உக்கிரைனில் 12 கொட்டல்கள் அழிப்பு
உக்கிரைனில் 12 கொட்டல்கள் அழிப்பு
உக்ரைன் மீது ரசியா இராணுவம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போரில் ,
இதுவரை982 அறைகளை கொண்ட 12 கொட்டல்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளன .
இந்த கொட்டல் ஒவ்வொன்றும் பல மில்லியன் செலவில் ஆடம்பாரமாக அமைக்க பட்டு இருந்தது .
அவ்வாறான அழகிய ஆடம்பர கொட்டல்களே,
இலக்கு வைத்து முற்றாக அழிக்க பட்டுள்ளது .
உக்கிரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரில் ,
உக்கிரைன் உள் கட்டமைப்பு முற்று முழுதாக ,
செயல் முடக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
டக்ளஸ் கொலைக்கு உதவி புரிந்த பெண்ணுக்கு மரண தண்டனை
டக்ளஸ் கொலைக்கு உதவி புரிந்த பெண்ணுக்கு மரண தண்டனை
இலங்கையில் சிங்கள ஒட்டு குழு தலைவராக விளங்கி வரும் டக்கிளஸ் தேவானந்தா மீது ,
மர்ம நபர்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில் சிக்கி காவல்துறையில் உள்ளிட்ட நால்வர் பலியாகினர் .
ஆனால அந்த தாக்குதலில் டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார் .
அந்த கொலை குற்ற சட்டு தொடர்பிலான விசாரணைகளில் ,
பெண் ஒருவர் உடைந்த புரிந்தார் என தெரிவது,
அவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது .
இலங்கையர் தமிழகத்தில் சாவு
இலங்கையர் தமிழகத்தில் சாவு
இலங்கையில் இருந்து தமிழக சுற்றுலா சென்ற தமிழர் ஒருவர் சாவடைந்துள்ளார் .
தனது உறவினர் வீட்டுக்கு பயணித்த 45 வயது நபர் அங்கு மயங்கி வீழ்ந்து சாவடைந்துள்ளார் .
இவரது இந்த மரணத்ற்குரிய காரணம் தெரியவரவில்லை .
இவரது சடலத்தை இலங்கை எடுத்து செல்லும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது.
எட்டியாந்தோட்டையில் சடலமொன்று மீட்பு
எட்டியாந்தோட்டையில் சடலமொன்று மீட்பு
எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஸ் சந்தி பகுதியிலுள்ள வீஓயாவுக்கு அருகில் அழுகிய நிலையிலிருந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (23 மாலை குறித்த பகுதியில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், சடலமொன்று கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன்,
சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
450 000 பேருக்கு வேலையில்லை
450 000 பேருக்கு வேலையில்லை
நாட்டில் இதுவரை 450,000 வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில்
திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரசியா தயாரித்துள்ள புதிய டிரோன்
ரசியா தயாரித்துள்ள புதிய டிரோன்
ரசியா நாட்டில் ஆயுத விற்பனை நிறுவனம் ஒன்று,
தற்போது புதிய டிரோன்களை தயாரித்துள்ளது .
இந்த டிரோன்கள் தாக்குதல் மாற்று உளவு பார்த்தலில் மிக சிறப்பானா இடத்தை,
தக்கவைத்துள்ளது எனவும் ,இதனால இவை விரைவாக உலக சந்தைகளில் விற்பனை செய்ய படும் ,
என எதிர் பார்க்க படுகிறது ..
ஈரானின் தற்கொலை தாக்குதல் கரும்புலி விமானங்களுக்கு ,
ஒத்தவையாக இவை காண படுகின்றன எனப்படுகிறது .
மேற்படி விமானங்கள் உக்கிரைன் போரில் ,
ரசியா ஆதிக்கம் செலுத்திட ,
முக்கிய பங்கினை வகிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், 3 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், மேலும் 6 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு
ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு
ரஷ்ய தூதர் அன்டோனோவ் மற்றும் ,
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க இராஜதந்திர பணியின் புதிய தலைவரான,
லின் ட்ரேசி ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ,
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய இல்லத்தில் நடை பெற்றுள்ளது .
எனினும் இந்த சந்திப்பில் பேசப்பட்ட ,
எந்த விவரங்களையும் வெளியிடப்படவில்லை .
போர்க் களத்தை அமைதி படுத்த,
இந்த பேச்சுக்கள் உதவலாம் என எதிர் பார்க்க படுகிறது .
நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு
நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு
சுவிடன் தலைநகரில் முஸ்லீம்களின் புனித நூலான குரான் எரிக்க பட்டத்தை அடுத்து ,
நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என,
துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .
இவரது இந்த அறிவிப்பின் பின்னால் ,மேலும் சுவீடன் துருக்கிக்கு எதிரான ,
தமது நகர்வுகளை முடுக்கி விட்டுள்ளது .
இது நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
உக்கிரைன் இராணுவத்தின் ஜெட் விமானங்கள்,
மற்றும் பீரங்கி படைகள் மீது ரசியா ஆயுத படைகள் கடுமையாக தாக்கின .
இந்த தாக்குதல்களில் சிக்கி ,
உக்ரைனின் 128 வது மலைத் தாக்குதல் படையணி ,மற்றும்
74 உக்ரேனிய பீரங்கி பிரிவுகளும் பலத்த இழப்புகளை சந்தித்தன .
இந்த படையணிகள் ரசியா இராணுவத்தினர் மீது ,
கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
அவ்வாறான முக்கிய படைப்பிரிவுகளை தெரிவு செய்து,
தாக்கியதன் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் போரிடும் திறன் ,
மட்டுப்படுத்த பட்டுள்ளதாக ரசியா அறிவித்துள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன .
தவறுகளை திருத்தி வேகம் பிடிக்கும் ரசியா இராணுவத்தின் தாக்குதல்களில்,
உக்கிரைன் இராணுவம் பேரில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .
இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா
இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா
கடன் சுமையிலுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்த சில நாட்களுக்குள், சீனாவும் நிதி உத்தரவாதம் அளிக்கும் என்று அறியமுடிகிறது.
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட கடன் தொகையை இலங்கை பெறுவதற்குத்
தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாகவும் தெரிவித்து சீனா இலங்கைக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு கடந்த 16ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா
இலங்கை சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடனை குறுகிய காலத்தில் முடக்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளதாகவும், இலங்கை கடனாளர்கள் ஒன்றிணைந்து நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை அமுல்படுத்த
வேண்டுமென, சீனா எதிர்பார்ப்பதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பரில், உள்ளூர் அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதிய குழுவும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிப்பதற்கு ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியது.
அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்கள், இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.
கடன் மறுசீரமைப்பு செயல்முறையை இறுதி செய்ய அடுத்த வாரம் பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.
ஜப்பானுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த அதேவேளை, நாணய நிதியத்துடனான
இலங்கையின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கும் தயாராக இருப்பதாக பாரிஸ் கிளப் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது.
முல்லை விபத்தில் வாலிபன் மரணம்
முல்லை விபத்தில் வாலிபன் மரணம்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளார்கள்.
இரணைப்பாலை வீதியில் இரு திசைகளில் இருந்தும் பயணித்த உந்துருளிகள் இரண்டு விபத்தினை சந்திந்துள்ளன.
உந்துருளியில் பயணித்த 23 அகவையுடைய வள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த டிலுக்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளார்கள்.
முல்லை விபத்தில் வாலிபன் மரணம்
காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக 23 அகவையுடைய சிவநகர் ஒட்டுசுட்டானை சேர்ந்த இளைஞன், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் மரண
விசாணைகளின் பின்னர் உயிரிழந்தவரின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரசியாவுக்கு ஆயுதங்கள் தயாரித்தது வழங்கவும் பெலரூஸ்
ரசியாவுக்கு ஆயுதங்கள் தயாரித்தது வழங்கவும் பெலரூஸ்
ரசியா இராணுவத்தினருக்கு ஆயுதங்கள் தயாரித்து ,பெலரூஸ் நிறுவனம் வழங்குகிறது .
சமீப நாட்களில் குறித்த ஆயுத தொழிற்ச்சாலை நிறுவனம் அருகே,
பாரிய கனரக பாரம் சுமத்திகளில் கான்கிரீட் கற்களை போன்றவை ,
எடுத்து செல்ல படுகின்றன .
இவை டாங்கிகள் தயாரிக்க பயன் படுத்த பட உபோயோகிக்க படும் .
மூல பொருட்கள் என தெரிவிக்க படுகிறது .
மேற்குல உளவுத்துறை ஊடகம் இந்த காட்சிகளை படம் பிடித்து
வெளியிட்டுள்ள நிலையில் ,பெலரூஸ் உள்ளே குறித்த நிறுவனம்
தீயில் எரிந்து வெடிக்கும் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர்
பார்க்க படுகிறது .
