எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு

எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,728 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,502 ரூபாவாகும்.

இதேவேளை 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 700 ரூபாவாகும்.

ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video
Posted in உளவு செய்திகள்

ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video


ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video

வடகொரியா நடத்தின் ஏவுகணை சோதனையை அடுத்து ,அமெரிக்கா
,தென்கொரியா ,ஜப்பன் இணைந்து
இரண்டு நாள் நீர்மூழ்கி கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .

வடகொரியாவின் முன்னணி தாக்குதல் கப்பல்களில் ,
இருந்து ஏவப்படும் ,ஏவுகணைகளை தாக்குவது ,
அதன் வீச்சு மற்றும் பாதிப்புக்களை கணடறிந்து தடுப்பது ,
போன்ற மிக பெரும் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன .

நாளுக்கு நாள் ,வடகொரியா ,தனது ஏவுகணை சோதனைகளை ,
அதிக படுத்தி பயணிக்கும் நிலையில் ,
அமெரிக்கா ,தென்கொரியா,ஜப்பான் என்பன,
இணைந்து இந்த, கூட்டு கடல் படை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன .

2017 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் ,
அபாயம் நிறைந்த நீர்மூழ்கி மற்றும் ,போர் கப்பல்கள்
அடங்கிய குழு ,பயிற்சியாக இது பார்க்க படுகிறது .

ஆபத்தான நாடருகில் அமெரிக்கா நீர்மூழ்கிகள் video

தொடர்ந்து விரிந்து பரந்து செல்லும் போர் பதட்டத்தின் மத்தியில் ,
இடம்பெற்றுள்ள இந்த இராணுவ ஒத்திகையின் பின்னர் ,
வடகொரியா மேலும் பல ஏவுகணை சோதனைகளை ,
வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்காவுக்கு போட்டியாக ,வடகொரியா ஆணு ஆயுத செறிவாக்கத்தில் ,
முதல் இடம் பிடித்துள்ளது என்கின்ற கூற்று வலுப்பெற்றுள்ள நிலையில்,
வடகொரியாவை வீழ்த்திட அமெரிக்கா ,தனது தந்திர நயவஞ்சக ,
வேலையில் ஈடுப்பட்டு வருவதாக ,வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது .
தொடர்ந்து கொரியா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது .

எவ்வேளையும் ஏதும் நடக்கலாம் என்கின்ற நிலையே காண படுகிறது .

மூன்று நாடுகளின் கூட்டு போர் ஒத்திகையை கண்டு வடகொரியா ,
அடங்கி விடுமா எனறால் பதில் இல்லை என்றே கூறலாம் .

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 4 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 4 பேர் காயம்

அமெரிக்காவாயில் கடந்த தினம் பார் ஒன்றுக்குள் இடம்பெற்ற ,துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியும் ,நால்வர் காயமடைந்துள்ளனர் .

அமெரிக்கா hookah bar in Fayetteville, North Carolina பகுதியில் உள்ள ,பாருக்குள் மர்ம நபர் நடத்திய திடீர் ,துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இந்த அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது .

ஆயுத தாரி சம்பவ இடத்தில பலியாகியுள்ளார் ,காயமடைந்தவர்களில் ஒருவர் ,மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக ,மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

தொடர்ந்து இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக ,அமெரிக்கா போலீஸார் தெரிவித்துள்ளனர் .

Error: View 9293b2au4w may not exist
முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை
Posted in இலங்கை செய்திகள்

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை

புல்மோட்டையிலுள்ள சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் இந்நிலையில், புல்மோட்டை ஜின்னா வித்தியாலயத்தில் கடமையாற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர் எஸ்.எம்.லத்தீபின் இடமாற்றத்தால் பாடரீதியான பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்களும், அப்பிரதேச மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றம் உதவிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு) மேகனேந்திரனின் திட்டமிட்ட இன ரீதியான மற்றும் பிரதேச ரீதியான இடமாற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு தகுந்த நடவடிக்கை எட்டப்படும்வரை எங்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என அப்பிரதேச மக்களும், பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் உடனடி நடவடிக்கையினை எடுக்கக்கோரிய கடிதத்தினை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் இன்று (03) ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்,

