பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

கடத்தி கப்பம் கோரிய கடத்தல் குழு மடக்கி பிடிப்பு

கடத்தி கப்பம் கோரிய கடத்தல் குழு மடக்கி பிடிப்பு

இலங்கை மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் நபர் ஒருவரை வானில் கடத்தி சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரிய நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .

இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ,வான் ,மோட்டார் சைக்கிள் என்பன மீட்க பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்கடத்தல் விவகாரம் – விசாரிக்க ஓமான் பறந்த உளவுத்துறை

ஆட்கடத்தல் விவகாரம் – விசாரிக்க ஓமான் பறந்த உளவுத்துறை

இலங்கையர்கள் 90 க்கு மேற்பட்டவர்களை ஓமானுக்கு கடத்தி ,அங்கு சித்திரவதைகளிற்கு உள்ளான பெண்கள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின .


இதனை அடுத்து இலங்கையில் 200 க்கு மேற்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அடித்து மூட பட்டன .

மேலும் இந்த மனித கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் ,ஓமானுக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறையை சேர்ந்த குழு பயணித்துள்ளது .

இந்த குழு விசாரணை நடத்தி, இந்த மனித கடத்தலில் சம்பந்த பட்டவர்களை கைது செய்யும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை உணவகத்துக்குள் போதை மருந்து – சுற்றிவளைத்த பொலிஸ்

பாடசாலை உணவகத்துக்குள் போதை மருந்து – சுற்றிவளைத்த பொலிஸ்

இலங்கை கம்பாக பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உணவகத்திற்குள் இருந்து போதை மருந்துகள் மீட்க பட்டுள்ளன .


காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில், ஆயூள்வேத மருத்துவர் ஒருவர் கைது செய்யப் பட்டார் .

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .

பாடசாலைக்குள் போதை பொருள் மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது

சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது

பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர்.

உடாமுல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அந்த பிரதேச ​சபையின் உறுப்பினருக்கும் முறைப்பாட்டாளராக பெண்ணுக்கும் இடையில், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அண்மையில் உள்ள காணியொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, தூசன வார்த்தைகளால் ஏசிவிட்டு, சாரத்தை தூக்கி காண்பித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

​பெண்​ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, பிரதேச சபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார்,
அந்த நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No posts found.
மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஃபெணி ஸ்வீட்
Posted in சமையல் cook

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஃபெணி ஸ்வீட்

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஃபெணி ஸ்வீட்

ராஜஸ்தானில் புகழ் பெட்ரா பாணி பூரி போன்ற சுவீட் செய்து பார்க்கலாம் வாங்க .


இந்த பாணி சுவீட் செய்வது எப்படி ..?
செய்முறை ஒன்று

ஒரு பாத்திரத்தில்மைதா மாவு எடுத்திடுங்க .தேவையான தண்ணி எடுத்து பிசைந்து எடுங்க .கையில கொஞ்சம் எண்ணெய் தடவி நன்றாக பிசைந்து எடுங்க .

இப்போ அகலமான தட்டு எடுத்து அதில நெய் சேர்த்திடுங்க .அதன் மேல இந்த மாவு வைத்து நனறாக மேலும் தட்டி எடுங்க .

அப்புறம் சின்ன சின்ன உருண்டையாக பிரித்து எடுங்க .

அரை மணி நேரம் ஊற வைத்திடுங்க .
நெய்யில் ஊறி செமையாக சாப்டா இருக்கு .

மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஃபெணி ஸ்வீட்

இப்போ சின்ன சின்ன உருண்டையாக எடுத்து ,மாவுக்கு நடுவில் வடை போல ஓட்டை போட்டு மெல்லியதாக லேயர் போல தட்டி எடுங்க .


அப்புறம் பரோட்டோ போல வடிவில லேயருடன் தட்டி எடுங்க .
இதனை ஒரு தட்டில தோசை மாவு போல தட்டையாக தட்டி எடுங்க .அப்புறம் காத்தியால சின்ன சின்னதாக அந்த மாவு வெட்டி எடுங்க.

இப்போ மீளவும் பரோட்டோ போல தட்டி எடுங்க .

அப்புறம் அடுப்பில கடாய வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில போட்டு நன்றாக பொரித்து எடுங்க .

இப்போ இந்த பரோட்டா மேல ஊற்றி கலக்க இனிப்பு பாணி தயாரிக்கணும் .


