Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது

பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது

பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 249 தெரு ரவுடிகள் கைது செய்துள்ளனர்

லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை அடுத்து இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ள பட்டது

தொடர்ந்து தேடுதல்கள் பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in Uncategorized

    ஈரான் கடலில் மூழ்கிய கப்பல் -மாலுமிகள் தப்பினர்

    ஈரான் கடலில் மூழ்கிய கப்பல் -மாலுமிகள் தப்பினர்

    ஈரான் கடல் பகுதியில் கார்களை ஏற்றிய வண்ணம் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று அங்கு
    வீசிய புயலில் சிக்கியது

    இதன் பொழுது அந்த கப்பல் கடலில் மூழ்கிய வண்ணம் உள்ளது

    எனினும் அந்த கபபிலில் பணிபுரிந்த முப்பது மாலுமிகள் ஈரான் கடற்படையால் காப்பற்ற பட்டுள்ளனர்

      Posted in Uncategorized

      ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்

      ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்

      உக்கிரேன் கீவ் நகரை சுற்றிவளைத்து ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,


      இந்த முற்றுகை தாக்குதலில் சிக்கி பிரபல நடிகைOksana Shvets’ பலியாகியுள்ளார்

      இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        Posted in Uncategorized

        உக்கிரேன் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

        உக்கிரேன் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

        உக்கிரேன் மேற்கு Lviv பகுதி சர்வதேச விமான நிலையம் மீது ரசியா திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது

        இந்த தாக்குதலில் சிக்கி அந்த விமான தளம் பலத்த சேதமடைந்துள்ளது ,கட்டடங்கள் . உடைந்து நொறுங்கியுள்ளது

        அகோர குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் ஆமை வேகத்தில் ரசிய படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          ரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்

          ரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்

          உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்வித்துள்ளது.

          உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்- இங்கிலாந்து தகவல்
          ரஷிய ராணுவம்

          உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ள போர் 4-வது வாரத்துக்குள் சென்றுள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

          ஆனால் பெரிய நகரங்கள் எதையும் இதுவரை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. குறிப்பாக தலைநகர் கிவ்வையும், 2-வது பெரிய நகரமான கார்கிவையும் பிடிப்பதில் ரஷிய ராணுவம் திணறி வருகிறது.

          கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ள போதிலும் நகருக்குள் இன்னும் நுழையவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருகிறார்கள்.

          இந்தநிலையில் உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

          இது குறித்து இங்கிலாந்து உளவுத்துறை கூறும் போது, ‘‘ரஷிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரஷியாவின் படையெடுப்பு உக்ரைன் நகரங்களில் சமீப

          நாட்களில் ஸ்தம்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
          இந்த தகவலை உக்ரைன் ராணுவம் உறுதி செய்துள்ளது.

            Posted in Uncategorized

            ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்

            ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்

            7 வயதில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை 30 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் 101 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

            அவமானப்படுத்தியதால் ஆத்திரம்: ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற முன்னாள் மாணவர்

            பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்தவர் மரியா வெர்லிண்டன் (57). ஆசிரியையான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

            அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதில் அவரது உடலில் 101 முறை கத்தியால் குத்தி இருப்பது தெரியவந்தது.

            அவரை கொடூரமாக கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணை நூற்றுக்கணக்கான டி.என்.ஏ. மாதிரிகள் என

            பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்த போதும் பலன் கிடைக்காமல் இருந்தது.

            இந்த நிலையில் கொலை நடந்த 16 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. ஆசிரியை மரியா வெர்லிண்டனை கொன்றது முன்னாள் மாணவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

            37 வயதான கன்டர் உவென்ட்ஸ் என்பவர் தனது 7 வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது அவருக்கு ஆசிரியையாக மரியா வெர்லிண்டன் இருந்தார்.

            அப்போது கன்டர் உவென்ட்ஸ் பற்றி ஆசிரியை மரியா சில கருத்துக்களை தெரிவித்தார்.

            இது தன்னை அவமானப்படுத்தியதாக கருதிய கன்டர் உவென்டஸ் ஆத்திரம் அடைந்தார். அதை மனதில் வைத்து கொண்டே இருந்து அவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு

            தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

            இந்த கொலை வழக்கு விசாரணையின் போது கன்டர் உவென்ட்ஸ் தனது டி.என்.ஏ. மாதிரியை வழங்கி இருந்தார்
            . இதனால் தான் சிக்கி கொள்வோம் என்பதால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

              Posted in சினிமா

              மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்

              .மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்
              தனுஷ்-ஐஸ்வர்யா இருவரின் திருமண வாழ்க்கை பிரிவிற்கு பிறகு தனுஷ், ஐஸ்வர்யாவை வாழ்த்திய விதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

              ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி
              தனுஷ் – ஐஸ்வர்யா


              நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது ‘பயணி’ என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழில் ‘பயணி’, தெலுங்கில் ‘சஞ்சாரி’, மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’, இந்தியில் ‘முசாபிர்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது.