கல்வி அமைச்சர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை

அனுப்பி வைக்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறவிருக்கின்ற இந்நிலையில், புல்மோட்டையில் காணப்படும் சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடம் காணப்படும் நிலையில்,

புல்மோட்டை ஜின்னா வித்தியாலயத்தில் கடமையாற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியரான எஸ்.எம்.லத்தீபின் இடமாற்றம் மூலம், பாடரீதியான பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான இடமாற்ற நடவடிக்கைகளில் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றம் உதவிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு) மேகனேந்திரனின் திட்டமிட்ட இன ரீதியான மற்றும் பிரதேச ரீதியான இடமாற்றங்களை செய்வருவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள

முடியாது. அவரின் இவ்வாறான செயற்பாடுகளின் ஆவனங்களை எங்களால் நிருபிக்கக்கூடியதாக இருக்கின்றது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலயக்கல்வி அலுவலகம் ஓர் பழிவாங்கள் அலுவலகமாக திகழ்ந்து வருவதை, பெற்றோர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்விடயங்களைப் பார்க்கின்றபோது பெரும் கவலையளிக்கின்றது.

அச்செயற்பாட்டை நாங்கள் மிக வன்மையாகவும் கண்டிக்கின்றோம். எனவே, இவ்வாறான திட்டமிட்ட இடமாற்றங்களை உடனடியாக ரத்துச் செய்வதுடன், அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் இருப்பதற்கு தகுந்த

நடவடிக்கையினை ஜனாதிபதி உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

(அபு அலா)

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
Posted in சமையல் சமையல் cook

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்

ரவையில் அட்டகாசமான சுவையில் வீட்டில் இப்படி ஸ்வீட்/ஸ்நாக்ஸ்
செய்து அசத்துங்க மக்களே .

வாங்க இப்போ ஒரு கப் ரவையில் வைத்து ,எப்படி இந்த ஸ்னேக்ஸ், செய்வது என்பதை பார்ப்போம் .

ரவை சினேக்ஸ் செய்வது எப்படி ..?
அதற்கு தேவையான பொருட்கள் என்ன .

ஒரு கப் ரவா ,அரை கப் தேங்காய் பால் ,வைத்து நன்றாக கலக்கி ,பத்து நிமிடம் ஊற வைத்திடுங்க .ஊறி வந்ததும் , இது கூட அரை கப் அளவு மை தா மா .முக்கால் கப் சக்கரை ,மூன்று பொடி அரைத்த ஏலக்காய் ,தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கலக்கி எடுங்க

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்


செய்முறை இரண்டு .

இப்போ அடுப்பில கடாய வைத்து ,தேவையான அளவு எண்ணெய் விட்டு ,எண்ணெய் சூடானதும் ,சின்ன சின்ன உருண்டையாக அப்டியே எண்ணைக்குள் போட்டு பொரித்து எடுங்க .

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்


அம்புட்டு தாங்க வேல ,இது போல தினமும் செஞ்சு சாப்பிடுங்க .
ஐந்து நிமிடத்தில் ,மிக இலகுவான முறையில் ,ரவையில், சூப்பரான ,இனிப்பு ஸ்னேக்ஸ் ரெடியாகிடிச்சு .

ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
Posted in சமையல் சமையல் cook

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

கருவேப்பில்லை கார தொக்கு இப்படி வீட்டில செஞ்சு பாருங்க .இட்லீ, தோசைக்கு ,செம கூட்டு ,சிறுவர்கள் முதல் ,பெரியவர்கள் வரை விரும்பி உண்பாங்க .கடை சுவையில் அம்புட்டு தரமா இருக்கும். இந்த கருவேப்பிலை கார தொக்கு .

சுவையான கருவேப்பிலை கார தொக்கு செய்வது எப்படி .

மிக இலகுவான முறையில் இப்படி வீட்டில் செஞ்சு பாருங்க ,வாங்க இப்போ
செய்முறைக்கு போகலாம் .