உக்கிரைனில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜோன்சன்
உக்கிரைனில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜோன்சன்
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்கிரைன் சென்று ஜெலன்சியை சந்தித்தார் .
இந்த சந்திப்பின் பொழுது நேட்டோ நாட்டில் உக்கிரைன் ,
அங்கம் பெற்றால் மட்டுமே அதனால் தப்பித்து கொள்ளும் என அவர் வலியுறுத்தினார் .
மேலும் தமக்கு நீண்ட தூர ஏவுகணைகள் ,ஆயுதங்கள் ,உடனடியாக தருவிக்கும் படி வேண்டுதல் விடுத்தார் .
இதனை வழங்கிட பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது .
மேற்குலக மேற்குலக வழங்கும் ஆயுத வளங்கள் ஊடாக ,
ரசியா பாரிய வெற்றிகளை இதுவரை பெறமுடியாது ,
சிக்கி தவித்து வருகிறது குறிப்பிட தக்கது .
தடம் புரண்ட ரயில்
காலிப்பகுதியில் சமுத்திரா ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது .இந்த ரயில் தடம் புரண்டதினால் தற்போது ரயில்வே போக்குவரத்து தடை பட்டுள்ளது .
இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ளன .மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை
பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகவும் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை
இராஜகிரிய தேர்தல் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்துடன் தொடர்புகொள்ள 011 2860056, 011 2860059, 011 2860069 தொலைபேசி இலக்கங்கள் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும்.
அல்லது, பெக்ஸ் இலக்கங்கள் – 011 2860057, 011 2860062, வைபர்/ வாட்ஸ்அப் – 0719160000,இமெயில்– electionedr@gmail.com மற்றும் பேஸ்புக் – Election Commission of
Sri Lanka, Tell Commission – Election Commission of Sri Lanka முதலானவற்றையும் பயன்படுத்த முடியும்.
இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 12 பேர் காயம்
இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 12 பேர் காயம்
அமெரிக்கா லூசியானாவில் உள்ள பேடன் ரூஜ் இரவு விடுதியில் ,
நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியானவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இது தற்செயலான வன்முறைச் செயல் அல்ல, திட்டமிடப்பட்ட தாக்குதல் என ,
ஆரம்ப விசாரணைகளில் அடிப்படையில்தெரிய வந்துள்ளது என்கிறது காவல்துறை .
ஐவர் தமிழகத்தில் தஞ்சம்
ஐவர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி – நச்சிகுடா கடற்கரையில் இருந்து நேற்று காலை சட்டவிரோதமாக படகில் புறப்பட்டுச் சென்று இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரைக்கு வந்தனர்.
அவர்களை மரைன் பொலிஸார் மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு
அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று மான்டேரி பூங்காவில்,
10 பேரைக் கொன்று 10 பேரைக் காயப்படுத்திய நபர் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ஆசிய நாட்டவர் ஒருவரே இந்த பயங்கரவாத செயலை புரிந்த்துள்ளார் .
தற்போது சநதேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .
காணாமல் போனவர்களுக்கு இரண்டுலட்சம் – மரண சான்றிதழ்
காணாமல் போனவர்களுக்குஇரண்டுலட்சம் – மரண சான்றிதழ்
இலங்கையில் இராணுவத்தால் கைதுசெ எய்யப்பட்டு காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் பணம் வழங்க ,அந்த வழக்கை மூடு விழா செய்யும் நிலைக்கு அரசு சென்றுள்ளதாக காணாமல் போன பிள்ளைகளின் தாய் ஒருவர் தெரிவித்தார் .
பகுதி பகுதியாக காணமல் போனவர்களை அழைக்கும் இராணுவம் ,
மற்றும் அரசினால் நியமிக்க பட்ட விசாரணை குழுக்கள் ,
மக்கள் மனதை குழப்பி ஏற்க வைக்கும் முகமாக,
காணாமல் போன ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபா வழங்கி ,
அவர்கள் இறந்து விட்டார்கள் என்கின்ற இறப்பு சான்றிதழை வழங்குகிறது
என அந்த தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் .
இவர் தற்போது கிளிநொச்சி சந்தைக்குள் காய் கறி விற்பனை செய்து வருகிறார் .





