              இந்த ‘பயணி’ இசை ஆல்பத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த

              தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை

              முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

              இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து

              தெரிவித்தார். இந்நிலையில், தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு,
              ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

                Posted in சினிமா

                இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்

                இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்

                சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகை ஷெரின் இடுப்பழகை காட்டி எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

                இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்
                ஷெரின்


                செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். தெலுங்கு, கன்னடம்,

                மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

                பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் அதன்பின் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். அவ்வப்போது சமூக

                வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                  Posted in Uncategorized

                  கணவன் மனைவியை தாக்கிய யானை

                  கணவன் மனைவியை தாக்கிய யானை

                  அடம்பன் – முருங்கன், மன்னார் பகுதியில் யானை தாக்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்

                  றி நேற்று உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

                  சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சதானந்தன் சுஜாதா வயது 46 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  உயிரிழந்த பெண்ணின் வீடு அடம்பன் பகுதியில் உள்ள காட்டுன் அண்மித்தே காணப்படுகின்றது.

                  தினந்தோறும் குறித்த பெண்ணின் வீட்டுக்கருகில் யானை வருவது வழமை. இவர்கள் யானைக்கு வெடி வைத்து மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

                  கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணியளவில் இவர்களின் வளவுக்குள் யானை வந்துள்ளது.

                  வழியில் சென்று பார்த்த பொழுது வீட்டை விட மிக உயரமான யானை வந்துள்ளது. இவர்கள் டார்ச் லைட் அடித்து பார்த்தபொழுது யானை வீட்டுக்கு அருகில் நின்றுள்ளது.

                  கணவனை தும்பிக்கையால் இழுத்து தாக்கியுள்ளது. மனைவி யானைக்கு அஞ்சி அருகிலுள்ள வளவுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார். மனித வாடையை நுகர்ந்து கொண்ட யானை அடுத்த வளவுக்குள் ஒளிந்து கொண்ட மனைவியை தாக்கியுள்ளது.

                  இதனிடையே கணவன் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார்.

                  ஆவேசமடைந்த யானை வீட்டிற்குள் புகுந்து கொள்ள முற்பட்ட போதும் அதன் உயரம் காரணமாக உள்ளே செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

                  இந்நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான மனைவியை அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றிக்கொண்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில்

                  அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி மானைவி சிகிச்சை பெற்று வந்தார்.

                  நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பப்பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று
                  பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  மணமகன் கழுத்து அறுத்து கொலை

                  .மணமகன் கழுத்து அறுத்து கொலை

                  கொம்பனித்தெரு – டோசன் வீதியில் நடந்த திருமண நிகழ்வில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மணமகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  சம்பவத்தில், மணமகளின் மூத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

                  உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றிய 51 வயதான மொஹமட் ஷயாபிதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  குறித்த நபர் தனது திருமணத்தை 16ஆம் திகதி பதிவு செய்துவிட்டு, நேற்று இரவு வீட்டில் திருமண வைபவத்தை நடத்தியுள்ளார்.

                  இதன்போது, இரவு 10.00 மணியளவில் திருமண நிகழ்ச்சிக்கு ​வந்த மணமகளின் முன்னாள் கணவர், மணமகனிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

                  சம்பவத்தில் படுகாயமடைந்த மணமகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  சம்பவத்தையடுத்து சந்தேகநபர் தப்பியோடிய நிலையில், இன்று காலை கொம்பனித்தெரு பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

                  மொரட்டுவை – சொய்சாபுர பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணே மணமகளாவார். இவருடைய முதல் திருமணத்தில்
                  அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை

                    எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை

                    எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

                    இதன் அடிப்படையில் ,கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு பௌசர் வீதம் விநியோகிக்குமாறு அமைச்சர் காமினி லொக்குகே உத்தரவிட்டுள்ளார்.

                    எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

                    உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு அமைய இலங்கையிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா? என்று வினவியபோது அது தொடர்பாக பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

                    அதேநேரம் நாட்டில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கைக்கு 1 பில்லியன் கடன் வழங்கும் இந்தியா

                      இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகிய கால சலுகைக் கடனாக வழங்கவுள்ளது.

                      இதற்கான உடன்படிக்கை புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் நேற்று (17) கைச்சாத்திடப்பட்டது.