இந்த கருவேப்பிலை கார தொக்கு ,செய்திட தேவையான பொருட்கள் .
மூன்று கப்பு ,கருவேப்பிலை ,ஒன்றை கரண்டி மிளகு ,சின்ன எலுமிச்சம் பழ அளவுக்கு புளி ,15 காய்ந்த மிளகாய் ,இப்போ இது ஓட தேவையான தண்ணீர் சேர்த்து,மிக்சியில் போட்டு சட்னி போல அரைத்து எடுத்து கொள்ளுங்க .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

செய்முறை இரண்டு

அப்புறம் அடுப்பில கடயா வைத்து ,நல்லெண்ணெய் சேர்த்து ,எண்ணெய் ,சூடானதும் அரை கரண்டி கடுகு ,ஒரு கப் உளுத்தம் பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி தேங்காய் பூ பவுடர் ,சேர்த்து நொறுங்கி பொரிந்து வந்ததும் ,அரைத்து வைத்த கருவேப்பிலை சட்னியை ,இதுல ஊற்றி கலக்கி விடுங்க .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

அப்புறம் இது கூடவே தேவையான அளவு மஞ்சள் தூள் ,வறுத்து அரைத்த வெந்தய பொடி ,போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

மூடி போட்டு நன்றாக கொதிக்க விடுங்க ,இடை இடையே திறந்து ,நன்றாக கலக்கி விடுங்க .நன்றாக வதங்கி வரும் பொழுது ,தேவையான உப்பு ,அப்புறம் ஒரு கரண்டி வெல்லம் ,போடு நன்றாக சுருங்கி வரும் வரை கலக்கி விடுங்க .

நன்றாக எண்ணெய் வற்றி உதிரி உதிரியாக வந்ததும் ,அடுப்பை நிப்பாட்டி விடுங்க ,அம்புட்டு தாங்க இப்போ வாய்க்கு சுவையான கருவேப்பில்லை கார தொக்கு ரெடியாகிடுச்சு .

கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு

இந்த கருவேப்பிலை கார தொக்கு ,சாதம் ,இட்லீ ,தோசை ,சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே .

ஈரானுக்கும் நுழைந்த அமெரிக்கா விமானம் |துரத்திய ஈரான் போர் விமானங்கள்
Posted in உலக செய்திகள்

ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானம் |துரத்திய ஈரான் போர் விமானங்கள்

ஈரானுக்கும் நுழைந்த அமெரிக்கா விமானம் |துரத்திய ஈரான் போர் விமானங்கள்

அமெரிக்க கடற்படையின் EP-3E விமானம் ஓமன் வளைகுடாவிற்கு அருகில் உள்ள .ஈரான் நாட்டின் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது .

இதனை கண்டறிந்த ஈரான் வான் பாதுகாப்பு பிரிவினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர் .மேலும் உள்ளே மீறி வந்தால் சுட்டு வீழ்த்த பாடுமென அறிவித்தது .

ஈரானின் இந்த அபாய எச்சரிக்கையை அடுத்து ,அமெரிக்கா கடல் படை ,
கண்காணிப்பு போர் விமானம் தப்பி சென்றது .

அமெரிக்கா இராணுவத்தின் போர் விமானம்,
ஈரான் கடல் பகுதிக்கு நுழைந்த சமபவம் .,
ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது .

Error: View 9293b2au4w may not exist
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்

அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்

புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (01) சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்மாதம் பாராளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர்.

அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்

கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம்.

எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.

இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில்

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது.

குறித்த சட்டமூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும்.

அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள்

தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில்

அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்பாடுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நீதி அமைச்சர் குறித்த சட்டமூலத்தை தெளிவு படுத்துவதற்கு நீதிமன்றம் செல்வோம் என்கிறார் நீதிமன்றம் அரசியல் அமைப்பு உட்பட்டே வியாக்கியானங்களை முன்வைக்கும்.

நாங்கள் குறித்த சட்டமூலத்தை தோற்படிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரி ஒரு போராட்டத்தை நடத்தவுள்ளோம்

ஆகவே, ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் பேர் எழுச்சியாக வீதியில் இறங்கினால் தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 180 மாணவிகள் சேர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 180 மாணவிகள் சேர்ப்பு

போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 180 மாணவிகள் சேர்ப்பு

மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் போலியான கையெழுத்தைப் பயன்படுத்தி 180 இற்கும் அதிகமான மாணவிகளைப் பெண்கள் பாடசாலையில் இணைத்து கொண்ட சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது.