அதற்கு ஒரு பாத்திரத்தில இரண்டு கப் அளவு சர்க்காரை எடுத்திடுங்க .அதுகூடவே தண்ணி ஊற்றி கொதிக்க வைத்திடுங்க .

கலருக்காக குங்கும பூ கலந்து கொதிக்க வைத்து இறக்கிடுங்க .


இப்போ அந்த இனிப்பு பாணியில் பொரித்து வைத்த ரொட்டிகளை தோய்த்து எடுத்திடுங்க .


இப்போ மிக அருமையான சுவீட் ரெடியாடிச்சு .
இப்போ குழந்தைகள் கூட பகிர்ந்து சுவைத்து சாப்பிடுங்க தலைவரே .

எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு
Posted in சமையல் cook

எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு

எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் இதுவும் ஒன்று .


இந்த மாலை நேர உணவை எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையாக செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

இந்த சூப்பர் டிபன் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?
எப்படி செய்வது ..? செய்முறை ஒன்று .

மிக்சி எடுத்து அதில கடலை ,ஏலக்காய் போட்டு ,பொடி பண்ணி எடுத்திடுங்க .
அப்புறம் பொடியை சட்டியில் மாத்தி ,அதில் தேங்காய் துருவல் சேர்த்து ,கூடவே நாட்டு சக்கரை சேர்த்து கலக்கிடுங்க .இப்போ உள்ளுடன் ரெடியாடிச்சு .

எண்ணெய் நெய் இல்லாமல் பசங்களுக்கு சுவையான சத்தான மாலைஉணவு

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு போட்டு அடுப்பில் வைத்து வறுத்திடுங்க .


அரிசி மாவு வாசம் வரும் வரைக்கும் வறுத்திடுங்க .
அப்புறம் அடுப்பில இருந்து இறக்கிடுங்க .

இதுகூட மூன்று வாழைப்பழம் சிறிதாகக் வெட்டி எடுத்திடுங்க .அதை மிக்சியில் போட்டு தண்ணி ஊற்றி அரைத்து எடுங்க .

அதுக்கு அப்புறம் மாவிலை இதனை ஊற்றி பிசைந்து எடுங்க .


சப்பாத்தி மாவு போன்ற பதம் வரும் வரைக்கும் பிசைந்து எடுங்க .
இப்போ மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து பிசைத்திடுங்க ,இது கலரை மாற்றி கொடுக்கும் அதுக்கு தான் .

அப்புறம் இந்த சப்பாத்தி மாவை உருண்டை உருண்டியாகி பிடித்து மோதகம் போல தட்டையாக தட்டி எடுத்து ,அதுக்குள்ளே இந்த உள்ளுடன வைத்து மூடி விடுங்க .அப்படியே எல்லாத்தையும் செய்திடுங்க .

அதுக்கு அப்புறம் அடுப்பில இட்லீ பாத்திரத்தில் போட்டு 8 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க வேலை டிபன் ரெடியாடிச்சு .

இது கலர் வடிவிலே செஞ்ச சூடான செமையான , சத்தான டிபன் .அம்புட்டு தாங்க .நீங்களும் இன்றே செய்து பாருங்க மக்களே .

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க
Posted in சமையல் cook

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் இப்படி செஞ்சு பாருங்க

வீட்டில் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பஞ்சு போல சாப்டான உடனடி அப்பம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க

இந்த ஈஸியான அப்பம் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..
எவ்வாறு செய்வது கவலை விடுங்க .

செய்முறை ஒன்றுக்குள் போகலாம் வாங்க .

அடுப்பில பாத்திரத்தை வைத்து அதில ஒரு கப் அளவுக்கு வெள்ளம் ,கூடவே ஏலக்காய் ,அரை கப் அளவுக்கு தண்ணி ஊற்றி கரைத்து விடுங்க .


வெள்ளம் கரையும் வரை காய்ச்சுங்க .
இப்ப அடுப்பில இருந்து இறக்கிடுங்க .

அதுக்கு அப்புறம் பாத்திரம் ஒன்றில் ஒன்றரை கப் அரிசி மாவு எடுத்திருங்க .இரண்டு கரண்டி கோதுமை மாவு ,சிறிது உப்பு ,தேங்காய் துருவல் ,கரைத்து வைத்த வெள்ளத்தை வடித்து இதற்குள் ஊற்றி கலக்கிடுங்க .
கட்டி இல்லாது கலக்கி எடுத்திருங்க .