                      இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் .ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

                      இந்நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ,இந்தியய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                      உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

                      இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான
                      பொருளாதார ஒத்துழைப்புகள் தொடர்பில் இங்கு நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ள

                      Posted in இலங்கை செய்திகள்

                      தீயில் எரிந்த பேரூந்து

                      தீயில் எரிந்த பேரூந்து

                      தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

                      நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      அப்போது பேருந்தில் பயணிகள் இருந்த போதிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

                      சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                      Posted in இலங்கை செய்திகள்

                      மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்

                      மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்

                      ஹோர்டன் சமவெளி அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில்

                      நிர்வாணமாக தொங்கிய சடலமொன்று நேற்று (16) பட்டிபொல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

                      குறித்த காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

                      உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முதல் மதுபானம்

                      அருந்தியுள்ளதுடன், தான் அணிந்திருந்த சகல ஆடைகளையும் கழற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது என்றனர்.

                      மேலும் அவ்வாறு தீ வைத்து எரியூட்டப்பட்ட ஆடைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆடையொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                      10 அடி உயரமான குறித்த மரத்தில் வயர் ஒன்றைப் பயன்படுத்தி தன்னுயிரை குறித்த நபர் மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை பிரேத


                      பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        பசில் மோடி சந்திப்பு

                        பசில் மோடி சந்திப்பு

                        இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.

                        இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் பசில் இன்று சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்

                          அறுபது மருந்து வகைகளின் விலைகளில் மாற்றம்

                          60 வகை மருந்துகளின் விலைகள் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

                          இந்த விலைத் திருத்தங்கள் நேற்று (15) முதல் அமுலாகின்றன.

                          சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

                          Posted in Uncategorized

                          அமெரிக்கா ஊடக நபர்கள் இருவர் உக்கிரேனில் சுட்டு கொலை

                          அமெரிக்கா ஊடக நபர்கள் இருவர் உக்கிரேனில் சுட்டு கொலை

                          அமெரிக்காவின் புகழ் பூத்த ஊடகமாக விளங்கி வரும் பொக்ஸ் நியூஸ் ஊடக நபர்கள் இருவர் உக்கிரேன் கீவ் நகரின் புறநகர் பகுதியில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

                          இவர்களின் பெண் செய்தியாளர் மற்றும் கமரா மான் ஆகியோர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                          இதுவரை உக்கிரேனில் மூன்று அமெரிக்கா ஊடாக நபர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் வெடிகுண்டு மிரட்டல் – அடித்து மூடப்பட்ட Bexleyheath

                            லண்டனில் வெடிகுண்டு மிரட்டல் – அடித்து மூடப்பட்ட Bexleyheath

                            கடந்த தினம் காலை பத்து முப்பது மணியளவில் பிரிட்டன் ,லண்டன் நகரின்

                            Bexleyheath.Albion Road,கடை தொகுதியில் வெடிகுண்டு மிரட்ட்ல் விடுக்க பட்டது

                            இந்த மிரட்டலை அடுத்து அந்த பகுதி அடித்து மூடப்பட்டு போலீசார் குவிக்க பட்டனர்

                            ஆயுதம் தாங்கிய போலீசார் குண்டு செயல் இழக்க வைக்கும் படையினர் வரவழைக்க

                            பட்டு நடத்த பட்ட தேடுதலின் பின்னர் மீள அது திறக்க பட்டது
                            எனினும் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

                            மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              அமெரிக்கா இராணுவம்
                              Posted in Uncategorized

                              அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                              அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                              ஈராக்கின் Saladin நகர மாநிலத்தில் அமெரிக்கா இராணுவ வாகன தொடரணியை

                              இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி அமெரிக்கா வாகனங்கள் சேதமடைந்துள்ளன

                              அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து ஈரானின் ஆதரவு படைகள் தொடர் தாக்குதலை நிகழ்த்திய வண்ணம் உள்ளனர்

                              இவர்களின் கெரில்லா தாக்குதலினால் அமெரிக்கா படைகள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்

                              எனினும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட தமது இழப்புக்களை அமெரிக்கா இராணுவம் தெரிவிக்கவில்லை.

                                Posted in Uncategorized

                                அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா

                                அமெரிக்கா,கனடா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்த ரஷியா

                                உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா கனடா

                                உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரசியா நாட்டின் முக்கிய அதிகரிகளுக்கு எதிராக தடை விதித்துடன் அவர்கள் சொத்துக்களையும் முடக்கியது

                                அது போல ரசியா தரப்பும் தனது அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது

                                இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,கிளாரிகிளின்ரன்,உளவுத்துறை தலைவர் மற்றும்

                                ஒரு டஜன் அமெரிக்க உயர் அதிகாரிகளை நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்க பட்டுள்ளது

                                உங்களால் மட்டும்தான் அறிவிக்க முடியுமா எங்களினாலும் முடியும் என பதிலுக்கு

                                புட்டீனும் அறிவித்துள்ளது மூன்றாம்
                                உலக போரின் ஆரம்பம் இதுவாக பார்க்க தோன்றுகிறது