மேலதிக கல்விப் பணிப்பாளர் அவ்வாறாக எந்த பாடசாலை நிர்வாகங்களிடமும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும்படி கூறவில்லை என மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த மோசடி செயற்பாடு 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுவதாக மாகாண கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாகாண கல்வி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தணிக்கை விசாரணையின் போது குறித்த மோசடி செயல் வெளி வந்துள்ளது.

ஈரானுக்கும் நுழைந்த அமெரிக்கா விமானம் |துரத்திய ஈரான் போர் விமானங்கள்
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா ஈரான் வானில் மோதல் |துரத்திய ஈரான் விமானங்கள் |Ethiri News

அமெரிக்கா ஈரான் வானில் மோதல் |துரத்திய ஈரான் விமானங்கள் |Ethiri News

அமெரிக்கா கடற்படை விமனம ஒன்று ,ஈரான் ,வான் எல்லைக்கு நுழைந்த நிலையில் ,ஈரான் போர் விமானங்கள் அமெரிக்கா விமானத்தை துரத்தி சென்றன .இதனால் இரு நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது .

தமது நாட்டின் எல்லை கோட்டை கடந்து ,அத்து மீறி ,
அமெரிக்கா இராணுவ போர் ,விமானங்கள் தமது நாட்டுக்குள் நுழைந்தன.
அந்த வானூர்திங்க்ளை கண்ணுற்ற ,வான் காப்பு படையினர் ,
அத்துமீறி நுழைந்த வான் பறவைகளுக்கு , அவசர அபாயகர எச்சரிக்கையை விடுத்தனர் .

அபாயகர ,சிவப்பு எச்சரிக்கை, விடுக்க பட்டதை அடுத்து ,
வெள்ளை மாளிகை ,சண்டை வானூர்திகள், அங்கிருந்து தப்பி சென்றன .

இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி

இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி

இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் ,சிரியாவின் மேற்கு பகுதியில் உள்ள .சிரியா இராணுவ முகாமை இலக்கு வைத்து நடத்திய ,வான் வழி ,ஏவுகணை தாக்குதலில் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலியாகியுள்ளனர் .

ஈரான் முக்கிய இராணுவ அதிகாரி கொலை செய்ய பட்டு இரண்டாவது நாளில் ,இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
ரூவாண்டாவிற்கு அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு

ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு

ரூவாண்டாவிற்கு பிரிட்டனில் இருந்து அனுப்ப படும் அகதிகளுக்கு, பாதுகாப்பு உள்ளது என பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் Braverman தெரிவித்துள்ளார் .

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகளை ,ரூவாண்டாவிற்கு அனுப்புவதில் ,இந்திய பூர்விக குடிகள் அதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர்களின் இந்த அடடூழிய செயலினால் ,எதிர் வரும் தேர்தலில் ஆளும் சுனெக் ,ஆட்சி வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு

பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை எனவும் பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை
Posted in உலக செய்திகள்

ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை

ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை

ரஷ்யா நாட்டின் வாடகை இராணுவத்தின் மிக முக்கிய ஊடக நபர் ஒருவர் ,
மத்திய செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஓட்டலில் குண்டு வெடிப்பு
மூலம் படு கொலை செய்யப்பட்டுள்ளார் .

ரஷ்ய ராணுவ செய்தியாளர் விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப் பட்டார்
என உக்ரைன் அறிவித்துள்ளது .

வாடகை இராணுவத்தினருக்கு உரிய கொட்டல் ஒன்றில் வைத்தே,
இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது உக்ரைன் தரப்பினர் .
இது ரஷ்ய மற்றும் ரஷ்ய வடக்கை இராணுவத்தினருக்குள் மோதல்
உள்ளதான தோற்ற பாட்டை காண்பிக்கிறது .

சமீப காலங்களாக புதின் மற்றும் ரஷ்ய முக்கிய நபர்கள் ,
இவ்விதமான குண்டு வெடிப்பின் மூலம்,
கொலை செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

போலந்து கவச வண்டிகளை வாங்கி குவிக்கும் உக்ரைன்

போலந்து கவச வண்டிகளை வாங்கி குவிக்கும் உக்ரைன்

போலந்தில் தயாரிக்கப்பட்ட 100 ரோசோமாக் பல்நோக்கு கவச வாகனங்களை ,
உக்ரைன் ஆர்டர் செய்துள்ளது என்று போலந்தின் பிரதமர் தெரிவித்தார்.