பழுத்த வாழைப்பழத்தை நன்றாக கரைத்து ஊற்றி கலக்கிடுங்க .

கிட்ட தட்ட தோசை மாவு பதத்திற்கு திக்கா கரைத்திடுங்க .
செய் முறை இரண்டு

இப்பொழுது அப்பா சோடா சேர்த்து கலக்கிடுங்க .அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கி கொள்ளுங்க .


சூடானதும் இட்டலி மாதிரி கரண்டியால குண்டு குண்டா மாவை ஊற்றிடுங்க .
இரு பக்கம் பிரட்டி எடுத்திடுங்க .


நன்றாக வெந்து வந்ததும் அடுப்பில இருந்து இறக்கிடுங்க .
அவ்வளவு தாங்க சூப்பர் கார்த்திகை அப்பம் ரெடியாடிச்சு

இதுபோல நாள்தோறும் வீட்டில் செய்து அசத்துங்க மக்களே .

உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடும் குளிரில் சிக்கி இரு குழந்தைகள் மரணம்

கடும் குளிரில் சிக்கி இரு குழந்தைகள் மரணம்

இலங்கையில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக இரு குழந்தைகள் பலியாகியுள்ளன .

மூச்சு திணறல் சுவாச கோளாறு கரமானமாக இந்த சிசுக்கள் பலியாகியுள்ளன என்கிறது மருத்துவமனை தகவல் .

இந்த இரு சிறுவர்கள் மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மூச்சு திணறல் ஏற்பட்டே இந்த சிசுக்கள் பலியாகியுள்ள சம்பவம் கந்தளாய் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை
Posted in இலங்கை செய்திகள்

இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை

இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை

சமீபத்திய காலநிலை மாற்றத்தின் காரணமாக ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த பசுக்கள் , எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் தொடர்பில் ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்காலநிலை மாற்றத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடை வள பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்த கால்நடைகள் தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்..

யாழ் மாவட்டத்தில் 49 பசுக்களும் 58 ஆடுகளும் இறந்துள்ளதுடன் 17 பசுக்களும் 50 ஆடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாய வனஜீவராசிகள் மற்றும் வன வள பாகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டதில் இறந்த பசுக்களின் எண்ணிக்கை 168. மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 159. இறந்த ஆடுகளின் எண்ணிக்கை ஆறு. பாதிக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை மூன்று.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 பசுக்கள் இறந்துள்ளன. மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 159.இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 42.

இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 21 பசுக்கள் இறந்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 17. இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 85.

இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை

கிழக்கு மாகாணத்தில் இறந்த பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 478 என பதிவாகியுள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 352. இதேபோன்று இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 65.

இந்தியாவை பாதித்த சூறாவளியையடுத்து கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் ஏற்பட்ட கடுமையான குளிர் காலநிலையினால் கால் நடைகள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது,.

ஆனால் இந்த விலங்குகள் மற்றொரு தொற்றுநோய் காரணமாக இறந்ததா? அதை உறுதி செய்யும் வகையில், இறந்த அனைத்து கால்நடைகளின் மாதிரிகளையும் கால்நடை அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த கால் நடைகளின் இறைச்சியை பயன்படுத்தல், எடுத்துச்செல்லல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் அந்தந்த மாகாண கால்நடைப் பணிப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது குளிர் காலநிலை குறைந்துள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள விலங்குகள் குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது.


எவ்வாறாயினும், விவசாய அமைச்சின் செயலாளர் திரு.குணதாச
சமரசிங்க இந்த விலங்குகளின் இறைச்சியை நுகர்வு
அல்லது போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட
அனைத்து திணைக்களங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

No posts found.
பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை

பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை

பிரிட்டன் Jersey பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர் .

காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீதியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர் .

மேற்படி வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்

வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்

பாகிஸ்தான் Awaran நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியும் ,ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிறுவர்களும் உள்ளடங்கும் என உயர் காவல்துறை அதிகாரிதி கருத்துரைத்துள்ளார் .

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்கிறது இராணுவம் .

குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்க பட்டுள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளது .

ஆளும் புதிய அதிபரின் ஆட்சியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளமை ,இவருக்கு எதிராக தீவிரவாத குழுக்கள் கொதிப்பில் உறைந்துள்ளதை காண்பிக்கிறது .

தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்
Posted in உலக செய்திகள்

தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்

தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர் .

மதத்தின் பெயரால் பல இஸ்லாமிய தண்டனைகள் அமுலுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பிரம்படி ,கல்லால் அடித்து கொலை செய்தல் என்பன மிக முக்கிய சட்டங்களாக அமூல் படுத்த பட்டுள்ளது .

அவ்விதம் டசினுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் ஒன்றாக கூடும் இடத்தில வைத்து பிரம்படி நடத்த பட்டுள்ளது .

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்

தலிபான்கள் ஆட்சியில் நீதி குழிதோண்டி புதைக்க பட்டுள்ளது .நீதிமன்றங்கள் தலையாட்டும் பொம்மைகளாக மாற்றம் பெற்றுள்ளன .

இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்க பட்டுள்ளன .

பெண்கள் முழுவதுதுமாக உடலை மறைத்து செல்ல வேண்டும் .பொது இடங்களில் ஒன்று கூட கூடாது என்கின்ற ,கடும் மதவாத சட்டங்களினால் பெண்கள் அந்த நாட்டில் வாழ்வதற்கே அஞ்சி வருகின்றனர் .

தலிபான்கள் எப்பொழுது அந்த நாட்டில் இருந்து விரட்டியயடிக்க படுவார்கள் என்கின்ற மனோ நிலையில், 18 மத காலத்திற்குள் மக்கள் தள்ள பட்டுள்ளனர் .

இலங்கையில் மகிந்தவின் அடக்குமுறைக்கு எதிராக , மக்கள் வெடித்து எழுந்தது போல ,தாலிபான்களும் மக்களினால் விரட்டியடிக்க படும் ,காலம் உருவாகலாம் என்பதே நிலவரமாக உள்ளது .

பற்றி எரிந்த மியூசியம் ரசியாவுக்குள் நடக்கும் போர்
Posted in உலக செய்திகள்

பற்றி எரிந்த மியூசியம் ரசியாவுக்குள் நடக்கும் போர்

பற்றி எரிந்த மியூசியம் ரசியாவுக்குள் நடக்கும் போர்

ரசியாவின் மூன்று நாட்களுக்குள் இரண்டு தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன .ரசியா தலைநகர் மோஸ்க்கோவில் Pushkin State Museum தீயில் எரிந்து அழிந்துள்ளது .

ஐரோப்பாவின் மிக முக்கிய சித்திர கண்காட்சி மையமாக இது விளங்கி வருகிறது .

அவ்வாறான அளப்பெரிய கண்காட்சியகம் ,தீயில் எரிந்துள்ளது மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா உளவுத்துறையின் உளவு விளையாட்டில் , இவையும் ஒன்றாக பார்க்க படுகிறது .

ரசியவனுக்குள் நடக்கும் இந்த பழிவாங்கும் போர் படலத்தினால் ,ரசியா ஜனாதிபதி புட்டீன் கடும் குழப்பமடைந்துள்ளார் .

இவரது கோபம் மேலும் உருமாற்றம் பெற்றால், அவை அணுகுண்டு தாக்குதலுக்கு ரசியாவை அழைத்து செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்

உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்

உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி உக்கிரேன் இராணுவத்தை பாதுகாத்து வருகின்றன .

இந்த போரில் ரசியாவின் டாங்கி படைகள் தாக்குதல் அதிக அளவாக காணப்பட்டது .

இதனை அடுத்து தற்போது ரசியா இராணுவம் பயன் படுத்திய சோவியத் தயாரிப்பான M-55S Tanks உக்கிரேனுக்கு வழங்க பட்டுள்ளது .

உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்

இந்த டாங்கிகள் மூலம் ஒரு பட்டாலியன் படையினரை இயக்க முடியும் என்கிறது இராணுவ தகவல் .

இதன் மூலம் ரசியா இராணுவம் பலத்த இழப்புகளை எதிர் வரும் நாட்களில் சந்திக்க நேரிடு என்கிறது அந்த உளவு தகவல்கள் .

குளிர் காலம் ஆரம்பித்துள்ள இந்த வேளையில் ,இரண்டாம் உலக போரில் பலத்த வெற்றிகளை சூடிய ரசியா இராணுவத்தின் முன்பாக, உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியுமா என்பதை .பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .

லண்டன் வீதியில் ரவுடிகள் வாள்களுடன் வெட்டு தாக்குதல்
Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் வீதியில் ரவுடிகள் வாள்களுடன் வெட்டு தாக்குதல்

லண்டன் வீதியில் ரவுடிகள் வாள்களுடன் வெட்டு தாக்குதல்

லண்டன் வீதியில் ரவிடுகள் பாரிய வாள்களுடன் கார்களை வெட்டியுள்ளனர் .

மேலும் அந்த காரில் பயணித்தவர்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது .

வாலிப குழுவே இந்த வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடத்த பட்ட ,இந்த வாள்வெட்டு தாக்குதல் காவல்துறையை அதிர வைத்துள்ளது .

இந்த வாள்வெட்டு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

Error: View 9293b2au4w may not exist
ரஷியாவில் எரிந்த கடை தொகுதி ஒருவர் மரணம்
Posted in உலக செய்திகள்

ரஷியாவில் எரிந்த கடை தொகுதி ஒருவர் மரணம்

ரஷியாவில் எரிந்த கடை தொகுதி ஒருவர் மரணம்

ரஷியாவில் மோஸ்கோ Mega Khimki shopping centre in Khimki பகுதியில் உள்ள கடை தொகுதி முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .

இந்த கடைகள் தீயில் எரிந்தமைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .

இந்த தீ சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் .மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .

உக்கிரேன் மீதான போரின் பின்னர் ரசியா தலைநகரில் இடம்பெற்ற இரண்டாவது தீ அனர்த்த சம்பவம் இது என்பது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட கடன் தொடர்பான நாடுகளின் கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த சீன வெளிவிவகார அமைச்சு சர்வதேச நாணய

நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சீனா வருமாறு அழைத்திருந்தது. இதையடுத்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா அங்கு சென்றிருந்தார்.

சீனப் பிரதமர் லி வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை அன்ஹுய் மாகாணத்தின்

ஹுவாங்ஷான் நகரில் சந்தித்து மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதிமொழி அளித்தார்.

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவாவா குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார நிர்வாகத்தில் சீனா ஒரு பங்கேற்பாளராகவும், ஆதரவாளராகவும், பங்களிப்பாளராகவும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட

பிரதமர் லீ கெகியாங், சீனா பல ஆண்டுகளாக IMF உடன் ஒரு நல்ல கூட்டுறவு உறவைப் பேணி வருகிறது என்றார். கடன், காலநிலை மாற்றம் மற்றும் பிற

உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து தரப்பினருடனும் மேக்ரோ-
கொள்கை ஒருங்கிணைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்

தமிழர் விளையாட்டு விழா
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022


ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023”

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்ற மைதானத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.

இடம்: East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7).
காலம்: January 8th Sunday 2023, From 8.00 AM onwards.

இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு, கயிறிழுத்தல் உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.

இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும், தேசிய வெளியீடுகளும் விற்பனைக்கு உள்ளன.

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022


அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டி-களிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலதிக விபரங்களிற்கும், பதிவுகளுக்கும் 0423 577 071 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.
நன்றி

தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

“Mandous” புயல் நேற்று (09) காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்து தமிழக வட கடலோர பகுதியை நோக்கி வந்தது. இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது.

மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 70

முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது.

மாண்டஸ் புயலின் மையப் பகுதி இன்னும் கடலில் உள்ளதால் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் நடக்கும் என்றும் புயலின் மையப்பகுதி கடலில் உள்ளது என்றும் சென்னை வானிலை நிலைய பணிப்பாளர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலைஇ கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி,

திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய தென்மண்டல வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை காரணமாக 15 மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் நாகை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்,
சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா உதவும் இந்தியா அரசு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பிரஜைகளுக்கு மீண்டும் இந்திய E-visas

இலங்கை பிரஜைகளுக்கு மீண்டும் இந்திய E-visas

இலங்கை பிரஜைகளுக்கான இ-விசாக்களைE-visas வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.

வசதியான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம், ஓய்வு, வணிகம், மாநாடு மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தர விரும்பும் இலங்கையர்களுக்காக இந்த இணைய தள இ-விசாக்களை நடைமுறையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

indianvisaonline.gov.in/evisa/tvoa.htm என்ற இணைய தள முகவரி மூலம் இதற்காக விண்ணப்பிக்க முடியும்