
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த இந்த விடயம் அமூல் படுத்த படுகிறது
வேக சாலைகளில் மேலே பொருத்த பட்டுள்ள கமராக்கள் மூலமும் இந்த அவதானிப்பு செலுத்த படவுள்ளமை குறிப்பிட தக்கது
சாரதிகள் யாக்கிரதை
அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை
அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை
சிரியா அரச இராணுவம் Al-Nusra பகுதியில் அமைக்க பட்டுள்ள துருக்கிய ஆதரவு
படைகளின் முன்னரங்க நிலைகள் மீது கடும் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
இந்த தாக்குதலினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது .தொடர்ந்து இரு
தரப்புக்கும் இடையில் பரஸ்பர மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன
கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்
கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்
நையீரியாவின் Zamfara பகுதியில் தீவிரவாதிகளினால் கடத்தி வைக்க பட்டிருந்த 32 பொது மக்களை
அரச இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தி விடுத்துள்ளனர்
இவ்வாறு மீட்க பட்டவர்களை காவல்துறையினர் அவர்தம் குடும்பத்திடம்
ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இங்கு தொடர் கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்
கடந்த நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது.
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்- பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் வர்த்தக நேரத்திற்கு பிறகு 8%-க்கும் மெல் அதிவேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து
அந்நிறுவனம் தனது பங்குகளை 1-க்கு 20 என்ற வகையில் பிரித்து தரவுள்ளது. ( ஆல்பபெட்டின் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 19 பங்குகள் கிடைக்கும்.)
இதன்மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும் ஆல்பபெட்டின் பங்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வணிக நிபுணர்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது. சாதாரண நுகர்வோர் ஆடை மற்றும் பொழுதுபோக்குப் பொருட்களை கூகுளில் தேடுகின்றனர்.
சில்லறை வணிகம், நிதி, பொழுதுபோக்கு மற்றும் பயண விளம்பரதாரர்கள் அதிக
விளம்பரத்திற்காக செலவிடுகிறார்கள். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று பலரையும் இணையதளத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
வணிகர்கள் அதிகம் டிஜிட்டல் விளம்பரங்களில் செலவிட விரும்புகின்றனர். கூகுள்
நிறுவனம் இணைய விளம்பரங்களில் இருந்தே அதிகம் வருமானம் ஈட்டுகிறது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிக்க முடியாததாக இருக்கிறது.
இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல
தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல
நம்மை சுற்றியுள்ள பலர் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதை பார்த்திருப்போம்.
பார்ப்பதற்கு வித்தியாசமாக தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் இருந்தாலும் இப்படி பேசிக்கொள்வது உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன.
நம்மை சுற்றியுள்ள பலர் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதை பார்த்திருப்போம். சில சமயங்களில் நாமே இவ்வாறு செய்திருக்கலாம். பார்ப்பதற்கு
வித்தியாசமாக இருந்தாலும் இப்படிபேசிக்கொள்வது உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. தனக்குத்தானே பேசிக்கொள்ளும் வழக்கம் பற்றிய தகவல்கள் சில
சுய பேச்சு
சுயபேச்சு மனநோய் அல்ல என்பது உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதாகும். இது ஆழ் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எண்ணங்கள் நம்பிக்கைகள், கேள்விகள் மற்றும் யோசனைகளை வெளிப்படுத்துகிறது.
சுய பேச்சு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கலாம். இதன் பெரும் பகுதி உங்கள் ஆளுமையைப்பொறுத்தது. னக்கு தானே நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவராக இருந்தால்
உங்கள் பேச்சு மிகவும் நபிக்கையூட்டுவதாக அமையலாம். அவநம்பிக்கையாளராக இருந்தால் எதிரிமறையானதாக இருக்கலாம்.
எதிர்மறையான பேசிக்கொள்ளுதல் சுயபேச்சை முயற்சியின் மூலம் நேர்மறையானதாக மாற்றி கொள்ள முடியும். இது மன உளைச்சலைச் தடுக்கும். நேர்வழி காட்டும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல
ஒரு வேலையை செய்வதற்காக உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்வது தானே உங்கள் லட்சியத்தை அடைவதற்காக யோசனைகளை கூறித்கொள்வது, செய்த தவறுகளுக்காக உங்களை நீங்களே திட்டிக்கொள்வது. இனி அத்தகைய தவறுகள்
செய்யக்கூடாது என்று தட்டிக்கொடுத்து கொள்வது, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை குறித்து நினைவுபடுத்தி கொள்வது போன்றவை நேர்மறையான தனக்கு தானே பேசிக்கொள்ளும் சுயபேச்சு ஆகும்.
நன்மைகள்
சுயபேச்சு, தனக்கு தானேசெயல்திறன் மற்றும் பொது வாழ்வை மேம்படுத்தும். எடுத்துக்காட்டாக
விளையாட்டு வீரர்கள் சுய பேச்சு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும் மனநோய் என்பதை சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
சுய பேச்சால் உயிர்ச்சத்து பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வலி குறையும். இதய ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும்.
தனக்குள் பேசும் நேர்மறையான சுய பேச்சு உள்ளவர்கள் மனநல திறன்களை கொண்டிருப்பார்கள். சவால்களை தீர்க்கவும், வித்தியாசமாக சிந்திக்கவும், கஷ்டங்கள்
, சவால்கள் திறமையாக சமாளிக்கவும் உதவுவதாக வல்லுநல்கள் கூறுகிறார்கள். சுய பேச்சு மன அழுத்தம், பதற்றத்தின் தீங்கு தரும் விளைவுகளை குறைக்கும் சக்தி வாய்ந்தது.
மனநோய் சுயபேச்சு எண்ண ஓட்டங்களை சீராக்குகிறது. மனதை கட்டுப்படுத்துகிறது.
இலங்குகளை அடைய உதவுகிறது. தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் செய்யும் வேலையை சிறப்பாக செய்ய ஊக்குவிக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்ற வைக்கிறது.
உன்னால் முடியும், முயற்றி செய், வெற்றி நிச்சயம் போன்ற வாக்கியங்களை தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் நேர்மறையான சுயபேச்சு, வாழ்வில் சிறந்த இடத்தை அடைவதற்கு உதவுகிறது.
அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித்
அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித்
நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் புதிதாக ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டது, இதுதொடர்பாக அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித் தரப்பில் விளக்கம்
அஜித் – ஷாலினி
பெரும்பாலான சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவிப்புகளையும் அவர்களுடைய ரசிகர்களுடன் உரையாடல்களையும் நகிழ்த்துவர். இதன் மூலம் ரசிகர்களை எளிதில் தொடர்புகொள்ள முடிவதால் பல நடிகர் நடிகைகள்
சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் நேற்று ட்விட்டர் கணக்கு
தொடங்கப்பட்டது. மேலும் அந்த கணக்கில் ஷாலினி புதியதாக தொடங்கப்பட்ட டுவிட்டர் கணக்கு என்று பதியப்பட்டிருந்தது.
இந்த பதிவை கண்டு அவருடைய ரசிகர்களும் நடிகர் நடிகைகளும் அந்த கணக்கை பின் தொடர்ந்தனர். இந்நிலையில் அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும்
அதனை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், “ஷாலினி அஜித்க்குமார் என்ற பெயரில் போலி
ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நடிகை ஷாலினி, டுவிட்டரில் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் நடிகர் அஜித்குமார் சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டார். அவர்
மட்டுமின்றி அவரது குடும்பமே சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அனிதா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
அமைச்சர் அனிதா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




