தெற்கு போலந்து நகரமான சிமியானோவிஸ் ஸ்லாஸ்கியில் உள்ள ரோசோமாக் உற்பத்தித் தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஆர்டர் செய்துள்ளேன் என்று மேட்யூஸ் மொராவிக்கி கூறினார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து போலந்து பெற்ற நிதி மற்றும் உக்ரைன் பெற்ற
அமெரிக்க நிதிகள் மூலம் இந்த கவச வண்டிகள் வாங்கிட நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

ஆயுதங்களை வாங்கி வாங்கி உக்ரைன் ரஸ்யாவை அடிக்கின்ற பொழுதும் ,ரஷ்யஎனக்கு நோ ஏதும் இல்லை என எழுந்து ,வேகமாக உக்ரைனை தாக்கி வருவதால் ,ஜெலன்ஸி சீற்றம் அடைந்துள்ளார் .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்

உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்

உக்ரைன் ரஷ்ய இராணுவத்தினர் இன்றும் கடும் மோதலில் ஈடுபட்டனர் .
உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் ரஷ்ய பாரிய முன்னேற்ற நகர்வை மேற்கொண்டது .

இந்த படை நகர்வுக்கு கடும் ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி
தாக்குதல் சூட்டு ஆதரவுடன் முன்னேற்ற நகர்வை மேற்கொண்டது .

உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்
விமானங்கள் தாக்குதலை நடத்தின .
ரஷ்ய ஏவிய தற்கொலை விமானங்களில் ஆறு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,
620 ரஷ்ய வீரக்ள பலியாகியுள்ளதாக வழமையான ஊடக அறிக்கையில் ,
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

உக்ரைன் ரஷ்ய இன்றும் கடும் மோதல்

எனினும் தமது தாக்குதல்களில் உக்ரைன் பலத்த ஆயுத ஆளணி
சேதங்களை சந்தித்து உள்ளது எனரஸ்யா தெரிவித்துள்ளது .

முன்னேறும் ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்தி நாட்டை
காப்பாற்ற எப் 16 ரக போர் விமானங்கள் ,சிறுத்தை டாங்கிகள் ,
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அவசரமாக வழங்கும் படி ,
அமெரிக்க பிரிட்டனிடம்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி கோரிக்கை விடுத்துள்ளார் .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்

அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்

அமெரிக்கா இல்லினாய்ஸ், பெல்விடேரில் உள்ள அப்பல்லோ
தியேட்டரில் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியும் , 28 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கலீல் – ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .

பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட சுமார் 260 பேர்,
ஹெவி மெட்டல் இசை நிகழ்ச்சியை நடத்தும் இடத்திற்குள் இருந்ததாக,
பெல்விடேர் தீயணைப்புத் தலைவர் ஷான் ஷாடில் தெரிவித்தார்.

கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இருப்பினும் சம்பவ தினம் இரவு 7:45 மணிக்கு ஒரு சூறாவளி எச்சரிக்கை குறித்து,தேசிய வானிலை சேவை அறிவுறுத்தல் விடுக்க பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா தயக்கம்

உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா தயக்கம்

உக்ரைனுக்கு அவர்கள் கேட்கும் நீண்ட ஏவுகணைகளை வழங்கிட,
அமெரிக்கா தயக்கம் காண்பித்து வருகிறது .

பல்வேறு பட்ட ஏவுகணைகள் ,ராடர்கள் ,உளவு விமானங்கள் ,
மற்றும் பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கியது .

எனினும் அவற்றை வைத்து ரஸ்யாவை ,உக்ரைன் ராணுவத்தினரால்,
வெற்றி கொள்ள முடியவில்லை .

அதனால் இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க பட்டால் ,
ஒருவேளை அவை ரஷ்ய படைகள் வசம் சிக்கிவிட்டால் ,
அதனை போல வடிவமைத்து ,தமக்கு எதிராக பயன் படுத்த ,


ஆரம்பித்து விடும் என்பதால் ,இந்த ஏவுகணைகளை
வழங்கிவிட அமெரிக்கா இராணுவ தலைமையகம் தயக்கம் காண்பித்து வருகிறது .

இந்த சம்பவம் ,உக்ரைனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை

வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.